புதிய வைரஸ் : கலங்கி நிற்கும் கணினி உலகம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கணினிகளை பதம் பார்த்தது. தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன் அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கணினிகளை பதம் பார்த்துள்ளது.

இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கணினி தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு "ட்ரோஜான்" என பெயரிடப்பட்டுள்ளது.

இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.

இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கணினிகளை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கய்யுடு கூறியதாவது: ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.

இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.

எனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யும்போது எச்சரிக்கை தேவை". என்று ராம் ஹெர்க்கநாயுடு கூறியுள்ளார்.


கதிகலங்க வைக்கிறது 'பிங்' - கூகுள்

பேஸ்புக், ஆப்பிள் கூட எங்களுக்குப் பெரும் மிரட்டல் இல்லை. ஆனால் மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜின்தான் மிகப் பெரிய மிரட்டலாக உள்ளது என்று கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி எரிக் ஸ்மித் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், ஆப்பிள் எங்களின் மதிப்புமிகு போட்டியாளராக உள்ளது. பேஸ்புக்கும் கூட சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட்டின் லேட்டஸ்ட் சர்ச் என்ஜின் பிங்தான் மிகப் பெரிய போட்டியாக தெரிகிறது.

பிங் கூகுளின் மிக முக்கிய போட்டியாக கருதுகிறோம். மிகவும் போட்டியைக் கொடுக்கும் வகையில் பிங் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், பிங் சர்ச் என்ஜின் யாஹூவை முந்தி அமெரிக்காவின் 2வது பெரிய சர்ச் என்ஜின் என்ற இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கூகுள் சற்று பீதியாகியுள்ளது.


Call Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்

இன்று உலகம் விரிவடைந்துள்ளது அது போல் மனிதனின் தொடர்பாடலும் விரிவடைந்து காணப்படுகின்றது. அவன் காலையில் எழுந்து, மாலை வரை அவனால் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக தனது உறவினருடன், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுடன் இவ்வாறு பல்வேறு தரப்பினருடன் அவன் தனது தொடர்புகளை இன்று இணைத்துக் கொள்கிறான்.

இவ்வாறு பல வகையான தொடர்பாடல்கள் மேற்கொண்டாலும் அவனால் பேசப்படும் பல விடயங்கள் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தான் நண்பர்களுடன் மற்றும் உறவினர், போன்றோர்களிடம் பேசப்படும் பேச்சுக்களை திரும்பவும் கேட்க வேண்டும் அல்லது அவனது ஏதாவது ஒரு ஆதாரத்திற்கு அதனைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள தொடர்புகளை விருத்தி செய்து கொள்ள இன்று உலகில் அதிகளமான பயனாலார்கள் பயன்படுத்தப்படும் PC to PC and PC to Phone.

இப்படி பல்வேறுபட்ட இணைப்புக்களை மேற்கொள்ளும் நாம் இன்று எல்லாரோலும் பயன்படுத்தப்படுகின்ற Skype and Google Talk and Yahoo IM போன்றவற்றில் நாங்கள் உரையாடும் போது அந்த உரையாடல்களை Recording செய்து கொள்ள இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் Software பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.computertamil.eu/images/files/MXSkypeRecorder.rar

இதனை இங்கே பெற்றுக் கொள்ள முடியும்.


மைக்ரோசாப்ட் ஜன்னல்களுக்கு வயது 25

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசிற்கு தற்போது 25 வயதாகும்,

1975ம் ஆண்டில் ஏப்ரல் 04ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்ட போதிலும், தங்களின் முதல் பதிப்பு சாப்ட்வேர் விண்டோஸ் 1.0, நவம்பர் 1985ம் ஆண்டில் வெளியி்ட்டது.

இந்த விண்டோஸ் 1.0 பதிப்பு, கமாண்ட் லைன் பதிப்பிலிருந்து கிராபிக்கல் யூசர் இண்டர்பேஸ் பகுதிக்கு மாற எளிதாக உதவியது. அடுத்ததாக, விண்டோஸ் இரண்டாவது மேஜர் வெர்சனை, 1987 அக்டோபர் மாதம் வெளியிட்டது. விண்டோஸ் 2.0 என்று பெயரிடப்பட்ட இந்த வெர்சன், மேம்படுத்தப்பட்ட யூசர் இண்டர்பேசையும், கீபோர்ட் சார்ட்கட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

1990களில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 3.0 பதிப்பு, முந்தைய இருபதிப்புகளை மிஞ்சும் வகையிலும், எண்ணற்ற புதுப்புது அம்சங்களுடனும், மல்டிமீடியா வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 1993ம் ஆண்டில்,'நியூ டெக்னாலஜி' எனும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 'விண்டோஸ் என்டி' (விண்டோஸ் 3.1) எனற பெயரில் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.

1995ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, ஹார்டுவேர்களை இன்ஸ்டால் செய்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்ட 'விண்டோஸ் 95' அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டே விண்டோஸ் 95 விற்பனைக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு, ஜூன் மாதம் 25ம் தேதி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரீ-இன்ஸ்‌டால் செய்யப்பட்டு 'விண்டோஸ் 98' அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 98 உடன், விண்டோஸ் 95 ஆட்ஆன் பேக்கேஜாகவும் விற்பனைக்கு வந்தது.1999ம் ஆண்டு, விண்டோஸ் 98 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தரம் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் 98 செகண்ட் எடிசன் என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.


2000வது ஆண்டில், உபயோகிப்பாளர்களின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு, 6 வெவ்வேறான பதிப்புகளில் 'விண்டோஸ் 2000 புரொபசனல்' எனற பெயரில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டிலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உன்னத மற்றும் பிரமாண்ட படைப்பான 'விண்டோஸ் மில்லினியம் எடிசனும்' வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'விண்டோஸ் மில்லினியம் எடிசனை ' சுருக்கமாக 'விண்டோஸ் மீ' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. உபயோகிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பபை ‌இந்த விண்டோஸ் மீ ஆபரேடிங் சிஸ்டம் பெறும் என்று நினைத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விண்டோஸ் மீ ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கையாளுவதில் பெரும் அசவுகர்யம் ஏற்பட்டதால் அவர்களிடையே அதிருப்திதான் மேலோங்கி இருந்தது.


இந்நிலையில், அதனுள் உள்ள குறைகளை களைத்திடும் பொருட்டு, 2001ம் ஆண்டில், , இந்த (2010ம் ஆண்டிலும்) உபயோகத்திற்கு ஏற்றவாறு, சிறந்த வடிவமைப்புடன் கூடிய விண்டோஸ் எக்‌ஸ்பி ஆப்ரேடிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வெளியிட்டது. எக்ஸ்பீரியன்ஸ் என்பதன் சுருக்கமே 'எக்ஸ்பி' ஆகும்.


தற்போதைய நிலையில், சர்வதேச அளவில் அதிகமானோர் விரும்பி உபயோகிக்கப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற பெருமையை 'விண்டோஸ் எக்ஸ்பி' பெறுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்காக, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை 'விண்டோஸ் விஸ்டா' எனற பெயரில் 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் மீ போ‌லவே விண்டோஸ் விஸ்டா ஆப்ரேட்டிங் சிஸ்டமும் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உட்படுத்தியது.


ஏற்கனவே, விண்டோஸ் மீ மூலம், களங்கத்தை சம்பாதித்த மைக்ர‌ோசாப்ட் நிறுவனத்திற்கு விண்டோஸ் விஸ்டாவும் தோல்வியுற்று, தங்களது நிறுவன வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக அமைய, அதிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, 2009ம் ஆண்டில், விண்டோஸ் 7 என்ற ‌பெயரில் டெக்‌ஸ்டாப் ஆபரேடிங் சிஸ்டத்‌தை அறிமுகப்படுத்தியது. 2011ம் ஆண்டுவாக்கில், ‌விண்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இருப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.


புதுப் பொலிவு பெறுகிறது யாஹூ மெயில்

பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது. மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும். யாஹூ மெயில் சேவையானது ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர்பேஸினை உருவாக்கிவருகின்றது.

அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.

பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.


பிடித்த படத்தை, இலவசமாக, நல்ல தரத்துடன் பார்க்க

யூடியூப் இலவசமாக படங்களை பார்க்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்கள் லயன்ஸ்கேட், எம்ஜிஎம் அண்ட் சோனி பி்க்சர்ஸ், பிலிங்பாக்ஸ் மற்றும் மேலும் பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.

தன்னுடைய தொகுப்பில் மொத்தம் 400 முழுநீள திரைப்படங்கள் உள்ளது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளது (டபிள்யூடபிள்யூடபிள்யூ.யூடியூப்.காம்/மூவிஸ்) . சில முழுநீளத்திரைப்படங்கள் முன்னதாகவே யூடியூப்பில் வெளியிடப்பட்டு இருந்தது,

ஆனால் அது குறிபிட்ட சில நாடுகளில் மட்டும் பார்க்க முடியும். தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் பார்க்கும் வசதியை யூடியூப் கொண்டு வந்து உள்ளது. ஜாக்கி சானின் பிரபல படங்கள்,பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை படங்களும் இலவசமாக பார்க்கலாம்.

இனிவரும் காலங்களில் ‌ஹெச்டி படங்களையும் வெளியிட உள்ளது. உங்களிடம் யூடியூப் இணைக்கப்பட்ட இணைய தள வசதி உடைய தொலைக்காட்சி இருந்தால் போதும், இலவசமாக படத்தை பார்க்கலாம்.


கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.தேடுதலுக்கான சுருக்கு வழிகள்

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம். கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம்.

இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும்.

இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுள் தேடுதளம்:


1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா? அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும்.


2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf எனத் தர வேண்டும்.

இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல் ps, doc, ppt, xls, rtf ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.

3.முடிவுகளை விலக்க: சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள்.

அப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com என்றும் Apple -iPad -PDF எனவும் பயன்படுத்தலாம்.

4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai] என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai] என டைப் செய்திடலாம்.

5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம். 7 inches in cm மற்றும் 30 Euros in USD எனத் தரலாம்.

பிங் தேடுதளம்:

1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.

2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http://www.bing.com/?rb=0 என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.

இதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.


கூகுள் தரும் உடனடித் தீர்வு

தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant)என்ற தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன. நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக streaming search என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம்.

அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது.

பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம்.

புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.

இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.

ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, “Exchange rates dollar to INR” என டைப் செய்திட முடிவெடுத்து, Ex என டைப் செய்தவுடனேயே,Expedia என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் “Exch” என டைப் செய்தவுடன் கூகுள் அது “Exchange rates” என உணர்ந்து அவை சார்பான தன் கால்குலேட்டர் தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது.

பின் தொடர்ந்து “Exchange rates d” எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம்.

அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது.

சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம். வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும்.

கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு 350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.

இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும் என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம்.

அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.

மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.

கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை.

விரைவில் கிடைக்கலாம். அதுவரை http://www. google.com /webhp?sclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.

இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.


விண்டோஸ் 2007ல் எக்ஸ்ப்ளோரர்

விண்டோஸ் 2007 பயன்படுத்துபவர்கள், தங்கள் எக்ஸ்புளோரர் திறக்கப்படும் போல்டர் குறித்து சிறிய ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது Libraries.

இது சரி, ஆனால் எதற்காக இந்த போல்டரில் சென்று நான் இதனைத் திறக்க வேண்டும்? எனவும் பலர் எண்ணலாம். எனக்கு எந்த போல்டரில் அடிக்கடி வேலை இருக்குமோ, அந்த போல்டரில் திறக்கலாமே என்று விரும்பலாம்.

இவ்வாறு நாம் விரும்பும் போல்டரில் திறப்பதற்குரிய வசதியை விண்டோஸ் 2007 கொண்டுள்ளது. சர்ச் பாக்ஸில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என டைப் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.

அடுத்த விண்டோவில் Shortcutஎன்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து அதில் Target என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸினைக் கண்டுபிடிக்கவும். இதில் %windir%\explorer.exe என டைப் செய்து, இதனை அடுத்து நீங்கள் எந்த போல்டரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும்.

இதற்குப் பதிலாக இன்னொரு வழியையும் மேற்கொள்ளலாம். திறக்கப்பட விரும்பும் போல்டருக்கு முதலில் செல்லவும். அங்கு முகவரிக்கான பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Copy address as text என்பதைக் கிளிக் செய்திடவும்.

பின் பாக்ஸில் இதனை பேஸ்ட் செய்தபின் Apply கிளிக் செய்து, அதன் பின் OKகிளிக் செய்து வெளியேறவும்.இனி மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தால், நீங்கள் விரும்பிய போல்டரில் அது திறப்பதனைப் பார்க்கலாம்.


போட்டோஷாப் - போட்டோவை பாக்ஸில் கொண்டுவர

போட்டோஷாப்பில் சிறுசிறு வேலைகளை செய்து அதை Action என பெயரிட்டு நமக்கு அளிக்கின்றார்கள்.ரெடிமேட் ஆக்ஸனை நாம் நமது போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து தேவையான படத்துக்கு தேவையான ஆக்ஷனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.

சரி இனி இந்த Action -ஐ நமது போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது - அதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இங்கு சென்று இந்த Photo Box Action -ஐ டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.19 கே.பி. அளவுள்ள இது முற்றிலும் இலவசமே.(டவுண்லோடு செய்ததை டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்) போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அடுத்து Atl+F9 அல்லது Window சென்று அதில் Action என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.


உங்களுக்கு Actions Box ஓப்பன் ஆகும். அதில் மேற்புறம் வலதுபக்க மூலையில் சிறிய முக்கோணம் இருக்கும்.அதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Load Actions என்பதை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்இப்போது நீங்கள் சேமித்த இடத்திலிருந்து ஆக்ஸனை தேர்வுசெய்யுங்கள்.(சுலபமாக தேடதான் டெக்ஸ்டாப்பில் வைக்க சொன்னேன்) இப்போது உங்களுக்கு உங்களுடைய ஆக் ஸன் டூல் ஆக் ஸன் பாக்ஸில் வந்து அமர்ந்துவிடும். இப்போது மீண்டும் சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்து அதில் முதலில் வரும் பட்டன் மோடு கிளிக் செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.இப்போது மீண்டும் PhotoBox கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட வாறு படம் வரும். இதில் மூவ் டூல் மூலம் படத்தின் நடுவில் வருமாறு கட்டத்தை நகர்த்தி கொள்ளுங்கள்
இனி தொடர்ச்சியாக ஓ,கே. தாருங்கள்.

அவ்வளவு தான் படம் ரெடி. கீழே படத்தை பாருங்கள்Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes