நோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்

சாப்ட்வேர் உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல்போன் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறைக்கான மொபைல்போனை உருவாக்க திட்டமி்ட்டுள்ளது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் பால்மர் கூறியதாவது, நோக்கியா உடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போதைய அளவில் சாப்ட்வேருக்கு என்று கைகோர்த்துள்ள தாங்கள், இனிவரும் காலங்களில் ஹார்டுவேர் தயாரிப்பிலும் பணியாற்ற உள்ளோம்.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், குளோபல் மொபைல் ஈகோசிஸ்டம் உருவாக்கும் பொருட்டு நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட திட்டமி்ட்டோம்.

நோக்கியா நிறுவனம், இந்தியாவில் முன்னணி மொபைல்போன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. புதிய மொபைல்போனிற்கான சாப்ட்வேர் குறித்த அம்சங்களை தங்கள் நிறுவனம் பார்த்துக் கொள்ள இருப்பதாகவும், மற்ற முக்கிய பணிகளான ஹார்டுவேர் டிசைன், லாங்குவேஜ் சப்போர்ட் உள்ளிட்டவைகளை நோக்கியா நிறவனம் மேற்கொள்ள உள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல்போனில், தங்கள் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்ஜின் இடம்பெறும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட

வேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும்.

1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.

2. அடுத்து பைல் மெனுவில் “Save as Web Page” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். “Save As” என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக் கவும். “File name” என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.

3. இந்த “Save As” டயலாக் பாக்ஸில் “Publish” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை “Browser support” என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் “Web Options” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம்.

இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினை யும் வரையறை செய்திடலாம்.

பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்


மைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன?

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை.

அந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட்வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.

சிலவற்றிற்கான பதிலை இங்கு காணலாம்.

ஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தினை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறும். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.

உயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட்டுமே கட்டண சேவையினைப் பயன் படுத்தி வந்தனர். இவர்களின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆகக் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோசாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.

மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர்கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.

ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையினை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என்.மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம்.

இதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோகிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனைத்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

தற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்படியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறுவனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.

இந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட்வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணைந்து வெளியிடப்படலாம்.

ஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெசஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக்கலாம்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வாங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமானமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமானம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படையிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.


மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்காக, சர்வதேச அளவில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

கூகுள் நிறுவனம், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் உடன் இணைந்து மொபைல் பேமெண்‌ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்ட் ஸ்டீரிட் பத்திரி‌கை, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது.

ஆனால், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அப்போது தெரிவித்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பலசரக்கு பொருட்களிலிருந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது வரையிலான அனைத்து விசயங்களையும் மொபைல்போன் உதவி கொண்டே பெருமளவில் நடைபெற்று வருகிறது.

இதற்காக, கூகுள் நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக, இந்த மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய உள்‌ளோம்.

முதற்கட்டமாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 போனை, 27ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஏர்செல் நிறுவன இயக்குனர் சந்தீப் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் 13 சர்க்கிள்களில் 3ஜி சேவையை வழங்க அனுமதி பெற்றுள்ள தங்கள் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன்4 போனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.

இத்னமூலம் 3ஜி சேவையின் உன்னதத்தை தங்கள் வாடிக்கையாளர்கள் பெற உள்ளார்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் மற்றும் வகையில் இந்த போனையும், 3ஜி சேவையையும் அளிக்க உள்ளதாக அவர் அதில் ‌கூறியுள்ளார்.

இந்தியாவில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் இறுதி்க்குள், 12 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்தி ஏர்டெல் நிறுவனமும், அதேதினத்தில், ஐபோன்4 போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. பார்தி ஏர்‌டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், வாடி‌க்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் (162 மில்லியன்) முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. (ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 மில்லியன்).


மார்ச் மாத கணிப்பின்படி, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் தொலைதொடர்புக்கு அதிக வாடிக்கையாளர்கள் (811.59 மில்லியன்) உள்ளனர்.


ஐபாட், ஐபேட், ஐபோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் கடந்தாண்டே ஐபோன்4 போனை அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ஆரம்ப நிலை விலை 199 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


கணினியில் USB PORT ஐ DISABLE செய்ய

USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.


இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்


REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,

RUN----->TYPE " regedit "

REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor

மேலே உள்ள PATH க்கு சென்று பின்,


START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.

அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,

அதில் HEXDECMIAL VALUE வை SEL
ECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2).

பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .


மறையும் விண்டோஸ் எக்ஸ்பி

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரும், பன்னாட்டளவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர் களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது இது படிப்படியாகக் குறைந்தாலும், 50%க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் "ஸ்டார் கவுண்ட்டர்' என்னும் ஆய்வு அமைப்பு எடுத்த ஒரு கணிப்பின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், விண்டோஸ் எக்ஸ்பி 30.7% மற்றும் விண்டோஸ் 7 பயன்பாடு 32.2% எனக் கண்டறியப் பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உறுதியாக எதிர்பார்ப்பது போல, மக்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் முழுமையாக மாறுவார்கள் என்றே தெரிகிறது.

சென்ற ஜனவரி மாத இறுதியில், 30 கோடி விண்டோஸ் 7 சிஸ்டம் உரிமங்களை விற்பனை செய்ததாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஸ்டார் கவுண்ட்டர் கணக்குப்படி, விஸ்டா 19.5% மக்களாலும், ஆப்பிள் மேக் ஓ.எஸ். 14.8% மக்களாலும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், பன்னாட்டளவில் பார்க்கையில் விண்டோஸ்7, மொத்தத்தில் 31.5% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எக்ஸ்பி 46.8 % பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில், சீன கம்ப்யூட்டர் பயன்பாடு, முடிவுகளை முடிவு செய்வதாக அமைகிறது.

அங்கு அதிகப் படியான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தில் உள்ளது.

தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6-னை புதைத்துவிடுங்கள், விட்டு விடுங்கள் என்று கூறும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி குறித்து அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்றும், மாறுவதே நல்லது என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.


சிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப்யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம்.

இந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம், கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம். கம்ப்யூட்டரின் திறனை இதன் மூலம் கண்காணித்து, நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம் களை மூடலாம். நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு இருந்தால், அதனுடன் இணைக்கப் பட்ட பயனாளர்களின் செயல்பாடு களைக் காணலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம் களையும் இயக்கலாம். கம்ப்யூட்ட ரில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவுதான், ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும். விண்டோஸ் இயக்கமானது,

எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது, திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான், நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.

டாஸ்க் மானேஜரை இயக்கும் வழி: பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். Ctrl-Shift-Esc அழுத்தலாம். Ctrl-Alt-Del அழுத்திப் பின்னர் Start Task Manager இயக்கலாம். அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager தேர்ந்தெடுக்கலாம்.

டாஸ்க் மேனேஜர் விண்டோவில், எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தாலும், கீழாக, கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப் படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.

டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில், Applications, Processes, Services, Performance, Networking, and Users ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் Applications, Processes, Services ஆகிய டேப்கள்தான் நாம் கம்ப்யூட்டரின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டி ருக்கின்றன.

முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும்போது, Applications டேப் நமக்குக் காட்டப் படும். கம்ப்யூட்டரில் இயக்கப் பட்டு, டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள் (எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்பட மாட்டாது.

ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால், அதனைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள End Task பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில், மிக முக்கிய மானது, அதில் உள்ள Status பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக் கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் “Not Responding” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை, அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம், புரோகிராமினை நிறுத்தலாம்.

டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு Processes டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.

இதன் மாறா நிலையில், Image Name (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), User Name (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), Memory (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்), மற்றும் Description (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.

இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால், கீழே காட்டப்படும் தகவல்கள், வரிசைப்படுத் தப்படும். பயனாளர் எனில், அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில், அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப் படும்.

கம்ப்யூட்டர் மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால், அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், மெமரி டேப் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால், அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து, அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு. பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.

இதே போல Services டேப் மூலம், சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். (“stopped” or “running”) இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம்; நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம். பிரச்னைகள் ஏற்படுகையில், ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி, பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில், பிரச்னை தீர்க்கப்பட்டு, கம்ப்யூட்டர் வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ, அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு, அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர், பல பயன்களைத் தரும் ஒரு சாதனமாகும். பொறுமையாகக் கையாண் டால், பல தீர்வுகளை இதன் மூலம் பெறலாம்.


Docx பைல்களைப் படிக்க

கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராம் பல ஆண்டுகளாக அனைவராலும் பயன் படுத்தப்படும் ஓர் அப்ளிகேஷனாக அமைந்து பெயரெடுத்துள்ளது. அறிமுக மான ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது.

எனவே,இந்த தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய்யாத வர்கள், இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல இணைய தளங்கள் இலவசமாக இந்த பைல்களை Doc பார்மட்டில் மாற்றித் தரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் ஒவ்வொரு முறையும் இது போல இணைய தளம் சென்று பைல்களை அப்லோட் செய்து, மாற்றிய பின்னர், அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தும் நிலைக்குப் பதிலாக, மாற்றித் தரும் புரோகிராமினையே நாம் கொண்டிருந்தால், நமக்கு நேரம், வேலை மிச்சம் தானே.

இந்த எண்ணத்தில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை.

இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Docx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது.

அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம்.

இவ்வளவு எளிதாக நம் தேவையை நிறைவேற்றும் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட http://download. cnet.com/DocXViewer/300018483_475179715.html?tag=mncol;2 என்ற முகவரிக்குச் செல்லவும்.


கூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்

கூகுள் நிறுவனம், 'குரோம்புக்' என்ற பெயரில் மடி கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகளவில், கம்ப்யூட் டரில் பெரும்பாலோர் பயன்படுத்தும் தேடல் பொறியாக கூகுள் விளங்குகிறது.

இந்நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ”க்குப் போட்டியாக, 'கூகுள் குரோம்' என்ற ஆணைத் தொகுப்பில் இயங்கக் கூடிய, 'குரோம்புக்' என்ற பெயரில் மடி கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வகை கம்ப்யூட்டர்களை சாம்சங் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.சந்தையில் உள்ள இதர லேப்-டாப்களை விட, 'கூகுள் குரோம்' பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இதில், 'அவுட்லுக் எக்ஸ்பிரஸ்' அல்லது 'வேர்டு' போன்ற மென் பொருள்களுக்கு பதிலாக, கூகுள் வழங்கும், 'கிளவுட் கம்ப்யூட்டிங்' வசதி மூலம், இணையத்தில் நேரடியாக இ- மெயில் மற்றும் ஸ்பிரெட் ஷீட் வசதிகளை பயன்படுத்தலாம்.

மேலும், வைரஸ் தடுப்பு மென்பொருள் உள்ளிட்ட மென்பொருள்களை இந்த மடி கம்ப்யூட்டரில் நிறுவிக் கொள்ளாமல், பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் டாட் காம், பெஸ்ட் பை வலைத்தளங்களில், 350 டாலர் (16 ஆயிரம் ரூபாய்) விலை யுள்ள 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

வரும் ஜூன் 15ம் தேதி முதல், சப்ளை தொடங்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிறகு ஆசிய சந்தைகளிலும் இந்த மடி கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வர உள்ளன.

இது தவிர, வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான, 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்களையும் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதில், வர்த்தக பயன்பாட்டிற்கான மாதச் சந்தா 28 டாலர் (1,288 ரூபாய்)எனவும், கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கான சந்தா 20 டாலர் (920 ரூபாய்)எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக, கூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2 வது முறை தப்பித்தார் கனிமொழி

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது நீதிமன்ற காவிலில் வைப்பதா என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.


இந்நிலையில் இன்று இது தொடர்பான உத்தரவை வரும் 20 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். ஏற்னவே கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கு 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுவரை இவர் கைது செய்யப்பட மாட்டார் என்ற நிம்மதியில் தி.மு.க., இருந்தது.


இன்றாவது ஜாமின் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க., இருந்த நேரத்தி்ல் இந்நிலையில் இன்று 2 வது முறை கோர்ட் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.


கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இவர் கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்.


இன்று ஜாமின் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்படுவாரா என்பதற்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும் பெண் என்பதால் இவரை ஜாமினில் விட வேண்டும் என்றும் ராம்ஜெத்மலானி வாதாடினார்.


சி.பி.ஐ.,வக்கீல் லலித் தனது வாதத்தில் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்த காரணத்தினால் ரூ. 214 கோடி பரிமாற்றம் நடந்தது என்றும் இவரை ஜாமினில் விடக்கூடாது என்றும் வாதிட்டனர் .


இது குறித்த தீர்ப்பை நீதிபதி இன்று அளிக்கவிருந்தார். இன்றைய தீர்ப்பு தி.மு.க.,வுக்கு கூடுதல் அடியாக விழும், இதனால் தோல்வியில் இருந்து மீளாத தி.மு.க., கனிமொழியை எப்படி காப்பாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.


இதனையடுத்து இந்த மனு தொடர்பான தீர்ப்பு வரும் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று ஜாமின் தொடர்பான ஆர்டர் ரெடியாகவில்லை என்றும் இதனால் தள்ளி வைக்‌கப்படுகிறது என்றும் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார்.


ஆப்பரா பதிப்பு 11.10

புதிய பதிப்பின் ரிலீஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது.

நான்கு ரிலீஸ் பதிப்பு வெளியானவுடன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது. கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப்யூட்டர்களில் பணியாற்ற, போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. கம்ப்யூட்டரில் பதிந்தவுடன், என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப்படுகிறது.

ஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்குகிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணைய தளங்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.

பிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில், அவற்றை எளிதாக இதில் பதிக்கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப்படலாம். பிளாஷ் பிளேயர், கம்ப்யூட்டரில் இல்லை என்றால், அதனைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப்படுகிறது.

ஆப்பராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப்பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தரவிறக்கம் செய்வது தொடர்ந்தும் வேகமாகவும் நடைபெறுகிறது.

ஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/ browser/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

இன்னொரு முக்கிய தகவலையும் இங்கு சொல்லியாக வேண்டும். ஆப்பரா இப்போது வெப் இமெயில் சேவையினைத் தருகிறது. இது அனைவருக்கும் இலவசமே. இது My Opera Mail என அழைக்கப்படுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்.


குரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு

குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது.

இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி.எம்.எல். 5க்கான ஸ்பீச் இன்புட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பேசுவது உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம்.

இதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமைப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது.

இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது.

இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும்.

முப்பரிமாணக் காட்சிகள் காட்டு வதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.

இந்த சோதனைத் தொகுப்பினைhttp://www.google.com/intl/en/landing/chrome/beta/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு

எலக்ட்ரிக் சார்ஞ் இன்றி பேசினாலே பேட்டரியில் சார்ஜ் ஏறும் புதிய மொபைல்களை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி மொபைலின் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது.

மேலும் மொபைலில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகை மொபைல்களில் சார்ஜ் ஏற்றலாம்.

சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய மொபைலை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராஃப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி மொபைல் போன்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய மொபைல்கள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.


நோ்ககியாவை ஓரங்கட்டியது சாம்சங்

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், மொபைல்போன் விற்பனையில் முடிசூடா மன்னனாக விளங்கிய நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ லிமிடெட் முன்னிலை பெற்றுள்ளதாக ஐடிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐடிஎப் நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 1990ம் ஆண்டிலிருந்து மொபைல்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்ததாகவும், 21 ஆண்டுகள் தொடர்ந்து முன்னணியில் இருந்த நோக்கியா நிறுவனத்திற்கு இது பலத்த பின்னடைவாக கருதப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, மார்க்கெட் ஷேர் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

சாம்சங் நிலை இவ்வாறிருக்க, நோக்கியா நிறுவனத்தின் விற்பனை 10 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மார்க்கெட் ஷேர் 28 சதவீத அளவிற்கு சரிந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், 20 சதவீத சரிவை கண்டதன் மூலம் அதிலும் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம், முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் பறிகொடுத்தது இவ்வாறு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite

பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம்.

கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது,

இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.


கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents -> authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools -> Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes