பயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது

வெற்றி என்பது மட்டும் உறுதி. ஆனால் அது எப்படி? எங்கே என்பதுதான் சஸ்பென்ஸ்'' என்கிறார் ஒரே வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவையே கவனிக்க வைத்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. பிஸியான தருணங்களுக்கிடையே நம்மிடம் பேசுகிறார்.

"நாடோடிகள்' வெற்றி தந்த மாற்றம் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது உறுதியானது. ஆனால், அது எப்படி? எங்கே? என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் மீதான சுவாரஸ்யம். அது போலதான் வெற்றியும். இந்த வெற்றி எப்போதும் போலதான் என்னை வைத்திருக்கிறது. வெற்றியை இன்னும் எனக்குள் கொண்டு வரவில்லை. சினிமாவில் 16 ஆண்டுகள் பட்ட கஷ்டம், காயங்கள் அது தந்த வலிகள் இன்னும் ஆறாமல்தான் இருக்கின்றன. "நாடோடிகள்' வெற்றி அந்தக் காயங்களின் வலிகளுக்குக் கொஞ்சம் களிம்பு தடவிவிட்டிருக்கிறது அவ்வளவுதான். இந்த வெற்றி என் பழைய தோல்விகளைப் பற்றியும் பேச வைத்திருக்கிறது. ஒரு மனிதன் ஜெயிக்கும் போது அவன் தோல்விகள் பேசப்படுவது ஒன்றும் புதிதல்ல. என் தோல்விகள் பேசப்படுவதில் எனக்குக் கொஞ்சம் சந்தோஷம். தோல்விகளுக்காகத் தனியாக அழுத காலங்களை இந்த வெற்றி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தோல்வியின் மடியில் கலங்கிய இரவுகளுக்குக் காலம் இந்த 60 நாள்களாகத்தான் விடியலைத் தந்திருந்திருக்கிறது.

நாடோடிகள் உருவான விதம் பற்றி?

சினிமாவுக்குள் நுழையும் போதே இரண்டு கதைகளைக் கையில் வைத்திருந்தேன். ஒன்று "உன்னைச் சரணடைந்தேன்', மற்றொன்றுதான் "நாடோடிகள்'. முதலில் எதை படமாக்கலாம் என யோசித்த போது "உன்னை சரணடைந்தேன்' கதைதான் தேர்வானது. "நாடோடிகள்' கதையை 2004-ம் ஆண்டு எழுதினேன். அதில் கொஞ்சம் எங்கள் ஊரில் நடந்த உண்மை சம்பவத்தையும் தடவி விட்டேன்.

உருவம் கிடைத்து விட்டது. இதுவரை 50 பேரிடம் சொல்லியிருப்பேன். யாருமே படமாக்க முன் வரவில்லை. மைக்கேல் ராயப்பன்தான் தயாரிக்க முன் வந்தார். "நாடோடிகள்' படம் சினிமாவில் இன்னும் தெரியாத பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து இருக்கிறது.

இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நாடோடிகளை இயக்கும் முடிவு ஏன்?

சினிமாவைத் தவிர எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதை இங்கே திருப்தியாக செய்து விட்டேன். மற்றவர்களும் இதை பார்த்துவிட்டு திருப்தி அடைகிறார்களா எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. இறங்கிவிட்டேன். "நாடோடிகள்' படத்தில் நல்ல ஒரு கருத்து இருந்தது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் கமர்ஷியலாக சொன்னால் ஜெயிக்கலாம் என்பதுதான் என் தோல்விகள் தந்த அனுபவம். இப்போதைக்கு தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமே இயக்குகிறேன். இந்தியில் இயக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டேன். காரணம், ரீமேக்குகளை முடித்து விட்டு நண்பன் சசிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதன் பின் நான் இயக்கும் படத்தில் அவர் ஹீரோவாக நடித்து தயாரிக்கிறார். டி.வி. சீரியல்களுக்கும் கதை எழுத சிலர் கேட்டு இருக்கிறார்கள்.

சீரியல்களில் இனி உங்கள் பங்கு?

என்னைப் பொறுத்தவரை சீரியலில் இருந்துதான் நான் சினிமாவைக் கற்று கொண்டேன். சென்னை வந்த என்னை அரவணைத்தது சீரியல்தான். சீரியலும் சினிமாவும் எனக்கு ஒன்றுதான். சீரியல்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக ஒரு கதையும் வைத்திருக்கிறேன். ஆனால் தயாரிக்கத் தயங்குகிறார்கள். சீரியல்களைச் சுற்றி நாம் போட்ட கோடுகள்தான் அதற்கு காரணம்.

பெரிய பட்ஜெட்டில் கதை ஒன்று வைத்திருப்பதாக செய்திகள் வருகிறதே?

உண்மைதான். ரொம்ப நாளாகவே அந்த கதை என்னிடம் இருக்கிறது. அது ஒரு வரலாற்றுப் படம். வரலாற்றுக் கதையாக இருந்தாலும் கமர்ஷியல் கதையாக இருப்பதுதான் அதன் சிறப்பு. இன்னும் கதையை யாரிடமும் சொல்லவில்லை. விஜய் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும். இதற்காக விரைவில் அவர்களை சந்திப்பேன். இதன் பட்ஜெட் மிகப் பெரியது. ஷூட்டிங் முடிக்கவே சில வருடங்கள் ஆகும்


கமல் பயோகிராபி

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவை "உலக நாயகன் கமல் ஐம்பது' என்ற பெயரில் விழாவாக நடத்துகிறது விஜய் டி.வி. முதல் கட்டமாக "கமல் எக்ஸ்பிரஸ்' என்ற பேருந்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பேருந்தில் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கை கண்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

இதை தொடர்ந்து "உலக நாயகனின் பயோகிராபி' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கமல்ஹாசனின் திரைப்பட அனுபவங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 16 எபிசோடுகளாக இது ஒளிப்பரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் கமலின் திரை உலகத்தோடு தொடர்புடையவர்கள், அவருடன் சேர்ந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும், சுவராஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவின் முக்கியமான இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது


செயல் இழந்தது சந்திரயான்!- விஞ்ஞானிகள் அதிர்ச்சி

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவிக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது "சந்திரயான்-1' செயற்கைக்கோள்.

இதனால் இந்திய விஞ்ஞானிகள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-1 செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலை அனுப்ப முடியவில்லை. செயற்கைக்கோளில் இருந்தும் எந்த தகவல்களும் புகைப்படமும் கிடைக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்த செயற்கைக்கோள் செயல் இழந்த பேச முடியாத ஊமைப் பொருளாகி விட்டது. இனிமேலும் சந்திரயான் திட்டங்களை தொடர முடியாது என்றார்.

இதற்கிடையே இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், "சந்திரயான் செயற்கைக்கோளில் இருந்து பெங்களூர் அருகே உள்ள பையலாலு விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை தகவல்கள் கிடைத்து வந்தன. அதன் பிறகு 1.30 மணியளவில் சந்திரயானுடனான ரேடியோ தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

சந்திரயானுக்கும் புவி கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு திடீரென துண்டித்து போனது. தொடர்பு இழந்து போனதற்கான காரணங்கள், கோளாறுகள் குறித்து பிறகு தெரியவரும்' என்றார்.
அண்ணாதுரை பேட்டி... சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம். அண்ணாதுரை கூறியது:

இந்தியாவின் நிலவுத் திட்டம் இத்துடன் முடிந்துவிட்டது. செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்துவிட்டோம். ஆனாலும் சந்திரயான், தொழில்நுட்ப ரீதியில் தனது பணிகளை நூறு சதவிகிதம் கச்சிதமாக முடித்தது.

அதேபோல அறிவியல் ரீதியிலும் தனது பணிகளை 95 சதவீதம் முடித்தது.

செயற்கைக்கோள் செயல் இழந்ததற்கான காரணத்தையும் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்வோம் என்றார் அவர்.

முன்னதாக ஆளில்லாத சந்திரயான்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நிலவுக்கு வெற்றிகரமாக ஏவியது


சந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு

நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை 'சந்திராயன்-1' திட்ட இயக்குநர் எம்.அண்ணாதுரை பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

எனினும், தொழில்நுட்ப ரீதியாக சந்திராயன் விண்கலம் 100 சதவீதம் முழுமையாக செயல்பட்டுள்ளது என்றும், தனது பணிகளில் 90 முதல் 95 சதவீதம் அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2008 அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலத்தின் பணிக்காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக அதன் பணி முடிவடைந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீதியில் விளையாடும் விதி

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது.

2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.

இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.

நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.

வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?


நிர்வாகத்தில் கலந்துவிட்ட ஊழல்

இந்தியாவின் உயர் தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு இந்தப் புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில் ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சிபிஐ பிடியில் சிக்கினார். கடந்த சில காலமாகவே செய்தித்தாள்களைப் புரட்டினால், ஊழல் புகாரில் சிக்கிக் கொண்ட பெருந் தலைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன.

தேசத்தின் வளத்தை ஒருகூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.

இது போதாதென்று, அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளும் நகைச்சுவைச் செய்திகளும் பத்திரிகைகளில் பக்கம் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்கிற கவலையைப் போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிதான். ஆனால், இந்த மழையால் வீடுகள் நீரில் மூழ்குவதையும், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையே. மழை பெய்யாவிட்டால் பிரச்னை; பெய்தால் பெரிய பிரச்னை. இதுபோன்ற செய்திகள் மட்டும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்திருப்பது, நல்ல விஷயங்களே நாட்டில் நடக்கவில்லையா என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஊழல்வாதிகள் பிடிபடுவதற்கும், மழைநீரில் வீடுகள் மூழ்குவதற்கும், மருத்துவ வசதிகள் தரமற்றுப் போனதற்கும் தொடர்பில்லை என்று நினைத்தால் அது தவறு. இந்த மாதிரியான செய்திகள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நாட்டின் புதிய விதிமுறைகளாக மாறிவிட்டன என்பதுதான் இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லும் சேதி.

ஏஐசிடிஇ தலைவரின் ஊழல் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஏஐசிடிஇ. தொழில்நுட்பக் கல்வியை நாடு முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பின் மரியாதை கட்டெறும்பு ஊர்ந்த சுவராகத் தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துகளை வாரி வழங்கியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே இந்த அமைப்பு எவ்வளவு "நேர்மையாக' நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறுவதுதான் லேட்டஸ்ட் ஜோக். அரசியல்வாதிகளும் பெரிய பதவியில் இருப்போரும் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். நன்கொடை வசூலிக்கக் கூடாது என இவர்களுக்கு யார் உத்தரவு போடுவது? இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பும் ஊழலின் கூடாரமாகிப் போய்விட்டால் குறைகளை யாரிடம்தான் போய்க் கூறுவது?

அடுத்தது பூட்டா சிங் கேஸ். எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் இவர். ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக இவரது மகன் பிடிபட்டார். இதற்காகப் பூட்டா சிங் கொஞ்சமும் பதறவில்லை. தம்மீது ஊழல் பழி சுமத்துவது இது முதல்முறையல்ல என்றார். இது தமக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்றும் கூறினார். இன்னும் எத்தனை ஊழல் புகார்களில் சிக்கினாலும் இதையேதான் இவர் திரும்பத் திரும்பக் கூறப்போகிறார்.

அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல். எல்லாக் காலகட்டத்திலும் இது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. முகலாயர் காலத்திலேயேகூட கடைநிலை நிர்வாகத்தில் ஊழல் இருந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஊழல் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஊழல் என்பது ஒரு விதியாக இருக்கவில்லை. இப்போது எல்லா நிலையிலும் ஊழல் ஓர் எழுதப்படாத சட்டமாகவே மாறியிருக்கிறது. இது தெரியாத அல்லது மதித்து நடக்காத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டாள்களாகவே கருதப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சில ஆண்டுகள்வரை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் மிக அடிப்படையான தேவை. மிக மோசமான ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்கூட நோய்த் தடுப்பு மருந்துத் திட்டங்களை நூறு சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலோ வெறும் 50 சதவீதம் பேருக்குத்தான் நோய்த்தடுப்பு மருந்துகள் சென்றடைகின்றன.

60 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் தோல்வி இது. இந்த விஷயத்துக்கு ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தராமல் போனது அதைவிட வேதனை. பில்கேட்ஸ் இதைச் சொன்னார் என்பதால்தான் இந்த அளவுக்காவது இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.

கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பவைதான் இதன் முக்கிய நோக்கங்கள்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் "கடுமையான நடவடிக்கைகள்' போல இந்தச் சட்டமும் அமலாக்கப்பட்டால், நோக்கங்கள் எதுவும் நிறைவேறாது.

உண்மையில், விடுதலையடைந்த புதிதில் உலக அளவில் கல்வி கற்கும் உரிமையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியதே இந்தியாதான். சொந்த நாட்டுக்குள் அதைக் கொண்டுவருவதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

நாடு முன்னேற வேண்டுமானால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வளர்ச்சியில் தேக்கம், வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுச் சுகாதாரம், தொடக்கக் கல்வி, ஊழல் ஒழிப்பு, கட்டமைப்பு போன்றவற்றில் கவனத்தைத் திருப்ப வேண்டும். விடுதலையடைந்தபோதே இவற்றுக்குத்தான் அரசுகள் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. இப்போதாவது தொடங்க வேண்டும். பெரிய தாமதமில்லை


மதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை திறப்பு விழா, மதுரையில் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

மதுரை ராஜா முத்தையா மன்றம் முன் உள்ள கக்கன் சிலை அருகே எட்டரை அடி உயரத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, சென்னை, தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நடிகர் சிவாஜி கணேசனுக்கு மதுரையில் வெண்கலச் சிலை அமைக்கப்படுகிறது. சிலை அமைப்புக் குழுத் தலைவரும், சென்னை கமலா திரையரங்கு உரிமையாளருமான வி.என். சிதம்பரம் தலைமையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் கமலஹாசன் தலைமை வகிக்கிறார்.

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி சிலையைத் திறந்துவைக்கிறார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நெப்போலியன், தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, ஆ. தமிழரசி, நடிகை மனோரமா, நடிகர்கள் வடிவேலு, விஜயகுமார், சசிகுமார், இயக்குநர் பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நடிகர் பிரபு நன்றி கூறுகிறார் என்றார்.

முன்னதாக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில், வி.என். சிதம்பரம், மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன், காங்கிரஸ் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் பி.காந்தி, சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


ராவணனின் ரசிகன் -கமல்

ராவணனின் ரசிகன் நான் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகை ஷோபனா நடத்திய நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஷமாரோ என்ற நிறுவனம் குறுந்தகடாக வெளியீட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியது:

""நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.

சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் மாயா நரகாசுரனையும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்.

பயிற்சி இல்லாதவன் நடனத்தைப் பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும் பணிவும் என்னிடம் இருக்கிறது.

தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் நன்றாக பாராட்டுவோம். மண்ணுக்குள் இருந்தாலும் வைரம் வைரம்தான் ஆனால் அது வெளிவந்தால்தான் அதற்கு மதிப்பு. வைரத்தைத் தோண்டி எடுப்பது போல திறமைகளைத் தோண்டி எடுக்க வேண்டும்'' என்றார் கமல்ஹாசன்.

விழாவில் ஷமாரோ நிறுவன இயக்குநர் அதுல்மாரு, நடிகர் பிரபு, நல்லி குப்புசாமி, கமலா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


கமல் எக்ஸ்பிரஸ்

நடிகர் கமல்ஹாசன் திரை உலகுக்கு வந்த 50-வது வருடத்தை விஜய் டி.வி. "உலக நாயகன் கமல் ஐம்பது' என்ற பெயரில் பெரும் விழாவாக எடுக்கிறது.

விழாவின் முதல் கட்டமாக உருவாக்கப்பட்ட சிறப்பு பேருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வர உள்ளது. "கமல் எக்ஸ்பிரஸ்' என்ற இந்த பேருந்தில் கமல்ஹாசனின் அரிதான புகைப்படங்கள், சினிமா வாழ்வின் அவதாரங்கள், சினிமா வாழ்க்கை குறித்த செய்திகள் கண்காட்சிகளாக இடம் பெற்றிருக்கும்.

கடந்த திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற "கமல் எக்ஸ்பிரஸ்' துவக்க விழாவில் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன், ஏவி.எம்.சரவணன், கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, கௌதமி மகள் சுப்புலெட்சுமி, விஜய் டி.வி.யின் பொது மேலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் (படம்).

சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, பரமக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, பெங்களூர், திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் இந்த பேருந்து வலம் வர உள்ளது.

இந்த பேருந்தின் வருகையின் போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தின் உள்ளே உள்ள கமல் குறித்த கண்காட்சியை பார்க்கலாம். அத்துடன் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட பேனரில் தங்களின் வாழ்த்துகளை கமல்ஹாசனுக்கு தெரிவிக்கலாம்


எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள:

வெள்ளை எள் - 4 கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 6
நெய் - சிறிதளவு
செய்முறை
எள்ளு உருண்டை
செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்கவும் ).

அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முழு எள்ளிள் ( பார்ப்பதர்க்கு அழகாக இருக்கும் ) ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும்.

பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நமக்கு பிடித்த வடிவில் உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.


கொழுக்கட்டை டிப்ஸ்

விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வதற்கு பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு நைசாக அரைத்துக் கொஞ்சம் பால் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டியில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கரைத்த மாவை விட்டு அடுப்பில் வைத்து பத்து நிமிடம் நன்றாக மூடி வைத்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து நன்றாகப் பிசைந்து உருட்டித் தேவையான பூர்ணம் வைத்துக் கொழுக்கட்டை செய்ய வேண்டும்.

கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

கடலைப் பூரணம் அரைக்கும்போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதைச் சுருள கிளறிய பிறகே, ஏலப்பொடி, துண்டுகளாக்கிய தேங்காய், கீற்று போட்டு கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.


தமிழ் விக்கிபீடியா

கலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகர வரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன.

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணைய தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (ரண்ந்ண்) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு ""விரைவு'' என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (ரண்ந்ண்)+ என்சைக்கிளோபீடியா (உய்ஸ்ரீஹ்ப்ர்ல்ங்க்ண்ஹ) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா (ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ) என்ற சொல் உருவானது.

விக்கிபீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001-ம் ஆண்டு ஜனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. விக்கிபீடியா தொழில்நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது. இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கரும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியைத் தொடங்கினர். ஜிம்மி வேல்ஸ் முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிபீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்க வேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கி கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளிவிவரங்களை இணைக்கலாம்.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ் விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார். இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிபீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிபீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது.

தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.

கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.


டாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே கொடுத்த மருந்தே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும்ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அதில், டாக்டர் முர்ரே கொடுத்த மருந்துதான் மைக்கேல் ஜாக்சனின் சாவுக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது


வெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்

பஹாமாஸ் நாட்டின் நஸôவ் நகரில் நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டியில் வெனிசுலாவே மீண்டும் மகுடத்தை வென்றது.

வெனிசுலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்றார். அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, அவர் மிஸ் யூனிவர்ஸ் என முடிசூட்டப்பட்டார்.

இரண்டாவது இடத்தை டொமினிக்கன் குடியரசு அழகி அடா ஆஜ்மீ டி லா குரூஸ் பிடித்தார்.

மிஸ் யூனிவர்ஸ் போட்டி நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதனுடன் தலைசிறந்த இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அழகிப்போட்டி தேர்வுக் குழுவில் நடிகர் டீன் கேயன், மாடல் அழகி வலேரியா மாஸô ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

புகைப்படத்துக்கு ஏற்ற முகபாவம் உடைய அழகி என்ற பட்டம் தாய்லாந்து அழகி சுட்டிமா டியூராங்தேஜுக்கு கிடைத்தது.

2008ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் வெனிசுலாவே வென்றது. இந்த போட்டி வியத்நாம் நாட்டின் நா திராங் நகரில் 2008ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி நடைபெற்றது.

அப்போது அப்போதைய வெனிசுலா அழகி டயானா மென்டோஸô மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்


5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் உள்பட 10 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சளிப் பரிசோதனையில் ஐந்து மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மீதமுள்ள ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், ஒரு மாணவர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தனி சிகிச்சைப் பிரிவுகளில்...: பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களுக்கு தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள நான்கு மாணவர்கள் தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாணவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரவியது எப்படி? பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்கள் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த மாதம் 3-ம் தேதி சேர்ந்தவர்கள். அனைவரும் விடுதி மாணவர்கள்.

விடுமுறை நாளுக்கு கேரளம் சென்று வந்த ஒரு மாணவர் மூலம் மற்ற மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

90 பேர் பாதிப்பு: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் (ஏ எச்1 என்1) வைரஸ் தாக்குதல், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலருக்கு சளிப் பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 18 பேர், கோவை அரசு மருத்துவமனையில் 10 பேர் எனப் பல்வேறு இடங்களில் மொத்தம் 90 பேர் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து...: சிங்கப்பூர், துபை போன்ற நாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்குவோரில் தினமும் 2 அல்லது 3 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.

ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம்.

ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.


(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.


காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947_ல் இருந்து 30 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செலுத்தி வந்த காங்கிரஸ், ஆட்சியை விட்டு இறங்கியது. வரலாற்றில் முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத பிரதமராக, மொரார்ஜி தேசாய் 1977 மார்ச் 24_ந்தேதி பதவி ஏற்றார்.

1964_ல், நேரு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆவதற்கு மொரார்ஜி தேசாய் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். பின்னர், 1966 ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி திடீர் என்று காலமானதால், பிரதமர் தேர்தல் நடந்தது.

அதில், இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு, தேசாய் தோல்வி அடைந்தார். 14 ஆண்டுகளாக தேசாய் கண்டு வந்த "பிரதமர் பதவி கனவு" 1977_ல் பலித்தது.

மார்ச் 24 ந்தேதி மாலை மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றார். மற்ற மந்திரிகள் 26_ந்தேதி பதவி ஏற்றனர். அன்று பதவி ஏற்ற 14 மந்திரிகளின் பெயர்களும் இலாகா விவரமும் வருமாறு:-


1. சரண்சிங் - உள்நாட்டு இலாகா
2. வாஜ்பாய் - வெளிநாடு
3. எச்.எம்.படேல் - நிதி, ரெயில்வே, பாங்கிகள்
4. பாதல் - தபால் தந்தி
5. சாந்திபூஷண் - சட்டம், நீதித் துறை, கம்பெனிகள் விவகாரம்.
6. எல்.கே.அத்வானி - ரேடியோ, தகவல் இலாகா
7. பட்நாயக் - இரும்பு, சுரங்கம்
8. மதுதண்டவதே - ரெயில்வே
9. பி.சி.சுந்தர் - கல்வி, சமுதாயம், சுகாதாரம்
10. மோகன்தாரியா - வர்த்தகம், உணவு, கூட்டுறவு.
11. புருசோத்தம் கவுசிக் - சுற்றுலா, விமான போக்குவரத்து
12. சிக்கந்தர் பக்த் - வீட்டு வசதி, பொதுப்பணி வினியோகம், அகதிகள் மறுவாழ்வு
13. பா.ராமச்சந்திரன் - மின்சாரம்
14. ரவீந்திரவர்மா - பாராளுமன்ற விவகாரம், தொழிலாளர் விவகாரம் (இது தவிர மற்ற எல்லா இலாகாக்களையும் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் வசம் வைத்துக்கொண்டார்)

ஜெக ஜீவன்ராம் ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜனநாய காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் ராஜ்நாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28 ந்தேதி ஜெகஜீவன்ராம் உள்பட 5 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். அவர்களது இலாகா விவரம்:-


1. ஜெகஜீவன்ராம் - ராணுவம்
2. பகுகுணா - ரசாயனம், உரம்
3. ஜார்ஜ் பெர்னாண்டஸ் - தபால் தந்தி
4. ராஜ்நாராயணன் - சுகாதாரம், கருத்தடை
5. பிரிஜ்லால் வர்மா - தொழில் பாதலிடம் இருந்த தபால் _ தந்தி பெர்னாண்டசுக்கு ஒதுக்கப் பட்டதால், பாதலுக்கு விவசாயம் _ நீர்ப்பாசனம் இலாகா கொடுக்கப்பட்டது. இந்திரா வாழ்த்து மார்ச் 25_ந்தேதி பாராளுமன்றம் கூடியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றார்கள். அன்று பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார்.

தேசாய்க்கு இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், "என் கடமை முடிந்துவிட்டது" என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாளே அவர் உடல் நலம் மிகவும் மோசமானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதால், ரத்தத்தை சுத்திகரிக்க "டயாலிஸ்" சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த சஞ்சய் காந்தி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_ "அரசியலில் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. வேறு வழிகளிலும் சமுதாயத்துக்கு பாடுபட வழி உண்டு. எனவே அரசியலை விட்டு ஒதுங்கி விடுகிறேன்.

அரசியலில் இனி ஈடுபடமாட்டேன். அமேதி தொகுதி மக்கள் தங்களுக்கு உரிய வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனதார ஏற்கிறேன். இவ்வாறு சஞ்சய் காந்தி அறிவித்தார்.

1960 செப்டம்பர் மாதம் இந்திரா காந்தி கேரளா சென்றிருந்தார். திருவனந்தபுரத்தில் நடை பெற்ற காங்கிரஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். 7_ந்தேதி இரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், ஒரு அதிர்ச்சியான தகவல் அவருக்குக் காத்திருந்தது.

கணவர் பெரோஸ் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்தத் தகவல். பெரோஸ் காந்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது முறை. விமான நிலையத்திலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார், இந்திரா.

அங்கு இந்திரா காந்தியின் உதவியாளர் உஷா பகத் உள்பட பலர் இருந்தனர். பெரோஸ் காந்திக்கு விட்டு விட்டு உணர்வு திரும்புவதாகவும், அப்போதெல்லாம் "இந்து எங்கே?" என்று அவர் கேட்பதாகவும் உஷா கூறினார். இதைக்கேட்டு இந்திரா கண் கலங்கினார். அன்று பகலில், நெஞ்சு வலிப்பதாக தன்னுடைய நண்பரான டாக்டர் கோசலாவுக்கு பெரோஸ் டெலிபோன் செய்திருக்கிறார். உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு அவர் கூறியிருக்கிறார். பெரோஸ் வந்ததும், டாக்டர் கோசலா மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளார்.


ரிசோதனை நடந்து கொண்டு இருக்கும்போதே, பெரோஸ் உணர்வு இழந்துவிட்டார். அன்றிரவு இந்திரா தூங்கவில்லை. கணவர் படுக்கை அருகிலேயே இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு பெரோஸ் காந்தி கண் விழித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீருடன் வாடிய முகத்துடன் இந்திரா சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

"இந்து! கவலைப்படாதே, போய் ஏதாவது சாப்பிடு" என்று கூறினார். ஆனால் இந்திரா சாப்பிட மறுத்துவிட்டார். பெரோஸ் காந்தி மீண்டும் நினைவு இழந்தார். இந்திரா துயரத்துடன் கணவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். காலை 7.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே பெரோஸ் காந்தியின் உயிர் பிரிந்தது. 48_வது பிறந்த நாளுக்கு நான்கு நாள் இருக்கும்போது பெரோஸ் மரணம் அடைந்தார்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes