GFive நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்

யாவரும் விரும்பி வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் இரண்டு மொபைல் போன்களை ஜி5 மொபைல் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றில் G303 என்ற மொபைல், புதிய வகையாக வடிவமைக்கப்பட்டு, டச் அண்ட் டைப் போனாக உள்ளது.

இரண்டு சிம் இயக்கத்துடன் 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் உள்ளன. 1.3 எம்பி திறனுடன் ப்ளாஷ் கொண்ட கேமரா பின்புறமும், இன்னொன்று வீடியோ அழைப்பிற்காக முன்புறமும் தரப்பட்டுள்ளன.

அனலாக் டிவி, அ2ஈக இணைந்த புளுடூத், எல்.இ.டி. டார்ச், 8 ஜிபி வரை அதிகப்படுத்தப்படக் கூடிய நினைவகம் ஆகியவை இதன் சிறப்பம் சங்களாகும்.

இதில் 850 mAh திறனுடன் கூடிய பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த போனுடன் தரப்படும் பையில் 700 mAh திறன் கொண்ட பேட்டரியும் தரப்படுகிறது.

இதனால், தொடர்ந்து நாம் தங்கு தடை இன்றி பேச முடிகிறது. இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.3,900.

ஜி5 மொபைல் வழங்கும் அடுத்த போன் G616, கூடுதல் சிறப்பம்சங்களை விரும்பும் இளைஞர்களைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று ஜி.எஸ்.எம்.சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது ஒரு தனிச் சிறப்பு. குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட பிசினஸ் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் திரை 2.6 ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன் கொண்டது.

டிஜிட்டல் கேமரா, எப்.எம். ரேடியோ, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, அனலாக் டிவி, A2DP இணைந்த புளுடூத், எல்.இ.டி. டார்ச், 900 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதில் தரப் பட்டுள்ளன.

2 ஜிபி மெமரி கார்ட் இதனுடன் தரப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,000 மட்டுமே.


மானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும்.

அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?

வேலை பார்க்காத போது மானிட்டர்களை ஆப் செய்திட வேண்டிய கட்டாயம் சில ஆண்டுகளுக்கு முன்னால், நாம் மோனோகுரோம் எனப்படும் கருப்பு வெள்ளை திரை கொண்ட மானிட்டர்களைப் பயன்படுத்துகையில் இருந்தது.

இந்த மானிட்டர்களில் ஏதேனும் ஒரு காட்சியை அப்படியே விட்டுச் சென்றால், அது திரையிலேயே பதிந்து காட்டப்படும். ஆனால், காலப் போக்கில் இதற்கான மாற்று வழிகள் இருந்தன. ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கப்பெற்று, அவை அசையும் தோற்றத்தைக் கொடுத்தன. ஆனால் இப்போது எல்.சி.டி திரைகளுடன் மானிட்டர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே பழைய பிரச்னை இல்லை.

இருந்தாலும், சிலர் ஸ்விட்ச் ஆப் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம் எல்.சி.டி. திரையின் பயன்பாட்டுக் கால ஆயுளை அதிகப்படுத்தத்தான். ஒரு எல்.சி.டி. திரை ஏறத்தாழ ஒரு லட்சம் மணி நேரங்கள் பிரச்னையின்றி இயங்கும்.

இது எவ்வளவு நாளாக இருக்கும்? உங்கள் எல்.சி.டி. திரையினை 24 மணி நேரமும் இயங்கும்படி வைத்தால், பத்து ஆண்டுகளில் அதன் பயன்பாடு 85 ஆயிரம் மணியாக இருக்கும். அப்படி என்றால், நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை, அல்லவா.

கம்ப்யூட்டர் பயன்படுத்தாத போது நாம் சிபியு எனப்படும் கம்ப்யூட்டரின் முதன்மைப் பகுதியை ஆப் செய்கிறோம். ஏனென்றால், அதன் தேய்மானத்தைக் குறைக்க இது உதவிடும். சிபியுவில் சிறிய நகரும் சாதனங்கள், மின்சக்தியைக் கடத்தும் பகுதிகள் உள்ளன.

எந்த வேலையும் இல்லாத போதும், இவை குறிப்பிட்ட அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். இதனால் இவற்றின் தேய்மானம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மின்சக்தி எந்நேரத்தி லும் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் சி.பி.யு.வின் பகுதிகள் எரிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் வாய்ப்புண்டு.

மேலும் நாம் புரோகிராம்களை இயக்குகை யில், அவற்றின் இயக்கத்தினை நிறுத்திய பின்னரும், சில பைல்கள் ராம் மெமரியில் தங்குகின்றன. இவை அடுத்தடுத்து நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டினை தாமதப்படுத்துகின்றன. எனவே கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆப் செய்து இவற்றை ராம் மெமரியிலிருந்து நீக்கி, மெமரியை புத்தாக்கம் செய்வது நல்லது.

இப்போது நமக்குக் கிடைக்கும் மின்சக்தி நிர்வாக புரோகிராம்கள் (Power Management Programs) இதனை செட் செய்திடும் வழிகளைத் தருகின்றன.

குறிப்பிட்ட நேரம் நாம் செயல்படாமல், கீ போர்ட் மற்றும் மவுஸ் இயக்காமல் இருந்தால் தானாகவே மானிட்டர் மற்றும் சிபியுவிற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தி வைக்கும் வகையில் ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றை செட் செய்து வைப்பதும், சிபியு மற்றும் மானிட்டர் களின் வாழ்நாளை நீட்டிக்கும்.


கம்ப்யூட்டர் கல கல கூக்குரலிடும் யாஹூ தளம்

பெரும்பாலானவர்கள் யாஹூ தளம் சென்று பார்க்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். வித்தியாசமாக, இந்த இணைய தளத்தின் பெயரில் தான் ஓர் ஆச்சரியக் குறி அமைந்துள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று யாராவது எண்ணியதுண்டா?

சென்ற வாரம், நான் இந்த யோசனை யுடன் அதன் ஆச்சரியக் குறியை நோக்கிக் கர்சரை நகர்த்தினேன். கர்சர் ஏதோ லிங்க் இருப்பது போல மாறியது. ஏன் இப்படி? என்ற ஆச்சரியத்துடன் கிளிக் செய்தேன்.

உடனே ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என உரத்த குரலில் ஒரு சத்தம் ஸ்பீக்கரில் கேட்டது. இது என்னடா வம்பு? எனச் சுற்று முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அதே போல கிளிக் செய்தேன்.

மீண்டும் அதே உரத்த குரலில் ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என்று யாரோ கூவும் குரல் கேட்டது. மீண்டும் மீண்டும் அழுத்த அதே குரல் ஓங்காரமிட்டு கேட்டது.

சற்று யோசித்த பின்னரே, அந்த லிங்க் உள்ள இடத்தில் ஒரு ஆடியோ பைல் தொடர்பு கொடுக்கப்பட்டு அது பிளே ஆகிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

நீங்களும் இதனைக் கிளிக் செய்து பாருங்கள். நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.yahoo.com. இந்தியாவிற்கான யாஹூ தளம் இல்லை. நீங்கள்www.yahoo.com என பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினாலும் அது இந்திய யாஹூ தளத்திற்குத்தான் (http://in.yahoo. com/?p=us) செல்லும்.

உடனே அதன் வலது பக்கம் உள்ள Go to yahoo.com என்பதில் கிளிக் செய்தால், உங்களுக்கு www.yahoo.com தளம் கிடைக்கும். பின்னர், ஆச்சரியக் குறியில் கிளிக் செய்திடவும்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மொஸில்லா பயர்பாக்ஸ், கூகுள் குரோம் ஆகிய பிரவுசர்களில் இது செயல்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படவில்லை.

சோதனை செய்து குரலை கேட்க ஆவலாயுள்ளவர்கள், சீக்கிரம் கிளிக் செய்து பாருங்கள். ஏனென்றால், சத்தமில்லாமல் இதனை அறிமுகம் செய்த யாஹூ, சொல்லாமலேயே இதனை எடுத்துவிடலாம்.


பெங்களூருவில் கூகுளின் தெருப்பார்வை

கூகுள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View). இது கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக 27 நாடுகளில் 100 நகரங்களில் இயங்கி வருகிறது.

தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

இதற்கென கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.

சில இடங்களில் சைக்கிள்களில் கேமராவினைப் பொருத்தி படங்களை எடுத்து வருகிறது. எடுக்கப்பட்ட இந்த படங்கள், புரோகிராம் மூலமாக வழிமுறை செய்யப்பட்டு, கூகுள் மேப்களில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் பதிக்கப்படும்.

இதனால் நகரங்களில் உள்ள வீதிகளில் நாம் ஏதேனும் ஒரு தெருவில் உள்ள முக்கிய அலுவலகம் அல்லது வர்த்தக மையம் இருக்கும் இடத்தைச் சரியாக நினைவில் கொள்ளவில்லை என்றால், இதன் மூலம் தேடிப் பெறலாம்.

இந்த ஸ்ட்ரீட் வியூ வசதியைப் பயன்படுத்த, கூகுள் மேப்ஸ் தளம் சென்று, நேவிகேஷன் டூல் மேலாக உள்ள ஒரு மனிதனின் சிறிய படத்தின் மீது (Pegman) கர்சரை வைத்து இழுத்து வந்து, எந்த தெருவின் படம் வேண்டுமோ அங்கு விட வேண்டும்.

பெங்களூரு இந்திய தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாக இயங்கி வருவதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதியை அதில் தொடங்கத் திட்டமிட்டு இயங்கி வருவதாக, கூகுள் இந்தியா உற்பத்திப்பிரிவின் தலைவர் வினய் கோயல் தெரிவித்துள்ளார்.

நகரம் ஒன்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்பவர்கள், பணியாற்றும் வல்லுநர்கள், சட்ட விதிமுறைகளை அமல்படுத்துபவர்கள், ஏன், வீடு வாடகைக்கு தேடுபவர்களுக்குக் கூட இது உதவும்.

சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர் கள் இந்த வசதி மூலம் தாங்கள் தங்கும் மற்றும் செல்ல விரும்பும் இடங்களைப் பார்க்கலாம். வர்த்தகர்கள் தங்கள் மையங்களின் வரைபடத்தை இன்னும் தெளிவாகத் தங்கள் இமெயில் மற்றும் இணைய தளங்களில் பதித்து வைக்க முடியும்.


2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்

சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri):

ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐ போன் 4 எஸ் உடன் கிடைக்கிறது.

வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்து கையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.


2. சாம்சங் கேலக்ஸி போன்கள்:

ஸ்மார்ட் போன்களைத் தருவதில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது. மிகக் குறைவான தடிமனில், ஆண்ட் ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப் பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.


3. ஆப்பிள் ஐ-பேட் 2:

தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில், ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து, தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது, ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.


4.விண்டோஸ் போன்:

மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும், அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.

காப்பி அண்ட் பேஸ்ட் வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கேமரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற் கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களி டையே கொண்டு வரும் முயற்சி யானது.

மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ்போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.


5. கூகுள் ப்ளஸ்:

ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது. சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை, கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.


6. கூகுள் குரோம்:

மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக, அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர். நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பாக்ஸைப் பின்னுக்குத் தள்ளி யுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.


எத்தனை வகை தொடுதிரைகள்

மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடுதிரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கி, கட்டாய அம்சமாக மாறி வருகிறது.

இது பற்றி மேலும் அறியச் செல்கையில் இருவகை தொடுதிரைகள் இருப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை குறித்து இங்கு காணலாம்.

தொடுதிரைகள் மொபைல் போனில் மட்டுமின்றி, டேப்ளட் பிசி, லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் மானிட்டர் களிலும் தற்போது கிடைக்கின்றன. ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில் நுட்பத்தில், திரையின் மேல் புறமாக எந்த ஒரு தொடுதலையும் சந்தித்து எதிர்கொண்டு செயல்படும் பொருள் பூசப்படுகிறது. கீழாக கடத்தும் தகடு ஒன்று அமைக்கப்படுகிறது. இரண்டிற்கும் இடையே மிகச் சிறிய அளவிலான காற்று இடைவெளி தரப்படுகிறது.

இதனால், இத்திரையைத் தொடுகையில் அந்த உணர்வானது நெட்டு மற்றும் படுக்கை வச அழுத்ததின் அளவில் உணரப்பட்டு அதற்கான சர்க்யூட் இணைக்கப்பட்டு சிக்னல் உள்ளே அனுப்பப்படுகிறது. தொடு உணர்ச்சியில் இது செயல்படுவதால், இதனை இயக்க தனியான ஒரு ஸ்டைலஸ் எனப்படும் பேனா தேவை இல்லை.

ஆனால், தேவையற்ற தொடுதலையும் இது எடுத்துக் கொண்டு செயல்படுவதால், நாம் எதிர் பார்க்காத அழைப்புகளை இது ஏற்படுத்த லாம். கம்ப்யூட்டர்களில், தேவைப்படாத செயல்பாடுகளை இயக்கலாம்.

கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், பாதுகாப்பான, காப்பிடப் பட்ட வகையிலான பூச்சின் உள்ளாக ஊடுகடத்தும் பொருள் வைக்கப் படுகிறது. பொதுவாக ஊடுகடத்தும் பொருளாக இண்டியம் டின் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது.

காப்பிடப்பட்ட பூச்சாக கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. ஊடு கடத்தும் பொருள், மேலாக உள்ள கண்ணாடித் திரையுடன் தொடர்பு கொள்கையில், அதன் எலக்ட்ரிக் பீல்டு தன்மை மாறுகிறது. தொடர்பு ஏற்படுத்தும் தொடும் இடத்தின் நான்கு முனைகளுக் கேற்றபடி சிக்னல்கள் செலுத்தப் படுகின்றன.

இதில் என்ன சிக்கல் எனில், கை விரல்களில் உறை அணிந்து கொண்டோ, அல்லது வேறு பொருள் கொண்டு மூடியோ இதனை இயக்கினால், செயல்பாடுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும்.


இந்த தொழில் நுட்பங்கள் கொண்ட இருவகை திரைகளும் தற்போது புழக்கத்தில் செம்மையாகவே இயங்கி வருகின்றன. இருப்பினும், நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் எந்த வகை உள்ளது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது


திடீரென எரியும் ஐ போன்கள்

சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்குப் பறந்த விமானம் ஒன்று தரையிறங்கியவுடன், பயணி ஒருவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ-போன் 4 தீ ஜ்வாலையுடன் எரியத் தொடங்கியது. புகை வரும்போதே பாதுகாப்பு அலுவலர்கள் அதனைக் கண்டறிந்து நெருப்பை அணைத்தனர்.

முதலில் போனிலிருந்து புகை வருவதை உணர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகப்பட்டு அதனைப் பறித்தனர். உடன் சிறிய அளவில் அதில் ஜ்வாலை வந்தவுடன் அணைத்தனர்.

யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் மொபைல் போன் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதலாக, இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்று ஆஸ்திரேலிய அரசின் விமானப் பயணிகள் பாதுகாப்பு அமைப்பிற்கும் அனுப்பப் பட்டுள்ளது.

போனில் பேட்டரி கீழாக வலது பக்கம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இதே போல இன்னொரு நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் நடைபெற்றுள்ளது. பாலோ மோட்டா என்பவரின் ஐ போன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அவரின் முகத்தில் இருந்து போனை 15 அங்குல இடைவெளியில் வைத்திருக்கையில் இது நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தான் உறங்கச் செல்லும் முன் போனை சார்ஜ் செய்வதற்காக இணைத்துள்ளார். காலையில் தூங்கி எழுந்து பார்க்கையில், அவரின் ஐ போனைச் சுற்றிப் புகை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அதிலிருந்து சிறிய அளவில் நெருப்பு பொறிகளூம் வந்திருக்கின்றன.

வீட்டிலிருந்த மெயின் ஸ்விட்சை ஆப் செய்துள்ளார். ஆனால், நெருப்பினால், போன் மொத்தமும் எரிந்து விட்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான நேரத்தில் அவர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார். இல்லையேல் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

அதிகமான எண்ணிக்கையில் ஆப்பிள் போன்கள் மேல் நாடுகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியா விலும் இதன் மீதான மோகம் பரவிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த இரு நிகழ்வுகளின் அடிப்படையில் தன் போன்களின் வடிவமைப்பை மறு பரிசீலனை செய்திடும் என எதிர்பார்க்கலாம்.


வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.

Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).

Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.

Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில்
வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல.

Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).

Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .

Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.

Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.

Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.

Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.

Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.

Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க

Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.

Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.

Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).

Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.

Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.

Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.

Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.

Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.

Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.

Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.


ரெகுவா புதிய பதிப்பு

எதிர்பாராதவிதமாக, நம்மை அறியாமல் நாம் அழித்த பைல்களை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42. 544 அண்மையில் வெளியாகி உள்ளது.

இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரட்க்டரிகள் மற்றும் போல்டர்களில் இருந்து நீக்கும் பைல்கள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் பைல்களையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

அத்துடன் வைரஸ், புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் பைல்களையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.

சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம் (Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


இதனுடைய சிறப்பம்சங்களாவன:

* மிக எளிதான இன்டர்பேஸ் வழியாக 'Scan' என்பதை ஜஸ்ட் கிளிக் செய்து, பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

* பைல் பெயர் மற்றும் வகை அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய பைல்களை வரையறை செய்திடலாம்.

* List மற்றும் Tree வகையில் பைல்களைக் காணும் வசதி.

* யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.

* ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், இமேஜஸ், வீடியோ, மியூசிக், இமெயில் என எந்த வகை பைல்களையும் மீட்டுத் தரும்.

* FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை பைல்களையும் மீட்டுத் தருகிறது.

* கம்ப்யூட்டரில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட பைல்களை மீட்கிறது.

* ஸிப் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மற்றும் யு.எஸ்.பி. ஹார்ட் ட்ரைவ்களில் இருந்தும் அழிக்கப்பட்ட பைல்களை மீட்டுத் தருகிறது.

* வேகமான இயக்கம், சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.


புதிய பதிப்பில்:

* ஜேபெக் மற்றும் பி.என்.ஜி. பைல்களுக்கு புதிய தொழில் நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப் பட்டுள்ளது.

* விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில் நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

* கீ போர்ட் நேவிகேஷனில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

* பெரிய அளவிலான ட்ரைவ்களுக்கு, கூடுதல் மெமரி பயன்பாடு தரப்பட்டுள்ளது.

* சிறிய குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://www.piriform.com/ recuva/download/standard என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


விண்டோஸ் 7 வெற்றி

மிக வேகமாக விற்பனை செய்யப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில், 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர்.

இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது.

இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன.

பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன.

புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கை யில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ளனர்.

விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற அக்டோபர் 22ல் வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது.

மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலும் ஏழு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனையானது. இன்னும் இது தொடர்கிறது. நிச்சயம் இதுவரை எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் எட்டாத இலக்கினை இது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மின்னஞ்சல் செல்லும் வழி

கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.

பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.

ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள்.

அது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.

இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன.


ஒரு இமெயில் செய்தியின் To:

பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.

ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் (Mail Delivery Agent MDA), (அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்)

இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும்.

என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.

அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.

ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது.

இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது.

இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது.

மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான (Mail Exchange MX) தேடலாக இது இருக்கும்.

இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி x@otherdomain.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழியாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும்.

எம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது. பின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது.


ஸ்பேம் மற்றும் பயர்வால்

ஸ்பேம் (SPAM) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம்.

அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.


இமெயிலின் வடிவமைப்பும் பாதுகாப்பும்

இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது.

அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.


புஷ் மெயில்

ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன்களில் இந்த புஷ் மெயில்கள் கிடைக்கின்றன. இந்த வகையில் இன்டர்நெட் இணைப்பு எப்போதும் இயக்கப்பட்ட நிலை யிலேயே இருக்கும்.

அந்த சாதனத்தில் செட் செய்த வகையில் அந்த முகவரிக் கான இமெயில் சாதனத்தை சென்றடை யும். பெரும்பாலான இத்தகைய மெயில்களில் மெயில்களின் ஹெடர்கள் மட்டுமே பெறப்படுகின்றன. பின் இவற்றை இயக்கி முழு அஞ்சலையும் படிக்கலாம்.

இதனால் பேண்ட் வித் மிச்சம் பிடிக்கப்படுகிறது. புஷ்மெயில் பரிமாற்றத்திற்கு IMAP 4 பயன்படுத்தப்படுகிறது. பிளாக்பெரி தன்னுடைய சொந்த வழிமுறை ஒன்றை பயன் படுத்துகிறது.


2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.


1. விண்டோஸ் 8:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது.

இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.


2. குரல் வழி கட்டளை:

தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம்.

நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.

பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம்.

இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு:

இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது.

ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.


4. தொலைக்காட்சிகளில் மாற்றம்:

தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும்.

அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.


5. டிஜிட்டல் ஸ்டோர்கள்:

இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.


6. தடிமன் குறையும்:

டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.


7. அனைத்திலும் டேப்ளட் பிசி:

சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.


8. ஒருவரோடு ஒருவர்:

இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.

எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.


டைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)


கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை. 

இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். 

இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.


ஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும். 

புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை. 

ஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும். 

இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது. 

கம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன. 

எடுத்துக்காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும். 

இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும். 

இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும். 

இங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.

COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது. 

GDI32.DLL: இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.

KERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள் கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல் படுகிறது. 

இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

இதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில்விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது. 

அதனைப் பயன்படுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே. 


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes