தினமும் 2 புல் தண்ணியடிச்சா உடலுக்கு நல்லது; டாக்டர் சொல்கிறார்

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை சேர்ந்த உணவு கட்டுப்பாட்டு டாக்டர் லிசா சுதர்லாண்ட் குடி தண்ணீ ரின் சிறப்பு பற்றி கூறியிருப்பதாவது:-

தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். அடிக்கடி தண்ணீர் அருந்துவது தான் உடலுக்கு நல்லது.  உடலில் நீர்சத்து குறைவதால் தலைவலி ஏற்படுவது மட்டுமின்றி நமது கவனமும் சிதறும்.

குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு வியர்வை துளி மூலமும் உப்புச்சத்தை இழக்கிறோம்.  இயல்பாக நமது உடலில் ஒரு நாளுக்கு 2-ல் இருந்து 3 லிட்டர் நீர்சத்து சுரக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் திரவ உணவு மூலமே இதனை அடைய முடியும்.

இயல்பான தட்பவெப்ப நிலையில் தினமும் 2 லிட்டர் நீர் அருந்தினால் போதுமானது. கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்திலும், உடற்பயிற்சியின் போதும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...

நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப் பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங் கள் நட்பின் நெருக்கத்தை காட்ட செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத் துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங் கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.


அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? இது பலருக்கு தெரிவதில்லை. சுத்தம் இருந்தால், பாதி உடல் கோளாறுகளை தவிர்க்கலாம். திறந்து வைத்த ஆறிய சாப்பாடு, குழம்பு, கறி வகைகள், ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றால் தான் பல தொற்றுநோய்கள் வருகின்றன. காலை, மாலை குளிப்பது, பல் தேய்ப்பது, கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்வது, அதிக வேலை செய்யாமலும், அதே சமயம் சுறுசுறுப்பு குறையாமலும் இருப்பது, வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது, குளிர் பானம் போன்றவற்றை குறைப்பது, முடிந்தவரை வாகனத்தை தவிர்த்து நடப்பது, யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது போன்றவை மட்டுமே, உங்களுக்கு நாற்பதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள்.டீன் ஏஜில் இருப்பவர்கள் இதை இப்போதே உணர்ந்தால், கண்டிப்பாக எந்த ஆரோக்கிய குறைவுக்கும் ஆளாகமாட்டார்.


ஆ... ஊ... அப்ப்ப்... ஸ்ஸ்ஸ்!


கம்ப்யூட்டர் பணியில் இருப்பவர்களுக்கு இடுப்பு, தோள் பிடிப்பு மற்றும் கைகளில் இறுக்கமும், பிடிப்பும் வருவது சகஜம் தான். காரணம், சரியான விதத்தில் உட்காராமல் இருப்பது, கைகளுக்கு அழுத்தம் தராமல் வேலை செய்யாமல் இருப்பது, தோள்பட்டையில் வலி ஏற்படும் வகையில் வேலை செய்வது ஆகியவை தான் காரணம்.

கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, எந்த வித அழுத்தமும், உடலில் எந்த பாகத்துக்கும் தராமல் உட்கார வேண்டும்; வேலை செய்யும் போது, கைகளுக்கோ, இடுப்புக்கோ இறுக்கமோ, அழுத்தமோ இருக்கக்கூடாது. கைகளை , கம்ப்யூட்டர் கீபோர்டில் சமமாக படியும் படி வைத்து பணி செய்ய வேண்டும்; நெடுக்காக வைத்து செய்தால், உள்ளங்கையிலும் வலிக்கும். உடலில், முக்கியமாக கழுத்து வலி தான் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி ஏற்படும்.


இருக்கையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடக்கூடாது; எந்த வித கழுத்து அழுத்தமும் இல்லாமல் ரிலாக்சாக கம்ப்யூட்டரில் பணி செய்ய வேண்டும். கழுத்தை குனிந்தோ, கம்ப்யூட்டருக்குள்ளேயே தலையை விட்டுக் கொள்வது போலவோ வேலை செய்யக்கூடாது என்பது டாக்டர்களின் ஆலோசனை.


கோதுமை, ஓட்சில் புதைந்திருக்கும் மர்ம நோய்!


ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு, அடுத்தவருக்கு ஒத்துக் கொள்ளாது; அதுவே நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இப்படி புதையுண்டிருக்கும் கோளாறுகள் ஏராளம். படிப்படியாக

 இப்போது தான் நிபுணர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படி ஒரு புதையுண்டிருக்கும் கோளாறு தான்

"செலியாக்' நோய்.


கோதுமை, ஓட்ஸ், பார்லி, கம்பு போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவுகள் கூட சிலருக்கு ஒத்துக்கொள்ளாது; அடிக்கடி வாந்தி, பேதி வரும்; மலச் சிக்கல்லில் ஆரம்பித்து, மவுத் அல்சர் முதல், சிறுகுடல் பாதிப்பு வரை பல தொந்தரவுகளை உருவாக்கும். இப்படி பல கோளாறுகளை தந்து, கடைசியில் உயிருக்கே ஆபத்து தரும் அளவுக்கு விசுவரூபம் எடுப்பது தான் "செலியாக்' நோய். குழந்தைகளுக்கு டைப் - 1 சர்க்கரை வியாதியையும் ஏற்படுத்துவது தான் இது தான் என்றும் சமீபத்தில் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


வருவது ஏன்?


கோதுமை போன்ற தானியங்களில், க்ளூடோன் என்ற ஒரு வகை ப்ரோட்டீன் உள்ளது. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தானியங்களில் கஞ்சி போட்டு குடித்தாலும், மற்ற உணவு வகைகளாக செய்து சாப்பிட்டாலும் உடனே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு காரணம், "செலியாக்' கோளாறு தான் என்று டாக்டர்களால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. நடுத்தர வயதில் ஆரம்பித்தாலும், அறுபது வயதை தாண்டும் போதும் தான் விசுவரூபம் எடுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


வந்து விட்டால்


இந்த பாதிப்பு வந்தால், சிறுகுடல் கடுமையாக பாதிக்கப்படும். அதன் சுவர்கள் அரிக்கப்படும்; அதனால், உணவு ஜீரணிப்பதும், வைட்டமின், கனிமச்சத்துக்களை பிரிப்பதும் இயலாமல் போய்விடும். அதனால், உடலில் எதிர்ப்புசக்தி அறவே அழிந்து பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.


கல்லீரல் பாதிக்கப்படும்; கீல்வாத மூட்டு நோய் வரும்; தைராய்டு கேன்சர் போன்றவை வரும். இவற்றுக்கு தான் டாக்டர் சிகிச்சை தருவாரே ஒழிய, தானிய உணவுகளால் தான் வந்தது என்பதையோ, "செலியாக்' என்பதையோ கண்டறிவது மிகவும் அரிது.


அறிகுறிகள் என்ன?


* ஜீரண சக்தி குறையும். கோதுமை உட்பட தானிய வகை உணவுகள் சாப்பிட்டால், ஏற்றுக் கொள்ளாது.


* வாயில் அல்சர் ஏற்படும்.


* லாக்டோஸ் ஏற்றுக்கொள்ளாமல் போவதால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.


* உடல் உயரம் குறையும். மூட்டு வலி ஏற்படும்; உடல் எடையும் குறையும்.


* ரத்த சோகை ஏற்படும்; வயிற் றுக்கோளாறும் அடிக்கடி வரும்.


* மேற்சொன்ன அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல், லேசாக இருந்தாலும், தொடர்ந்து இருக்குமானால் செலியாக் தான்.


தடுக்க முடியாதா?


எந்த ஒரு கோளாறும் வராமல் தடுக்க வழியில்லாமல் இல்லை. அப்படி இதற்கும் தவிர்ப்பு வழிகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில், க்ளூடோன் ப்ரோட் டீன் இல்லாமல் உள்ள தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கெட்களில் , இது க்ளூட்டோன் ப்ரோட்டீன் இல்லாதது என்றே அச்சிட்டு விற்பனை செய்கின்றனர்.


ஆனால், இந்தியாவில் இந்த வசதி இல்லை. அதனால் தான் ஓசைப்படாமல், சமீப காலத்தில் பலருக்கு இந்த கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.


டைப் - 1 டயபடீஸ்


குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கு டைப் - 1 டயபடீஸ் என்று பெயர். இதற்கும், "செலியாக்' கோளாறுக்கும் தொடர்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்லீரலில் உள்ள இன்சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கும் திறனை இழக்கிறது; அதனால் குழந்தைகளுக்கு இந்த நோய் வருகிறது. "குழந்தைப்பருவத்தில் செலியாக் நோய் தாக்குவதால், இது ஒரு மரபு நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உணவு மூலமாகத்தான் வருகிறதா, பரம்பரையாக இது தொடரும் பாதிப்பா என்பதை இன்னும் உறுதி செய்ய இயலவில்லை' என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


உணவில் தான் எல்லாம்


ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போலத்தான் செலியாக் கோளா றும். அதனால், உணவில் மாற்றத் தை கொண்டு வந்தாலே, அது வராமல் தவிர்க்க முடியும். எப்படி கொழுப்பு உணவுகளை ரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்கின்றனரோ அதுபோல, க்ளூட்டோன் ப்ரோட்டீன் உள்ள கோதுமை உட்பட தானியங்களை தவிர்க்க வேண்டும்.


மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் க்ளூட் டோன் ப்ரோட்டீன் இல்லாத தானிய வகை உணவு பாக்கெட் களை விற்பனை செய்ய வேண் டிய நிலை எதிர்காலத்தில் வந்தால், இந்த நோய் பாதிப்பு பரவுவதை தடுக்க முடியும் என்பதும் நிபுணர்கள் கருத்து.


தெரியாமலேயே...


செலியாக் நோய் தான் என்று தெரியாமலேயே, வாந்தி பேதிக் கும், ரத்த சோகைக்கும் மற்ற அறிகுறி பாதிப்புகளுக்கும் சிகிச்சை பெறுகின்றனர். டாக்டர்களும் இப்போது தான் விழித்துக் கொண் டுள்ளனர். செலியாக் நோயை கண்டறிய துல்லியமான புதிய ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. இதனால், இதன் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.


வடக்கா? வேண்டாம்


இந்தியா ஆன்மீகத்தில் மிகச் சிறந்த நாடு. நம் முன்னோர்கள் ஏற்படுத்திய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிக்கோள் உடையதாகும். அந்தப் பழக்கத்தை கடைபிடிக்க ஒரு கதை சொல்லப்படும். இதன் நோக்கம் சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அந்தப் பழக்கத்தைக் கடைபிடிப்பதால் நாம் அடையும் அனுகூலங்கள் பல. இவ்வகையான பழக்க வழக்கங்களில் ஒன்று தலையை வட திசையில் வைத்துப் படுப்பது தவறு என்பது. இதற்கு ஒரு கதையும் கூறுவர்.

1. வட திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏன்? வடதிசையில் தலையை வைத்துப் படுக்கப்போன பேரனைப் பார்த்து, "அப்படிப் படுக்காதே, அது தவறு. மற்ற திசையில் தலை வைத்துப் படு" என்றாள் பாட்டி. "ஏன் படுத்தால் என்னவாம்?" என்று கேட்டான் பேரன். "அப்படிப் படுத்தால் உன் தலை காணாமல் போய்விடும்" என்று சொல்லி ஒரு கதையும் சொன்னாள்.

பார்வதி தேவி ஒரு சமயம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. வீட்டைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் மண்ணால் ஒரு பொம்மை செய்து அதற்கு உயிர் கொடுத்துக் காவலுக்கு வைத்தாள். யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிப் போனாள். சிறிது நேரத்தில் சிவன் வந்தார். அவர் வீட்டிற்குள் செல்வதைக் காவல் காத்திருந்த பையன் தடுத்தான். சிவன் என்ன கூறியும் உள்ளே செல்ல விடவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் அந்தப் பையன் தலையை வெட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். திரும்பி வந்த பார்வதி தேவி பையன் இறந்து கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள். சிவனை விசாரித்தபோது அவர் நடந்ததைச் சொன்னார். நான் உருவாக்கிய பையனை அழித்து விட்டீர்களே! அவனை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்று பிடிவாதம் செய்தாள். உடனே சிவன் பூத கணங்களைக் கூப்பிட்டு எவனொருவன் வட திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறானோ அவன் தலையைக் கொய்து எடுத்து வாருங்கள் என்று பணித்தார். பூதகணங்கள் தேடி அலைந்ததில் ஒரே ஒரு யானை அவ்விதம் படுத்திருப்பதைப் பார்த்து அதன் தலையை வெட்டி கொண்டு வந்தனர். சிவன் அந்த யானைத் தலையைப் பையன் உடம்பில் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார். அவர்தான் பிள்ளையார். ஆகையால் நீ வடதிசையில் தலை வைத்துப் படுத்தால் தலைக்கு ஆபத்து என்று பாட்டி பேரனுக்குச் சொன்னாள்.

இதை நாம் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக ஆராய்வோம். நாம் வலு உள்ளவர்களாக இருப்பதற்குத் தேவையான இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் முதலியவை சிறிய அளவில் நம்முடைய உடலில் உள்ளன. பூமியில் 0-40 பாகைக்கு உட்பட்ட இடங்களில் பூமியின் காந்தப் புல கிடைத்தளக் கூறு கணிசமான அளவில் உள்ளது. அதன் அளவு பூமத்திய ரேகையில் 0.38 ஆயர்ஸ்டெட் (Oersteds - C.G.S.Units) ஆகவும் 40 பாகையில் 0.31 ஆயர்ஸ்டெட் ஆகவும் உள்ளது. அதாவது ஒரு ஏலேடு காந்தமுனையை (unit pole) இந்த 0-40 பாகைக்குள் வைத்தால் அதனுடைய தன்மைக்கு ஏற்ப கவர்ச்சி அல்லது விலக்கு விசை 0.38 லிருந்து 0.31 டைன்ஸ் (dynes) வரை அந்த இடத்தின் அட்சக்கோட்டைப் பொறுத்து இருக்கும். காந்தப் புலக் கோடுகளின் விசை பூமியின் தெற்கு வடக்காகச் செல்லுகிறது. மனிதன் வடக்கு நோக்கித் தலை வைத்துத் தூங்கும் போது இந்த விசைக்கோடுகள் மனிதனின் உடல் மூலமும், செரிப்ரம்(ceribrum) வழியாகவும் செல்கிறது. ஒவ்வொரு கணத்திலும் உடம்பில் உள்ள இரும்பு, கோபால்ட், நிக்கல் இவை காந்தம் ஆக்கப்படுகி்றன (get magnetised). சிறிது நேரத்தில் நம் உடலே சிறு சிறு காந்தங்கள் உள்ளதாக ஆகிவிடுகிறது. இந்த சிறு காந்தங்கள் எல்லாம் சேர்ந்து காந்தத் திருப்புத்திறன் 'எம். (of magnetic moment M) உடைய காந்தமாகிவிடுகிறது. இதன் அளவு காந்த முனை வலிமையும் காந்தத்தின் நீளத்தின் பெருக்குத்தொகையும் ஆகும் (is the resultant of pole strength multiplied by the length of the magnet). இதனால் மனித உடலானது எம் எச் டைன்ஸ் (MH dynes) காந்த விசைக்கு உட்படுகிறது. 'எச்' என்பது பூமியின் காந்தப் புலக் கிடைத்தளக் கூறு. அதாவது காந்தப் புல செறிவு. (Horizontal component of earth's magnetc field).

வட திசையில் தலை வைத்துத் தூங்கும்போது அவன் காந்த விசைக்கோட்டுடன் 0 பாகை ஏற்படுத்துகிறான். ஆகையால் விசையின் கூறு தேகத்தின் வழியே எம் எச் கோசைன் 0 ஆகும். கோசைன் 0 = 1 ஆகையால் முழுமையாக எம் எச் டைன்ஸ் விசை தேகத்தின் செரிப்ரம் வழியாகச் செல்லும். அதாவது அவன் சேமித்து வைத்துள்ள சக்தியிலிருந்து ஒவ்வொரு கணமும் காந்த விசையை எதிர்த்து, உடம்பைச் சமனிலையில் வைக்க வேண்டி, எம் எச் டைன்ஸ் செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு முறையும் உடலின் சேமிப்பு சக்தியில் எம் எச் டைன்ஸ் இழக்க வேண்டியுள்ளது. வடதிசையில் தலை வைத்துப் படுப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லாமல் நமது சக்தி வீணாகிறது. தென் திசையில் தலை வைத்துப் படுக்கும்போது உடலின் வழியாகச் செல்லும் விசையின் கூறு எம் எச் கோசைன் 180 ஆகும். இப்பொழுது இவன் இயங்கும் காந்த விசைக்கோட்டிற்கு எதிராகப் படித்திருப்பதால் கோசைன் 180 = -1 ஆகும். அவன் ஒவ்வொரு கணமும் - எம் எச் டைன்ஸ் இழக்கிறான். அதாவது எம் எச் டைன்ஸ் அவன் உடலில் கூடுகிறது. ஆகையால் தெற்கில் தலை வைத்துப் படுப்பது அவனுக்கு சாதகமாகிறது.

கிழக்கு மேற்காகப் படுக்கும் பொழுது இயங்கும் விசையின் கூறு எம் எச் கோசைன் 90 அல்லது எம் எச் கோசைன் 270 ஆகவும் ஆகிறது. இதன் அளவு சூன்யம் (0). ஏனென்றால் கோசைன் 90 அல்லது கோசைன் 270 = 0 இதனால் மனிதனுடைய உடல் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் உட்படுவதில்லை. உயர் அட்சக்கோட்டில் வாழும் ஜனங்களின் மீது இந்த காந்த விசை பாதிப்பதில்லை. ஏனென்றால் அதன் அளவு மேலே போகப்போகக் குறைந்துவிடுகிறது. அதன் அளவு U.K.வில் 0.18 சி.ஜி.எஸ். யூனிட் ஆகவும் துருவங்களில் சூன்யமாகவும் ஆகிவிடுகிறது. இதிலிருந்து அதிகமான (maximum) காந்த விசையால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு ட்ராபிக்ஸ் (Tropics)க்கு இடையில் வசிக்கும் ஜனங்கள்தான் என்று தெரிகிறது. இந்தியா இந்த பாகத்தில் இருக்கும் ஒரு தேசமானதால், நம் முன்னோர்கள் மிகவும் சரியான, கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் நோக்கம் உடலில் இருந்து எள்ளளவு சக்தியும் ஒரு பலனில்லாமல் வீனாக்கப்படக்கூடாது என்பதே இந்த கோட்பாட்டிற்கு காரணம். படித்தவர்களுக்கு, அதுவும் விஞ்ஞானம் படித்தவர்களுக்குத்தான் மேற்சொன்ன விளக்கம் புரியும். நம் முன்னோர்கள் படித்தவன், படிக்காதவன், எழுத்தறிவு இல்லாதவன் என்று பாரபட்சம் பார்க்காமல் யாவரும் பயனடைய வேண்டிக் கதைகள் மூலம் சில வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். நம் முன்னோர்கள் நோக்கம் மனிதன் பலனடைய வேண்டும் என்பதே தவிர, அந்தத் தகவல் எந்த முறையில் சொல்லப்படுகிறது என்பது அல்ல. இதிலிருந்து நம் முன்னோர்கள் எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக நல் வாழ்விற்கான கோட்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது.

மேற்கூறிய கதை போல்தான் எல்லாக் கதைகளுக்கும் ஓர் அறிவுபூர்வமான உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று நாம் உணர வேண்டும். எல்லாவற்றிற்கும் நமக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தெரியாவிட்டாலும், அவற்றீன்படி நடக்க முடியாவிட்டாலும், அவை எல்லாம் நம் நன்மை கருதியே சொல்லப்பட்டன என்று அறிந்து உணர்ந்தால், அதுவே போதும்.


இளமை ஊஞ்சலாட வேண்டுமா?


முகம்,சரும பகுதிகளில் சுருக்கம் விழுகிறதா? வயதான தோற்றம் தருகிறதா?.கவலையேபடாதீங்க;தினமும் தக்காளி சாப்பிடுங்க,போதும்;இளமை ஊஞ்சலாடும்!

அமெரிக்க நிபுணர் மார்க் பிர்க்மேகின் தலைமையிலான நிபுணர்கள் குழு,இது பற்றி ஆராய்ந்து புதிய உண்மைகளை கண்டுபிடித்துள்ளது.இவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பது...

ஆப்பிள் மட்டுமல்ல;தக்காளியும் உடலுக்கு மிக நல்லது.தினமும் எந்த வகையிலாவது உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் போதும்,வயதான தோற்றமே தெரியாமல் இளமை நீடிக்கும்.முகத்தில் சுருக்கம் விழாது;சருமம் பளபளவென இருக்கும்.

தக்காளி சாப்பிட்டு வந்தால்,உடலில் "கொல்லெஜன்" என்ற ப்ரோட்டீன் உற்பத்தி அதிகரிக்கிறது.சருமம் சுருங்காமல் ,வழவழப்புத் தன்மை தருவது இந்த ப்ரோட்டீன் தான்.

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்து,அவற்றில் இருந்து சத்துகளை பிரித்து பல உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை செய்வது,"மிடோசோன்ட்ரியா" என்ற செல் பகுதி தான்.வயதான தோற்றம் தெரியாமல் இருக்க இந்த செல் மிகவும் பயன்படுகிறது.தக்காளி சாப்பிட்டால் ,இந்த செல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது,"இக்டோபென்" என்ற,"ஆன்டி-ஆக்சிடன்ட்!" மார்பக புற்றுநோய் உட்பட பல வகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.ஆண்களின் மலட்டுத்தன்மையை அறவே போக்குவதும் இதன் வேலை. தினமும் தக்காளி சாப்பிடுவதால் இந்த,"ஆன்டி-ஆக்சிடென்ட்"டும் அதிகரிக்கிறது.தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதில் தான் அதிக சத்துகள் கிடைக்கும்.மற்ற காய்கறிகள் போல சமைத்த பின் தக்காளியில் சத்துக்கள் குறைவதில்லை;அதனால்,உடலுக்கு முழு சத்துக்கள் கிடைக்கின்றன.

-இவ்வாறு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வீடியோ கேம்களால் குழந்தைகளிடம் பெருகும் வன்முறை

lankasri.comவீடியோ கேம்கள்தான் இப்போது குழந்தைகளின் உலகம். இவர்களுக்கென்றே விதம் விதமாக கருத்தாக்கங்களை யோசித்து விளையாட்டுகளை தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள் குழந்தைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தி வன்முறை நடத்தை அதிகரிக்கிறது என்றும், குறிப்பாக பிரிட்டனில் உள்ள குழந்தைகளிடத்தில் வன்முறை உணர்வு அதிகரித்திருப்பதாகவும் ஆஃப்காம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீடியோ கேம்கள் பொதுவாக பழைய பஞ்ச தந்திரக் கதைகள் போல்தான் உள்ளன. ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது.

இது 18 என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பிரிட்டன் பெற்றோர்கள் உணர்கின்றனர்.

மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம். இண்டர்நெட், எம்பி3 பிளேயர்கள், டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவை பெரும்பாலும் உள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.

இதுபோன்று இருந்தாலும் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்றும் கூட சில பெற்றோர்கள் நினைப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


உடல் பருமனும் உறவினர்களும்!

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் - என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் வரியை இன்று பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம். மகிழ்ச்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இன்று பலர், கவலைகள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம் என பாட தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம். 

நல்ல வேலை கிடைக்கவில்லையே, நன்றாக நடனமாட முடியவில்லையே, பெரிய வீடு கட்ட முடியவில்லையே, நல்ல சூழல் அமையவில்லையே என பல கவலைகள் மனிதனை ஆட்கொள்ள தொடங்கி விட்டன. கணிணி நுற்றாண்டு தொடங்கி விட்ட பிறகும் கவலைகள் பெருகி கொண்டுதான் இருக்கின்றனவே ஒழிய குறையவில்லை. நிரந்த மகிழ்ச்சியை தேடும் மக்களுக்கு நேர் எதிர் மாறாக கவலைகள் பல்வேறு கோணங்களில் வந்து கொண்டிருக்கிறன என்றால் மிகையாகாது. 

உடல் பருமன் இன்று பலருக்கும் கவலையூட்டும் ஒன்றாகி விட்டது. இயந்திரங்கள், கணிணி மூலமே வேலைகளை செய்ய பழகி விட்ட பலருக்கு உடல் பருமன் இயல்பாகவே இணைந்து விடுகின்ற கவலையாக உள்ளது. அளவாக உண்டுவிட்டு, ஓடி ஆடி வேலை செய்யாமல் இருந்தாலோ, வேர்வை சிந்தாமல் அமர்ந்து வேலை செய்தாலோ, அதிகமாக உணவு உண்டாலோ உடல் பருமன் ஏற்படும் என பலர் எண்ணுகின்றனர். உறவுகள் உடல் பருமனை உருவாக்கலாம் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? 

சமீபத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால் நாமும் உடல் பருமன் அடையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

உடல் பருமன் சமூக அளவில் மனிதர்களுக்கிடையில் பரவக்கூடியது என இவ்வாராய்ச்சி தெரிவித்துள்ளது. நமது அன்புக்குரியவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் இக்கண்டுபிடிப்பு உண்மையாக இருக்கிறது என மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இவ்வாய்வு தெரிவிக்கின்றது. சமூக உறவு மரபணுக்களை காட்டிலும் அதிக, ஆச்சரியமான மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது. 

பாஸ்டன் நகரில் ஃபிரமிங்காம் பகுதியில் வாழும் மக்களின் மருத்துவ பதிவுகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.பங்கேற்றவர்களின் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இவ்வாய்வில் கலந்து கொண்டோர் மொத்தம் 12, 067 பேர். 

நுறு மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற நண்பர்களும், உறவினர்களும், ஒருவரின் அடுத்த வீட்டில் வசிப்போரை போன்று பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வில் அறிந்து ஆச்சரியப்பட்டதாக சன் டிகோ (san Diego) கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் இணை ஆசிரியர் ஜேம்ஸ் ஃபௌலர் தெரிவித்துள்ளார். 

ஒருவரின் நண்பர் உடல் பருமன் உடையவராக இருந்தால் 57 விழுக்காட்டினரும், உடன்பிறந்தவர்கள் உடல் பருமன் உடையவர்களாக இருந்தால் 40 விழுக்காட்டினரும் துணைவர் அல்லது துணைவியார் உடல் பருமன் உடையவராக இருந்தால் 37 விழுக்காட்டினரும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் உள்ளது என இவ்வாய்வு தெரிவித்துள்ளது. 

ஒரே விதமான உணவு, உடல்பயிற்சி பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் மட்டுமே உடல் பருமன் அடைகிறார்கள் என்பதை விட உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எடுத்துக்காட்டாக85 கிலோ எடையுடன் கட்டான உடலமைப்பை கொண்டவர் ஒருவர். 65 கிலோ எடை, ஆனால் தொந்தியும், தொப்பையுமாய் மற்றவர். எடை 65 தானே.அதனால் தான் பருமன் இல்லை என்று அவர் நினைக்க வாய்ப்புண்டு. மூன்றாமவர் 85 கிலோ எடையுடன் இருப்பவர். ஆனால், கட்டான உடல் இல்லை. கிட்டத்தட்ட மாமிச மலை போல். அவரும் எனக்கும் 85 கிலோ தானே முதலாமவரை போல. எனவே நான் பருமனில்லை என நினைக்கக்கூடும். இதைத்தான் உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என்கின்றனர். ஆனால்; உடல் பருமன் கொண்ட உறவினர்களையோ நண்பர்களையோ துண்டித்து விட வேண்டும் என ஆய்வாளர்கள்; கூறவில்லை. 

உடல் பருமன் இன்று முக்கியமான உடல் நலக்குறைவு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
உலகம் முழுவதும் வயதுக்கு வந்தோரில் 1.5 பில்லியன் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் அதில் 40 மில்லியன் பேர் உடல் பருமன் உடையவர்களாகவும் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அதிக எடைவுள்ளவர்களாகவோ அல்லது உடல் பருமன் உடையவர்களாகவோ உள்ளனர். 

இதுவரை நடத்தப்பட்டுள்ள பல ஆய்வுகள் உடல் பருமனுக்கும், மரபணுக்களுக்கும் இடையிலான தொடர்பு அல்லது கலோரி பயன்பாடு என்பதை பற்றியே இருந்து வந்துள்ளது. கட்டுபாடான நல்ல உணவு பழக்கம் மற்றும் உடல்பயிற்சிகள் மூலம் உடலைக்; கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் ஆகியவையே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் முடிவுகள் உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சை முறையில் புதிய பாதையை காட்டியுள்ளது எனலாம். உடல் பருமன் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லாமல் குழுவாக சிகிச்சை அளிப்பதே சாலச் சிறந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்களாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியமும் தொடர்புடையது என ஹவார்டு சமூகவியலாளர் முனைவர் நிக்கோலாஸ் கிறிஸ்டாகிஸ் கூறுகிறார். 

ஆய்வுகள் பலவாக இருந்தாலும் உடல் பருமனைப் பற்றிய இவ்வாய்வு புதிய பார்வையை நமக்கு தருகிறது என்றே சொல்லாம். உடல் பருமனுக்கு பல காரணங்கள் இருந்தாலும் தொலைவில் உள்ள நண்பர்களும், உறவினர்களும் அடுத்த வீட்டு நபர்களை போன்று பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பது நமக்கு தெரிவிக்கப்படும் புதிய கருத்தாகும். 

உடல் பருமனை கொண்ட நண்பர்களையும், உறவினர்களையும் விட்டுவிடக்கூடாது என இயம்பும் இவ்வாய்வு பலரும் இணைந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை முறையை பரிந்துரைப்பதன்மூலம் பல பேர் உதவி பெறும் முயற்சியாகவும் பார்க்கலாம். இன்னும் ... அடிவயிற்றில் ஏற்படுகின்ற பருமன் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களோடு தொடர்புடையது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இது உண்மை என்பதை 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று எண்பித்துள்ளது. 

மருத்துவ சிகிச்சைப்பெற்ற உள்ளுர்வாசிகள்40 விழுக்காடு ஆண் நோயாளிகளும், 42 விழுக்காடு பெண் நோயாளிகளும் அடிவயிற்றில்; பருமன் கொண்டவர்களாக உள்ளனர் என அறிவியல்பூர்வமான இவ்வாய்வு தெரிவித்துள்ளது. 

அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பு, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைமை பேராசிரியர் லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறுகிறார். 

இவ்வகை கொழுப்பு, இன்சுலின் தடுப்பு, இரத்தக்குழாய் வீக்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் இரத்தம் கட்டுதல் ஆகியவற்றை உருவாக்குகின்ற, சைற்றோகினிஸ் (Cytokines) மற்றும் கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு இட்டுச்செல்லும் உயர் ஆபத்துக்களை கொண்டுள்ளது என லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறியுள்ளார். 

90 சென்டி மீட்டர் (35.4 inch) இடுப்பளவு கொண்ட சீன ஆண்களும், 80 சென்டி மீட்டர் (31.5 inch) இடுப்பளவுடைய சீன பெண்களும் உடல் பருமன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.

உடல் பருமன் கொண்ட பெண்கள் பருமன் இல்லாதவர்களை விட 3.3 முறை அதிகமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும்;, 4 முறைக்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகளை கொண்டுள்ளனர். இன்று உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் விiயாட்டுக்கூடங்கள், காலை மற்றும் மாலை வேளையில் உடல் பயிற்சியில் மக்கள் காட்டும் அக்கறை அனைத்தும் உடலை கட்டுப்கோப்புக்குள் வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளப்படும் முயற்சிகளாகும். 

அன்பான நேயர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் பருமன் இன்று பல்வேறு உடல் சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்றால் அதனை களைவது தானே நமக்கு நல்லது. 

வயதுக்கேற்ற கட்டுபாடான உடல் அமைப்பையும், எடையையும் நீங்கள் கொண்டுள்ளீர்களா? பருமன் என உங்களை ஒதுக்க ஆளில்லை. கண்ணாடி முன்நின்று உங்களையே பார்த்து உங்கள் சட்டையின் கழுத்துப்பட்டையை அதாவது காலரை துக்கிவிட்டுக் கொள்ளுங்கள்.

 


தொட்டில் மரணம் என்பது என்ன?

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து போவதை தொட்டில் மரணம் (கிரடில் டெத்) என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் நடந்தது? 

அதிகாலை நேரம்... குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டவுடனே மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த அந்தத் தாய்க்கு ஸ்விட்சை ஆன் செய்ததுபோல் சட்டென்று விழிப்பு தட்டியது. குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில்... அதுவும் சிஸேரியன் பிரசவம் என்பதால் அவரால் எழ முடியவில்லை. துணைக்கு வந்திருந்த சகோதரியை எழுப்பினார். வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த சகோதரி, மடமடவென்று குழந்தைக்குப் பால் புகட்டினார். பாலைக் குடித்த குழந்தை உறக்கத்தில் ஆழ்ந்தது. அந்த உறக்கம், குழந்தையை மீளாத துயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை என்பதை உணராமல் வெளியே இருள் பிரிந்து கொண்டிருந்தது. 

விடிந்தது... அன்றாட செக்_அப் செய்ய வந்த நர்ஸ், குழந்தையின் உயிர்மூச்சு நின்று போயிருந்ததை உணர்ந்து கொண்டார். தயக்கத்துடன் அவர் விஷயத்தைச் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தத் தாயின் உள்ளம். ‘குழந்தை நல்லாத்தானே இருந்துச்சு. நைட்டு பாலுக்கு அழுதுச்சே! நல்லா பால்கூட குடிச்சுச்சே... அதுக்குள்ள என்ன ஆச்சு?’ என்று கேவலுடன் வெடித்து அழுதார் அந்தப் பெண். 

சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம், (சுருக்கமாக ‘சிட்ஸ்’), கிரெடில் டெத் என்று விதவிதமான பெயர்களில் இதைப்பற்றி டாக்டர்கள் விளக்கிச் சொன்னாலும் அந்தத் தாய்க்கு தன் குழந்தை கிடைக்கப் போவதில்லை! 

சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி இப்படி கொடூரம் செய்யும் இந்த தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான இந்தக் கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன். 

‘‘நல்லபடியாக, ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்குக்கூட இதுபோன்ற அபாயம் நேரலாம். ஒரு விஷயம்... குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்தான் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. 

அதிலேயும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில்தான் இந்த ஆபத்து அதிகம் நிகழ்கிறதாம். குறிப்பாக, குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து நாலு மாதம் வரைதான் ஆபத்து மிக அதிகம். 

சத்தம் இல்லாமல்... வலி இல்லாமல்... எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்... குழந்தைகள் உறங்கும்போது திடுதிப்பென்று நிகழும் மரணம் இது. 

பெரும்பாலும் இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சரி, எந்த மாதிரியான குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்? 

லிஸ்ட்டில் முதலில் வருவது ப்ரீமெச்சூர் குழந்தைகள்! அடுத்து குறிப்பிட்ட அளவு இல்லாமல், எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம்... ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் நிகழ வாய்ப்பிருக்கிறது. 

இதெல்லாம் ஒரு பொதுவான கணக்குதான். இந்த பிரிவுகளில் உட்படாத குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும். 

குழந்தைக்கு இப்படியரு ஆபத்து ஏற்படுவதில் தாய்மார்கள் எந்த வகையிலாவது காரணமாகிறார்களா? 

ஆமாம்.. இருக்கிறது! அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ.. அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நிகழலாம். 

தவிர, புகை பிடிப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற பழக்கங்களை உடைய தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த ஆபத்து நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது. 

இதையும் பொதுவாகத்தான் சொல்லலாமே தவிர, இந்தக் காரணத்தினால் இந்த ஆபத்து ஏற்படும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது! மேலே குறிப்பிட்ட பழக்கங்களோ, பிரச்சினைகளோ இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் கூட, சத்தமில்லாத இந்த தொட்டில் மரணம் நிகழலாம் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை! 

சரி இப்படியரு ஆபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் எவை? 

காரணம் என்னவென்று தெரிந்தால்தான், சத்தமில்லாமல் வரும் இந்த அசுரனை முற்றிலும் தடுத்துவிட முடியுமே! எதனால் இந்த ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன... கூடவே அவற்றைப் பற்றியஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! ஆனாலும்கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆபத்தை பெரிய அளவில் தடுக்க முடியும். இதோ கீழே சொல்லப்படும் விஷயங்களை கவனமாகப் பின்பற்றுங்கள்.. 

முதலாவது, குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிருங்கள். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்கவேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30_50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்! 

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் புகைப்பிடிக்கக் கூடாது. நம்மூரில் பெண்களிடம் இந்தப் புகைப்பிடிக்கும் வழக்கம் அதிகம் இல்லைதான். ஆனால், தவிர்க்க முடியாமல் புகைப்பிடிப்பவர்களின் அருகாமையில் சில பெண்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதைத் தவிர்த்து விடுங்கள். 

கிராமப்புறங்களில் சுருட்டு போன்றவை பிடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களும் இதைத் தவிர்த்துவிட வேண்டும்! 

குழந்தைக்கு மனத்திருப்தியுடன் தாய்ப்பால் தாருங்கள். 

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. 

கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டாதீர்கள். அது பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்துங்கள்! 

பொதுக் பொதுக் என்று அமுங்காத, உறுதியான ஒரு படுக்கையில் குழந்தையைப் படுக்க வையுங்கள்! 

குழந்தை படுத்திருக்கும் அறையில் ‘நோ ஸ்மோக்கிங்’ என்று போர்டு வையுங்கள். 

குழந்தை அருகே கொசுவத்தி சுருள் ஏற்றி வைப்பதையும்கூட தவிர்க்கவும். அதன் புகையும்கூட குழந்தைக்குக் கெடுதல் விளைவிக்கும். கொசுவலை பயன்படுத்தி பழக்குங்கள். 

குடிப்பழக்கம் அல்லது போதை மருந்து பழக்கம் உடையவர்கள் யாராவது இருந்தால், கண்டிப்பாக அவர்களை குழந்தையின் அருகில் படுக்க அனுமதிக்க வேண்டாம்! 

மொத்தத்தில் உங்கள் பட்டுப் பாப்பாவை கவனமாக பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஒரு உண்மை என்ன தெரியுமா? 

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். 

காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்! இதைப் போன்ற சமயங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது. 

நம்மூர்களில் பெரும்பாலும் நாம் நம் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது! அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்! 

ஒரு விஷயத்தை நான் முக்கியமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எதிர்பாராத நிலையில் இதுபோன்ற சத்தமில்லாத ஆபத்தால் தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்... குறிப்பாக அந்தத் தாய், தன் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகி அவர்கள் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதுண்டு. இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாலும் சத்தமில்லாத, சரியாகக் காரணங்கள் தெரியாத இந்த ஆபத்து நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். 

தேவையில்லாமல் உங்களை நீங்களே வதைத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. இப்படி பாதிப்பு ஏற்பட்டவர்கள் முதலில் ஒரு நல்ல மனோநல நிபுணரிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது!’’ என்றார் டாக்டர் பாலச்சந்திரன். 


உலகத்தின் கூரை

இன்றைக்குள்ள மாணவர்கள் முதல் அவர்களது தாத்தாக்கள் வரை, உலகத்தின் கூரை என்றால், திபெத் என்று புவியியல் பாடத்தில் படித்திருப்பார்கள். கடல் மட்டத்துக்கு மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்துக்கு இந்தப் பெயர்.

 

இது மட்டுமல்ல, வட துருவம் தென் துர்வம் தவிர்த்து மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இருப்பதால், இதன் தட்ப வெப்ப நிலை, எப்போதும் சிலு சிலுவென இருக்கும். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், வானுயர நிற்கும் பனி மலைகள், ஒடையாய் உருவெடுத்து குதித்தோடி பாறையிலிருந்து கீழே விழும் நீர்விழ்ச்சிகள் என இயற்கை அண்ணையின் அழகான ஒரு அன்பளிப்பாய், கண்களுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு இதமும், உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும் நில அமைவை உடையது, திபெத்.

 

ஆனால் இன்றைக்கு சுருங்கிக்கொண்டிருக்கும் பனிமலைகள், உறைபனி நிலத்தின் உருகுதல், புல்வெளிகள் மஞ்சள் நிறமாதல், ஆறுகளின் வறட்சிமயமாக்கம் என திபெத்திலான உலக வெப்பமேறலின் பாதிப்புகளை ஆய்வு செய்வோர், பெரிதும் கவலைப்படுகின்றனர்.

 

அண்மையில் யாங்சு ஆற்றின் நதிமூலப்பகுதியிலான பனிமலைகள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக குறைந்து வருகின்றன, சுருங்கி வருகின்றன என்கிறார் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த லி யாஜியே. இவர் நான்சிங் புவியியல் மற்றும் நீர்நிலையியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளாவார்.

 

சிங்காய் திபெத் இருப்புப்பாதையில் பயணிப்பவர்களுக்கு வழியில் காணப்படும் யூசு மலை உள்ளிட்ட 15 பனிச்சிகரங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான, சிலிர்ப்பான அனுபவமாகும். ஆனால் யூசு மலையின் மேற்கே பனிமலை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழையும்போது, தற்போது 5000 மீட்டருக்கு மேல் பனிமலை இருப்பதற்கான அறிகுறியே காணமுடியவில்லை. பனி மலைக்கு பதிலாக, சிறிய ஓடைகளாக நீருற்றுகள் வழிந்தோடுவதை காணமுடிகிறது. மலையின் மறுபக்கத்தில் பனி மலையின் மிச்சம் மீதியை காணமுடிகிறதாம். ஒரு மனிமலையின் மறைதல், உருகுதல், இல்லாமல் போதலுக்கு நான்கு நிலைகள் உண்டு. இந்தக் குறிப்பிட்ட பனிமலை அதில் நான்காவது, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்பது துயரமான சேதி என்கிறார் லி யாஜியே.

 

சிங்காய் திபெத் பீடபூமி 36 ஆயிரம் பனி மலைகளுக்குச் சொந்தக்காரி என்று புகழ்பெற்று விளங்கியது. 50 ஆயிரம் சதுர கி மீ பரப்பளவிலான் ஐந்த 36 ஆயிரம் பனி மலைகள், சீனாவின் முக்கிய நதிகளுக்கும், தென்கிழக்காசியாவின் முக்கிட நதிகளுக்கும் ஊற்றுமூலமாய் அமைந்து, நீரை வாரி வழங்கிக்கொண்டுள்ளன. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில், இந்தப்பனிமலைகளின் பரப்ப் 30 விழுக்காடு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமேறலின் ஒரு தோராய மதிப்பீட்டின் படி தற்போதுள்ளதை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தால், இந்தப் பனிபிரதேசத்தின் பரப்பளவு பாதியாகிவிடும் என்று எச்சரிக்கை தொனிக்க கூறுகின்றனர் அறிவியலர்கள்.

 

உலக வெப்பமேறலின் கசப்பான, கொடுமையான முரண்களில் ஒன்று, இப்படி பனிமலைகள் வெப்பத்தால் உருகினாலும் அது நீர் தேவை மற்றும் வினியோகத்துக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றாது என்பதே. பனி மலைகள் உருகியோடும்போது அதிகமான நீர், வெப்பமான தட்பவெப்ப நிலையால் ஆவியாகி விடுகின்றன.

 

மட்டும்மல்ல வெப்ப நிலையின் அதிகரிப்பு திபெத்தின் நில அமைவில் குழப்பங்களியும் ஏற்படுத்துகிறதாம். சிங்காய் திபெத் நெடுஞ்சாலை வழியே செல்லும் பயணிகள், கடந்த சில ஆண்டுகளாக, குண்டும் குழியுமான சாலைப் பகுதிகளால் அவதியுறுகின்றனர்.

 

கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான உடாலிங் என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த சிறிய நகரத்தை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. அசுரபலம் கொண்ட ராட்சதர்கள், ராட்சத ஆயுதங்கள் கொண்டு தாக்கியது போல காட்சியளிக்கும் இந்த நெடுஞ்சாலை பகுதி, இயற்கையின் திருவிளையாடலால் அப்படி ஆனது என்றால் நம்பமுடிகிறதா. இயற்கையின் இந்த திருவிளையாடலின் பின்னணியில் மனிதனின் தன்னலத்தால் உருவான செயற்கைத்தனங்கள் அணி வகுத்துள்ளது வேறு கதை. புவியின் மேற்பரப்புக்கு கீழே உறைந்துள்ள பனிப்படலம் உருகுவதால், திடமான பனி திரவமாக, மேற்பரப்பில் போடப்பட்ட சாலை, குமுங்கிவிடுகிறது, ஆகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிரது.

 

இந்த உறைபனி உருகுதலால் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலுள்ள தாவர வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

கடந்த 40 ஆண்டுகளில் உலக வெப்பத்தாலும், நீராவியதலாலும் ஏற்பட்ட நீரின் இழப்பு இப்பகுதியிலான நீர் இருப்பை குறைத்து புல்வெளிகலை வறட்சிகாணச் செய்துள்ளது என்கிறார் சீன அறிவியல் கழகத்தின் பனி மற்றும் விளைநிலப் பிரதேச சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர் லி யுவன்ஷுவோ.

 

கடந்த 15 ஆன்டுகளில் கடல் மட்டத்திலிருந்து உய்ரமான இடங்களிலுள்ள 15 விழுக்காட்டு புல்வெளிகளும், கால் பன்குதி சதுப்பு நிலங்களும் காணாமல் போயுள்ளன என்கிறார் லி யுவன்ஷுவோ.

 

சீனா உள்ளிட்ட பல நாடுகள் உலக வெப்பமேறலை தணிவுபடுத்த, வேகம் குறைக்க முயற்சிகளிஅ மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த் அபிரச்சனையின் அளவு எவ்வளவு பெரிது என்றால், அனைத்து நாடுகளும் அனைத்து மக்களுன் இந்தப்பணியில் கைகோர்த்து செயல்படவேண்டும், அப்போதுதான் பயன் கிட்டும்.

 


ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன

உடல்அமைப்பு சில தகவல்கள்

 

 • உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.
 • ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.
 • தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.
 • நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.
 • உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும். சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை நமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.
 • மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
 • நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்


குண்டாயிருக்கீங்களா ? நீங்க அறிவாளிதான் போல !!!


உங்க உடம்பு ரொம்ப குண்டா இருக்கா ?, நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !! என்கிறது கனடா நாட்டு ஆராய்ச்சி ஒன்று. மூளையைக் கசக்கி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமனாக வாய்ப்பு இருக்கிறது என்பதே அந்த ஆராய்ச்சியின் மையம்.

 

அதாவது நல்ல அறிவு சார்ந்த வேலைகளைச் செய்யும் போது உடலுக்கு நிறைய கலோரி சக்தி தேவைப்படுகிறதாம். எனவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய அதிகம் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகுமாம். அதிகம் சாப்பிட்டால் குண்டாவோம் என்பதைத் தனியே சொல்லவும் வேண்டுமா ?

 

இவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் பல்வேறு தேர்வுகளை வைத்து ஒவ்வொரு தேர்வுக்கும் எவ்வளவு கலோரி உடலுக்குத் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கெடுத்திருக்கிறார்கள். குறைவாக மூளையைப் பயன்படுத்த வேண்டிய வேலை செய்தவர்களுக்கு மிகவும் குறைவாகவே சக்தி தேவைப்பட்டிருக்கிறது.

 

தேவைப்படும் கலோரி, செய்யும் வேலையைப் பொறுத்து மூன்று கலோரியோ முன்னூறு கலோரியோ என ஒழுங்கில்லாமல் அதிகரிக்குமாம். இப்படி அதிகரிக்கும் போது உடலுக்கு ஏதாவது சாப்பிட வேண்டி வருகிறது, அது உடலில் சேர்கிறது.

 

இவர்களுக்கு குருதிச் சோதனையும் நிகழ்த்தப்பட்டது. தேர்வுக்கு முன் குருதி சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். பிறகு தேர்வின்போதும் சோதனை செய்திருக்கிறார்கள். முதலில் அமைதியாய் இருந்த குளுகோஸ் அளவும் இன்சுலின் அளவும் மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய அறிவு சார் வேலை வந்தபோது எக்குத் தப்பாக எகிறியிருக்கிறது.

 

இது உடலுக்கு அதிக உணவு வேண்டுமெனக் கேட்கும். உட்கார்ந்து மூளையைக் கசக்கி வேலை செய்பவர்கள் பொதுவாகவே உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். எனவே இவர்கள் அதிகம் உண்டு, குறைவாய் உடற்பயிற்சி செய்து அதிக எடையுடன் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.

 

இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவைச் சொல்லியிருக்கிறது கனடாவின் கியூபக் நகரில் அமைந்துள்ள லாவல் பல்கலைக்கழகம்.

 

இனிமேல் யாராவது, “என்னப்பா ரொம்ப குண்டாயிட்டே, தொப்பை வேற யானைக் குட்டியாயிடுச்சு” என்று கிண்டலடித்தால்,

 

“என்னப்பா… உன்னை மாதிரியா, எனக்கு மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டியிருக்கு இல்லையா” என சிரித்துக் கொண்டே சொல்லி விடுங்கள்.

 


இன்டர்நெட் டவுண் ஆனால் என்ன செய்யலாம்

இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் டவுண் ஆவது என்பது நமக்கு தும்மல் வருவது போல.தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காக கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம்.ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்;மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.பொதுவாக இது போல கட் ஆனால்,உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்.

நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம்.கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இவனை மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம்.இருப்பினும் கீழ்க்காணும் விசயங்களையும் செய்து பார்க்கலாமே!
 1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னாள்,உங்கள் மோடத் தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள்.ஒன்றுமில்லை,அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் களைத்து மீண்டும் ஆன் செய்திடுங்கள்.பின் உங்கள் ரூட்டரை ஆன் செய்ிடுங்கள்.
 2. உங்களுக்கு ரூட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திடுங்கள்.அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.
 3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்து விட்டது என்று பொருள்.அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்விஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள்.அதற்கு முன் அவரிடம் எது போன்ற குறை சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 4. புதிய பிரவுசர் விண்டோ ஓன்று திறந்து கொள்ளுங்கள்.பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள்.தினமலர் வெப்சைட் கிடைத்தால்,நல்லது.இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.
 5. ஸ்டார்ட் ரன் அழுத்தி பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும்.உங்கள் திரையில் கருப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும்.அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig/all என டைப் செய்திடுங்கள்.உங்களுடைய default gateway மற்றும் DNS Servers அறிந்து கொள்ளுங்கள்.பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள்.பதில் கிடைக்கிறதா?
 6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சனை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல்.உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கு எங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும்.ஒரு கட்டளை.traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியை தர வேண்டும்.பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்து விட்டு பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.நிறுவனத்தின் சர்வரில் பிரச்சனை இருந்தால் அவர்கள் உடனே கவனித்துச் சரி செய்வார்கள்.கடல் நீரைச் சூடாக்கும் மனிதன்

உடம்பு சூடானால் குளிர்ந்த நீரில் குளித்து உடம்புச் சூட்டைத் தணிக்கிறோம். ஆனால் தண்ணீரே சூடானால் என்ன செய்வது உலகத்தில் உள்ள எல்லாக் கடல்களிலும் தண்ணீர் சூடாகி வருகின்றது. இதற்கு மனிதர்களின் நடவடிக்கையே காரணம் என்று அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிவந்துள்ளது. கலிபோஃர்னியாவிலுள்ள ஸ்கிரிப்ஸ் கடல் வளக் கழகத்தைச் சேர்ந்த டிம் பார்னெட் என்ற அறிவியல் அறிஞர் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, கணிணி மாதிரிகளையும் நடைமுறை உலகில் கிடைத்த தகவல்களையும் வைத்து ஆராய்ந்தததில் பசுமைஇல்ல வாயுவினால் உருவாகும் வெப்பம். கடலுக்குள்ளும் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கடல் வெப்பம் அதிகரிப்பு மனிதர்களின் நடவடிக்கைகளால் தான் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு மனிதனால் கடல் நீர் வெப்பமடைந்து வருவதை அவர்கள் கணிணி மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர்.

 

கடந் நீரின் வெப்பநிலை மாற்றத்திற்கு இயற்கையான காலநிலை மாற்றம் காரணமா அல்லது எரிமலை வெடிப்பு, சூரிய சக்தி போன்ற புறசக்திகள் காரணமா என்று விளக்கம் காண முயற்சிக்கப்பட்டது. ஆனால் கடல் நீரின் பரப்பில் தெரிம்பும் வெப்பநிலை இசைந்ததாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. தற்போது புவிவெப்பமடைவதற்கு இவை சான்றுகளாகும். கடல் வெப்பம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வெற்றிகரமாக ஆராய முடியும் என்கிறார் டிம் பார்னெட்.

 

கடல் வெப்பத்தின் பாதிப்பு புறவெளியிலும் இந்த நிலத்திலும் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். தென் அமெரிக்காவின் ஆன்டெஸ் மலையிலும் மேற்குச் சீன மலைகளிலும் பனியல்கள் உருகி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இடர்கள் ஏற்படக் கூடும். கோடைகாலத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்று பார்னெட் கூறினார்.

 

கடல் நீர் வெப்பமடைவதற்கான மனித நடவடிக்கைகள் யாவை என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதை விட இந்த விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும் ென்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கடல் நீர் வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தீவிரமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும்.

 

இதற்கிடையில் சைபீரியாவில் 125 ஏரிகள் காணாமல் போய் விட்டன என்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சைபீரியாவில் உள்ள 10,000க்கும் அதிகமான ஏரிகள் பற்றிய செயற்கைக் கோள் படங்களை அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.1973ல் 10.882 ஏரிகள் இருந்தன என்றும் அவை 1998ல் 9712 ஆகக் குறைந்து விட்டன என்றும் இந்த ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. மொத்தம் 125 ஏரிகளைக் காண வில்லை என்றும் எஞ்சிய ஏரிகளின் பரப்பும் சுருங்கி வருவதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

காணாமற்போன ஏரிகளைக் கண்டு பிடித்துத் தருவோருக்கு பரிசு என்று அறிவிக்கலாமா? முடியாது. ஏனென்றால் புவி வெப்பமடைவதால் உண்டாகும் விளைவு சைபீரியக் குளிரின் வேகத்தையும் குறைத்து விட்டது. சைபீரியா என்றென்றும் பனி உறைந்து கிடக்கும் நிலப் பகுதியாகும். அங்கேயே புவிவெப்பம் பரவி உறைந்த ஏரிகள் உருகி காணாம்ல போய்விட்டன. இவ்வாறு ஏரி உருகியதால் வழிந்தோடும் நீர் பூமிக்குள் ஊடுருவ முடியாம்ல பனிக் கட்டி மண் தடுக்கிறது இதனால் நிலத்தடி நீர்வளம் குறைந்து விட்டது. இப்படியே நோனால் குளிர் பிரதேசமான சைபீரியாவில் கூட தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடலாம். அப்படி ஒரு செய்தி ஒலிபரப்பானால் ஆச்சரியப்படாதீர்கள்


பெண்ணே உன்கதி இதுதானா? மாதவிடாய் நிற்றலை முன்நிறுத்தி


அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமாக நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூறமுடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகிவிட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோhயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.
'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்

 உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் ஒக்ஸ்போட்டிலுள்ள ஜோன் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு டொக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம் இவருக்கு முதன்முறையாக வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 

அச்செயற்கை இதயத்துடன் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஹவ்டன். 

மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஹவ்டனால் தொடர்ந்து ஒரு மைல் தூரத்திற்கு அதிகமாக நடக்க முடிந்ததுடன் தனது அறக்கட்டளை நிறுவனத்தில் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும் முடிந்தது. 

அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைப் பயணத்தில் பங்கேற்றதுடன் ஆல்ப்ஸ் மலையிலும் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இரு புத்தகங்களையும் எழுதியதுடன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியும் திரட்டினார். 

செயற்கை இதயத்துக்கான மின்கலம் அதன் சேமிப்பு சக்தி குறையும் போதெல்லாம் மாற்றவேண்டி நேரிடும் அதன்போது மருத்துவமனையில் அவரிற்கு மாற்று மின்கலம் பொருத்தப்படும். 

கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 வீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டதால் மின்கலம் மாற்றும் போதெல்லாம் அவர் இயல்பாகவே தனது வழமையான இதயத்துடிப்புடன் இருந்துள்ளார். 

செயற்கை இதயத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த ஹவ்டனின் 68 ஆவது வயதில் அவரது உடல் உறுப்புகள் பல செயலிழக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவரது செயற்கை இதயம் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றபடியால் மின்கலத்தை மருத்துவர்கள் நிறுத்தினால்தான் அவர் இறந்ததாக அறிவிக்க முடியும். 

ஹவ்டனின் மனைவி டியானோ, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால் 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார்.


பிணத்தை பேசவைக்க முடியுமா? விஞ்ஞானிகள் நடத்தும் பகீர் ஆராய்ச்சி

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு 
மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்

இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்...ப வெரி சிம்பிள்! "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் "அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது 

தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள். 

சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்... என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர். 

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், "எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.

"கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்... பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

"அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

87வயசு வரை வாழலாம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகமக்கள் தொகை ஆய்வு அமைப்பு 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளது.

இது பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2050-ல் உலக மக்கள் தொகை 920 கோடியாக இருக்கும். அமெரிக்கர்களின் இப்போதைய சராசரி வாழ்நாள் 77.5 ஆண்டுகள் ஆகும். இந்தியர்களின் வாழ்க்கை காலம் 64.7 ஆண்டுகள் முதல் 75.5 ஆண்டுகள் வரை.

2050 ஆண்டு வாக்கில் இந்தியர்களின் வாழ்நாள் இன்னும் 11 ஆண்டுகள் அதிகரிக்கும்.

இந்தியாவில் இப்போது 80 வயதை தாண்டியவர்கள் 78 லட்சமாகவும், 65 வயதை தாண்டியவர்கள் 7 கோடி பேரும், 60 வயதை தாண்டியவர்கள் 33 கோடியாகவும் உள்ளனர். இவர்கள் முறையே வருகிற 2050 ஆண்டில் 5 கோடியே 20 லட்சம் பேர், 24 கோடி பேர், 85 கோடி பேராக இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes