கோதுமை, ஓட்சில் புதைந்திருக்கும் மர்ம நோய்!


ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு, அடுத்தவருக்கு ஒத்துக் கொள்ளாது; அதுவே நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இப்படி புதையுண்டிருக்கும் கோளாறுகள் ஏராளம். படிப்படியாக

 இப்போது தான் நிபுணர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படி ஒரு புதையுண்டிருக்கும் கோளாறு தான்

"செலியாக்' நோய்.


கோதுமை, ஓட்ஸ், பார்லி, கம்பு போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவுகள் கூட சிலருக்கு ஒத்துக்கொள்ளாது; அடிக்கடி வாந்தி, பேதி வரும்; மலச் சிக்கல்லில் ஆரம்பித்து, மவுத் அல்சர் முதல், சிறுகுடல் பாதிப்பு வரை பல தொந்தரவுகளை உருவாக்கும். இப்படி பல கோளாறுகளை தந்து, கடைசியில் உயிருக்கே ஆபத்து தரும் அளவுக்கு விசுவரூபம் எடுப்பது தான் "செலியாக்' நோய். குழந்தைகளுக்கு டைப் - 1 சர்க்கரை வியாதியையும் ஏற்படுத்துவது தான் இது தான் என்றும் சமீபத்தில் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


வருவது ஏன்?


கோதுமை போன்ற தானியங்களில், க்ளூடோன் என்ற ஒரு வகை ப்ரோட்டீன் உள்ளது. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தானியங்களில் கஞ்சி போட்டு குடித்தாலும், மற்ற உணவு வகைகளாக செய்து சாப்பிட்டாலும் உடனே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு காரணம், "செலியாக்' கோளாறு தான் என்று டாக்டர்களால் இதுவரை கண்டுபிடிக்க முடிந்ததில்லை. நடுத்தர வயதில் ஆரம்பித்தாலும், அறுபது வயதை தாண்டும் போதும் தான் விசுவரூபம் எடுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


வந்து விட்டால்


இந்த பாதிப்பு வந்தால், சிறுகுடல் கடுமையாக பாதிக்கப்படும். அதன் சுவர்கள் அரிக்கப்படும்; அதனால், உணவு ஜீரணிப்பதும், வைட்டமின், கனிமச்சத்துக்களை பிரிப்பதும் இயலாமல் போய்விடும். அதனால், உடலில் எதிர்ப்புசக்தி அறவே அழிந்து பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.


கல்லீரல் பாதிக்கப்படும்; கீல்வாத மூட்டு நோய் வரும்; தைராய்டு கேன்சர் போன்றவை வரும். இவற்றுக்கு தான் டாக்டர் சிகிச்சை தருவாரே ஒழிய, தானிய உணவுகளால் தான் வந்தது என்பதையோ, "செலியாக்' என்பதையோ கண்டறிவது மிகவும் அரிது.


அறிகுறிகள் என்ன?


* ஜீரண சக்தி குறையும். கோதுமை உட்பட தானிய வகை உணவுகள் சாப்பிட்டால், ஏற்றுக் கொள்ளாது.


* வாயில் அல்சர் ஏற்படும்.


* லாக்டோஸ் ஏற்றுக்கொள்ளாமல் போவதால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.


* உடல் உயரம் குறையும். மூட்டு வலி ஏற்படும்; உடல் எடையும் குறையும்.


* ரத்த சோகை ஏற்படும்; வயிற் றுக்கோளாறும் அடிக்கடி வரும்.


* மேற்சொன்ன அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல், லேசாக இருந்தாலும், தொடர்ந்து இருக்குமானால் செலியாக் தான்.


தடுக்க முடியாதா?


எந்த ஒரு கோளாறும் வராமல் தடுக்க வழியில்லாமல் இல்லை. அப்படி இதற்கும் தவிர்ப்பு வழிகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில், க்ளூடோன் ப்ரோட் டீன் இல்லாமல் உள்ள தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கெட்களில் , இது க்ளூட்டோன் ப்ரோட்டீன் இல்லாதது என்றே அச்சிட்டு விற்பனை செய்கின்றனர்.


ஆனால், இந்தியாவில் இந்த வசதி இல்லை. அதனால் தான் ஓசைப்படாமல், சமீப காலத்தில் பலருக்கு இந்த கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.


டைப் - 1 டயபடீஸ்


குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கு டைப் - 1 டயபடீஸ் என்று பெயர். இதற்கும், "செலியாக்' கோளாறுக்கும் தொடர்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்லீரலில் உள்ள இன்சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கும் திறனை இழக்கிறது; அதனால் குழந்தைகளுக்கு இந்த நோய் வருகிறது. "குழந்தைப்பருவத்தில் செலியாக் நோய் தாக்குவதால், இது ஒரு மரபு நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உணவு மூலமாகத்தான் வருகிறதா, பரம்பரையாக இது தொடரும் பாதிப்பா என்பதை இன்னும் உறுதி செய்ய இயலவில்லை' என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


உணவில் தான் எல்லாம்


ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போலத்தான் செலியாக் கோளா றும். அதனால், உணவில் மாற்றத் தை கொண்டு வந்தாலே, அது வராமல் தவிர்க்க முடியும். எப்படி கொழுப்பு உணவுகளை ரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்கின்றனரோ அதுபோல, க்ளூட்டோன் ப்ரோட்டீன் உள்ள கோதுமை உட்பட தானியங்களை தவிர்க்க வேண்டும்.


மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் க்ளூட் டோன் ப்ரோட்டீன் இல்லாத தானிய வகை உணவு பாக்கெட் களை விற்பனை செய்ய வேண் டிய நிலை எதிர்காலத்தில் வந்தால், இந்த நோய் பாதிப்பு பரவுவதை தடுக்க முடியும் என்பதும் நிபுணர்கள் கருத்து.


தெரியாமலேயே...


செலியாக் நோய் தான் என்று தெரியாமலேயே, வாந்தி பேதிக் கும், ரத்த சோகைக்கும் மற்ற அறிகுறி பாதிப்புகளுக்கும் சிகிச்சை பெறுகின்றனர். டாக்டர்களும் இப்போது தான் விழித்துக் கொண் டுள்ளனர். செலியாக் நோயை கண்டறிய துல்லியமான புதிய ரத்த பரிசோதனைகள் வந்துள்ளன. இதனால், இதன் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes