வடிவேலுவை ஏமாற்றிய காமெடியர்கள்!

நடிகர் வடிவேலுவிடம் சக காமெடியர்கள் சிலர் ரூ.7 கோடி வரை ஏமாற்றி விட்டார்கள்.

விசாரித்த உண்மை: இந்த விவகாரம் குறித்து சக காமெடியர்கள் சிலரிடம் விசாரித்தால் அவரு வைகை புயல் இல்லீங்க. பொய்கை புயல்.

அவரப்போயி யாராச்சும் ஏமாத்த முடியுமா? ஒரு டாக்குமெண்ட்டை நம்மக்கிட்ட படிச்சு காட்டச் சொல்வாரு. ஒரு வார்த்தை விடாம அர்த்தத்தையும் கேட்டுக்குவாரு. அதுக்கு பிறகு அந்த டாக்குமெண்ட்டை இன்னும் படிச்சவங்க பலரிடம் வாசிச்சு காட்டச் சொல்லுவாரு.

எல்லாரும் சொல்றது ஒரே மாதிரி இருந்தத்தான் கையெழுத்தே போடுவாரு, என்கிறார்கள். அதேநேரம் இந்த விவகாரம் பற்றி வடிவேலுவிடம் கேட்டால், ஒண்ணு மண்ணா பழகிட்டு கண்ணுல ஊசியை செருகிட்டாங்க. போயிட்டு போறாங்க.

அவுங்க மேல புகார் குடுத்து அவுங்க வாழ்க்கையை ஏன் கெடுக்கணும், என்று மன்னிப்பு மனப்பாண்மையுடன் பேசுகிறார்


எல்.ஜி. விற்பனை 20 சதவீதம் உயர்த்த இலக்கு

மொபைல் போன் தயாரிப்பில் உலகில் மூன்றாவது இடத்தில் இயங்கும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் தன் வர்த்தகத்தில், மொபைல் போன் விற்பனையில் 20 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.

கூகுள் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைந்த தன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்த இலக்கை அடைய கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறது.

ஸ்மார்ட் போன் பிரிவில் ஆப்பிள், ஆர்.ஐ.எம்., பால்ம் மற்றும் சில நிறுவனங்களின் போன்களே முன்னணியில் உள்ளன. இதனை முறியடித்து முன்னணி இடத்தைப் பிடிக்க எல்.ஜி. நடவடிக்கை எடுத்து வருகிறது. வர்த்தக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு உதவிடும் ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை, வழக்கமாக வடிவமைக்கப்படும் போன்கள் மட்டும் போதாது.

அதில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் புரோகிராம்களும் முக்கியமானவை ஆகும். எனவேதான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினையும், அதற்கேற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களையும் எல்.ஜி. செயல்படுத்தி வருகிறது.

2010 ஆம் ஆண்டில் விண்டோஸ் மொபைல் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் தன் மொபைல்களில் பதிந்து எல்.ஜி. தர இருக்கிறது. இந்த ஆண்டு எல்.ஜி. வெளியிட இருக்கும் மொபைல் போன்களில் 20 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு 11.7 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்து மொத்த அளவில் 10% இடத்தைப் பிடித்த எல்.ஜி., இந்த ஆண்டு 14 கோடி போன்கள் விற்பனை செய்து தன் பங்கினை உயர்த்தத் திட்டமிடுகிறது


கொசுவை விரட்ட மூலிகை மருந்து

கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார்.

கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வேப்பங்கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார்.

அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு முதல் பரிசு கிடைத்தது. சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கிருஷ்ணவேணிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது


வீடு தேடி வரும் டாட்டா டொகோமோ

வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் இணைப்புகளை அவர்கள் வீட்டிலேயே கொண்டு தரும் திட்டத்தினை டாட்டா டொகோமோ அறிவித்துள்ளது.

இதன்படி இந்நிறுவனம் வழங்கும் போஸ்ட் பெய்ட் இணைப்பை விரும்புபவர்கள், தங்களுக்குரிய திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து, இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு (1800 266 0000) தெரிவிக்கலாம்.

நிறுவனத்தின் பிரதிநிதி வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிம்கார்டினை அளிப்பார்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு உடனடி சேவை கிடைப்பதுடன், வாடிக்கையாளர் முகவரி மற்றும் ஆவணச் சோதனையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது


ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்

தொடர்ந்து பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள் மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வகையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரு சிம் போன்களைச் சந்தைப்படுத்துவதில் முதலில் உள்ளது. அண்மையில் இந்நிறுவனத்தின் இரண்டு டூயல் சிம் போன்கள் பலரைக் கவர்ந்துள்ளன. அவற்றைக் காணலாம்.


ஸ்பைஸ் எம் 7070:

இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும் தரப்பட்டுள்ளன. மேலும் படம் எடுக்கும் போது கேமரா அசைக்கப்பட்டாலும் படங்களைத் தெளிவாக இதில் எடுக்க முடியும்.

விநாடிக்கு 15 பிரேம்கள் வரை வீடியோ ரெகார்டிங் இதில் மேற்கொள்ள முடியும். வீடியோ பிளே செய்வதும் இதில் எளிதாகவும் நன்றாகவும் உள்ளது. இதன் மெமரியை 16 ஜிபி வரை நீட்டிக்க முடியும். இதில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், ஜாவா தொழில் நுட்பமும்,அ2ஈக இணைந்த வசதி கொண்ட புளுடூத் வசதியும், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயரும் உள்ளன.

ரெகார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 1000 முகவரிகளை இதில் போட்டு வைக்கலாம். இதன் குறியீட்டு விலை ரூ.7,999.


ஸ்பைஸ் மொபைல் டி 1111:

ஒரு ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ. சிம் என இரண்டு சிம்களைப் பயன்படுத்தக் கூடிய மொபைலாக ஸ்பைஸ் மொபைல்ஸ் தந்திருப்பது டூயல் சிம் மொபைல் டி 1111. இந்த போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவது இதன் சிறப்பாகும்.

பொதுவாக இந்தியாவில் டூயல் சிம் வகை போன்கள் விண்டோஸ் மொபைல் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கிடைப்பதில்லை. அந்த வகையில் இந்த போன் தனித்தன்மை கொண்டதாகும். மேலும் இதில் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டு என இரண்டும் இருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது.

இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்பட முடியாத தடுப்பு திரைக்கு தரப் பட்டிருப்பது மட்டுமின்றி, போனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மென்மையான லெதர் பை மற்றும் ஸ்கிரீன் கார்ட் தரப்பட்டுள்ளது.

கீ போர்டு சிறியதாகத் தோற்றமளித்தாலும், பயன்படுத்த வசதியாக கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகத் தடிமனாகத் தோற்றமளித்தாலும் இதன் எடை குறைவாகவே உள்ளது.

இதில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் மொபைல் பதிப்பு 6. இதன் வசதிகள் அனைத்தும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எழுத்துக்களைச் சற்றுப் பெரிதாக்கி தொட்டுப் பயன்படுத்தலாம்.

கீ பேட் பெரிதாக இருந்தாலும் டிக்ஷனரி மோட் வகையில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற இயலவில்லை. இந்த வகை கீ பேடிற்கு பழக்கமில்லாதவர்களுக்கு இது சற்று சிரமம். இதன் விண்டோஸ் மீடியா பிளேயர் கூடுதல் வசதிகளுடன் தரப்படவில்லை என்பதால் ஆடியோவின் தன்மையை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 3ஜிபி மற்றும் எம்பி4 வீடியோ இயக்கம் சிறப்பாக உள்ளது.

நெட் தொடர்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வாப் தரப்பட்டுள்ளன. பிரவுசர்களாக பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு மற்றும் ஆப்பரா மினி தரப்பட்டுள்ளது. ஆப்பரா மினி வேகமாக இயங்குவதால் அதனையே பயன்படுத்தலாம்.


ஆன்லைன் கீபோர்டு

இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் ரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drumsமற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம்.

இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions.

இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது.

இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம்.

நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50


விண்டோஸ் 7 - சில வசதிகள்

விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது.


விண்டோஸ் 7 சிஸ்டத்தின் டாஸ்க் பார், வழக்கத்திற்கு மாறாகச் சற்றுப் பெரிதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மானிட்டர் திரையின் அடிப்பாகத்தில் சற்று அதிகமாகவே இடத்தை எடுத்துக் கொள்கிறது.

இதனால் பட்டன்கள் பெரிதாக இருக்கின்றன. நீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்ட ர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும்.

டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.

1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.

2. உடன் பல டேப்கள் அடங்கிய Taskbar and Start Menu Properties என்னும் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

3. இதில் Use small icons என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.

இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம். இதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties டயலாக் பாக்ஸினைத் திறக்கவும்.

இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதில் Taskbar appearance என்பதற்குக் கீழாகAutohide the taskbar என்பதில் டிக் அடையாளம் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.

உங்களு டைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.


கடிகாரம், சிஸ்டம் ஐகான்களை மறைக்கலாமா?

விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் கடிகாரம், சிஸ்டம் மற்றும் பிற ஐகான்களை மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்றால் பலர் அவற்றை மறைக்கவே விரும்புவார்கள். வால்யூம் கண்ட்ரோல், நெட்வொர்க் இயக்க ஐகான், பவர் லெவல் என பல ஐகான்களை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிடலாம். ஏனென்றால் இவற்றை நாம் பார்ப்பது அரிது. சரி, எப்படி எடுத்துவிடலாம் அல்லது மறைத்துவிடலாம்.

1. டாஸ்க் பாரின் வலது மூலையில் மேலே சுட்டிக் கொண்டிருக்கும் அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது Show hidden icons என்று காட்டப்படும். அந்த பட்டனில் கிளிக் செய்து இதண்tணிட்டித்ஞு என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இப்போது Notification Area Icons என்னும் கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக உள்ள Turn system icons on or off என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இதனை அடுத்து எந்த ஐகானில் மாற்றங்கள் தேவையோ, அல்லது எந்த ஐகானை மறைக்க செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த ஐகானில் கிளிக் செய்து, மெனு பெற்று அதனை ஆப் அல்லது ஆன் செய்திடலாம்.

4. அதன் பின் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.


20 அடி நீள தோசை

கோவை வ.உ.சி.​ பூங்​கா​வில் கடந்த ஜன.2,​ 3-ம் தேதி​க​ளில் முதன்​மு​றை​யாக ஹோட்​டல்​கள் சங்​கம் நடத்​திய ​ உண​வுத் திரு​வி​ழா​வுக்கு பிரம்​மாண்ட வர​வேற்பு.​

சைவ,​​ அசைவ,​​ சைனீஸ்,​​ துரித உணவு என அனைத்து வகை உண​வு​க​ளும் ​ ஒரே இடத்​தில் சங்​க​மித்​த​தால் உண​வுப் பிரி​யர்​க​ளுக்கு அதிக உற்​சா​கம்.​

செட்​டி​நாடு,​​ கொங்கு மண்​ட​லம் என பல்​வேறு வகை​யான சைவ உண​வு​கள்,​​ அதே​போல அசைவ உணவு வகை​கள்,​​ பிரி​யாணி வகை​கள்,​​ தூத்​துக்​குடி பரோட்டா,​​ கொத்து பரோட்டா,​​ சில்லி பரோட்டா,​​ முட்டை பரோட்டா,​​ தோசை வகை​கள்,​​ தந்​தூரி,​​ சில்லி சிக்​கன்,​​ û....​ என உணவு பிரி​யர்​கள் திக்​கு​முக்​கா​டிப் போயி​னர்.​ ​

பார்​வை​யா​ளர்​களை கவ​ரும் வகை​யில் உண​வுத் திரு​வி​ழா​வில் பார்​வைக்​காக கலை​ந​ய​மாக வடி​வ​மைக்​கப்​பட்​டி​ருந்​தது 20 அடி நீள தோசை.​ ​ ​

குஷிப்​ப​டுத்​து​வ​தற்​காக மைதா​னத்​தின் மையப் பகு​தி​யில் கலை​நி​கழ்ச்​சி​கள்,​​ இசை நிகழ்ச்​சி​கள்,​​சமை​யல் கலை பற்​றிய கலந்​து​ரை​யா​டல் உள்​ளிட்ட நிகழ்ச்​சி​க​ளும் இடம்​பெற்​றி​ருந்​தன.​

இது​த​விர குளிர்​பா​னங்​கள்,​​ ​ பானி​பூரி,​​ பேல்​பூரி,​​ சுவீட்,​​ கார வகை​க​ளும் விற்​பனை செய்​யப்​பட்​டன.​

முன்​னணி ஹோட்​டல்​க​ளின் உண​வு​கள் குறைந்த விலை​யில் ஒரே இடத்​தில் கிடைத்​த​தால் உண​வுப்​பி​ரி​யர்​க​ளுக்கு ரொம்ப கொண்​டாட்​டம்​தான்.​ இரு நாட்​க​ளில் 50 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​ற​னர்.


நாணயம் - சினிமா விமர்சனம்

சென்னையில் பெரிய வங்கி நடத்துபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பாங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக வேலைக்கு சேருகிறார் பிரசன்னா. கொள்ளையர்கள் புக முடியாத பாதுகாப்பான வங்கி ஒன்றை உருவாக்குவது பிரசன்னா குறிக்கோள்.

ரொக்கப் பணம், நகைகள், தஸ்தாவேஜுகள், இரும்பு அறைக்குள் வைக்கப்பட்டு அதை பூமிக்கு அடியில் தண்ணீருக்குள் மறைத்து வைக்கும் நவீன தொழில் நுட்பத்தில் லாக்கரை வடிவமைக்கிறார். பாங்கி குழு அதை ஏற்கிறது. பிரசன்னா மேல் நம்பிக்கை வைத்து எஸ்.பி.பி. அப்பாங்கியை கட்டுகிறார்.

அங்குள்ள பணத்தை கொள்ளையிட சிபிராஜ் கோஷ்டி திட்டமிடுகிறது. இவர் எஸ்.பி.பி.யால் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜெயிலுக்கு போன பழைய வேலைக்காரர். கொள்ளையடிக்க பிரசன்னாவை பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.

விவாகரத்தான ராகிணியை பிரசன்னா விரும்புகிறார். முதல் கணவரை கொன்று பழியை பிரசன்னா மேல் போடுகின்றனர். தப்பவழியின்றி கொள்ளை கும்பலிடம் மாட்டுகிறார். பிரசன்னா உதவியுடன் கொள்ளை திட்டத்தை வகுக்கின்றனர். திட்டமிட்டபடி பூமிக்குள் துளை போட்டு பாங்கிக்குள்ளும் நுழைகிறார்கள். வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா என்பது கிளைமாக்ஸ்.

பாங்கியில் கடன் வாங்கி சொந்த தொழில் துவங்கும் லட்சிய இளைஞன் வேடத்தில் ஜொலிக்கிறார் பிரசன்னா. கனவு பாங்கியை உருவாக்கி எண்ணங்கள் நிறைவேறும் சந்தோஷத்தில் இருக்கும் அவரை கொள்ளை கும்பல் சுற்றி வளைப்பது எதிர்பாராதது.

விவாகரத்தான ராகிணியுடன் திடீர் காதல் கல்யாண பேச்சுக்கள் ஒட்டவில்லை.

தன்னால் பாதுகாப்பாக கட்டிய பாங்கியை தன்னை வைத்தே கொள்ளையடிக்க துணியும் கொள்ளையர்களிடம் இருந்து விட பட முடியாமல் தவிக்கையில் பரிதாபம் அள்ளுகிறார். கிளைமாக்சில் அதிரடி நடத்தி ஹீரோயிசத்தை நிமிர வைக்கிறார்.

வில்லன் அந்தஸ்துக்கு மாறியுள்ள சிபிராஜ் ஸ்கோர் பண்ணியுள்ளார் ராகிணி கணவனையும் சக கூட்டாளியையும் கொல்வதில் கொடூரம். நக்கல், நையாண்டியுடன் வில்லன் கெட்டப்பில் “பாஸ்”.

ஆக்ஷன் சீன்களை விறுவிறுப்பாக தொகுத்துள்ளார் இயக்குனர் சக்தி எஸ். ராஜன். பிரசன்னா காதல், கடற்கரை கொலை, கொள்ளையர் ஆஜர், பாங்கி கொள்ளை, சிபியின் பேச்சை அவருக்கு தெரியாமல் ரிக்கார்டு செய்யும் தந்திரம் பிறகு அவரிடமே மாட்டும். அவஸ்தை என சஸ்பென்ஸ் திரில்லரோடு சீன்கள் நகர்வது படத்தோடு ஒன்ற செய்கிறது.

ராகிணியின் முதல் திருமண விஷயத்தில் தெளிவில்லை. வைப்பாட்டிக்காக சொந்த பாங்கியை கொள்ளையடிக்க உடன்படும் எஸ்பி.யின் செயலில் நம்பகத்தன்மை இல்லை. அவரது மறுபக்க வாழ்க்கை எதிர்பாராத அதிர்ச்சி. ராகிணி நல்லவராக வந்து வில்லியாக மிரட்டுகிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு தமனின் பின்னணி இசை பெரிய பக்கபலம். ஜேம்ஸ் வசந்தன் பாடலில் நான் போகிறேன் மேலே பாடல் இனிமை.


டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம்.

இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.

இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.

இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது.

ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.

இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்


மைக்ரோமாக்ஸ் க்யூ3 டூயல் சிம்

வேகமாக டெக்ஸ்ட் அமைக்க குவெர்ட்டி கீ போர்டு மற்றும் இரண்டு சிம்கள் இயக்கம் என்ற இந்த இரண்டு வசதிகள் தான் தற்போது மொபைல் வாங்குவோர் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதன் அடிப்படையில் மைக்ரோமாக்ஸ் க்யூ3 டூயல் சிம் போன் வெளியாகியுள்ளது. இதன் இன்னொரு சிறப்பு குறைந்த விலை.

இதன் வண்ணத்திரை 220 x 176ரெசல்யூசனில் 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. குறைவான எடையில் கையாள்வதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீ பேட் கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன.

அழுத்துவதற்குச் சற்று எளிதாக இல்லை என்றாலும், பழக்கத்தில் சரியாகிவிடுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, சிறிய யு.எஸ்.பி. போர்ட், தனியே சார்ஜிங் போர்ட் என வாடிக்கையாளர்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் அனைத்தும் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மியூசிக் பிளேயருக்கு ஈக்குவலைசர் போன்ற அமைப்புகள் இல்லை என்றாலும், ஆடியோவின் தன்மை நன்றாக உள்ளது. ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ இயங்குகிறது. வாய்ஸ் ரெகார்டர் வசதியும் உள்ளது. வீடியோ பிளேபேக் வசதியில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

இதன் பிரவுசர் வேகமாக இயங்காவிட்டாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் நெட்வொர்க்குடன் இணைந்து இயங்குகிறது. ஆனால் ஆப்பரா மினி இன்ஸ்டால் செய்தால் வேகம் கூடுகிறது. பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் இமெயில்களை எளிதாக டவுண்லோட் செய்திட முடிகிறது. இணைக்கப்பட்டுள்ளA2DP இணைந்த புளுடூத் வசதியும் நல்ல செயல்பாட்டினைக் காட்டுகிறது.

டெக்ஸ்ட் பைல்களுக்கான இ புக் ரீடர், கரன்சி கன்வர்டர், வேர்ல்ட் கிளாக், பொழுது போக்க உதவும் புதிர் கட்ட விளையாட்டு ஆகியவையும் நமக்கு போனஸ் வசதிகளாகக் கிடைக்கின்றன. 2 ஜிபி மெமரி வரை இதில் நீட்டித்துக் கொள்ளலாம். 1.3 எம்பி கேமராவில் எடுக்கும் படங்கள் அவ்வளவு நல்ல தன்மையில் இல்லை.

பேட்டரி சாதாரண பயன்பாட்டில் இரண்டு நாட்களுக்கு தாங்குகிறது. தொடர்ந்து பேசினால் 3 மணி நேரம் பயன்படுத்தலாம். குவெர்ட்டி கீ போர்டு, இரண்டு சிம் பயன்பாடு, இணைய நெட்வொர்க் இணைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டால் ரூ.4,500க்கு இந்த போன் சரியான தேர்வாக அமையும்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes