மைக்கேல் ஜாக்சனுக்கு 'டெமரால்' ஊசிதான் எமனாகிவிட்டதா?

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உயிருக்கு டெமரால் என்ற ஊசிதான் எமனாகிவிட்டது என்று அவருடைய குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
மைக்கேல் ஜாக்சன் (50) இசை உலகில் மீண்டும் புகழ்பெற மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு தயார் செய்துகொண்டிருந்தார். அதற்கான ஒத்திகைகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.
அந்த ஒத்திகைகளின்போது உற்சாகமாகச் செயல்படவும், தூக்கம், ஓய்வு குறைவாக இருந்ததால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்கவும் டெமரால் என்ற ஊசியை அவர் தினமும் போட்டுவந்தாராம். அது மார்பைன் என்ற ஊசியைப் போல வலி மறப்பு ஊசியாகும். அந்த ஊசியை அளவுக்கு அதிகமாகப் போட்டுக்கொண்டால் மயக்கம் ஏற்பட்டு சுய நினைவு தப்பிவிடும்.
புதன்கிழமை நள்ளிரவுவரை நடன, இசை ஒத்திகையில் தீவிரமாக ஈடுபட்ட மைக்கேல் ஜாக்சன் அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு டெமரால் ஊசி போட்டுக்கொண்டார். லாஸ்-வேகாஸ் நகரைச் சேர்ந்த டாக்டர் கான்ராட் ராபர்ட் முர்ரே இதய சிகிச்சை நிபுணர் ஆவார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டராகப் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அவர்தான் சம்பவம் நடந்த வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அவருக்கு டெமரால் ஊசி மருந்தைச் செலுத்தியிருக்கிறார்.
அதன் பிறகு மைக்கேல் ஜாக்சனுக்கு மூச்சு நின்றுவிட்டது. அதிலிருந்து அந்த மருந்து அளவுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்டது தெரியவருகிறது.
கட்டுமஸ்தாக இருந்த மைக்கேல் ஜாக்சன் இறப்பின்போது வெறும் எலும்புக்கூடாகத்தான் இருந்தார் என்று அவருடைய குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். அந்த நிலைமை ஒரே நாளில் வந்திருக்க முடியாது.
டெமரால் போல வேறு சில போதை ஊசிகளையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கலாம்.
2007-ம் ஆண்டு பெவர்லி ஹில்ஸ் (ஹாலிவுட்) பகுதியைச் சேர்ந்த மருந்துக் கடை ஒன்று, மைக்கேல் ஜாக்சன் தங்களிடம் மருந்து வாங்கிவிட்டு ஒரு லட்சம் டாலர் பாக்கி வைத்திருக்கிறார் என்று வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. பிறகு மாதம் 10,000 டாலர்கள் என்று தந்து கடனை அடைப்பதாக சமரசம் செய்துகொள்ளப்பட்டது.
மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய முக அழகை மாற்றிக்கொள்ள செய்துகொண்ட முக மாற்று அறுவைச் சிகிச்சையால்தான் தன்னுடைய உடல் நலத்தைப் பெரிய அளவில் இழந்தார். முகம் மாறினாலும் அதைத் தொடர்ந்து அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளின் அளவு அதிகரித்தது. அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.
2 உயில்கள்: மைக்கேல் ஜாக்சன் குறைந்தபட்சம் 2 உயில்களையாவது விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்கிறார்கள் அவருடைய முன்னாள் நிதி ஆலோசகர்கள். பிரிட்டனில் வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்' என்ற பத்திரிகை இதைத் தெரிவிக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் மொத்த சொத்து என்ன என்று அவருடைய குடும்பத்தாராவது அறிவார்களா என்பது சந்தேகம்தான். அவருடைய சொத்தைவிட கடன் அதிகம் என்பாரும் உண்டு.
அவர் சம்பாதித்த பணத்தைப் போலவே வம்பு, வழக்குகளில் சிக்கி தொலைத்த பணமும் அதிகம். பீட்டில்ஸ் பாடல்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கினார் மைக்கேல் ஜாக்சன். பிறகு அவற்றில் ஒரு பகுதியை சோனி நிறுவனத்துக்கு 1995-ல் விற்பனை செய்தார்.
ஜாக்சன் பணம் சம்பாதித்தாலும் கடன் சம்பாதித்தாலும் பெரும் தொகையாகத்தான் சம்பாதித்தார். அவருடைய குடும்பத்தார் யாரும் அவருடைய வரவு, செலவு கணக்கைப் பார்க்கும் நிலையில் இல்லாததால் இடைத்தரகர்கள் பலர் பிழைக்க நேர்ந்தது என்பதே உண்மை.


சர்ச் இன்ஜினில் தவிர்க்க வேண்டியவை

நம் கம்ப்யுட்டருக்குள் மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களை திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு.ஆனால் சர்ச் இன்ஜிங்களில் நாம் தகவல்களை தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களை திருடும் வாய்ப்பு உள்ளது.இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்க கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது.அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யுட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது.

ஒவ்வொரு முறை நீங்கள் சர்ச் இன்ஜினைப் பயன்படுத்துகையில் (யாஹூ,கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்கு பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேடாவாக ஸ்டோர் செய்கின்றன.அத்துடன் நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாக பதிவு செய்து கொள்கின்றன.நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றை தேடுகிறோம் ன்ற தகவல்களையும் எடுத்து கொள்கின்றன.ஏன் ,நம் ஐ.பி. முகவரியை கூட இவை பதிந்து வைத்து கொள்கின்றன என்பதே உண்மை.இவற்றிலிருந்து இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் ,இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்.நம் விருப்பங்கள் ,வெறுப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதை போல தான்.ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்து கொள்ள வேண்டியுள்ளது.இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வலிகள் சிலவற்றை இங்கு காண்போம்.1. சர்ச் இன்ஜினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம்.அவ்வாறு உங்கள் அடையாளத்தை கொண்டு உள்ளே நுழைந்தாள் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கெ செல்கின்றன.இதனை எப்படி தவிர்க்கலாம்? சர்ச் இன்ஜின் தரும் கூடுதல் வசதிகள் எதனையும் பெராதிர்கள்.எடுத்துகாட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இன்ஜினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்கள் எதுவும் செல்லாது.ஆனால் அதன் கூகுள் டாக் ,ஜிமெயில் ,கூகுள் குரூப் ப்ன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துதான் ஆக வேண்டும்.எனவே சர்ச் இன்ஜினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிரம்களிலிருந்து லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும்.இதனை அணைத்து சர்ச் இன்ஜிங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.


2. கூகிளை விட்டுய் வலகி செல்லுங்கள்
நம்மில் பலர் கூகுள் சர்ச் இன்ஜினைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்கு ப்தேரியாது.கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன செயல்பாடுகளை கொண்டுள்ளது.நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது.குக்கிகளை அளித்து விட்டால் இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம்.அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும்.எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கி விடலாம் அல்லது தடுத்து விடலாம்.

இதற்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools,Internet Options செல்லவும்.இதில் Privacy என்ற டேப்பினை தேர்ந்தெடுக்கவும்.அடுத்துSites என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.அடுத்து Address of the website என்ற கட்டத்தில் கூகுள் தளத்தின் முகவரியை (www.google.com) டைப் செய்திடவும்.டைப் செய்தவுடன் Block என்ற பட்டனில் கிளிக் செய்து முடிக்கவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools தேர்ந்தெடுத்து Options செல்லவும்.இங்கும் Privacy டேப்பில் கிளிக் செய்திடவும்.இதில் Exceptions என்பதில் கிளிக் செய்து அதில் கூகுள் தளத்தின் முகவரியினை டைப் செய்திடவும்.முடிந்தவுடன் Blockஎன்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.

மேலே கூறிய செட்டிங்க்ஸ் முடிந்துவிட்டால் கூகுள் தளத்தால் உங்கள் கம்ப்யுட்டரில் குக்கிகளைப் பதிய முடியாது.இதனால் உங்களைப் பற்றிய தகவல்களை சேர்க்க முடியாது
.


தோஷிபாவின் "லேப்டாப்'

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் தோஷிபா நிறுவனம் இந்தியச் சந்தையில் புதிய ரக லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அழகிய தோற்றம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய ரக லேப்டாப்கள் ரூ. 22,990 முதல் ரூ. 53,499 வரை கிடைக்கின்றன. 10.1 அங்குல திரை கொண்ட லேப்டாப், வாடிக்கையாளர் வெளியிடங்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் மிகச் சிறியதாக உள்ளது. இதில் உள்ள "குவெர்டி' கீ-போர்ட் மிக எளிதில் கையாளும் வகையில் உள்ளது.

160 ஜிபி ஹார்ட் டிஸ்க், 1.6 கிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டெம் பிராசஸர், புளூ டூத் வசதி மற்றும் விண்டோஸ் எச்பி ஹோம் சாஃப்ட்வேருடன் இவை வெளிவந்துள்ளன. இதில் யுஎஸ்பி 2 போர்ட் உள்ளன. இதில் உள்ள பேட்டரி மூலம் 3 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.


டிசைனர் பர்னிச்சர்: விப்ரோ அறிமுகம்

விப்ரோ நிறுவனம் அலுவலகங்களுக்கு ஏற்ற புதிய ரக பர்னிச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய ரக தயாரிப்புகள் "ஸ்டார்லைன்' என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும்.

பெருநகரங்களில் இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பராக் குல்கர்னி தெரிவித்தார்.

புதிய தயாரிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: அலுவலக பர்னிச்சர்களின் விற்பனைச் சந்தை ரூ. 1,100 கோடியிலிருந்து ரூ. 2,000 கோடியாக உள்ளது.

இதில் உயர் ரக பர்னிச்சர்களின் சந்தை ரூ. 500 கோடியாகும். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பர்னிச்சர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விப்ரோ நிறுவனம் தற்போது உயர் ரக, அதிநேர்த்தியான பர்னிச்சர்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் நிறுவனம் அல்லது வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்து புதிய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதல் முறையாக லண்டனைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் விப்ரோ இணைந்துள்ளது. இதன் மூலம் புதிய ரக தயாரிப்புகள் ஸ்டார் லைன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்துக்கு ஒüரங்காபாத்தில் ஒரு நவீன ஆலை உள்ளது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆலை நாற்காலிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

நாற்காலிகள் தயாரிப்பில் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
விப்ரோ நுகர்வோர் விற்பனைப் பொருள் நிறுவனங்களில் பர்னிச்சர் விற்பனை துறையின் பங்களிப்பு 10 சதவீதமாகும். இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்


புதிய "ஃபிளேம்': விரைவில் டிவிஎஸ் அறிமுகம்

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய ரக ஃபிளேம் மோட்டார் சைக்கிளை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இப்புதிய ரகம் ஒற்றை ஸ்பார்க் இன்ஜினைக் கொண்டதாக இருக்கும். பஜாஜ் நிறுவனம் புதிய ரக பல்ஸரை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் டிவிஎஸ் மோட்டார் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் "ஃபிளேம் எஸ்ஆர் 125 சிசி திறன் கொண்டதாக சிங்கிள் ஸ்பார்க் இன்ஜினுடன் வெளிவரும். ஏற்கெனவே சந்தையில் உள்ள பிளேம் மாடலை விட இது முன்னேறிய ரகமாக இருக்கும் என்று நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் எச்.எஸ். கோயிண்டி தெரிவித்தார். விற்பனை உள்ளிட்ட விவரங்கள் அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் வெளியிடப்படும் என்றார்.

இப்புதிய ரக ஃபிளேம் மோட்டார் சைக்கிள் அடுத்த வாரத்திலிருந்தே விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிகிறது.

டிவிஎஸ் நிறுவனம் தனது ஃபிளேம் மோட்டார் சைக்கிளில் இரட்டை ஸ்பார்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்தியது. இத்தொழில்நுட்பம் தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என பஜாஜ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனால் இரட்டை ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய கடந்த மாதம் டிவிஎஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

இந்நிலையில் தற்போது ஒற்றை ஸ்பார்க் இன்ஜினுடன் புதிய ஃபிளேம் மோட்டார் சைக்கிளை தயாரித்து விற்பனை செய்ய டிவிஎஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்

விகடனில் தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை.
மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.

மேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.


இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள் தாம்.

இம்மென்பொருள்

Tamil Transliteration

Tamil 99 Keyboard

Inscript Keyboard

போன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.


அதை நீங்கள் பெற கீழ்கண்டதை செய்ய வேண்டும்.
Click Start->Settings-> Control Panel->Regional and Language Options-> Languages-> Details-> Add-> Tamilமேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும் படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள் மானிட்டரின் வலதுகீழ் பகுதியில் EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு இருக்கும். அதில் தமிழை தெரிவு செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி கீபொர்டு படம்

அதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை தெரிவுசெய்து கொள்ளலாம். தமிழில் டைப்பி மகிழலாம்.

Tamil 99 Keyboard மற்றும் Inscript Keyboard போன்றவை ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது


பைலைத் திறக்காமலேயே பார்வையிட.....


உங்களிட்ம ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது.

இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,
.
அடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.


பைல் சிஸ்டம் என்றால் என்ன?


பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் பதியப்படும் பைல்களைக் இயங்கு தளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணினியில் இருக்கலாம். எனினும் அவறறை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணினி நத்தை வேகத்திலேயே இயங்கும்.
உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணினியும் எதிர் கொள்ளும்.
வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமன முறைகளில் பொருட்களை ஒழுங்கு படுத்துவது போல் கணினியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT16, FAT32, NTFS என்ப் பல வழி முறைகள உள்ளன. இவை ஓவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.
ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தில் டேட்டாவை சேமிப்பதில் காட்டும் திறன்
ஹாட் டிஸ்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் பட்டியலிடுதல் மூலம் அவற்றை விரைவாக மீட்டுக் கொள்ளும் திறன்
பைல்களை அழித்தல், பெயரிடுதல். பிரதி செய்தல், இடம் மாற்றுதல் போன்ற பைல் சர்ந்த அடிப்படை விடயங்களை மேற்கொள்ளுதல் எனபன பொதுவான பண்புகளாகும்.
இந்த அடிப்படை விடயங்களுடன் சில பைல் சிஸ்டம் பைகளைச் சுருக்குதல் (compression) , குறியீட்டு முறைக்கு மாற்றுதல் (encryption), கடவுச் சொல் (password) மூலம் பாதுகாப்பளித்தல் போன்ற கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும்.
FAT16 (File Allocation Table) என்றால் என்ன? எம்.எஸ்.டொஸ் இயங்கு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்த பைல் சிஸ்டம் அதிக பட்சம் 2GB கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கிற்கே பொருந்தும்.
ஹாட் டிஸ்கில் டேட்டா மெல்லீய பொது மையம் கொண்ட ட்ரேக்ஸ் (tracks) எனும் பாதையிலேயே பதியப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரேக்கும் செக்டர்ஸ் (Sectors) எனும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு ட்ரேக்கும் ஒரே அளவான செக்டர்களைக் கொண்டிருக்கும். டிஸ்கில் உள்ள டேட்டாவை பதியும் மிகவும் சிறிய பகுதியே செக்டர் ஆகும். ஒரு செக்டரின் அளவு 512 பைட்டுகளாகும். ஹாட் டிஸ்கை போமட் செய்யும் போதே இவ்வாறு பிரிக்கப்படுகின்றன..
இந்த இடத்தில் நான் ஒரு “கணக்கு வாத்தியார்” வேலை பார்க்க வேண்டியுள்ளது.
ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவு 10 கிலோ பைட் எனின் அந்த ஹாட் டிஸ்க் 20 செக்டர்களாகப் பிரிக்கப்படும். எனினும் இயங்குதளமானது நேரடியாக ஒவ்வொரு செக்டரையும் அணுகுவதில்லை. மாறாக அது பல செக்டர்களை ஒன்று சேர்த்து க்ளஸ்டர் (Cluster) எனும் ஒரு அணியாக மாற்றி அதனையே அணுகுகின்றது. இதனை (Allocation unit) எனவும் அழைக்கப்படும்.
உதாரணமாக ஒவ்வொரு செக்டரையும் ஒரு பையை கையில் வைத்திருக்கும் ஒரு நபருக்கு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு பையிலும் 512 பைட் டேட்டாவையே சேமிக்க முடியும். ஒவ்வொரு நபரையும் 1,2,3 என இலக்கமிடாமல், பைல் சிஸ்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து ஒரு அணியாக மாற்றி அவர்களை முதலாவது அணி எனப் பெயரிடுகிறது. மொத்தமாக 400 பேர் இருப்பார்கள் எனின் பைல் சிஸ்டம் அணிக்கு நால்வராக 100 அணிகளாகப் பிரித்துக் கொள்ளும்.
இன்னொரு வகையில் சொல்வதானால் 400 செக்டர்கள் கொண்ட ஒரு ஹாட் டிஸ்கில் (200 கிலோபைட்) பங்கீட்டு அளவாக 4 செக்டர்களை ஒரு க்ளஸ்டர் கொண்டிருப்பின் மொத்தமாக 100 க்ளஸ்டர்கள் காணப்படும்.
பைல் சிஸ்டமானது ஒரு குறித்த செக்டரை அணுக வேண்டுமானால், முதலில் அந்த செக்டர் இடம் பெறும் க்ளஸ்டர் இலக்கத்தையே அணுகும். அந்த க்ளஸ்டருக்குள் செக்டரின் தொடரிலக்கத்தின் மூலம் உரிய செக்டரை அடையும். அதாவது ரிம்ஸி எனும் நபரைக் கண்டு பிடிக்க ரிம்ஸி இடம் பெறும் அணியை முதலில் அணுகி அங்கு ரிம்ஸியைக் கண்டு பிடிப்பதற்கு ஒத்ததாகும்.
FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் இம்முறையிலேயே இயங்குகின்றன. அப்படியானால் இவற்றுக் கிடையே என்ன வேறுபாடு உள்ளன?
முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது. பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும்.சீனா-அரிய புகைப்படங்கள்
மதிய உணவில் பாம்பு : குழந்தைகளுக்கு வாந்தி

பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் ஒன்றரை அடி நீளமுள்ள பாம்பு இருந்தது.உணவை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் ,பிர்பும் மாவட்டம் கபிரஜ்பாராவில் உள்ள ஒரு பள்ளியில் ,குழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கப்பட்டது.

அந்த சத்துணவை தயாரிக்கும் போது ஒன்றரை அடி பாம்பு விழுந்து விட்டது.இதை கவனிக்காமல் ,குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.அப்போது உணவுடன் சேர்ந்து பாம்பும் வந்து விழுந்தது.இதைப் பார்த்த குழந்தைகள் அதிச்சி அடைந்தனர்.அவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது.மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளும் ,உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.நல்ல வேலையாக உணவில் நச்சு எதுவும் இல்லை என பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் ,உணவில் நீளமான பாம்பை பார்த்த அதிர்ச்சியில் இருந்து பல குழந்தைகள் மீளவில்லை.இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.விசாரணையில் சத்துணவு தயாரித்த பெண் மீது குற்றம் நிரூபணமானால் ,நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்திற்கு மாயா கோனாய் தான் பொறுப்பு என்று கூறப்பட்டது.ஆனால்,இதை மாயா திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.மதிய உணவு தயாரிக்கப்படும் இடம் ,சிறிதும் பராமரிப்பு இல்லாதது குறித்தும் ,அங்கு பாம்பு,பல்லி இருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறி வந்ததாகவும் ,இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவத்தார்.

தான் சமைக்கும் போது உணவில் பாம்பு விழுந்ததை பார்க்கவில்லை என்றும் ,உணவில் எப்படி பாம்பு வந்தது என்பது தெரியாது.என்றும் மாயா கூறியுள்ளார்.இது தொடர்பாக ,விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வாந்தி,மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மாலையிலேயே வீடு திரும்பினர்.


சிஸ்டம் பாஸ்வோர்ட் மறப்பவர்களுக்கு

கம்ப்யூட்டரில் பாஸ்வோர்ட் மறந்து போச்சு என்று கேட்பவர்களுக்கு நான் அருமருந்து ஒன்று தரப்போகிறேன். பாஸ்வோர்ட் டைப் செய்கிறோம்.சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம்.சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வோர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வோர்ட் கொடுக்கிறோம்.இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி.டிரைவில் பாஸ்வொர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வோர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா?

இந்த டிஸ்க்கிர்க்குப் பெயர் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்க் (Password Rest Disk) ஆகும்.இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி அல்லது யு.எஸ்.பி.டிரைவ் வைத்துப் பயன்படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1. முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.

2. அதன் பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப்
பார்க்கவும்.இதில் Prevent Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விசார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்ப்பொதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வோர்ட் டைப் செய்திடவும்.பின் Next அழுத்தவும்.உங்கள் Password டிஸ்க் ரெடி ஆகிவிடும்.
8. இனி விசார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம்.இதனை எப்படி பயன்படுத்துவது?எப்போதாவது உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போய்விட்டதா?

1. வெல்கம் ஸ்க்ரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2.அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும்.அதில் உங்கள் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use Your Password Disk " என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விசார்ட் திறக்கப்படும்.தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும்.அதனை பின்பற்றவும்.புதிய பாஸ்வோர்ட் ஒன்றினை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை.இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம்.


"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"- அன்பு

குடும்பம் ,மனைவி,மக்கள் என்பதன் அருமை எல்லாம் நம்மில் பலருக்குத் தெரியாது.எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் பல குடும்பங்களைச் சுக்கு நூறாக்கி கொண்டிருக்கிறது.இதோ,இந்தக் கற்பனைக் கதையைக் கேளுங்கள்.

அவர்கள் இருவரும் வயதானவர்கள் .நாற்பது வருட தாம்பத்யம் நடத்தியவர்கள்.மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அவர்.ஆனால்,அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார்.

அந்தக் கடைசிக் காலத்திலாவது மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ,உறவினர் ஒருவர் சொன்னார்..."உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா?கல்யாணம் ஆன புதிதில் ,நீ உன் அலுவலகத்தில் பணத்தை கையாடல் செய்து வேலையை இழந்தாய்.அப்போது உன் அப்பாவும் அம்மாவும் கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று சொல்லி,உன்னைப் பிரிந்து போனார்கள்.ஆனால்,உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள்.

பிறகு பிஸினஸ் செய்யப்போகிறான் என்று பல லட்ச ரூபாயை வங்கிக் கடனாக வங்கி ஒரு ஷோ ரூம் ஆரம்பித்தாய்.அதில் பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த பிஸினஸும் கைவிட்டுப் போனது.உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள் கூட அந்த நேரத்தில் விலகிப் போனார்கள்.அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள்.

பிறகு கேட்ட சகவாசங்கள்,தீய பழக்கங்கள் அந்து சேர,ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வியாதியஸ்தனானாய்.அப்போது நீ பெற்ற பிள்ளைகளே,உன்னை உதறிவிட்டுப் போனார்கள்.ஆனால்,அப்போதும் உன்னோடு இருந்தது உன் மனைவி மட்டும்தான்.இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?" என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர்.

அதற்குக் கணவர் சொன்னார்: "எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில் இருந்திருக்கிறாள்.இவள் துரதிர்ஷ்டத்தால் தான் நான் இப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறேன்..."

இன்னொரு வகை தம்பதிகளும் இருக்கிறார்கள்.

கார் வாங்க வேண்டும்.அபார்ட்மென்ட் வாங்க வேண்டும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று சதா அலைந்து கொண்டே இருப்பார்கள்.இந்த அலைச்சல் காரணமாக,கணவன்-மனைவி இரண்டு பேருக்கும் வீட்டில் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காது.

அப்படியே பேசினாலும் 'உன் பி.எப் -ல் எத்தனை பணம் இருக்கிறது? உனக்கு பாங்கில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்?'என்று ஏதோ கம்பெனி ஆடிட்டர்கள் மாதிரிதான் பேசி கொள்வார்கள்.

அன்பு,அன்யோன்யம்,குழந்தைகள் - இதற்க்கெல்லாம் எப்போது நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?என்று கேட்டால் ...'கார்,அபார்ட்மென்ட் பதவி உயர்வு எல்லாம் வாங்கிய பிறகு 'என்று சொல்வார்கள்.

வெற்றியையும் செல்வத்தையும் வாழ்க்கையில் தேட வேண்டியது தான்.தப்பு என்று யாராலும் சொல்ல முடியாது.ஆனால்,எதை விலையாகக் கொடுத்து இதையெல்லாம் வாங்கப் போகிறோம் .என்பதை நாம் கணக்கிட வேண்டியது அவசியம் இல்லையா?

மும்பைவாசிகள் பற்றி ஒரு கிண்டல் உண்டு.அதாவது,பணிக் காலத்தில் தங்களின் ஆரோக்கியம் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து,ஐம்பது வயது வரை அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள்.அதன்பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக,சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவளிப்பார்களாம்.அது ஒரு கிராமம்..அங்கே ஒரு வீடு.அந்த வீட்டுக்கு ஒரு நாள் மூன்று பெரியவர்கள் வந்தார்கள்.நீண்ட நேரம் பயணம் செய்த களைப்பு அவர்களிடம் தெரிந்தது.

இவர்களைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணி , 'உள்ளே வாருங்கள்..என் கணவர் வந்து விடுவார் உணவருந்தலாம்..' என்று அழைத்தாள்.

ஆண்மக்கள் இல்லாத வீட்டில் நாங்கள் உணவருந்த மாட்டோம்.அதனால் உன் கணவன் வீடு திரும்பும் வரை,இங்கேயே காத்திருக்கிறோம்..'என்று அவர்கள் திண்ணையிலேயே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.'

வயல்வேளைக்குப் போயிருந்த கணவன் மாலையில் வீடு திரும்பினான்.உடனே அவனது மனைவி,திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று,'என் கணவர் வந்துவிட்டார்.இப்போது எங்கள் வீட்டுக்குள் வர உங்களுக்கு தடையில்லையே?' என்று கேட்க,அவர்கள் 'தடையில்லை..ஆனால்,ஒரு நிபந்தனை..எங்களில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்குள் வரமுடியும்' என்றனர்.அந்தப் பெண்மணி காரணம் புரியாமல் விழிக்க..அவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்த பெரியவர்,'என் பெயர் அன்பு..இவன் பெயர் வெற்றி. அவன் பெயர் செல்வம்..எங்களில் ஒருவரைத் தான் வீட்டுக்குள் அழைக்க முடியும்.அதனால் யாரை அழைப்பது என்று நீயே தேர்ந்தெடுத்துக் கொள்..' என்று சொல்ல,'வந்திருப்பவர்கள் வழிப்போக்கர்கள் அல்ல ..செல்வம்,வெற்றி,அன்பு என்ற மூன்றுக்கும் அதிபதியாக இருக்கும் தேவர்கள்!' என்பது அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது.

பூரிப்போடு வீட்டுக்குள் ஓடிய பெண்மணி,விஷயத்தைக் கணவனிடம் சொன்னால்.கணவனுக்கு பரவசமும் பதற்றமும் தொற்றிக் கொண்டது.'வாழ்க்கையில் வெற்றிதான் முக்கியம்.அதனால் அவரை நம் வீட்டுக்கு அழைக்கலாம்'என்று யோசனை சொன்னான்.

அதற்கு இவள் 'வெற்றி வந்தால் மட்டும் என்ன பயன்? செல்வம் தானே முக்கியம்.அதனால் செல்வதை அழைத்து வரலாம்' என்று பரபரத்தாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கெட்ட அவர்களின் மருமகள் சொன்னால் 'வெற்றியையும் செல்வத்தையும் விட அன்பு இருந்தால் தான் கணவன்,மனைவி,குழந்தை,மாமா,அத்தை என்று நாமெல்லாரும் சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க முடியும்.அதனால்,அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை..'என்று சொல்ல,அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

உடனே அந்த வீட்டின் தலைவி வீட்டுக்கு வெள்ளியே சென்று,'உங்களில் அன்பு யாரோ,அவர் உள்ளே வரலாம்..' என்று சொல்ல,அன்பு என்ற பெரியவர் வீட்டின் உள்ளே சென்றார்.அன்பைத் தொடர்ந்து வெற்றி,செல்வம் என்ற மற்ற இரண்டு பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு ஆச்சர்யம்!

பிறகு அவர்கள் சொன்னார்கள்-'நீங்கள் வெற்றியையோ,செல்வதையோ அழைத்திருந்தால்,மற்ற இருவரும் வீட்டின் வெளியிலேயே தங்கிவிட்டிருப்போம்.ஆனால்,நீங்கள் அன்பை அழைத்தால் தான்,நாங்கள் இருவரும் உங்கள் வீட்டுக்குள் வந்தோம்.காரணம் அன்பு எங்கு சென்றாலும் அதைப் பின்பற்றி,அதன் பின்னாலேயே செல்ல வேண்டும் என்பது தான் ஆண்டவன் எங்களுக்கு இட்ட கட்டளை!'.


"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..!

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன.பல சமயத்தில் படபடப்பு உச்சகட்டத்துக்கு போய் கை கால்களெல்லாம் உத்தர ஆரம்பித்து விடுகின்றன! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக் கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது.எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் !

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால் தான் ! உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

"பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி இரு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள்.ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க ..பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள்.பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்து விட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை.சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது.எந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை...அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மென்ட்டுக்கு வந்துவிடலாம்" என்று நெரிசலில் முட்டி மோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள்.ஆனால்,கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை ! அவரைப் பார்த்து பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர் ,"கவலைப்படாதீர்கள்.. பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது.அதிலே நீங்கள் போய்விடலாம்" என்று ஆறுதல் வார்த்தை சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர் ."அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.என் சக பேராசிரியர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.காரணம் அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள்.ஆனால் இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள் !' என்றார்.இப்படித் தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விசயங்களிக் கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன ! நாம் பதட்டத்தில் இருக்கும் போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி,அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத் தான் இருக்கும் !

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள்.போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டி விட்டது.ஆற்றை கடந்து தான் மறு கரைக்கும் போக வேண்டும்.எனவே பரிசல்காரனைத் தேடினார்கள்.அவனைக் காணவில்லை.ஆனால் பரிசல் மட்டும் இருந்தது.பரிசலை தாங்களே ஓட்டிச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில்,பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள்.ஒரு மணி நேரமானது..இரண்டு மணி நேரமானது..மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை ! அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து..போதையும் மெல்லத் தெளிய ..அப்போது தான் கரையில் இருக்கும் மரத்தில் பரியல் கட்டப்பட்டிருப்பதை அந்தக் குடிகாரர்கள் கவனித்தார்கள் !

குடிகாரர்கள் கண்களிப் போதையும் இருட்டும் மறைத்து போல பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்து விடுகிறது.

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது !

ஓர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார்.சம தகுதி பெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால்,ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்.ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து, "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது.கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்சான பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.யார் இந்தப் பூட்டிக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்,அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச் சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள்.எதுவும் கிடைக்கவில்லை.அந்த நால்வரில் ஒருவர் மட்டும்,ஒரு சில ஓலைச் சுவடிகளை புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில் ..கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள்.எதிரே அரசர் வீற்றிருந்தார்.பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்து.கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால்,கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை! தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர்,கடைசியாக எழுந்து வந்தார்.அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார்.என்ன ஆச்சர்யம் ! பூட்டு பூட்டப்படவே இல்லை.சாவியே இல்லாமல்,சூத்திரமே இல்லாமல் வர பூட்டை எளிதாகத் திறக்க,அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமன்றால்,முதலில் பிரச்னையைப் புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.விண்டோஸில் பாஸ்வர்ட் மறந்து போனால்..


விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் சொல்லியிருக்கிறேன்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்


நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!! (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.) அப்படி நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும். இதுமட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு. இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கிவிடும் அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம். அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது. இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும். அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும் இலவசமாக முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்

பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.

அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்

அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுக்கவும்.

அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.

அதன் கீழே எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை கிளிக் செய்யுங்கள்.

தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.

உங்கள் இணைய இணைப்பை பொறுத்து அஞ்சல் தரவிறக்கும் வேகம் மாறுபடும்.

சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக் செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.


கீகளை மாற்றி அமைக்க முடியுமா?

கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கீகளை மாற்றி அமைக்க முடியுமா?இந்த கேள்வி சற்று ஆபத்தானதுதான் என்றாலும் சிலருக்கு இந்த கட்டாயத் தேவை அவ்வப் போது ஏற்படத்தான் செய்கிறது.குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் கீகள் அருகே ஒரு சில கீகள் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக வலது புறம் உள்ள விண்டோஸ் கீ மற்றும் அதன் அருகே உள்ள மெனு கீ ஆகியவற்றை கூறலாம்.பல வேளைகளில் இவற்றை அழுத்தி நாம் ஏமாறுவது உண்டு.அப்போது இந்த கீயை நாம் விரும்பும் கீயாக மாற்றி விடலாமே என்று கூட எண்ணுவோம்.
கம்ப்யூட்டர் விளையாட்டுகளை அதிகம் விளையாடுவோரும் இது போல விருப்பம் கொள்வார்கள்.விளையாட்டுகளில் சுடுதல்,பறத்தல் போன்ற செயல்களுக்கு சில கீகள் தரப்படும்.இவை ஒரு சிலருக்கு வாகாக இல்லை என்றல் மாற்றி அமைத்தால் என்ன என்று எதிர்பார்ப்பார்கள்.
குறிப்பாக விளையாட்டுகளில் பல பயன்பாடுகள் ஆல்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளிலும் ஸ்பேஸ் பாரிலும் ஒதுக்கப்படுகின்றன.அதனால் தான் பெரும்பாலும் இந்த கீகளுக்கு அருகே அமைந்துள்ளன.விண்டோஸ் கீயினால் விளையாட்டில் குறுக்கீடு ஏற்படுகிறது.இந்த கீயை முடமாக்க முடியுமா என்றும் பலர் விரும்புகின்றனர்.
விண்டோஸ் கீ பல பயன்பாடுகளுக்கு பக்க பலமாக உள்ளது.எனவே இதனை முட மாக்கக் கூடாது.வேண்டுமானால் அந்த கீயின் பயன் பாட்டினை வேறு ஒரு கீக்கு மாற்றலாம்.

அதாவது விண்டோஸ் கீயினை வேறு ஒரு கீயில் வைத்து விடலாம்.இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு சிறிய புரோகிராம் தேவைப்படும்.அந்த இலவச புரோகிராம் பெயர் KeyTweak என்பதாகும்.இந்த புரோகிராம் http://webpages.charter.net/krumsick என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.இதன் மூலம் உங்கள் கீ போர்டில் உள்ள கீகளை நீங்கள் விரும்பும்படி முற்றிலுமாக கூட மாற்றி அமைக்கலாம்.

முதலில் மேலே சொன்ன தளத்திற்கு சென்று Keyboard Remapper v2.3.0 என்ற புரோகிராமினை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யவும்.இது மிகவும் சிறிய,எளிய,முற்றிலும் இலவச புரோகிராம்.இதன் அளவு 281 கே.பி ஆகும்.
இன்ஸ்டால் செய்திட்ட பின் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ஆல் புரோகிராம்ஸ் என்பதனை கிளிக் செய்து இந்த புரோகிராம் இருப்பதனை பார்த்து இயக்கவும்.டெஸ்க் டாப்பில் இந்த புரோகிராமுக்கான ஐகான் பதியப்படாது என்பதால் இந்த வேலை .இந்த புரோகிராமினை இயக்கினால் கீ போர்டில் உள்ள கீகள் தெரியும். ஆனால் இவற்றில் எழுத்துகள் இருக்காது.அதற்க்கு பதிலாக எண்கள் இருக்கும்.கீ போர்டு அமைப்பை வைத்து நீங்கள் தான் எந்த கீக்கு எந்த எண் எனக் கண்டுபிடிக்க வேண்டும்.இதுவும் எளிதுதான்.உங்கள் மவுஸ் அந்த எண் அருகே சென்றால் அது எந்த கீகானது எனக் காட்டும்.

இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் எண் 59.வலது புறம் உள்ள விண்டோஸ் கீயின் எண் 63 .இப்போது இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் வலது கோடிக்கு ,எடுத்துக்காட்டாக மைனஸ் அடையாளம் உள்ள கீக்கு மாற்ற விரும்பினால் (இந்த கிதான் அதிகம் பயன்படாத கீ ஆகும்.)எனவே எண் 59 ஐ மைனஸ் கிக்கான 105 எண்ணாக மாற்றிவிடலாம்.இது போல எந்த கீக்கான பயன்பாட்டையும் வேறு ஒரு கீக்கு மாற்றி விடலாம்.


ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி?

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்


பைல்களை விரைவாகத் தேடிப் பெற

கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும். எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும். T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம் ப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும். எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும். T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes