போட்டோஷாப்பில் நகை போட்டு அழகு பார்க்க

குழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன்.

20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன்.

நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் ப
டத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே-


கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்:

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்)
குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.

எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.

நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.


கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.

கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?:

உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம்.

Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.


Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும்.

சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்


கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்


போலியான டவுண்லோட் கேட்கம் பாப் அப்

வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை உருவாக்கி வரும் சைமாண்டெக் நிறுவனம், அண்மையில் எச்சரிக்கை ஒன்றின, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கியுள்ளது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, நம் கம்ப்யூட்டர்களுக்குள் தள்ளுபவர்கள், புதிய உத்தி ஒன்றினைக் கையாள்கின்றனர்.

இதன்படி, நாம் ஏதேனும் ஓர் இணைய தளத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கையில், திடீரென ஒரு பாப் அப் செய்திக் கட்டம் தோன்றி, நம் கம்ப்யூட்டரில் உள்ள ஏதேனும் சாப்ட்வேர் தொகுப்பு, எடுத்துக் காட்டாக, வி.எல்.சி. மீடியா பிளேயர், எம்.எஸ். விண்டோஸ் மூவி பிளேயர், விண் ஆம்ப், ஒன்றிற்கு லேட்டஸ் அப்டேட் இருப்பதாகவும், அதனைக் கொண்டு அப்டேட் செய்தால் தான், மேற்கொண்டு இயங்க முடியும் எனச் செய்தி கொடுக்கப்பட்டு, அதற்காக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நிறுவனத்தின் தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவோம். அது அந்நிறுவனத்தின் தளம் போலவே, அமைக்கப்பட்ட தளமாக இருக்கும். ஆனால் அங்கிருந்து டவுண்லோட் செய்யப்படும் சாப்ட்வேர், மால்வேர் புரோகிராம்களாக இருக்கும்.

சைமாண்டெக் நிறுவனம், இந்த அறிவிப்பினைத் தந்த தளத்தில், நான்கு இணையதளங்களின் படங்களைக் காட்டியுள்ளது.

ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும், இந்த தளங்களில் ஒன்று மட்டுமே உண்மையான தளத்தின் தோற்றமாகும். மற்றவை அனைத்தும் மால்வேர் புரோகிராம் உள்ள தளங்களாகும்.

இதில் இன்னும் மோசமாக ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அப்டேட் செய்திடச் சொல்லி பாப் அப் வருகையில், நாம் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடாமல், விட்டுவிட்டால், மிக மிக மோசமான தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். அங்கு மிக மோசமான புரோகிராம்களால், நம் கம்ப்யூட்டர் சூழப்படும்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிக்குகையில், 1. உடனே உங்கள் பிரவுசரை மூடவும்.

2. அடுத்தபடியாக, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனரைப் பயன்படுத்தி வைரஸ் சோதனை செய்திடவும்.

3. ஏதேனும் மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சாப்ட்வேர் பதியப்பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தவும்.

4. இத்தனையும் பயன்படுத்திய பின்னர், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் இருப்பதாகத் தெரிந்தால், உடனே அதனை நீக்கும் நடவடிக்கையில் இறங்கவும்.


சில சுருக்குவழிகள்

வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.

ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Downஅழுத்தவும்.


கூகுளில் புதிது என்ன ?

சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை.

கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால்,http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம். இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம்.

இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம்.

வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன் என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது.

இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.

இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகவரி Google Image Labeler (http://images.google.com/imagelabeler/) இங்கு சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது.

உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன் இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும்.

ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம். கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman )அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது.

லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.

ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரிhttp://www.google.com/pacman/. இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.

அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் http:/www.googlelabs.com. இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.


பி.டி.எப் .கோப்புகளின் தடைகளை நீக்க

அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும். இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம்.

ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.

சில பி.டி.எப். கோப்புகளை இணையத்திலேயே பார்க்க படிக்க வகை செய்யப்பட்டிருக்கும். இதில் சில பக்கங்களை அல்லது பத்திகளை காப்பி செய்திட முயற்சி செய்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகாது. ஏனென்றால், அதனை பி.டி.எப். ஆக வடிவமைத்தவர் காப்பி செய்வதனைத் தடை செய்திடும் தளையை அமைத்திருப்பார்.

இதில் நம்மை மிக மிக கோபப்பட வைத்திடும் நிகழ்வாக, நாம் சில வேளைகளில் கட்டணம் செலுத்திப் பெற்ற பி.டி.எப்.கோப்புகளிலும் இந்த தளைகள் இருக்கும். ஒரு சில பி.டி.எப். கோப்புகள் பாஸ்வேர்ட் தடையுடன் வரும். இதனை நாம் எதுவுமே செய்திட முடியாது.

லட்டு போல பி.டி.எப். பைல் கிடைத்தும், உடைத்துச் சாப்பிட இயலவில்லையே என்று கவலைப்படுவோம்; ஆதங்கப்படுவோம் மற்றும் ஆத்திரப்படுவோம். இந்த கவலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நமக்கு உதவிடும் இணையதளம் ஒன்று உள்ளது. இந்த தளம் பி.டி.எப். பைல் ஒன்றில் உள்ள நகலெடுக்கும், அச்செடுக்கும் தளைகளை நீக்கித் தருகிறது.

அதே போல பாஸ்வேர்ட் தடை இருந்தால், அதனையும் உடைத்துத் தருகிறது. இந்த தளத்தின் பெயர்http://www.freemypdf.com இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் நடுப்பக்கத்தில் மிக முக்கியமான பிரவுஸ்(Browse) பட்டனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, தளைகள் மற்றும் தடைகள் கொண்ட பி.டி.எப். கோப்பினைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடவும்.

கோப்பின் அதிக பட்ச அளவு 7 எம்.பிக்குள் இருக்க வேண்டும். கோப்பு வெற்றிகரமாக மேலே அந்த தளத்திற்கு அனுப்பப் பட்டவுடன் Do It என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஒருசில நொடிகளில், தளைகளும் தடைகளும் நீக்கப்பட்ட பி.டி.எப்.கோப்பு உள்ள புதிய இணையப் பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் அந்த பைலுக்கான லிங்க் இருக்கும்.

அதில் கிளிக் செய்து அந்த கோப்பினை இறக்கிப் பயன்படுத்தவும். இந்த சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதற்கு ஏதேனும் நன்கொடையாகக் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு தளைகளை நீக்குதல், பூட்டப்பட்ட வீட்டின் பூட்டுகளை உடைத்துத் திருட்டுத்தனமாகச் செல்வதற்குச் சமமில்லையா என உங்கள் மனது கேட்கலாம்.

எனவே தான் இந்த சேவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு அல்ல என்று இந்த தளத்தில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது. உங்கள் அறிவுத் தேடல்களுக்கு மட்டுமே இந்த உதவியை நாடவேண்டும். வர்த்தக ரீதியாக லாபம் அடைய இதனைப் பயன்படுத்தக் கூடாது.


லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்

லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா. அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார்.


சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.


தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:


லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன்.


இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.இவ்வாறு சன்னிசர்மா கூறினார்.


அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது.


அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.


லைவ் ஸ்பேஸ் - டு - வேர்ட் ப்ரெஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைமனைத் தளத்திற்குப் பதிலாக, வேர்ட் ப்ரெஸ் தளத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

இதுவரை மைக்ரோசாப்ட் லைவ் ஸ்பேஸஸ் (Microsoft Live Spaces) என்ற தளம் வலைமனை என்று அழைக்கப்படும் பிளாக்குகளை அமைக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏறத்தாழ 3 கோடி பேர்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லைவ் ஸ்பேஸஸ் பிளாக்கிங் தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மாறுதல் இவர்களுக்கு ஓர் அதிர்ச்சியைத் தந்தாலும், வேர்ட் ப்ரெஸ் மூலம் இவர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், மிக எளிதாக மாறும் வகையில், லைவ் ஸ்பேஸ் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ஒரு வழி காட்டப்படும் என்றார்.

இந்த மாற்றத்தை விரைவில் ஒவ்வொருவரும் மேற்கொள் வது நல்லது. இப்போது லைவ் ஸ்பேஸ் சென்றால், உடனே இந்த மாற்றம் குறித்துத் தெரிவிக்கப்பட்டு, உங்களுடைய ஆப்ஷன் என்னவென்று கேட்கும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் என்ன பிரச்னை என்றால், கேட்கப்படும் ஆப்ஷனில், நீங்கள் தொடர்ந்து லைவ்ஸ்பேஸ் பயன்படுத்த ஆப்ஷன் தரப்படவில்லை. இனி விண்டோஸ் லைவ் ரைட்டருக்கான மாறா நிலையில் உள்ள பிளாக்கிங் தளமாக, வேர்ட் ப்ரெஸ் இருக்கும்.

இது குறித்து மைக்ரோசாப்ட் வலைமனை ஒன்றில், வேர்ட் ப்ரெஸ் செயல்படுவது மிகச் சிறப்பாக உள்ளது என்றும், அதனாலேயே இந்த மாற்றத்தினை மைக்ரோசாப்ட் மேற்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றாகவும் மிகச் சிறப்பாகவும் வேர்ட் ப்ரெஸ் செயல்படுகிறது என்றால், அதனுடன் இயைந்து போவதே நல்லது என மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.


கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்;

அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.

இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவு களுக்கும் சொற்கள் கிடைக் கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.


ஐபோனில் முக அழகை தெரிந்து கொள்ளும் வசதி

ஐபோனில் முக அழகு குறித்து தெரிந்து கொள்ளும் வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோனில் 'அக்ளி மீட்டர்' என்னும் வசதி பொறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இந்த போன் மூலம் எடுக்கப்படும் நபரின் புகைப்படத்தின் தன்மை எத்தகையது என 10த்திற்கு மதிப்பெண் வழங்குகிறது.

பின்னர் அழகான முகம் அல்லது அழகற்ற முகம் குறித்த அதிகபட்ச மதிப்பெண் மெயிலாக அனுப்பப்படுகிறது.

கேமராவை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது


மேக் சிஸ்டத்தில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்

வரும் அக்டோபர் 26 அன்று, மேக் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கான தன் ஆபீஸ் 2011 தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட உள்ளது.

2008 ஜனவரிக்குப் பின்னர், மேக் சிஸ்டத்திற்கென எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இந்த தொகுப்பு வெளிவருகிறது.

இந்த தொகுப்பு ஏறத்தாழ எம்.எஸ்.ஆபீஸ் 2010 போலவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசுவல் பேசிக் அடிப்படையில் அமைந்த மேக்ரோ அமைக்கும் வசதி, பெயர் மாற்றப்பட்ட ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், முழுத்திரை வசதி, பிரசன்டேஷன் அல்லது டாகுமெண்ட்டைக் காட்ட டைனமிக் ரீ ஆர்டர் வசதி, வேகமான தொடக்கம் ஆகிய புதிய வசதிகள் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான ஹோம் மற்றும் மாணவர் தொகுப்பில், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் இணைக்கப் பட்டுள்ளது. ஹோம் மற்றும் பிசினஸ் பதிப்பில், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான அகடமிக் பதிப்பு ஒன்றையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group

facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள்.

அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது.

இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம்.

உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது.


நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள்.


கூகுளின் அடுத்தகட்ட அசத்தல் முயற்சி

உலகம் முழுவதும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் டிரைவர்களின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனத்தை அதிவேகமாய் சென்று முந்துவதும் தான்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் டிரைவர்கள் பலர் இரவு நேரங்களில் லேசாக கண் அயர்வதால் விபத்தில் சிக்கி உயிரை பறி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் சாலையில் தானாகவே ஓடும் ரோபாட்டிக் ரக கார்களை உருவாக்கி உள்ளது.

இந்த கார்களில் செயற்கையான இன்டலி ஜென்ஸ் சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கார் அருகிலோ, எதிரிலோ கார் வந்தால் அதை அறிந்து சட்டென விலகி சென்று விடும். எக் காரணத்தை கொண்டும் அருகில் உள்ள கார்களில் உரசாது.

கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரோட்டில் சிவப்பு விளக்கு சிக்னல் போடப்பட்டால், அடுத்த கணமே வேகத்தை குறைத்து தானாக இந்த கார்கள் நின்று விடுகிறது. இக்காரில் உள்ள “ரோபாட்” டிரைவர்கள்-மனிதர்களை விட மிக நன்றாக கார்களை இயக்குகின்றன.

இந்த ரோபாட்களுக்கு தூக்கம், மயக்கம், சோர்வு என்பது வரவே வராது. தானாக இயங்கும் இந்த கார்கள் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளன. எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. எளிதில் எந்தவித வைரசும் இதில் தொற்றாது.

சமீபத்தில் இந்த வகை ரோபாட் கார்களை கூகுள் நிறுவனம் சான்பிரஸ்சிஸ் நகரில் உள்ள சாலைகளில் இயக்கி சோதனை செய்தது. அப்போது போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளிலும் இந்த கார்கள் வேகமாக சென்று பிரமிக்கச் செய்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கார்களில் எந்ததெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது பற்றி இதில் உள்ள சாப்ட்வேரில் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட சாலைகளில் இவை சரியான வேகத்தில் செல்கிறது. இந்த கார்கள் மலைப் பாதைகளிலும் மிகவும் சரியாக இயங்குகிறது. இதையும் விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டனர்.

ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அடையாள குறியீடுகளை இந்த காரில் உள்ள “சென்சார்” கருவிகள் கவனித்து ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது. இதை உருவாக்கி உள்ள பிரபல “ரோபாட்டிக்” விஞ்ஞானி கிறிஸ்டோபர் உர்ம்கர் கூறும் போது, “இந்த ரோபாட்டிக் ரக கார்கள் அடுத்த தலைமுறையில் மிகவும் பிரபலமாகி விடும். அனைத்து நாடுகளிலும் ரோபாட் கார்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.


இக் கார்களில் பயணம் செய்பவர்கள் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அந்த இடத்திற்கு சென்றதும் நின்று விடும். இக் கார்களில் செல்லும் போது பக்கத்தில் எந்த வாகனத்துடனும் மோதி விடுமோ என்று பயப்பட தேவையில்லை.


காரில் உள்ள சென்சார் கருவி மற்ற வாகனம் நெருங்கி வருவதை அறிந்து “டக்” கென விலகி விடும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த வகை கார்களை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்துள்ளோம். முழு வெற்றி கிடைத்துள்ளது” என்றார். தானாக இயங்கும் இந்த ரோபாட்டிக் கார்களை நம் நாட்டில் இயக்கினால் பெருமளவு விபத்துக்கள் குறைவது உறுதி.


ஒரு புதிய அசத்தலான 'இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர்'

இன்று நம் வாழ்வில் இணையம் ஒரு முக்கிய அங்கம் ஆகிவிட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் , நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டண்ட் மெசேஞ்சர் மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது ' பிட்ஜின் ' எனும் உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மென்பொருள். முன்னர் கெய்ம் எனப் பெயரிடப் பட்டிருந்த இது இப்போது இலவச மென்பொருளாக கிடைகிறது. .

இந்த அப்ளிகேசன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடனடி இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது. அதாவது இந்த இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் மூலம் யாகூ சேவையில் ஒரு நண்பரோடும், கூகுளில் வேறொரு நண்பரோடும், எம்.எஸ்.என் சேவையில் மற்றுமொரு நண்பர் என ஒரே நேரத்தில் பல பேருடன் பல வலையமைப்புக்களில் சாட் செய்திட முடியும்.

பிட்ஜின் மென்பொருளை உடனடி மெசேஞ்ஜர் சேவைகளை வழங்கும் பிரபலமான ஏஓஎல், எம்எஸ்என், யாகூ மற்றும் அதிகம் பிரபலம் இல்லாத ஜாபர் அண்ட் காடு-காடு போன்ற மெஸ்ஸென்ஜர் சேவைகள் உட்பட மொத்தம் 17 வலையமைப்புக்களுடன் பயன்படுத்த முடியும்.

அத்தோடு இணையம் வழி தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஸ்கைப் மற்றும் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக் என்பன தரும் உரையாடல் வசதியையும் பிட்ஜினில் பயன் படுத்தலாம்.

எனினும் இதற்கு நீங்கள் புதிதாக ஒரு பிளக் இனை நிறுவிக் கொள்ள வேண்டும். பிட்ஜின் நிறுவியதும் நீங்கள் பயன் படுத்த விரும்பும் ' இன்ஸ்டண்ட் மெசேஞ்ஜர் ' சேவையை தெர்வு செய்து அந்த சேவைக்கென உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் வழங்கி' ஃணிஞ்டிண ' செய்து விடுங்கள்.

அந்த சேவையைப் பெறும் உங்கள் நண்பரோ உறவினரோ அப்போது இணைப்பில் இருப்பின் அது பற்றி திரையில் காண்பிக்கும்.. அதன் மூலம் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிக்கலாம். ஏஓஎல், எம்எஸ்என், யாகூ என ஒன்றுக்கு மேற்பட்ட வலையமைப்புக்களில் உங்கள் நண்பர்கள் வந்து செல்வார்களாயின் இனி அதற்கென பல அணீணீடூடிஞிச்tடிணிண - களை மாற்றிக் கொள்ள வெண்டிய தேவையை இல்லாமல் செய்கிறது பிட்ஜின்.பிட்ஜின் மூலம் சாட்டிங் செய்வது மட்டுமன்றி பைல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியும் பெறலாம்.

ஆனால் தற்போது கூஉஙீகூ சாட்டிங் வசதி மட்டும் தான் இதில் உள்ளது.பிட்ஜின் மூலம் வீடியோ மற்றும் குரல் வழி உரையாடலில் ஈடுபட முடியாது என்பது ஒரு குறையாகும். எனினும் இந்தக் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கலாம்.


குரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள்

சென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர்.

சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் பிரவுசர் பதிப்பு 6ல் தன் பயன்பாட்டினைத் தொடர்ந்து, அதில் தான் மேற்கொண்ட பல புதிய ட்ரிக்ஸ் குறித்து நீண்ட கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

கூகுளின் குரோம் 6 தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.

1. தொடங்கும் இணையப் பக்கம்:

ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது.

இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் “options” “basics” ஆகியனவற்றை கிளிக் செய்திடவும். பின்னர் “open the following pages”என்பதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதில் “ add” என்பதில் கிளிக் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும்.

இந்த விண்டோவில் அண்மையில் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் பட்டிய லிடப்படும். இவற்றில் நீங்கள் இணையத் தொடர்பினைத் தொடங்கும்போது, இணைப்பு இறக்கி உங்களுக்குக் காட்ட வேண்டிய, இணைய தளத்தின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை இதில் டைப் செய்திடவும்.

2. சர்ச் இஞ்சின் மாற்றுக:

குரோம் பிரவுசர், கூகுள் மட்டுமின்றி வேறு தேடுதல் சாதனங்களையும், பிரவுசரில் இணைக்க வழி தந்துள்ளது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தேடுதல் சாதனம் குரோம் பிரவுசரில் இல்லாமல் இருக்கலாம். அவற்றில் ஒன்றை இந்த பிரவுசரிலேயே தேடுதல் தளமாக அமைக்க விரும்பினால், வழக்கம்போல பைல் ரென்ச் ஐகானில் கிளிக் செய்திடவும்.

அதன் பின் “options”/ “manage” எனச் செல்லவும். தேடுதல் சாதனத்திற்கான பிரிவைக் காணவும். இங்கு நீங்கள் விரும்பும் தேடுதல் சாதனம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுத்து “make default” என்ற பட்டனை அழுத்தவும்.

3.அவசரத்தில் மூடிய தளம் திறக்க:

அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறந்து பணியாற்றுகையில், சில வேளை களில் எந்த தளத்திற்கான டேப் எது என்று அறியாமல், அதனை மூடிவிடுவோம். மூடிய பின்னரே, அதற்கான முகவரி நினைவில் இல்லாமல், அல்லது எப்படி அந்த தளத்தினைத் திறந்தோம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம்.

இவ்வாறு மூடிய பத்து தளங்களை மீண்டும் பெற குரோம் பிரவுசரில் வழி உள்ளது. Ctrl+shift+T என்ற கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் திறக்கப்படும். இப்படியே மீண்டும் மீண்டும் அழுத்த, மூடப்பட்ட பத்து தளங்களைத் திரும்பப் பெறலாம்.

4. பிரவுசர் பாரில் டேப்:

புக்மார்க் பார்கள் மிக வேகமாக நிரம்பப் பெறும். இதனால் தளங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுகையில், சில டேப்கள் நம் பார்வையில் இருந்து மறையும். இணையத்தில் இருக்கும் ஒரு வேளையில், குறிப்பிட்ட சில தளங்களை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டிய திருப்பின், இந்த தள டேப்கள் நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், நமக்கு சற்று சிரமம் ஏற்படும்.

இதற்குத் தீர்வாக குரோம் ஒரு வழி தருகிறது. புக்மார்க் ஒன்றை அட்ரஸ் பாரில் குத்தி (pin)வைக்க இந்த வழி உதவுகிறது. அப்படிக் குத்தி வைத்திடுகையில், ஒரு சிறிய ஐகான், அந்த தளத்தின் பிரதிநிதியாக அட்ரஸ் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனைக் கிளிக் செய்து, தளத்தினை எளிதாகப் பெறலாம். இவ்வாறு குத்தி வைத்திட, எந்த தளத்தை இப்படி அமைக்க வேண்டுமோ, அந்த டேப்பின் மீது ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் பட்டியலில் “pin tab” என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் இது வேண்டாம் என்று கருதினால், மீண்டும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் “unpin” என்பதில் கிளிக் செய்திட, ஒட்டிக் கொண்டிருந்த சிறிய ஐகான் நீக்கப்படுவதனைக் காணலாம். நீங்கள் பிரவுசரை எப்போது மூடுகிறீர் களோ, அப்போது, இவ்வாறு குத்தப்பட்ட அனைத்து தளங்களின் ஐகான்களும் நீக்கப்படும். இந்த செட்டிங்ஸ் அந்த பிரவுசிங் காலத்திற்கு மட்டுமே.

5. குரோம் நினைவகம்:

குரோம் பிரவுசர் அதன் வேகத்திற்குப் பெயர் பெற்றது. அப்படி இருந்தும் சில வேளைகளில் வேகம் குறைகிறதா? ஒரு டேப் தவிர மீதம் உள்ள அனைத்து டேப்களையும் மூடவும். இதற்கு Ctrl+W R களை அடுத்தடுத்து அழுத்தினால், அவை ஒவ்வொன்றாக மூடப்படும். ஒரு டேப் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை மூடவும்.

மீண்டும் இவற்றைத் திறக்க Ctrl+Shift+T ஆகிய கீகளை அழுத்தவும். மூடப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும். இதனை அவ்வப்போது செயல்படுத்தினால், குரோம் எடுத்துக் கொள்ளும் மெமரி ரெப்ரெஷ் செய்யப்பட்டு, வேகம் குறையாது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. குரோம் தொகுப்பின் டாஸ்க் மானேஜர் செயல்பாட்டினை இயக்கலாம்.

இதனைப் பெற ஷிப்ட் + எஸ்கேப் (Shift+Esc) கீகளை அழுத்தவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், திறந்திருக்கும் தளங்களில் எந்த தளம் அதிக மெமரி இடத்தினை எடுத்துக் கொள்கிறது என்று பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுத்து, “end process” என்பதனை அழுத்தி இயக்கத்தினை மூடவும்.

இன்னும் தெளிவாக குரோம் பிரவுசரின் மெமரி பயன்பாட்டினைப் பார்க்க வேண்டும் என்றால்,டேப் ஒன்றைத் திறந்து “about: memory” என டைப் செய்திடவும். இப்போது மற்ற பிரவுசர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டி ருந்தால், அவை எடுத்துக் கொள்ளும் மெமரி இடமும் காட்டப்படும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes