அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள்.


Imageஅமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியா (California) மாகாணத்தில் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தை பிறந்துள்ளது.

ஆறு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள். 45 டாக்டர்கள்  சேர்ந்து இந்த எட்டு குழந்தைகளையும் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவிக்கச் செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தை பிறந்திருப்பது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  எட்டாவது குழந்தை தாயின் வயிற்றில் வளர்ந்தது தாயின் கருவை விட்டு வெளியில் வந்த பிறகுதான் மருத்துவர்களுக்கே தெரியும் என்று ஹெரால்டு ஹென்றி (Dr.Harold Henry) தெரிவித்தார். மேலும் தாய்  மற்றும்  எட்டு குழந்தைகளும் நன்றாக இருப்பதாகவும் சுவாச குழாய் உதவியின்றி  தாங்களே சுவாசித்து வருகிறார்கள் என்றும் மந்திர் குப்தா (Dr.Mandhir Gupta) கூறினார். குழந்தைகள் அனைவரும் ஒரு கிலோவில் இருந்து ஒன்றை கிலோவரை எடை இருந்ததாக கேரன் மேப்ள்ஸ்  (Dr.Karen Maples) கூறினார். தாயின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் எதுவும் வெளியிடபடவில்லை. குழந்தைகள் எட்டு மாதத்தில்  பிறந்ததால்  இரண்டு மாதங்களுக்கு அவர்கள் மருத்துவமனியில்தான் இருப்பார்கள் என்று கேரன் மேப்ள்ஸ் (Dr.Karen Maples) கூறினார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes