ஜி போட்டோ ஸ்பேஸ்

கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. 

ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது.

போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது. பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. 

போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம். 

உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா? அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா?

அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம். கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது.

பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை. ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. 

இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம். 

மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் http://www.gphotospace.com/features.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.


சூடு பிடிக்கும் ஹாட் மெயில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஹாட்மெயில் – ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட் மெயில் என்று இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் அதனை அப்படியே இயக்கத் தொடங்கியது. யாஹூ மெயில் முந்திக் கொள்ள, ஹாட் மெயில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

இடையே வந்த கூகுளின் ஜிமெயில், புயல் வேகத்தில் வசதிகளைத் தரத் தொடங்கியவுடன், அதன் இடத்தை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை, வேறு சிந்தனையின்றித் தன் பக்கமே இறுத்திக் கொண்டது ஜிமெயில். இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

மைக்ரோசாப்ட் இப்போது, தன் முழுக் கவனத்தினை ஹாட் மெயில் பக்கம் திருப்பியுள்ளது. அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பொலிவான, பயனுள்ள இயக்கத்தினைத் தர முயற்சிக்கிறது. இந்த புதிய தளம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 

இருப்பினும் தற்போது உருவாகி வரும் புதிய வசதிகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப் படித்த பின்னர், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய உறவை நிச்சயம் புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மெயில் கட்டமைப்பு:

 புதியதாகத் தரப்படும் பல வசதிகள், வெப்மெயில் தளங்களில் இதுவரை இல்லாத புத்தம் புதிய வசதிகளாகவே உள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும். ஜிமெயிலில் கூட இவற்றிற்கான இணை வசதிகள் இல்லை என்று கூடச் சொல்லலாம். 

ஜிமெயில் அடுத்தடுத்து வரும் இமெயில் மெசேஜ்களை, ஒரு உரையாடல் போலத் தொகுத்துத் தருகிறது. இது ஜிமெயிலைப் பொறுத்தவரை மாறாததாக உள்ளது. இப்படித்தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜிமெயில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹாட் மெயில் இதில் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறது. 

பழைய படி வரிசையாக வைத்துக் கொள்ளலாம்; அல்லது ஜிமெயில் போல உரையாடலாகவும் மேற்கொள்ளலாம். இரண்டிற்கும் ஆப்ஷன் தரப்படுகிறது. இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்கதாக இருக்கும். 

மற்ற வசதிகள் அனைத்தும் இரண்டு வகைகளில் உள்ளன. குழப்பமான இன்பாக்ஸைச் சரி செய்பவை. அடுத்து மெசேஜ்களுடன் வரும் போட்டோ, டாகுமெண்ட் மற்றும் பிற இணைப்புகளின் அடிப்படையில், இமெயில்களைக் கையாண்டு காட்டும் வசதிகளாகும்.

பிடிக்காத இமெயில் ரத்து: 

ஒருவர் அனுப்பிய மெசேஜ்கள் உங்களுக்கு அறவே பிடிக்கவில்லை! என்ன செய்வீர்கள்? வந்து விழுந்த இ மெயில் மெசேஜ்களை மொத்தமாக செலக்ட் செய்து அழித்துவிடுவீர்கள். அடுத்து மீண்டும் அவர் அனுப்பினால்? ஹாட் மெயிலில் இனி அந்த இமெயில் முகவரியிலிருந்து மெசேஜ் வந்தால், ஹாட் மெயில் தானாகவே அழித்துவிடும். இதன் மூலம் குப்பை மெயில்கள் உங்கள் இன் பாக்ஸை நிரப்புவது தடுக்கப்படும்.

புதிய வியூ மெனு: 

புதியதாகத் தரப்படும் இந்த வியூ மெனு மூலம், நீங்கள் படிக்காத மெசேஜ்களைத் தனியே பட்டியலிடுதல், குறிப்பிட்ட முகவரியிலிருந்து கிடைக்கும் மெயில்களை மட்டும் காணுதல், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களிலிருந்து வந்த மெயில்களை மட்டும் பார்த்தல் ஆகிய வகைகளில் பார்க்கலாம். 

மேலும் இடது பக்கம் தரப்படும் "Quick views" மெனுவின் மூலம், நீங்கள் குறித்த வைத்த மெயில்கள், போட்டோக்கள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், டாகுமெண்ட் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், கூரியர் நிறுவனங்களிலிருந்து வந்துள்ள மெயில்கள் மட்டும் எனத் தனித் தனிப் பட்டியல்களாக மெயில்களைக் காணலாம். 

போட்டோக்கள் அட்டாச் செய்யப்பட்டு அல்லது போட்டோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டு மெயில்கள் வந்தால், அவை தனியே ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள்,உங்கள் இன்பாக்ஸ் மீது பிரசன்டேஷன் தொகுப்பாகக் காட்டப்படும். ஆனால் இந்த வசதி பிகாஸாவில் உள்ள போட்டோக்களுடன் செயல்படவில்லை. 

இதற்கான காரணம் தெரியவில்லை. இதே போல மெயில் செய்திகளில் யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், இன் பாக்ஸிலிருந்து வெளியேறாமலேயே, அந்த வீடியோக்களைக் காணும் வசதி தரப்படுகிறது. 

போட்டோ ஷேரிங்: 

இந்த ஹாட்மெயில் தளத்திலேயே, போட்டோ ஷேரிங் வசதியும் தரப்படுகிறது. மைக்ரோசாப்டின் ஸ்கை டிரைவில் போட்டோக்களை சேவ் செய்கையில், அவற்றைக் காண நீங்கள் அனுமதிக்கும் நண்பர்களின் இமெயில் முகவரிகளைத் தந்துவிட்டால், இந்த தளமே அவர்களுக்கு அந்த செய்தியை மிக அழகான மெயில்கள் மூலம் அனுப்பும். 

இந்த இமெயில்கள் அவர்களுக்குச் சென்றவுடன், அவர்கள் இந்த போட்டோக்களை, ஒரு ஸ்லைட் ÷ஷா காட்சியாகக் காணலாம். அவர்களுக்கு விண்டோஸ் லைவ் முகவரி ஐ.டி. இருப்பின், அவர்கள் இந்த போட்டோக்கள் குறித்த தங்கள் குறிப்பினைப் பதியலாம்.

"பிங் மூலம் தேடல்'': 

இமெயில் விண்டோவில் "From Bing" என்ற வசதி தரப்படுகிறது. இதன் மூலம் இமேஜஸ், கிளிப் ஆர்ட், வீடியோஸ், மேப்ஸ் மற்றும் இணையதளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை அப்படியே ஒரு கிளிக் மூலம் உங்கள் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

வெப் அப்ளிகேஷன் இணைப்பு:

 ஹாட் மெயில் இமெயில் இன்பாக்ஸுடன், வெப் அப்ளிகேஷன்கள் இணைக்கப்படுகின்றன. மெயில் மெசேஜ் ஒன்றுடன் வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பார்மட்டில் ஏதேனும் ஒரு பைல் அட்டாச் செய்யப்பட்டிருந்தால், ஹாட் மெயில் உங்களின் அனுமதி கேட்டு, அதனை மைக்ரோசாப்ட் அண்மையில் தந்து வரும் வெப் அப்ளிகேஷன் மூலம் திறக்கும். 

இந்த பைல்களை எடிட் செய்திடவும் அனுமதிக்கும். நீங்கள் அந்த மெசேஜுக்கு பதில் அனுப்பினால், ஹாட் மெயில் வெப்பில் உள்ள, நீங்கள் எடிட் செய்த பைலுக்கான லிங்க் கொடுத்து, நீங்கள் மேற்கொண்ட எடிட்களைக் காட்டும். இது ஏறத்தாழ கூகுள் டாக்ஸ் எனப்படும் வெப் அப்ளிகேஷனை ஒத்தது என்றாலும், கூகுள் தரும் அனைத்து வசதிகளும் இதில் தரப்படவில்லை. குறிப்பாக கூகுள் வழங்கும் பி.டி.எப். வசதி இல்லை.

மொபைல் வழி இமெயில்: 

மொபைல் போன்களுக்கான, மொபைல் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஹாட்மெயில் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனில் இருந்து மெயில்களைப் படிக்கலாம். இருப்பினும் வேறு மொபைல் பிரவுசர் மூலமும் உங்களுக்கு வந்துள்ள மெயில்களைப் படிக்க ஹாட் மெயில் அனுமதிக்கிறது. 

ஹாட்மெயில் இது போன்ற பல புது வசதிகளுடன், தன் அடுத்த இன்னிங்ஸை இமெயில் போட்டியில் விளையாட வருகிறது. இந்த முறை தன் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி நிறைய வசதிகளைத் தரும் என்று எதிர்பார்ப்போம்.


விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

விஜய் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே ‌மிகுந்த வரவேற்பு உள்ளது. அவர் எனுக்கு மகனாக கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன், என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வெளுத்துக்கட்டு. இப்படத்தின் பாடல் அறிமுக விழா ஏற்கனவே சென்னையில் நடந்துவிட்ட நிலையில், திருச்சி மற்றும் மதுரையிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

திருச்சியில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். 

படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது, என்றார். 

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார். 

நான் இயக்கிய "நான் சிகப்பு மனிதன்'' படத்தை `ரீமேக்' செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய்யை நடிக்க வைக்க உள்ளேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன். இது போன்று என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப `ரீமேக்' செய்ய இருக்கிறேன், என்று கூறினார்.

மதுரையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, படத்தில் பிரபல நடிகர் நடித்திருந்தாலும் நல்ல கதை இருந்தால்தான் அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். 

ஒரு கருத்தை மட்டுமே படமாக எடுக்க முடியாது. ஒரு நல்ல கருத்தை எளிமையாக கதையம்சத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தேவை தன்னம்பிக்கை. தோல்வியை தாங்கும் மனப்பக்குவம்தான், என்றார்


பிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க

பிளாக் எழுதுபவர்களில் பலர் தம்முடைய பிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க விரும்புவார்கள். அவ்வாறு விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என இந்த பதிவை இடுகிறேன்.

இந்த வசதியை உங்கள் பிளாக்கில் இணைக்க உங்களுக்கு ஏற்கனவே Paypal அக்கவுன்ட் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் இங்கு சென்று உருவாக்கிக் கொள்ளவும்.

பின்பு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அதில்  நீல நிறத்தில் உள்ளதை மட்டும் மாற்றிக் கொள்ளவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
<!-- The-Online-Quest Pay Pal Donation Form Code Start -->

<center>
<table border="1" width="143" cellspacing="0" cellpadding="0" bordercolorlight="#FFF8E8" bordercolordark="#EFE0C9">
<tr>
<td>
<p align="center"><b>Please Donate To My Blog</b>
</p></td>
</tr>
<tr>
<td width="145">
<form action="https://www.paypal.com/row/cgi-bin/webscr" name="_xclick" method="post">
<input value="Thanks for Your Donations - Blog/Website Title" name="item_name" type="hidden"/>
<input value="Your paypal email" name="business" type="hidden"/>
<p style="margin-top: 0; margin-bottom: 0">
<input value="_xclick" name="cmd" type="hidden"/>
<!-- input type="hidden" name="amount" value="1.00" -->
<b>Amount</b> <p style="margin-top: 0; margin-bottom: 0"> <select name="Amount" size="1">
<option selected value="1.00"/>1.00
<option value="2.00"/>2.00
<option value="3.00"/>3.00
<option value="4.00"/>4.00
<option value="5.00"/>5.00
<option value="10.00"/>10.00
<option value="15.00"/>15.00
<option value="20.00"/>20.00
<option value="25.00"/>25.00
<option value="30.00"/>30.00
<option value="35.00"/>35.00
<option value="40.00"/>40.00
<option value="45.00"/>45.00
<option value="50.00"/>50.00
<option value="100.00"/>100.00
<option value="200.00"/>200.00
<option value="300.00"/>300.00
<option value="400.00"/>400.00
<option value="500.00"/>500.00
<option value="1000.00"/>1000.00
</select>
<p style="margin-top: 0; margin-bottom: 0"><b>Currency</b> <select name="currency_code" size="1">
<option value="AUD"/>Australian Dollar
<option selected value="USD"/>USD
<option value="GBP"/>British Pound
<option value="CAD"/>Canadian Dollars
<option value="CZK"/>Czech Koruna
<option value="DKK"/>Danish Kroner
<option value="EUR"/>EUR
<option value="HKD"/>Hong Kong Dollars
<option value="HUF"/>Hungarian Forint
<option value="JPY"/>Japanese YEN
<option value="NZD"/>New Zealand Dollars
<option value="NOK"/>Norwegian Kroner
<option value="PLN"/>Polisg Zlotych
<option value="SGD"/>Singapore Dollars
<option value="SEK"/>Swedish Kronor
<option value="CHF"/>Swiss Francs
</select>
</p>
<p style="margin-top: 0; margin-bottom: 0" align="center">
<input border="0" alt="Make payments with PayPal - it's fast, free and secure!" width="60" src="http://www.blogpulp.com/imagehost/images/5971708800.gif" name="submit" height="30" type="image"/>
</p>
</p></p></form>
</td></tr>
<tr>
<td>
<p align="right"><b><font face="Arial" size="1">Powered by <a href="http://djyano.blogspot.com/2008/04/put-paypal-donation-code-to-your.html" target="_blank"> The-Online-Quest</a></font></b>
</p></td>
</tr>
</table>
</center>

<!-- End of The-Online-Quest Pay Pal Donation Form Code -->

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Blog/Website Title - இதில் உங்களுடைய பிளாக் தலைப்பை கொடுக்கவும்.
Your paypal email - உங்களுடைய Paypal மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

இதனை உங்கள் பிளாகரில் இணைக்க , Dashboard --> Layout --> Add a Gadget -->Html/Javascript.  இதில் பேஸ்ட் செய்து சேமித்து கொள்ளவும். உங்களுடைய  தளத்தில் Paypal டொனேசன் பாக்ஸ் இணைக்கப்பட்டுவிட்டது.


புதிய ஸ்பைஸ் போன்கள்

மியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன.

இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

டூயல் சிம் எம் 6464 போனில் 2 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இருப்பதுடன், எப்.எம். ட்ரான்ஸ்மீட்டரும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அலைவரிசையில் இதிலிருந்து பாடல்களை ஒலிபரப்பலாம்.

போனை அசைத்தால் பாடல்கள், வால் பேப்பர்கள், கேம்ஸ் ஆகியவை மாறுகின்றன. போனிலேயே ibibo, Reuters, Opera Mini, Mobile Tracker, mgurujee ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. ஹிந்தி ஆங்கிலம் கலந்து இதில் டெக்ஸ்ட் டைப் செய்திட முடிகிறது.

எம் 6262 போனில் வீடியோ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ibibo, Opera Mini, SMS Scheduler, Privacy Lock ஆகியவை தரப்படுகின்றன. தேவையற்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் இதில் தடுக்கும் வசதி உள்ளது.

எம்6464 தற்சமயம் ரூ. 5,349 விலையிடப்பட்டு கிடைக்கிறது. எம்6262 விரைவில் சந்தைக்கு வர உள்ளது.


ஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா?

ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பல வாசகர்கள், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா?

இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது? என்ற ரீதியில் கேள்விகளுடனான கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம்.

இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

1. போட்டோ எடிட்:

வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும்.

போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

2.வீடியோ எடிட்டிங்:

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.

3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்:

ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.

4. ஒன் நோட் 2010:

அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா:

பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.

6. இமெயில்களைக் கையாளுதல்:

அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.

7. நிதி ஆளுமை:

எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.

8. நெட்வொர்க் தொடர்பு:

அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

9. கட்டளைகள் கை வசம்:

ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.

இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes