விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்

கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங்கள்.

அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.

முதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.

அடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:


1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்:

நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.


2. இமெயில் போல்டர்கள்:

எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.


3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்:

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும்.

எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம்.

எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும்.

இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும்.

பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.

விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.


4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்:

விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள்.

இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.


5. சர்வீஸ் பேக் பைல்கள்:

நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.


6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்:

விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.


7. இன்ஸ்டால் செய்தபின்:

ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.8.பாதுகாப்பு புரோகிராம்கள்:

அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.


9. ரெஸ்டோர் பாய்ண்ட்:

புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.


"சிடி' யில் டேட்டா பதித்தல்

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்படுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மாதிரியாக இருப்பதால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்படுகின்றன.


1. முதலில் நீங்கள் அந்த புரோகிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து அமைக்கப்போகிறீர்களா என்று சாய்ஸ் கேட்கப்படும். விஸார்ட் மூலம் எழுதப் போகிறேன் என்பதனை செலக்ட் செய்திடவும். இதில் பல வசதிகள் தரப்படும்.


2. அடுத்து பெரும்பாலும் என்ன வகை சிடியில் எழுதப்போகிறீர்கள் என்று கேட்கப்படும். அதாவது ஆடியோவா? அல்லது வீடியோ சிடியா? என்று கேட்கப்படும். தகவல்களைப் பதிந்து வைக்க விரும்பினால் data என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உங்களி டம் உள்ள மற்ற ஆடியோ சிடிக்களைப் பயன்படுத்தி புதிய ஆடியோ சிடி ஒன்று தயாரிப்பதாக இருந்தால் music என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மியூசிக் சிடி மற்றும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய பைல்கள் என்றால் உங்களுக்கு CDR வகை சிடிக்கள் தான் சரியான தேர்வாக இருக்கும்.

உங்களிடம் CDRW வகை சிடி இருந்தால் அதனை டேட்டா எழுதப் பயன்படுத்தவும். இதற்குக் காரணம் சில மியூசிக் பிளேயர்கள் CDRW வகை சிடிக்களை ஏற்றுக் கொள்ளாது என்பதே.


3. அடுத்த வேலை பைல்களைத் தேர்ந்தெடுப்பதுதான். பெரும்பாலான இவ்வகை புரோகிராம்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் வகையிலான விண்டோக் களைத் தரும். எனவே பைல்களைத் தேர்ந்தெடுத்து அமைப்பது எளிதான வேலையாக அமையும். இதை ட்ராக் அண்ட் ட்ராப் முறையிலும் மேற்கொள்ளலாம்.


4. பைல்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இனி சிடியில் எழுதுவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். பெரும்பாலான புரோகிராம்களில் டேட்டா எழுதுவதற்கு டெஸ்ட் வகை ஒன்றினைத் தரும். அதாவது நேரடியாக எழுதத் தொடங்கி பின் எழுதுவதில் பிரச்னை ஏற்பட்டு சிடி வீணாகிவிடாமலும் அனாவசியமாக நேரம் செலவழியாமலும் இருக்க இந்த ஏற்பாடு.

இந்த சோதனை முறையை முதல் முதலில் அந்த சிடி டிரைவில் எழுதுகையில் மேற்கொள்ளலாம். பின் அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று தெரிந்து கொண்டால் நேரடியாக எழுதத் தொடங்கலாம்.


5. அடுத்ததாக சிடி எந்த வேகத்தில் எழுத வேண்டும் என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக் கவில்லை என்றால் சிடி டிரைவரே குறிப்பிட்ட வேகத்தைத் தேர்ந்தெடுக்கும். அல்லது அதற்கு முந்தைய முறையில் எழுதிய வேகத்தையே எடுத்துக் கொள்ளும்.


6. சிடியில் எழுதி முடித்தவுடன் டேட்டா சரியாகப் பதியப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதற்கான ஆப்ஷனையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் இதனை எப்போதும் மேற்கொள்வது நல்லது.


7. இனி சிடியில் டேட்டா எழுதப்படும் நேரம். இந்நேரத்தில் மற்ற எந்த செயலையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்வது நல்லதல்ல. சிடி டிரைவ் செயல்பட டேட்டாவைத் தக்க வைத்து அனுப்ப அதிகமான ராம் மெமரி தேவைப்படும். இல்லை என்றால் buffer underrun error என்னும் பிழைச் செய்தி வரும். சிடியில் எழுதப்படுகையில் டேட்டா தொடர்ந்து சிடி டிரைவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எழுதப்படும் டேட்டாவிற்கு இணையாக டேட்டா செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கிடைக்காத நிலையில் சிடியில் எழுதப்படும் செயல் பாதிக்காத வகையில் புரோகிராம் அமைக்கப்படும். இதனால் எழுதி முடித்தபின்னர் எத்தனை முறை இந்த நிகழ்வு ஏற்பட்டது;

ஆனால் சமாளிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். எனவே தான் சிடியில் எழுதுகையில் வேறு எந்த செயல்பாட்டையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடாது.


8. சிடியில் எழுத டிரைவுடன் வரும் (பெரும்பாலும் நீரோ புரோகிராம்) புரோகிராமைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. விண்டோஸ் எக்ஸ் பி புரோகிராமில் இதற்கான புரோகிராம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் உங்கள் சிடி டிரைவ் டைரக்டரியைத் திறக்கவும்.

ட்ராப் அண்ட் ட்ராக் மூலம் பைல்களை இழுத்து வந்து டைரக்டரியில் போடவும். “Files ready to be written to the CD” என்ற செய்தி கிடைக்கும். சிடியில் எழுத நீங்கள் தயாராக இருந்தால் உடனே “Write these files to the CD” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்; பைல்கள் எழுதப்பட்டுவிடும்.

இன்னொரு முறையிலும் பைல்களை எழுதலாம். பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Send To பயன்படுத்தி பைல்களை அனுப்பவும். பின் மேற்கண்ட முறையில் மெனு கிடைக்கும். அதன்படி பைல்களை எழுதலாம்.


வெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள்

சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம்.

பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்துச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம்.

இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம்.

அச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா! அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன.

சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில் எழுதப்படும் குறிப்புகள் மெமரியில் வாங்கப்பட்டு, அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றப் படுகின்றன. பின்னர் இவற்றை அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட்டாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த சாதனங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆய்வு மையத்தில், இந்திய வாடிக்கை யாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. குறிப்பாக,நூல்கள் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தேவை களையும் இந்த சாதனங்கள் நிறைவேற்று கின்றன. இந்த மையமே, இச்சாதனங் களை இயக்குவதற்கான உதவி மற்றும் விற்பனைக்குப் பின் பராமரிப்பினையும் தருகிறது.

பதினெட்டு இந்திய மொழிகளை இவை சப்போர்ட் செய்கின்றன என்றும் இவற்றின் மெனுக்களும் அந்த அந்த மொழிகளில் தரப்பட்டுள்ளன என்றும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த வகை சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் படிப்போரிடையேயும், கற்போரிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது.

முதல் முதலாக இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை வடிவமைக் கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒருமுறை இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு 50,000 இ-ரீடர் சாதனங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொபைல் போனுக்கு அடுத்தபடியாக, இ-ரீடர் சாதனங்கள் மக்களிடையே பரவும் வாய்ப்பு உள்ளது என கணேஷ் நாராயணன் கூறுகிறார்.

இந்த சாதனங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிய http://www.leafreader.com/main.php?page=lreaders என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.சென்னையில் இந்நிறுவனத்தை 24342833 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங்

ரூ.3000 க்கும் குறைவான விலையில் உள்ள மொபைல் போன்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

2011-12 ம் ஆண்டு பட்ஜெட்டின்படி ரூ.3000க்கும் கீழாக உள்ள 23 மாடல் மொபைல் போன்களின் விலையை 2-3 சதவீதம் (ரூ.50 முதல் ரூ.400 வரை) உயர்த்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொபைல் போன்கள் உள்ளிட்ட 130 பொருட்களின் மீதான கலால் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.

இதன் காரணமாகவே மொபைல் போன் விலையை உயர்த்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம்.

இதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப்பட்டே கிடைக் கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கானவை நிறைய கிடைக்கின்றன.

நம் தேவைக்கேற்ப செட் செய்திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பதனையும் செட் செய்து கொள்ளலாம்.

Area, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியாவில் நாம் நேரடியாகவே, ஈக்குவேஷன்களை எழுதி அமைக்கலாம்.

இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெறhttp://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=9caca7225235401c8d3f9e242b794c3a என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இதில் 32 மற்றும் 64 பிட்களுக்கென தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன


ஓவூ - புதிய வீடியோ சேட்டிங் டூல்

வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.

மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.

அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது.

உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும், ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை http://www.oovoo.com/ Download.aspxஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால், நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன், அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது.

பின்னர், ஓவூ அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும். அடுத்து, பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே, ஓவூ உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும்.

இந்த லிங்க்கினை உங்கள் நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும். அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க் பெறுபவர்கள், இதில் கிளிக் செய்தால், சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ சேட் செய்திட இணைவார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இவ்வாறு பெற்றவுடன், லிங்க்கில் கிளிக் செய்திட, என் கம்ப்யூட்டரில் தொலைபேசிக்கான மணி அடிப்பது போல் ஒலி கிடைத்தது. இதற்கு பதில் அளிக்க முடிவு செய்து ஓவூ வீடியோ காலிங் இன்டர்பேஸ் திறந்தேன். இணைப்பு வேகமாகவும், படங்கள் துல்லிதமாகவும் இருந்தன. இதில் நண்பர்களை இணைக்க, Add to call பட்டன் அழுத்தி இணைக்கவும்.

ஓவூ சேட்டிங்கில் சைட்பார் வியூ (Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே, இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால், இந்த சைட் பார் வியூவில் சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.

இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கம்ப்யூட்டரே பதில் அளிக்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு, அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால், அது அவர் மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப் படுகிறது.

ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க, மெனு பாரிலிருந்து Contacts அழுத்திப் பின்னர், Import Contacts என்பதனை அழுத்தவும். இதன் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, பலவித சேவை வசதிகளைப் பயன்படுத்தலாம். வீடீயோ கால் ரெகார்டிங், டெக்ஸ்ட் சேட், போன் அழைப்புகளுக்கான சப்போர்ட் ஆகியவற்றை இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு http://www.oovoo.com/HowToooVooList.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


சிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.

முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம்.

இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும்.

ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.


1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக்க வேண்டும். இதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும்.

2. வழக்கம்போல், உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத் தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப் படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும்.

3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை: Now Playing, Library, Rip, Burn, Sync and Guide. ஆகும். Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். Rip டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல் பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே! சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா! அதற்கு வழி உள்ளது.

4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவாகும்.

5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும். லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.

6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள் பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஓகே! விண்டோஸ் மீடியா பிளேயர் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா? கவலைப்பட வேண்டாம். http://en.softonic.com/s/freewindowsmediaplayer12 என்ற தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.


இலவச வெப்சைட் பேக்கேஜ் : ரிலையன்ஸ்

புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ( 3ஜி சேவை பிரிவு) உயர் அதிகாரி பிரசாந்த் கோகர்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில், 2013ம் ஆண்டிற்குள், இணையதளத்தில் உலவுபவர்களின் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், தற்போதைய அளவில் இந்தியாவில் 8 லட்சம் இணையதளங்களே புழக்கத்தில் உள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பெரும்பாலும் இணையதளங்களை நாடுகின்றன.

அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, தங்கள் நிறுவனம், நெட்கனெக்ட் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது.

இந்த பேக்கேஜின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப டொமைன் நேமை பெற்றுக்கொள்ளலாம்.

அ‌தோடுமட்டுமல்லாமல், ஹோஸ்டிங் மற்றும் பிசினஸ் இ-மெயில் அக்கவுண்ட் வசதிகளுடன் கூடிய ‌வெப்சைட்டை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்க உள்‌ளோம்.

இதற்காக, வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள பிக்ராக்குடன் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொபைல் நம்பர் ‌‌போர்டபிலிட்டி : வோடபோன்

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வசதியின் மூலம் பலனடைந்த நிறுவனமான ‌வோடபோன் உள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

மனிதனின் புலனுறுப்புகளுள் தற்போது புதிதாக மொபைல்போன் இணைந்துள்ளது என்று கூறினால், அது மறுக்கமுடியாத‌ உண்மையாகவே கருதப்படுகிறது. அந்த அளவிற்கு, மனித வாழ்க்கையில் மொபைல்போன் நீக்கமற நிறைந்திருக்கிறது.

5 வீட்டிற்கு ஒரு போன் இருந்த காலம் போய், ஒருவருக்கு 2 மொபைல்போன்கள் என்ற நிலை தற்போது வந்துள்ளது. தங்கள் மொபைல்போன் சார்ந்திருக்கும் நெட்வொர்க்கின் சேவைகள் திருப்தியளிக்காவிட்டால், மொபைல்போன் நம்பரை மாற்றாமல், தங்களது நெட்வோர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வசதியை தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஹரியானாவில் முதற்கட்டமாகவும், பின் இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி 20ம் தேதி நாடு முழுவதும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது.

மொபைல்போன் வாடிக்கையாளர்கள், தங்கள் நம்பரை மாற்றாமல், தங்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நெட்வொர்க்கிற்கு இதன்மூலம் மாறினர். இந்தியாவில், மொத்தம் 771 மில்லியன் மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்.

அவர்களில் 5 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, முழுதாக, 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வசதியின் மூலம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனம் குறித்து செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த மொபைல் நம்பர் போர்டபிலிட்டி முறையில் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் முதலிடத்தில் உள்ளது.

இந்த நெ‌ட்வொர்க்கில் புதிதாக 192,761வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இரண்டாமிடத்தில் ஐடியாவும் ( 150,789 வாடிக்கையாளர்கள்) உள்ளது.

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நெட்வொர்க்கில் 148,215 பேர் புதிதாக இணைந்துள்ளனர். இவ்வாறு முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுத்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏர்டெல்லிற்கு அடுத்தபடியாக உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தில் இருந்து 306,417 பேர் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு சான்றாக, கடந்த ஆண்டிலிருந்து மாதத்திற்கு 19 மில்லியன் பேர் புதிதாக மொபைல்போன் வாடிக்கையாளர்களாக இணைவது குறிப்பி‌டத்தக்கது ஆகும்.


விண்டோஸ் 7 கிராஷ்!

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.

பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.

இமேஜ் உருவாக்குதல்:

விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும். இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்;

சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.
நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.
இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும்.

எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.

மீட்புப் பணி:

விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும். இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும்.

இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.


வை-பி மற்றும் 3ஜி வசதி கொண்ட போன்கள்

மொபைல் போன் சந்தையில், உயர்நிலை ஸ்மார்ட் போன்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட சில வசதிகளை முன்னிறுத்தித் தேடினால், அவை கொண்ட போன்கள் நமக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கின்றன.

அண்மையில் நம் வாசகர்களில் சிலர், வை-பி மற்றும் 3ஜி வசதி கொண்ட போன்கள் சந்தையில் அதிகம் உள்ளனவா? அவற்றில் குறிப்பிட்ட விலைக்குள்ளாக அடங்கும் வகையில் எவை உள்ளன என்று கேட்டிருந்தனர். இந்த வசதிகள் கொண்ட போன்களாகத் தேடியதில், நம் பாக்கெட்டை அதிகம் கடிக்காத போன்களாகச் சில தோன்றின. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.


1.மைக்ரோமாக்ஸ் ஏ 60 (Micromax A 60):

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும், விலை குறைந்த ஸ்மார்ட் போனாக, மைக்ரோமாக்ஸ் ஏ 60 உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,500. இதில் வேகமாக டைப் செய்திட ஸ்வைப் கீ போர்டு உள்ளது.

இதில் டைப் செய்வதனை டைப்பிங் என்று சொல்லாமல், ஸ்வைப்பிங் என்று சொல்லும் அளவிற்கு தனித் தன்மை உடையதாக உள்ளது. இது போதாது என்று, கையில் எழுதுவதனைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற்றும் வசதியும் உள்ளது.

இதில் 600 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன.


2.ஹுவேய் யு8 150 ஐடியோஸ் (Huawei U8 IDEOS):

ஹூவேய் நிறுவனத்தின் மொபைல் போன்கள், அண்மைக் காலமாக இந்திய மொபைல் சந்தையில் சத்தம் எழுப்பி வருகின்றன. இந்த மொபைல் மாடலில் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது.

கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் ப்ரையோ சிஸ்டம் கொண்ட போன் இதுவாகும். இதில் பிளாஷ் சப்போர்ட் தரப்பட்டுள் ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள் ளன.

A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் திறன் கொண் ட ஆட்டோ போகஸ் கேமரா, ஜியோ டேக்கிங், எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.8,499.


3.எல்.ஜி. ஜி.டி.540:

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆப்டிமஸ் வரிசையில் முதல் போன் இது. ஆண்ட்ராய் 2.1 சிஸ்டத்தில் இயங்குகிறது. ப்ராசசர் 600 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. 3 அங்குல டி.எப்.டி. ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், ஜி.பி. எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத்,3.5 மிமீ ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.10,900.


4. சாம்சங் வேவ் எஸ் 7233 இ:

இந்நிறுவனத்தின் படா (BADA) ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், அண்மைக் காலத்தில் வந்திருக்கும் ஸ்மார்ட் போன் இது. அதே போல இந்நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் பதியப்பட்டு இயங்குகிறது. அதிகமான எண்ணிக்கை யில் விட்ஜெட்டுகள் மற்றும் அப்ளிகேஷன்களை இதில் பதிந்து இயக்க முடிகிறது.

ஒரே திரையின் மூலம், பலவித சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு இணைப்பு கிடைக்கிறது. படங்களை அனைத்திற்கும் அப்லோட் செய்திட முடிகிறது. சாம்சங் நிறுவனத்தின் அப்ளிகேஷன் ஸ்டோரில், பலவித தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன.

இந்த போனில், 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், ஜி.பி. எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி,ரெகார்டிங் வசதி கொண்ட ரெகார்டர், 16 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,500.


5. நோக்கியா இ 5:

பிளாக் பெரி அல்லாத ஸ்மார்ட் போன்களைத் தேடுபவர்களிடம் நோக்கியா இ 5 அதிகமாக விரும்பப் படுகிறது. சிம்பியன் வரிசை 60 யில் இது இயங்குகிறது. லேட்டஸ்ட் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. மற்ற எந்த போனிலும் இல்லாத வகையில் குவெர்ட்டி கீ போர்டு எளிதாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஓவி மேப்ஸ் கொண்ட ஜி.பி.எஸ். தரப்படுகிறது.

2.3 அங்குல டி.எப்.டி. திரை, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, வை-பி, ஆகிய தொழில் நுட்ப வசதிகள், A2DP இணைந்த புளுடூத், 5மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ ஹேண்ட்ஸ் பிரீ ஜாக்கெட் ஆகியவை இதன் மற்ற சிறப்பம் சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 10,599.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes