உலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்


சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. 

அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும். 

இவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள். மற்ற 75 லட்சம் பேர் பொழுது போக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர். 

கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து, 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இயக்குபவர் களாகவும், இந்தப் பணிகளை நிர்வகிப்பவர்களாகவும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர். 

மொத்த சாப்ட்வேர் புரோகிராமர்களில், பொழுது போக்கிற்காக இதில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் 19 சதவீதம் பேர் உள்ளனர். சீனா இவர்களில் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இயங்குபவர்கள் 9.8 சதவீதம் பேர் ஆவார்கள்.

கம்ப்யூட்டர்களை இயக்கும் பணியாளர்கள் மற்றும் நிர்வகிப்போர் என எடுத்துக் கொண்டால், அமெரிக்கா 22 சதவீதம் பேரையும், இந்தியா 10.4 சதவீதம் பேரையும், சீனா 7.6 சதவீதம் பேரையும் கொண்டுள்ளது. 

700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.


விண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், பயனாளர் இடைமுக வழிகள் மட்டுமின்றி, வழக்கமாக நாம் விண்டோஸ் சிஸ்டத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த ஷார்ட் கட் கீகளும் அதற்கான செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். 

Windows key - மெட்ரோ ஸ்டார்ட் விண்டோவினைக் கொண்டு வரும். இதில் நீங்கள் தேட விரும்பும் எதனையும் டைப் செய்து தேடலாம். அது ஒரு அப்ளிகேஷனாகவோ, பயன்பாட்டு கோப்பாகவோ இருக்கலாம். 

விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டார்ட் மெனுவில் மேற்கொண்டது போலவே, இதனையும் பயன்படுத்தலாம். 

Win + D - பழைய விண்டோஸ் டெஸ்க்டாப்பினைக் கொண்டு வரும். 

Win + C - சார்ம்ஸ் மெனுகிடைக்கும். இங்கு தேடல், பகிர்தல் மற்றும் செட்டிங்ஸ் மாற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.

Win + I - செட்டிங்ஸ் (Settings) பேனல் திறக்கப்படும். அப்போது பயன்பாட்டில் இருக்கும் அப்ளிகேஷனுக்கு செட்டிங்ஸ் மாற்றலாம். வால்யூம் கண்ட்ரோல் செய்திடலாம், வயர்லெஸ் நெட்வொர்க் பணிகளை வரையறை செய்திடலாம். திரையின் டிஸ்பிளே ஒளிப் பரிமாணத்தை மாற்றலாம். 

Win + Z - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கு App Bar திறக்கப்படும். 

Win + H - Metro Share panel திறக்கப்படும்.

Win + Q - Metro App Search ஸ்கிரீன் கிடைக்கும். 

Win + W - Metro Settings search ஸ்கிரீன் கிடைக்கும். 

Win + F - Metro File search ஸ்கிரீன் கிடைக்கும். 

Win + K - Devices panel திறக்கபப்டும். இதில் புரஜக்டர் அல்லது அது போன்ற சாதனங்களை இணைக்க வழி கிடைக்கும். 

Win + , (comma) - டெஸ்க்டாப்பில் Aero Peek கிடைக்கும்.

Win + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் ஒரு ஓரமாகக் கொண்டு செல்லலாம். பொதுவாக வலது புறம் செல்லும். 

Win + Shift + . (period) - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, திரையின் இடது புறமாகக் கொண்டு செல்லலாம். 

Win + J - மெட்ரோ அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்துக் காட்டும். 

Win + Page Up / Down - அப்போதைய அப்ளிகேஷனை அடுத்த மானிட்டருக்கு மாற்றும். 

Win + Tab - Metro application switcher menu திறக்கப்படும். அப்ளிகேஷன்களுக்கு இடையே அடுத்தடுத்து செல்லும். 

Win + X - ஸ்டார்ட் மெனு கிடைக்கும். மிகவும் பயனுள்ளது. 

Windows Key + Print Screen கம்ப்யூட்டரில் உள்ள கடிஞிPictures போல்டரில், அப்போதைய திரைக் காட்சி எடுக்கப்பட்டு, தானாகவே சேவ் செய்யப்படும்.


ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்


முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். 

பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. 

ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. 

இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும். 

இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). 

இதனைhttp://www. partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.

இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:

1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.

2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.

3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம். பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.

4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம். 

5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.

6. பிரிவுகளை இணைக்கலாம்.

7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம். 

8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.

9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.

10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 

11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.

12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.


இன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை


வரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான சிஸ்டமாக எக்ஸ்பி உயர்ந்தது. 

விண்டோஸ் 98ல் மக்கள் ரசித்த இண்டர்பேஸ் மற்றும் விண்டோஸ் என்.டி. சிஸ்டம் தந்த நிலைத்த இயக்க நிலை ஆகிய இரண்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் முதன்மை சிறப்புகளாக இருந்தன. அத்துடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்னும் அருமையான, இணைய பிரவுசரையும் இணைத்தே, மைக்ரோசாப்ட் தந்தது. 

ஆனால், ஹேக்கர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது எளிதாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். இவர்களுக்கு எதிராக, 2004ல், மைக்ரோசாப்ட் தன் புகழ் பெற்ற செக்யூரிட்டி பேட்ச் பைல் எஸ்.பி.2னை வெளியிட்டது. 

இதன் மூலம், எக்ஸ்பி சிஸ்டம் எப்போதும் பயர்வால் பாதுகாப்புடன் இயங்கியது. மிகப் பெரிய அளவில், தொல்லைகளைத் தந்த ப்ளாஸ்டர், சாசர் மற்றும் ஸ்லாம்மர் (Blaster, Sasser, மற்றும் Slammer) போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தன. 

இதனால், உலகெங்கும், ஏறத்தாழ 60 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி, அதிகார பூர்வமாக இயங்கியது. (காப்பி செய்து, பயன்படுத்தப்பட்ட எக்ஸ்பி சிஸ்டம் இதில் சேர்க்கப்படவில்லை).

ஆனால், வரும் ஏப்ரல், 2014 முதல் மைக்ரோசாப்ட், இனி எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தன்னால் பராமரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவது, பல இடர்ப்பாடுகளைத் தரும் எனவும் எச்சரித்துள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன், ஸீரோ டே தாக்கதின் பாதிப்பு (பாதுகாப்பு பைல் வரும் முன் ஏற்படும் வைரஸ் தாக்கம்) விண்டோஸ் 7 மட்டுமின்றி, விண்டோஸ் எக்ஸ்பியிலும் காணப்பட்டது. 

ஆனால், மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை சென்ற வாரம் வெளியிட்டு, இவற்றைக் காப்பாற்றியது. 2014 ல் நிச்சயம், எக்ஸ்பியைத் தாக்கும் வைரஸ்கள் மிக அதிகமாகவும், பாதிப்பு மோசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது, ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய 75 பழுதான குறியீடுகள் கண்டறியப்பட்டு, பேட்ச் பைல்கள் தரப்பட்டன. இவற்றில், 68 குறியீடுகள் மிக மோசமானவை என்றும் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டில், மொத்தம் 

கண்டறியப்பட்டுள்ளவற்றில், எக்ஸ்பி சிஸ்டத்திற் கானது மட்டும் 90 சதவீதமாகும். நிச்சயமாய், இவை, 2014ல் நின்றுவிடாது. இது 100 சதவீதமாக உயரும் வாய்ப்புகளே அதிகம். 

அலுவலகத்தில் வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்கினால், நிச்சயம் அவை சிறிது கூட பாதுகாப்பு இல்லாதவையாகத்தான் இருக்கும்.

பாதுகாப்பான பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் புரோகிராம் எனத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம், நாம் தொடர்ந்து எக்ஸ்பியைப் பயன்படுத்தலாம் எனப் பல நிறுவனங்கள் எண்ணி வருகின்றன. 

ஆனால், இவை எல்லாம், வெட்டுக் காயத்திற்குப் போடப்படும் சாதாரண பேண்ட் எய்ட் சுற்றுக்கள் @பான்றவை@ய. சரியான சிஸ்டத்திற்கு மாறினால்தான், முழுமையான பாதுகாப்புடன், நம் பணியை மேற்கொள்ளலாம். 

எனவே, தொடர்ந்து பாதுகாப்பு பெறக் கூடிய ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு மாறுவதே, நம் கம்ப்யூட்டிங் பணிகளை முழுமையாக்கும். இல்லை எனில், நிச்சயம் ஆபத்துதான் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

நம் முன் இருப்பது, தற்போது 10 சதவீதப் பங்கினைத்தாண்டிப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 8/8.1 மற்றும் 50 சதவீதக் கம்ப்யூட்டர் களுக்கு மேலாகப் பயன்படுத்தும் விண்டோஸ் 7 ஆகும்.

பிரான்ஸ் நாட்டில், சில நிறுவனங்கள், மொத்தமாக ஓப்பன் சோர்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், தண்டர்பேர்ட் இமெயில், ஓப்பன் ஆபீஸ் வேர்ட் ப்ராசசர் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், உபுண்டு சிஸ்டத்தில் இயங்குபவையாய் உள்ளன. 

விலாவாரியாக அறிவிப்பு கொடுத்தும், பன்னாட்டளவில், இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் பங்கு 45 சதவீதத்திற்கும் மேலாகவே உள்ளதாகத் தெரிகிறது. இதில் நிறுவனங்கள் 20 சதவீதம் என்பது வியப்பிற்குரியதாக உள்ளது.

ஆனல், ஒன்று மட்டும் உறுதி. ஆபத்து நிச்சயமாய் வாசலில் காத்திருக்கிறது. நம்மைக் காத்துக் கொள்ள கொஞ்சம் நேரம் தான் உள்ளது. எனவே, விரைவாகச் செயல்பட்டு, பல்லாண்டு காலம் நமக்குத் துணையாய் இருந்த விண்டோஸ் எக்ஸ்பிக்கு விடை கொடுப்போம்.


விண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்


விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும். 

இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும். 

இவற்றை நாம் விரும் பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம். 

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவை எளிதாகப் பெறும் வகையில் வைக்கப் படவில்லை. 

மறைக்கப்படும் பைல்களை எப்படிப் பெறுவது எனப் பார்க்கலாம்.

1. முதலில் திறந்து இயக்கிக் கொண்டி ருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடவும்.

2. இடது மூலையில் கீழாக ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் திறக்கவும். 

3. கண்ட்ரோல் பேனல் தோற்றத்தில் View by: Small Icons என்பதில் கிளிக் செய்து மாற்றவும். 

4. கண்ட்ரோல் பேனல் பட்டியலில், போல்டர் ஆப்ஷன்ஸ் ("Folder Options”) என்பதனை டபுள் கிளிக் செய்திடவும். 

5. பின்னர் வியூ ("View”) டேப் கிளிக் செய்து, "Show hidden files, folders and drives” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

இனி, மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்கள் உங்களுக்குக் காட்டப்படும்.


விண்டோஸ் 8 டிப்ஸ்


நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா? 

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும். 

இதன் தலைப்பு "Choose an option” என இருக்கும். இதில் "Continue”, "Troubleshoot” மற்றும் "Turn off your PC.” என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்; 

அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options” என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும். 

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம். 

ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும். 

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.


கார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்


கார்பன் நிறுவனத்தின், ஏ 15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன், பட்ஜெட் விலை போனாக, மொபைல் போன் சந்தையில் வலம் வருகிறது. 

இதன் அதிக பட்ச விலை ரூ.5,890. சென்ற ஆண்டு வெளியான கார்பன் ஏ15 மொபைல் போனின், மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது. 

இந்த மாடலில், 4 அங்குல டி.எப்.டி.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத்,ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது.

இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி ஆக உயர்த்தலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, சரவுண்ட் சவுண்ட் இயக்கம் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இந்த மாடல் போனில், பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே தரப்படுகின்றன. 

கிங்ஸாப்ட் ஆபீஸ் (Kingsoft Office), ஹங்கமா மை ப்ளே, கார்பன் லைவ், வாட்ஸ் அப், பிளிப் போர்ட், யு.சி. பிரவுசர், ஆப் பரா மினி ஆகியவை அதில் முக்கியமானவை. 

வோடபோன் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு 3ஜி டேட்டா 500 எம்.பி. இலவசமாக இறக்கிக்கொள்ள அனுமதி தருகிறது.

இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில், அதிக பட்ச விலை ரூ.5,890 எனக் குறிப்பிட்டு இது சந்தையில் கிடைக்கிறது.


இணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க


இன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர். 

இது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன. 

இணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். 

அது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும். 

இதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.


1. பிரவுசர் வழியாக இணைய தளத் தடை: 

அனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம். 

ஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள். 

அதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம். 

இதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.

பல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர். 

நீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும். 

ஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும். 

எடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.


2. பெற்றோர் தடை விதிக்க: 

Parental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும். 

இதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும். 

தடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.

மேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது. 

இதனைப் பயன்படுத்தத் தேவையான கூடுதல் குறிப்புகளைhttp://www.pcadvisor.co.uk/buyingadvice/security/3411335/howchooseparentalcontrolsoftware/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம். 


கார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்
ஐந்து அங்குல திரையுடன் கூடிய தன் முதல் ஸ்மார்ட் போனை, அண்மையில் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டைட்டானிய எஸ்5 (Titanium S5) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதில் வேகமாகச் செயல்படும் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர் உள்ளது. இதில் உள்ள 5 அங்குல திரை ஆன் செல் கெபாசிடிவ் டச் திரையாகும். 

இந்த வகை திரையுடன் கார்பன் வழங்கும் முதல் ஸ்மார்ட் போன் இதுதான். இதில் ஜெல்லி பீன் 4.2 ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 

எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஒன்றும் இதில் தரப்பட்டுள்ளது. 

வழக்கம் போல இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் ராம் மெமரி 1ஜிபி. உள்ளார்ந்த ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,800 mAh திறன் கொண்டது. 

பேர்ல் ஒயிட், டீப் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.12,990 என்றாலும், சந்தையில் ரூ.10,636க்குக் கிடைக்கிறது.


கூகுள் ட்ரைவ் டிப்ஸ்
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். 

இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.


1. இணைய இணைப்பு இல்லாமல்: 

கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். 

இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும். 

குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை (https://chrome.google.com/web store/detail/googledrive/apdfllckaahabafndbhieahigkjlhalf) இன்ஸ்டால் செய்திடவும். 

அடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Offline” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

இந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும். 

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.


2. உங்கள் ஹார்ட் ட்ரைவுடன் கூகுள் ட்ரைவ்: 

இணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம். 

இதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம். 

இந்த வசதியினைப் பெற, https://tools.google.com/dlpage/drive என்ற தளத்தில் கிடைக்கும் புரோகிராமினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைக்க வேண்டும். 

இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றை, கம்ப்யூட்டர் + கூகுள் ட்ரைவ் இருவழிப் போக்குவரத்திற்கென தனியே அமைக்க வேண்டியதிருக்கும். இதனை மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் அமைக்கலாம். 


3. கூகுள் ட்ரைவ் டாகுமெண்ட் ஒருங்கிணைப்பு: 

மேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல. 

அந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது. 

இதற்கான வழி ஒன்றுhttp://www.syncdocs.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளது. இங்கு, நம்முடைய கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டிற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் ஓர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் வேர்ட் டாகுமெண்ட் கூகுள் டாக்ஸ் பார்மட்டிலும், அவை நம் வேர்ட் பார்மட்டிலும் மாற்றிக் காணலாம். 


4. பைல்களை இழுத்துப் போட: 

கூகுள் ட்ரைவிற்கு பைல் ஒன்றை வேகமாக மாற்ற வேண்டுமா? அப்லோட் கட்டளை என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு இழுத்து வந்து விட்டுவிடவும். ட்ரைவ் தானாக, அப்லோட் செயல்பாட்டினை மேற்கொண்டு, உங்கள் ஸ்டோரேஜ் பகுதியில், பைலை பதிந்து நிறுத்திவிடும். வேறு எந்த கூடுதல் வேலையும் மேற்கொள்ள வேண்டாம்.


5. படங்களை எளிதில் செருக: 

கூகுள் டாக்ஸ் டாகுமெண்ட்டினை திருத்துகையில், திரையின் மேலாக உள்ள, அதன் கமாண்ட் பாரினைப் பயன்படுத்தி, எந்த ஒரு இமேஜையும் இடைச் செருகலாம். 

அதனைக் காட்டிலும் எளிதான வழி தேவை எனில், இமேஜை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே இழுத்து வந்து, கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவான டாகுமெண்ட்டில் விட்டுவிடலாம். உடனே, அங்கு இமேஜ் அளவினை மாற்றி அமைக்க டூல் ஒன்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தி, இமேஜை உங்கள் விருப்பப்படி சரி செய்திடலாம்.


நோக்கியா ஆஷா 210தன்னுடைய ஆஷா வரிசை மொபைல் போன்களால், பலரைச் சென்றடைந்திருக்கும் நோக்கியா நிறுவனம், அண்மையில் ஆஷா 210 என்ற பெயரில், இரண்டு சிம் பயன்பாடு உள்ள மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போன். இதன் பரிமாணம் 111.5 x 60 x 11.8 மிமீ. எடை 99.5 கிராம். 

பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில், 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 64 எம்.பி. ராம் மெமரி, 32 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. 

நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகிய தொழில் நுட்ப இயக்கங்கள் கிடைக்கின்றன. 

2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ இயக்கம் கிடைக்கிறது. 

பதியும் வசதி கொண்ட எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளது. MP3/WAV/ WMA/AAC,MP4/ ஆகிய ஆடியோ மற்றும் வீடியோ பார்மட் பைல்களை இதில் கையாளலாம். 

ஆர்கனைசர், பிரிடிக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. 

இதன் உதவியுடன் 12 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 55 மணி நேரம் மின் சக்தி தாக்குப்பிடிக்கிறது.


விண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்


மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. 

நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.

1. உங்கள் விரலை திரையின் வலது முனையிலிருந்து மத்திய இடம் நோக்கி இழுத்தால் ஒரு மெனு கிடைக்கும். இதில் ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கான ஷார்ட் கட் கிடைக்கும். அத்துடன் search, share, devices, Settings ஆகியவையும் கிடைக்கும்.

2. உங்கள் விரலை திரையின் இடது முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்படும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதில், நீங்கள் ஒரு அப்ளிகேஷனிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்.

3. உங்கள் விரலை திரையின் மேல் முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது இயக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் அப்ளிகேஷனுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். இது விண்டோஸ் 7ல், விண்டோவின் மேல் பகுதியில் கிடைக்கும் மெனு பார் போல இருக்கும்.

4. இறுதியாக, உங்கள் விரலை, திரையின் மேல் முனையில் இருந்து, திரையின் கீழ் பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மூடப்படும்.


மைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்


1. டெக்நெட் (TechNet): 

இந்த 2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கைவிடப்பட்ட பெரிய திட்டம் டெக்நெட் என்பதாகும். இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், திருட்டுத்தனமாகக் காப்பி எடுத்துப் பயன்பாட்டிற்கு பரப்புவதாகவும் கூறி மைக்ரோசாப்ட் இதனை நிறுத்தியது.

தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களுக்கு, விண்டோஸ் க்ளையண்ட் மற்றும் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, நிலைத்த உரிமம் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 

பயனாளர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தியதால், பாதுகாப்பு நிறைந்த எம்.எஸ்.டி. என். நெட்வொர்க்கிற்கு (MSDN network) பயனாளர்களை மாற்றிவிட்டு, டெக் நெட் திட்டத்தினை மைக்ரோசாப்ட் மூடியது. 


2. லைவ் ப்ராடக்ட்ஸ் (Live Products): 

இந்த 2013 ஆம் ஆண்டில், தன்னுடைய பல திட்டங்களை குழுக்களாக மைக்ரோசாப்ட் ஒருங்கிணைத்தது. அதன் ""லைவ் ப்ராடக்ட்ஸ்'' பல பிற புரோகிராம்களாக மாற்றி அமைக்கப்பட்டது. 

லைவ் மெயில் மற்றும் ஹாட் மெயில் அவுட்லுக் டாட் காம் (Outlook.com) உடன் இணைக்கப்பட்டது. லைவ் மெஷ் (Live Mesh) திட்டம் ஸ்கை ட்ரைவ் இருப்பதால் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே லைவ் மெசஞ்சர் (Live Messenger) ஸ்கைப் உடன் இணைக்கப்பட்டு மூடப்பட்டது.


3. சர்பேஸ் ப்ரோ: 

2013 பிப்ரவரியில் வந்த இந்த திட்டம், அக்டோபரில் கைவிடப்பட்டது. ஆனால், இதனைக் கைவிட்டதற்கு மைக்ரோசாப்ட் சரியான காரணத்தினைத் தெரிவித்திருந்தது. சர்பேஸ் ப்ரோ 2 டேப்ளட் பி.சி., சென்ற சர்பேஸ் ப்ரோவினைக் காட்டிலும் அதிக மேம்பாட்டு திறனுடன் வடிவமைக்கப்பட்டதால், சர்பேஸ் ப்ரோ கைவிடப் பட்டது. இதன் பேட்டரி திறன் 75 சதவீதம் கூடுதலாகவும், பொதுவான இயங்கும் திறன் 20% கூடுதலாகவும் இருப்பதாக, மைக்ரோசாப்ட் அறிவித்தது.


4. விண்டோஸ் ஸ்மால் பிசினஸ் சர்வர்: 

விண்டோஸ் சர்வர் 2012 வெளியான பின்னர், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறிய வர்த்தக ரீதியான சர்வர் சிஸ்டத்தினை வெளியிடப் போவதில்லை என இத்திட்டத்தை மூடியது. 

இதற்குப் பதிலாக, சிறிய வர்த்தக நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் வழங்கும் க்ளவ்ட் சொல்யூசன்ஸ் வசதியைப் பயன்படுத்த கேட்டுக் கொண்டது. எனவே, இந்த சர்வர் அமைப்பை விரும்புபவர்கள், அஸூர் (Azure), எக்சேஞ்ச் சர்வர் மற்றும் ஷேர் பாய்ண்ட் அல்லது சர்வர் 2012க்கு மாறிக் கொள்ளலாம்.


5. என்கார்டா (Encarta): 

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டம் பதித்த கம்ப்யூட்டர்களை வாங்கியவர்களுக்கு, ஒரு சிறிய அரும்பொருள் களஞ்சியமாக ""என்கார்டா'', சிடியில் பதியப்பட்டு தரப்பட்டது. 

இது முதலில் 1993ல் வெளியிடப்பட்டது. விக்கிபீடியாவின் தகவல்கள் சரியானவையா என்ற சர்ச்சை இருந்ததால், மைக்ரோசாப்ட் வழங்கிய என்கார்டா, அனைவராலும் விரும்பப் பட்டது. இணைய தளப் பதிப்பும் வெளியிடப்பட்டது. இதனால், கவரப் பட்ட மைக்ரோசாப்ட், என்சைக்ளோபீட்யா பிரிட்டானிகாவை வாங்கிட முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

என்கார்டா, விக்கி பீடியாவின் முன் எடுபடவில்லை என்பதால், அதற்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆனாலும், என்கார்டா குழுவினர், தொடர்ந்து அதற்கான அப்டேட் வழங்கி வந்தனர். 2006ல் இத்தகைய அப்டேட் வழங்கப்பட்டது. 

என்கார்டா பிரிமியம் என மேம்படுத்தப்பட்ட திட்டத்தில், 62 ஆயிரம் கட்டுரைகள் இருப்பதாக, மைக்ரோசாப்ட் பெருமைப் பட்டது. ஆனால், விக்கி பீடியாவில் பத்து லட்சத்திற்கும் மேலாகக் கட்டுரைகள் இருந்தன. 

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், சிடி வடிவில் வந்த என்கார்டாவினையும், அதன் இணைய தளத்தினையும் மூடுவதாக அறிவித்தது.


6. ப்ளைட் சிமுலேட்டர் (Flight Simulator): 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பழைய திட்டம் இந்த ப்ளைட் சிமுலேட்டர். 1978ல் இதனை சப் லாஜிக் (subLOGIC) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

பின்னர், இந்நிறுவனத்தினை மைக்ரோசாப்ட் 1982ல் வாங்கியது. இது ஒரு ஆர்வமூட்டும் கம்ப்யூட்டர் விளையாட்டு. இதற்கென தனி ஆர்வலர்கள் இருந்தனர். மைக்ரோசாப்ட் இந்த விளையாட்டினை மூடியபோது இவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்; ஆத்திரப்பட்டனர். 

யாராவது இந்த விளையாட்டினை வர்த்தக ரீதியாக விலை கொடுத்து வாங்கி, உயிர் கொடுக்க மாட்டார்களா என்று ஆதங்கப்பட்டனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதிநிலை 2009ல் சற்று சரிந்த போது, விளையாட்டுப்பிரிவு மூடப்பட்டது. அதோடு இந்த FlightSim கேம் காணாமல் போனது. 


7. ஸூன் (Zune): 

""நானும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வந்த ப்ராடக்ட் தான்'' என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது ஸூன். டிஜிட்டல் மியூசிக் சந்தையில் சற்று தாமதமாக இது வந்தது. 2007ல் அறிமுகமாகி, ஐ பாட் முன் தாக்குப் பிடிக்க முடியாமல், 2011ல் மூடப்பட்டது. ஆனால்,இந்த சாப்ட்வேர் பிளேயர் இன்னும் எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் 8ல் இடம் பெற்றுள்ளது. 


8. விண்டோஸ் ஹோம் சர்வர் (Windows Home Server): 

வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர்களை இணைத்துப் பயன்படுத்த, இந்த விண்டோஸ் ஹோம் சர்வரை, 2007 ஆம் ஆண்டு நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் அரங்கில், பில் கேட்ஸ் அறிமுகப்படுத்தினார். 

பைல் பகிர்தல், டேட்டா பேக் அப், பிரிண்ட் சர்வர், ரிமோட் இணைப்பு எனப் பல வசதிகள் இதன் மூலம் கிடைத்தன. ஆனால், இதனைத் தன் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மைக்ரோசாப்ட் விற்பனை செய்திடவில்லை. இதனை டவுண்லோட் செய்து, பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடும் வகையில் மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. அதனாலேயே, இது தானாகவே மறைந்து போனது.

அதிகம் புழக்கத்திற்கு வராமலேயே பலவற்றை மைக்ரோசாப்ட் கைவிட்டது. அவற்றில், Microsoft Works, FrontPage, Microsoft Expression, IronRuby, Microsoft Money, Windows Live OneCare மற்றும் Xbox One DRM ஆகியவை முக்கியமானவையாகும். 

இவ்வாறு பல ஆண்டு ஆய்வுக்குப் பின்னர், வெளியாகும் பல சாப்ட்வேர் திட்டங்களை, அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும், பல சூழ்நிலைகளில் கைவிட்டுவிடுகின்றன. 

எனவே தான், எதனையும் நம்பி, முழுமையாக ஒன்றைப் பயன்படுத்த முன்வரும் முன், நாம் சற்றுப் பொறுமையாக இவற்றின் பயன்பாட்டு சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.


பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61


பட்ஜெட் விலையில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க விரும்புபவர்களுக்கென, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் போல்ட் ஏ 61 (Micromax Bolt A61) என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,999 மட்டுமே.

மைக்ரோமேக்ஸ் தன் போல்ட் வரிசையில், அண்மைக் காலத்தில் வெளியிட்ட போன் இது. 

இதில் 4 அங்குல அகலத்தில் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை கிடைக்கின்றன.

இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல்கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. 

3ஜி நெட்வொர்க் இணைப்புடன், இரண்டு சிம் இயக்கமும் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. 

இதன் ராம் மெமரி 256 எம்.பி., ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. கிடைக்கிறது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம். 

இதில் அமைந்துள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன், 3.55 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது. 

160 மணி நேரம் வரை இதன் மின்சக்தி தங்குகிறது.


2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்சென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம். 

அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம். 

"தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் பிரிக்கலாம். 

முன்பெல்லாம், எஸ்.எம்.எஸ். மூலமும், உங்களுக்கு ஸ்பானிஷ் லாட்டரியில் பரிசு விழுந்தது எனக் கூறும் ஸ்பேம் மெயில்களும், வைரஸ்களில் நம்மை விழ வைக்கும் தூண்டில்களாக இருந்து வந்தன. 

ஆனால், 2013 ஆம் ஆண்டில், இவற்றின் வழிகளும், தந்த அபாயங்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இந்த வழிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்வது நாம் எச்சரிக்கையாக இருக்க உதவும். மால்வேர் பைட்ஸ் என்னும் அமைப்பு, தன் வலைமனையில் (http://blog.malwarebytes.org/ news/2013/12/malwarebytes2013threatreport/) இதனை ஓர் அறிக்கையாகவே தந்துள்ளது. 

நம் வாழ்க்கை எப்படியாவது, ஏதேனும் ஒரு வகையில், இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிட்டது. நம்மைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிந்து வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

நாம் கையாளும் நிதிப் பரிவர்த்தனைகள், இணையத்தின் வழியாகவே நடைபெறுகின்றன. இதே வழிகளையே, டிஜிட்டல் உலகின் திருடர்கள், தங்கள் கொள்ளைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். 

நம் டிஜிட்டல் வாழ்க்கையினைச் சிறைப்படுத்தி, அவர்கள் இலக்கு வைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 2013 ஆம் ஆண்டில், இவர்கள் பின்பற்றிய மிக மோசமான வழிகளைப் பார்க்கலாம்.


1. பிணைக் கைதியாக்குதல் (Ransomware): 

புதுவகையான மால்வேர் புரோகிராம். இதன் மூலம் நம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இந்த புரோகிராம் அனுப்பியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று, நம் பைல்களை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர். 

பின்னர், நமக்கு செய்தி அனுப்பி, குறிப்பிட்ட அளவில் பணம் செலுத்தினால்தான், அவற்றைப் பெற முடியும் என எச்சரிக்கின்றனர். இந்த வகை அச்சுறுத்தல்களை, அதற்கெனப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை Ransomware என அழைக்கிறோம். 

இணையத்தில் விற்பனை செய்யப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள் அல்லது கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் வழியே Ransomware வைரஸ்கள் பரவுகின்றன.


2.மொபைல் போனில் ஸ்கேம் (Phone scam): 

"உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ்கள் பல புகுந்துவிட்டன' என்று எச்சரிக்கை செய்தி கொடுத்து, "அவற்றை இலவசமாகவே காட்டுகிறோம்' என்று இயங்கி, பல வைரஸ்கள் இருப்பதாகப் போலியாகப் பட்டியலிட்டு, பணம் பறிக்கும் வழிகளை முன்பு பல ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர். 

இனி, வரும் காலத்தில், மொபைல் போன்களில் இதே வழிகளில் பணம் பறிக்கும் வேலைகள் மேற்கொள்ளப் படலாம். ""மைக்ரோசாப்ட் சட்டப் பிரிவு அலுவலகம்'' என்ற போர்வையில், போன்களுக்கு இந்த மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள் செய்தி அனுப்புகின்றனர். 

மொபைல் போன்கள் வழி நாம் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால், தற்போது இந்த வகை ஸ்கேம் மெசேஜ்கள் நிறைய வரத்தொடங்கி உள்ளன. இவை குறித்து கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கைகள் இருந்தாலும், பலர் ஏமாந்துவிடுகின்றனர்.


3. ஆண்ட்ராய்டில் மால்வேர் (Android malware): 

மொபைல் போன்கள் பயன்பாடு தொடர்ந்து புயல் போலப் பரவி வருவதால், அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தினையே பயன்படுத்தி, மால்வேர் புரோகிராம்கள் அனுப்பப்படுவதும் அதிகரித்து வருகிறது. 

இவற்றில் SMS trojans எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன. இவை அதிகக் கட்டணத்தில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை, போன் பயனாளருக்குத் தெரியாமலேயே அனுப்புகின்றன. 

வங்கிகளின் பெயரில் மெசேஜ் அனுப்பி, சில குறியீடுகளை ஸ்கேன் செய்து தகவல் அறியுமாறு கேட்டுக் கொள்கின்றன. நாம் இணங்குகையில், மால்வேர் புரோகிராம்களை போன் களில் இறக்குகின்றன. 

வங்கிகள் நம் செய்திகள் பெற்றதனை உறுதி செய்திடும் தகவலை செய்தியாக அனுப்புகையில், அதில் குறுக்கிட்டு, குறியீடுகளைப் பெற்று, பலியாகும் பயனாளரின், வங்கி கணக்கிற்கான குறியீடுகளைக் கைப்பற்றுகின்றன. பின்னர், பணத்தை அக்கவுண்ட் டிற்கு மாற்றி எடுத்துக் கொள்கின்றனர்.


4. வங்கிகளுக்கு எதிரான தாக்குதல் (DDoS attacks): 

2013 ஆம் ஆண்டில், சில அமெரிக்க வங்கிகளில் இந்த வகை தாக்குதல் நடைபெற்றது. பல வங்கிகள், சென்ற ஆகஸ்ட் மாதம் "சேவை மறுக்கப்படுகிறது' என்ற செய்தியைப் பெற்றன. வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வகை செய்திகள் அனுப்பப்பட்டன. 

வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள், இத்தகைய செய்திகளுக்கு, எதிர் செயல்பாட்டினை மேற்கொள்கையில், வங்கியின் செயல்பாட்டுத் திட்டங்களுக்குள்ளாக, இந்த ஹேக்கர்கள் சென்று, பல அக்கவுண்ட் குறியீடுகளைத் திருடி, கொள்ளையடித்தனர்.


5. தேவையற்ற புரோகிராம்கள் ('Potentially unwanted programs'): 

சுருக்கமாக கக்கண் என அழைக்கப்பட்ட இந்த வகை புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதம் விளைவிக்கும் தன்மை இல்லாவிட்டாலும் கூட, நமக்கு எரிச்சலை ஊட்டும் வகையில் இவை இயங்கின. 

இந்த புரோகிராம்கள், டூல்பார்கள், தேடல் சாதனங்கள் என எவற்றையேனும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசர்களில் பதிக்கின்றன. இந்த வகை சாப்ட்வேர் புரோகிராம்கள் தானாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதால், நம் ராம் நினைவகம், கம்ப்யூட்டரின் திறன் ஆகியவை இவற்றால் பயன்படுத்தப்படும். 

அப்போது நமக்குக் கிடைக்கும் கம்ப்யூட்டரின் திறன் குறைந்துவிடும். ஆனால், சென்ற மாத இறுதியில், இந்த வகை மால்வேர்களையும் பயன்படுத்தி, பணம் பறிக்கும் வேலைகள் சில கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் நடை பெற்றதாக, மால்வேர் பைட்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.


2014 ஆம் ஆண்டு?: 

அப்படியானால், வரும் 2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? நம் கம்ப்யூட்டர்களைச் சிறைப்பிடித்து, நம் டாகுமெண்ட்களை பிணைக் கைதிகளாக வைத்துக் கொள்ளும் Ransomware புரோகிராம்கள், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, ஓ.எஸ். சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களிலும் இவற்றின் திருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நாம் பயன்படுத்தும் மொபைல் டிஜிட்டல் சாதனங்களை, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் இலக்குகளாக மேற்கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் பரவி வரும் எஸ்.எம்.எஸ். அடிப்படையிலான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள், மற்ற ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் அதிகம் இயங்கும் நிலை ஏற்படும்.

மேலும், வங்கிகளின் சர்வர்களைக் குறி வைத்து இயங்கிடும் DDoS attacks வகை மால்வேர் புரோகிராம்களும் இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அமெரிக்க அரசு இவை குறித்து மிகத் தீவிரமாக எண்ணி வருகிறது. 

அதே போல இதனை முறியடிக்கும் வகையில், பல நிறுவனங்கள், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன. இருப்பினும் நாம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


நோக்கியா லூமியா 525


அண்மையில் நோக்கியா நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும் லூமியா 525 ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

லூமியா 520னைத் தொடர்ந்து வெளி வர இருக்கும் இந்த போன், ஒரு விண்டோஸ் இயக்க மொபைல் போனாக இருக்கும். 

இதன் 4 அங்குல சென்சிடிவ் திரை, விரல் நகத்திற்கும், கையில் அணிந்திருக்கும் உறைக்கும் கூட இயங்கும். இதில் ஸ்நாப் ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆட்டோ போகஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 720 பி எச்.டி. திறனுடன் வீடியோ பதிய முடியும். 1 ஜிபி ராம் மெமரியில் இது இயங்குகிறது. 

இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் தடிமன் 9.9. மிமீ. எடை 124 கிராம். 

இதன் பேட்டரி 1,430 mAh திறன் கொண்டது.

 நோக்கியா லூமியா 525 ஆரஞ்ச், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளி வர உள்ளது. 

இதன் பின்புற ஷெல்லை விரும்பும் நிறத்திற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லை.


சாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2சாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி வரிசையில் வெளியிட்ட எஸ் டூயோஸ் 2 மொபைல் போனை (GTS7582), அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. 

இணைய விற்பனைத் தளமான ஐணஞூடிஞஞுச்ட்ல் இந்த தகவல் கிடைக்கிறது. இதில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது . இதன் டிஸ்பிளே 400 × 800 பிக்ஸெல் திறன் கொண்டது. 

1.2 கிகா ஹெர்ட்ஸ் திறனுடன் இயங்கும் ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸெல் திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்ட கேமரா ஒன்றும், 0.3 எம்பி திறனுடன் கூடிய கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆகும். இரண்டு சிம் எப்போதும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

768 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் ஆகியவை கிடைக்கின்றன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இந்த மொபைல் போனின் தடிமன் 10.57 மிமீ. எடை 118 கிராம். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ. 10,730.


HTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்


எச்..டி.சி. நிறுவனம், தன் மொபைல் போன்களிலேயே, மிக அதிக விலையிடப்பட்ட மொபைல் போனை, இந்தியச் சந்தையில், அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 61,490. இது எச்.டி.சி. ஒன் மேக்ஸ் ('One Max') என அழைக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் இது ரூ.56,490க்குக் கிடைக்கலாம். 

இருப்பதிலேயே மிகப் பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது. இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே எச்.டி.சி. தந்து வந்தது. 

ஸ்டைலஸ் பேனா, திருட்டுக்கு எதிரான இன்ஸூரன்ஸ், நீர் மற்றும் பிற திரவத்தினால் கெட்டுப்போனால் இழப்பீடு மற்றும் மாதத் தவணையில் பெறுதல் எனப் பல சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்படுகின்றன.

தவணைக் கடனுக்கான ப்ராசசிங் கட்டணம் எதுவுமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கேமராவின் கீழாக ஸ்கேனர் ஒன்று தரப்பட்டுள்ளது. விரல் ரேகையினை இது உணர்ந்து, இந்த போனின் உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த இது வழி வகை செய்கிறது.

இதன் இரு மாடல்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரியுடன் உள்ளன. இந்த போனைப் பயன்படுத்துபவர்கள், கூகுள் ட்ரைவில் 50 ஜிபி மெமரி இடத்தினை இலவசமாகப் பெறலாம். 

இதில் இணைத்து தரப்படும் பேட்டரி 3,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. வழக்கமாக, 4 அங்குல திரை கொண்ட போன்களில், 1,800 முதல் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரிகள் இணைக்கப்படும். 

இதன் திரை 5.9 அங்குல அகலத்தில் அமைக்கப்படுவதால், கூடுதல் திறனுடன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது.


குரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்
1. கிராஷ் ஆகும் இணைய தளங்கள்: 

ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? 

அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்
.
1.1.முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும். 

1.2. குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், "Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். 

1.3. இப்போது புதிய "Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக "Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். 

குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம். 

ப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். "Include this URL” மற்றும் "Include this screenshot” ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.


2. சர்ச் இஞ்சின் டெக்ஸ்ட் அமைப்பதை நீக்கவும்:

குரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம். 

ஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.

2.1.ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும்.

2.2. செட்டிங்ஸ் ("Settings”) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய "Settings” டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு "Search” என்பதற்குக் கீழாக உள்ள "Enable Instant for faster searching” என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். 

இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள "Show advanced settings” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, "Privacy” என்ற இடத்தில் உள்ள "Use a prediction service to help complete searches and URLs typed in the address bar” என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இவற்றை முடித்த பின்னர், "Settings” டேப்பில் கிளிக் செய்து மூடவும். 


3. தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள்: 

குரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:\Users\Name\ Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது, யூசரின் பெயர் ஆகும். 

இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம். 

எனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.

3.1. முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். 

3.2. செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், "Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும். 

3.3. கீழாகச் சென்று "Downloads” என்பதன் கீழே, "Ask where to save each file before downloading” என்பதில் டிக் செய்து அமைக்கவும். 

3.4. முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும். 


4. ஹோம் பேஜ் அமைத்தல்: 

குரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.
மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், "New Tab” பக்கம் காட்டப்படும். 

இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம். 

சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.

4.1. wrench பட்டனைக் கிளிக் செய்திடவும். 

4.2. "Options” தேர்ந்தெடுக்கவும். 

4.3. இப்போது "Options” டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள "Basics” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

4.4. "On startup” என்ற பிரிவில், "Open the following pages” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். 

4.5. குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும். 

4.6. இதற்கு "Add” பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு "Add page” என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும். 

4.7. அப்போதுதான் திறக்கப்பட்ட இணைய தளத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Use current pages” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 

4.8. காலியாக உள்ள பக்கத்துடன் பிரவுசர் திறக்கப்பட, "Add page” என்ற டயலாக் பாக்ஸில், about:blank என டைப் செய்திடவும். பின்னர், "Add” பட்டனில் அழுத்தி, டயலாக் பாக்ஸை மூடவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes