எக்ஸ்பியில் எர்ரர் செய்தி வராமல் இருக்க

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன.

சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய?

இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்.


சி கிளீனர் (ccleaner) புதிய பதிப்பு

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும்.

அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது.

இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/ என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

புதிய பதிப்பில் மேலும் 20 வெவ்வேறு வகையான புரோகிராம் களுக்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது. இவை கேம்ஸ் புரோகிராம் முதல் வாய்ஸ் கம்யூனிகேஷன் புரோகிராம் வரை அடங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாடு குறித்து இந்த பிரவுசர் தயாரித்து வைக்கும் தகவல்களை நீக்கலாம்.

ஐ-ட்யூன்ஸ் குக்கிகள், பழைய விண்டோஸ் பயர்வால் விதிமுறைகள் ஆகியவற்றை புதிய பதிப்பு கவனித்துக் கொள்கிறது. ரெஜிஸ்ட்ரி கிளீனர் பகுதியில், பழைய பயன்படுத்தாத விண்டோஸ் புரோகிராம்களுக்கான குறியீட்டு வரிகளை நீக்க வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, பயர்பாக்ஸ் 4, ஐ ட்யூன்ஸ், ஆப்பரா பிரவுசர், பயர்பாக்ஸ்/மொஸில்லா பாஸ்வேர்ட் பதிவுகள், ஆகியவை தற்போதைய பதிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படுகிறது.

இந்த புதிய சிகிளீனர், விண்டோஸ் எக்ஸ்பி (32 மற்றும் 64 பிட் புரோகிராம்) விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது. இவற்றின் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகிறது.


பிளாக் பெரி விலை குறைப்பு

பலருக்கு பிளாக் பெரி மொபைல் போன்களை வாங்கிப் பயன்படுத்த ஆசை ஏற்படும். ஆனால் அதன் விலை எப்போதும் பிரிமிய விலையாகவே இருப்பதால், தயக்கமும் ஏற்படும்.

சிலர் ஆர்.ஐ.எம். நிறுவனம் தரும் வசதிகளுக் காக, விலையைப் பொருட்படுத் தாமல் வாங்கிப் பயன்படுத்து வார்கள்.

இவர்கள் அனைவருக்கும் உதவிடும் பொருட்டு, ஆர்.ஐ.எம். நிறுவனம் தன் பிளாக்பெரி கர்வ் 8250 மொபைல் போனின் விலையைக் குறைத்துள்ளது. இதன் தற்போதைய அதிக பட்ச விலை ரூ.9,990.


இதன் மற்ற சிறப்புகள்:

முழு குவெர்ட்டி கீ போர்டு, 2.46 அங்குல 320 து 240 பிக்ஸெல் அளவுகளில் வண்ணத்திரை, 512MHz வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 2 எம்.பி. கேமரா, ஆப்டிகல் ட்ரேக் பேட் நேவிகேஷன், EDGE, GPRS தொழில் நுட்ப உதவி, வை-பி, 1150 ட்அட திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியவற்றுடன் வழக்கமான பிளாக் பெரி வசதிகள் இதில் கிடைக்கின்றன.

இது ஒரு 3ஜி போன் இல்லை என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும்.


பார்வையற்றவர்களுக்கான மொபைல்போன்கள்

மொபைல்போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெக்ஸ் நிறுவனம், பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில், பிரெய்லி மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் சைலேந்திர ஜா கூறியதாவது, பார்வையற்ற‌ோர் எளிதில் கையாளும் வண்ணம், பிரெய்லி டாக்கிங் கீபேடுடன் (பெரிய எழுத்திலான பட்டன்கள், அதை அமுக்கினால் எழுத்திற்குரிய ஒலி கேட்கும்.).

4 எஸ்ஓஎஸ் பட்டன்களும் கொண்ட இந்த போனில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால், அவசர உதவி தொடர்புக்கு அது செல்லும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போன் டூயல் சிம் போன் என்பது குறிப்பிடத்தக்கது.


கூகுளின் கால்குலேட்டர்

பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.

ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம்.

அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது.

ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். சர்ச் பாக்ஸில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். 100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம்.

அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன.

100 USD in Indian Rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இந்திய ரூபாய் மதிப்பு தரப்படும்.


விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்

மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம்.

எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.

விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கீழே இன்னும் தெளிவான ஒரு இயக்கத்தைத் தர ஐந்து குறிப்புகள் தரப்படுகின்றன.


1. டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி:

விண்டோஸ் 7 இயக்கத்தில் Documents என்பது, எக்ஸ்பி இயக்கத்தில் நமக்குக் கிடைத்த மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டராகும். ஆனால் இது ஜஸ்ட் ஒரு போல்டர் மட்டுமல்ல; டாகுமெண்ட்ஸ் என இங்கு அழைக்கப் படுவது இங்கு ஒரு லைப்ரரியாக உள்ளது.

ஆபீஸ் தொகுப்பில் எதனை சேவ் செய்தாலும், அது இந்த லைப்ரேரியில் தான் சேவ் ஆகும். இது எக்ஸ்பியில் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்வதற்கு ஒப்பாகும். ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்தால், அங்கு டாகுமெண்ட்ஸ் லைப்ரேரி இருப்பதைக் காணலாம்.

அதில் நீங்கள் உருவாக்கிய அனைத்து பைல்களும் இருப்பதைக் காணலாம். அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து, அங்கு Libraries groupல் டாகுமெண்ட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், இவற்றைக் காணலாம். எனவே, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் முதலில் இயங்குகையில், இந்த டாகுமெண்ட்ஸ் லைப்ரேரியில் பைல்களை சேவ் செய்வதே நல்லது.


2. விரைவாக பைல் பெற லைப்ரரி:

விண்டோஸ் சிஸ்டத்தின் முந்தைய பதிப்புகளில், பைல்களை நாம் போல்டர் களில் சேவ் செய்தோம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் நூற்றுக் கணக்கான பைல்களைக் கொண்டுள்ள போல்டர் களைக் காட்டும். நாம் உருவாக்கிய போல்டருக்கேற்ற வகையில், சில பல நிலைகளில் துணை போல்டர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். இது போன்ற பல துணை போல்டர்களை அமைத்தால், பைல்களைத் தேடிக் கண்டறிந்து திறப்பது சற்று சிரமமாக இருக்கும்.

விண்டோஸ் 7 லைப்ரேரி என்பது ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. நிறைய கதவுகள் நிறைந்த ஹால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். முதல் கதவில் “Documents” என்று எழுதியுள்ளது. இதைத் திறந்தவுடன் அங்கு நம் பைல்கள் அனைத்தையும் அடக்கியுள்ள, சில பைல் கேபினட்டுகள் இருக்கும். அடுத்த கதவில் “Pictures” என்று எழுதியுள்ளது.

இங்கு உங்கள் படங்கள் பைல்கள் அடங்கிய கேபினட்டுகள் உள்ளன. முன்பு டஜன் கணக்கில் இருந்த படிக்கட்டு அமைப்பெல்லாம் இல்லாமல், ஒரு சில லைப்ரேரிகளைக் கொண்டு இப்போதைய லைப்ரேரி அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடக்கிறது என்றால், லைப்ரரிகளில் உங்கள் பைல்கள் ஸ்டோர் செய்யப்படுவதில்லை. உங்கள் பைல்கள், இன்னும் பழைய முறையில், பல படிக்கட்டுகளாகத்தான் ஸ்டோர் செய்யப்படுகின்றன. லைப்ரேரி என்ற அமைப்பில் இவை சார்ந்த போல்டர்கள் இழுக்கப்பட்டு உங்களுக்கு பைல்கள் கிடைக்கின்றன. இது முதலில் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சற்றுப் பழகி விட்டால், இதிலிருந்து பைல்களை எடுத்துப் பயன்படுத்துவது எளிதாகிவிடும்.

இல்லை, எனக்கு பழைய முறைப்படி அனைத்து போல்டர்களைக் காட்டும் படிக்கட்டு முறைதான் வேண்டும் என்றால், அதுபோல் செட் செய்திடவும் வழி தரப்பட்டுள்ளது. இதற்கு Organize மெனுவிலிருந்து Folder And Search Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து Navigation Pane என்ற பிரிவில், Show All Folders என்ற ஆப்ஷனில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.


3. ஹோம் குரூப் பாஸ்வேர்ட் தவிர்க்கவும்:

ஹோம் குரூப்ஸ் என்பதுவும் லைப்ரரி போன்றதே. ஆனால் அவை நெட்வொர்க்கில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இயங்கு கின்றன. ஹோம் குரூப் நெட்வொர்க்கில் இயங்கும் எந்த கம்ப்யூட்டரும், மற்ற கம்ப்யூட்டருக்குத் தன் கம்ப்யூட்டரில் உள்ளவற்றை அணுகவும், அவற்றில் எழுதவும் அனுமதியினை வழங்கும்.

ஆனால், நீங்கள் இங்கு எதிர்பார்த்தபடி, ஹோம் குரூப்கள் பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இங்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை அமைப் பதனைக் காட்டிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், பத்து கேரக்டர்கள் அடங்கிய பாஸ்வேர்டினைக் கொடுக்கிறது.

இந்த பாஸ்வேர்டை எழுதி வைத்துக் கொண்டு, அதனைத் தவற விட்டுவிடாதீர்கள். முதன்முதலில் நீங்கள் உங்கள் கம்ப்யூட் டரை இணைக் கும் போது தான் இது உங்களுக்குத் தேவையாய் இருக்கும். இணைந்த பின்னர், நீங்கள் அந்த பாஸ்வேர்டினை மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 7 சிஸ்டம் ஏன் இது போல ஒரு பாஸ்வேர்டை, தான் உருவாக்கும் பாஸ்வேர்டைக் கட்டாயப்படுத்துகிறது என்று தெரியவில்லை. மேலும், இந்த புதிய அம்சமானது, விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே செயல்படுகிறது. இது மைக்ரோசாப்ட் எடுத்த தவிர்க்க வேண்டிய முடிவு. ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியதுள்ளது.


4. ஜம்ப் லிஸ்ட் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அனைவரும் விரும்பும் பல விஷயங்களில் ஜம்ப் லிஸ்ட் ஒன்றாகும். நீங்கள் பைல் ஒன்றை, அதனை எங்கு சேவ் செய்திருந்தாலும், அதை டாஸ்க் பாரில் பின் செய்துவிட்டால், அதனை உடனடியாகப் பெற முடியும். புரோகிராம் ஒன்றை இணைக்க, கீழே கொடுத்துள்ள படி செயல்படவும்.


1. ஸ்டார்ட் மெனுவினைக் கிளிக் செய்க.

2. அப்ளிகேஷன் புரோகிராமினைக் கண்டறிந்து அதனை ரைட் கிளிக் செய்திடவும்.

3. இப்போது, Pin To Taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் 7 உடனே ஐகான் ஒன்றை, டாஸ்க்பாரில் இணைத்துக் கொள்கிறது.

நீங்கள் இந்த அப்ளிகேஷன் பட்டியலில் அதற்கான பைல்களையும் பின் செய்திடலாம். பைலைத் திறந்து, பின்னர் அதன் புரோகிராம் ஐகானில், ரைட் கிளிக் செய்திடவும். பைல் ஒன்றை பின் செய்த பின்னர், அதனை வேகமாகத் திறந்திட முடியும். இதற்கு, புரோகிராம் ஐகானில் ரைட் கிளிக் செய்து, பின் செய்த பிரிவில், அந்த பைலைத் தேர்ந்தெடுக் கலாம்.

இங்கு நீங்கள் அண்மையில் பயன்படுத்திய பைல் பட்டியலையும் (Most Recently used files) காணலாம். ஆனால் இந்த பட்டியல், நீங்கள் புதிய பைல்களைத் திறந்து பயன்படுத்து கையில் மாறும். ஆனால் பின் செய்யப்பட்ட பைல்களின் பட்டியல், நீங்களாக, மேலும் பைல்களைச் சேர்க்கும் போதும், நீக்கும் போதும் மட்டுமே மாறும்.


5. விண்டோஸ் எக்ஸ்புளோரர் இருமுறை திறந்து பயன்படுத்தல்:

ஒரே நேரத்தில், இரண்டு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து பயன்படுத்து வது மிக எளிதான ஒன்றாகும். முதலில் டாஸ்க்பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது, வழக்கமாக நீங்கள் திறப்பது போலத் திறக்கவும்.

(இதுவே ஒரு நல்ல, சிறப்பான அம்சமாகும்.) அடுத்து, விண்டோஸ் டைட்டில் பாரினை, இடது புறமாக இழுத்துச் செல்லவும். விண்டோஸ் 7 சிஸ்டம், திரையின் இடது புறம் ஒரு அவுட்லைன் காட்டும் வரை இழுத்துச் செல்லவும். இப்போது விண்டோவினை இழுத்துச் செல்வதனை விட்டுவிடவும். விண்டோஸ் 7 சிஸ்டம், உங்கள் மானிட்டர் திரையின் இடது பாதியில் எக்ஸ்புளோரர் விண்டோவினை அமைத்திருக்கும்.

இரண்டாவதாக ஒரு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எக்ஸ்புளோரர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். மேலே கூறியபடி, மவுஸால் அழுத்தி இழுக்கவும். ஆனால் இந்த முறை வலது பக்கம் இழுக்கவும். இப்போது திரையின் இரண்டு பகுதிகளில், இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர்கள் திறக்கப் பட்டிருப்பதனைக் காணலாம். இதனால், பைல்களை ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதும், காப்பி செய்வதும், இணைப்பதுவும் எளிதாகிறது.

மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே இந்த வேலையை மேற்கொள்ள, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, இடது அம்புக் குறிக்கான கீயை அழுத்தவும். இவ்வாறு செய்வதனால், திரையில் காணப்படும் விண்டோ, தானாகவே இடது பக்கம் இழுக்கப்பட்டு அமைக்கப்படலாம். இதே போல விண்டோஸ் கீ யை அழுத்திக் கொண்டு, வலது அம்புக் குறி கீயினை அழுத்த, வலது பக்கம் ஒரு விண்டோ அமைக்கப்படுவதனைக் காணலாம்.


பயனுள்ள சில இணைய தளங்கள்!

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும்.

ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.


சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம்.


1. டேஸ்ட்கிட் (Tastekid):

புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.


2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To):

ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/

கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:


1. ஜூங்கல் (Joongel):

இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது.

ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி: http://www.joongel. com/index.php


2.ஸ்குரூகிள் (Scroogle):

கூகுள் தேடுதளத்தில் தேடுகையில், குக்கீஸ் நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய பெர்சனல் விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது: www.scroogle.org/cgibin/scraper.htm.


3.சூப்பர் குக் (Supercook):

பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும்.

இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.

இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/

இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன.


1. ஜாமென்டோ (Jamendo):

ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி: http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது.


2. நட்சி (Nutsie):

உங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி: http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.


1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection):

இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/


2. கீ எக்ஸ் எல் (keyxl):

ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/

மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.


1. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net):

இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள்.

இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும்.

பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/


2. வெப் 2 கால்க் (web2calc):

இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/


3. ரெய்னி மூட் (rainymood):

ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/

4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி:http://whathappenedinmybirthyear.com/

மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம்.


விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7, தன்னுள் நிறைய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு, இந்த சிஸ்டம் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் வசதியைப் பார்க்கலாம்.

இது ஒரு பெரிய மதிப்பு கொண்ட வசதி இல்லை என்றா லும், இதனைப் பயன்படுத்தியவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தயங்கியதே இல்லை. பல சூழ்நிலைகளில் இதன் உதவி மிகவும் தேவைப்படுவதாகவும் அமைந்துள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும்.

இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.

ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து ஸ்டிக்கி நோட்களை யும், மினிமைஸ் செய்து வைக்கலாம். அதே போல, இதன் மீது கிளிக் செய்தால், அவை இயக்கப்பட்டு, திரையில் தோன்றும்.

நோட் ஒன்றை உருவாக்கிய வுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது, எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம். நோட்டினை மூடி வைக்க, ரைட் கிளிக் செய்து, Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.

ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை.

எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் காப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.

நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய்வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன் படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)

நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப் படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.

இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\{username} \AppData\Roaming\Microsoft\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.


பயர்பாக்ஸ் 4 - புதுமை, எளிமை, வேகம்

சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்தனர்.

இது தொடர்ந்து உயர்ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களுக்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

பாதுகாப்பான, வேகமான, எளிமையான இன்டர்நெட் அனுபவத்திற்கு இது வழி தரும் என்ற எண்ணத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக, பயர்பாக்ஸ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை இது உறுதி செய்கிறது. புதிய பிரவுசரின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

ஏறத்தாழ 70 கோடிக்கு மேலானவர்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பு களைத் தொடர்ந்து கணித்து வரும் மொஸில்லா நிறுவனம், பல புதிய அம்சங்களை, பதிப்பு 4ல் தந்துள்ளது.

எளிமையாக்கப்பட்ட இடைமுகம், அதிக திறனுடன் இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். 5 இயக்கம், எதனுடனும் இணைந்து செயல்படும் தன்மை, பரவலாக பனோரமா தோற்றம், பல வகைகளில் ஆயிரக் கணக்கில் தயாராகிக் கிடைக்கும் ஆட் ஆன் தொகுப்புகள், எந்த ஒரு இணைய தளத்துடனும் இணைந்து செயல்படும் தன்மை ஆகியவற்றை இந்த பிரவுசரின் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.

பயனாளர்களை வழிப்படுத்தும் "இடைமுகம்' எனப்படும் இன்டர்பேஸ் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. சட்டென உணரும் வகையில் வேகம் அதிகரிக்கப் பட்டுள்ளது. இன்னும் வளர்ந்து வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம் முழுமையாக சப்போர்ட் செய்யப் படுகிறது.

சிங்கரனைசேஷன் என அழைக்கப்படும், இணைந்து செயல்படுத்தப்படும் தன்மை, ஆட் ஆன் எனப்படும் துணைத் தொகுப்புகளைப் பதிந்த பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்யாமலேயே அவற்றை இயக்கும் தன்மை, டேப்களை குரூப் செய்து பயன்படுத்தும் வசதி ஆகியவைகள் குறிப்பிட்டுச் சொல்லும் வசதிகளாகும்.

இணைய தளங்கள் நம் பெர்சனல் தகவல்களைப் பின்பற்றிக் கைப்பற்று வதற்கான தடை (donottrack feature) இந்த பிரவுசரில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மைக் குறி வைத்து தரப்படும் விளம்பரங்கள் நமக்கு இடையூறாக இருக்காது. டேப்கள் அனைத்தும் மேலாக அமைக்கப்பட்டுள்ளன.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இந்த பிரவுசர் இயங்குகையில், மெனு பாருக்குப் பதிலாக, பயர்பாக்ஸ் வழங்கும் பட்டன்கள் உள்ளன. ஏற்கனவே திறந்து இயக்கப்பட்ட டேப்களுக்கு ஸ்மார்ட் லொகேஷன் பார் மூலம் எளிதாகச் செல்லலாம். ஸ்டாப், ரெப்ரெஷ் மற்றும் ரீலோட் பட்டன்கள் ஒரே பட்டனாக, அட்ரஸ் பாருக்குள்ளாகத் தரப்பட்டுள்ளன. இதனால், அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார், சற்று நீளமாகக் காட்சி தருகிறது.

புக்மார்க்ஸ் டூல்பார், புக்மார்க்ஸ் பட்டனாக மாற்றப்பட்டுள்ளது. நமக்கு பழையபடி டூல்பாராகத்தான் வேண்டும் என்றால், மாற்றிக் கொள்ளலாம்.

அடோப் பிளாஷ், ஆப்பிள் குயிக் டைம் அல்லது மைக்ரோசாப்ட் ப்ளக் இன் இயங்கும்போது, அவற்றில் கிராஷ் ஏற்பட்டால், பயர்பாக்ஸ் பாதுகாக்கப் படும். கிராஷ் ஆகாது. அந்த தளம் மட்டும் முடங்கும். HD HTML5 WebM பார்மட்டிற்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது.

முக்கிய மெனுக்கள் எல்லாம், ஆப்பரா பிரவுசரில் உள்ளது போல மேலாக இடது பக்கம் ஒரு பட்டனில் கிடைக்கிறது. மெனுவுக்குள் மெனுவாக அனைத்து மெனுக்களும் உள்ளன. ஆனால் பழைய முறையில் தான் மெனு வேண்டும் என விருப்பப்படுபவர்கள், அந்த முறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வகையில் தன்னுடன் போட்டியிடும் மற்ற பிரவுசர்களில் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும், பயர்பாக்ஸ் 4 கொண்டுள்ளது. எளிமையாகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்தி, இணைய தளக் காட்சிக்கு அதிக இடம் தருகிறது.

டேப்கள் அனைத்தும் அட்ரஸ் பாருக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளன. டேப்களை எங்கும் நகர்த்தலாம். மொஸில்லா இவற்றை அப்ளிகேஷன் டேப் என அழைக்கிறது. இவற்றை எங்கு வேண்டுமானாலும் பின் அப் செய்து கொள்ளலாம். டேப் பாரில் இவை அப்படியே நிற்கின்றன. பிரவுசரை மூடித் திறந்தாலும், அவை அங்கேயே காட்சி தருகின்றன.

வலது ஓரத்தில் ஒரு புதிய டேப் பட்டன் ஒன்று காட்டப்படுகிறது.

பயர்பாக்ஸ் பனோரமா (Firefox Panorama) என்ற புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் டேப்களைக் கையாளலாம். இtணூடூ + குடடிஞூt + உ கீகளை அழுத்தினால், இந்த பனோரமா செயல்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து டேப்களையும் காட்டுகிறது. அனைத்து டேப்களின் தளங்களும், நக அளவில் காட்சிகளாகக் காட்டப் படுகின்றன.

இதனைப் பயன்படுத்தி, டேப் குரூப்களை உண்டாக்கலாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட குரூப்களிலிருந்து டேப்களை நீக்கலாம் மற்றும் இணைக்கலாம். ஒரு குரூப்பில் உள்ள டேப்பில் கிளிக் செய்தால், அந்த குரூப்பில் எந்த டேப்கள் உள்ளனவோ, அதற்கான இணைய தளங்கள் மட்டுமே காட்டப்படும்.

டேப் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, நேராக அதனை ஒரு குறிப்பிட்ட குரூப்பில் சேர்க்கலாம். இதன் மூலம் நாம் நம் வேலைகளுக்கேற்றபடி, இணைய தளங்களை குரூப்களாகப் பிரிக்கலாம். பத்திரிக்கை தளங்கள், இசை தளங்கள், நம் அலுவலக வேலை சார்ந்த தளங்கள் என வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஆட் ஆன் மேனேஜர் வசதியும் இப்போது ஒரு டேப்பாகக் கிடைக்கிறது. இதன் மூலம், பிரவுசரில் நிறுவப்பட்டுள்ள பெர்சனாஸ், ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் ப்ளக் இன் புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் குரோம் 10 பிரவுசர்களில் இருப்பது போல, பயர்பாக்ஸ் பிரவுசரில் ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இணைய தளம் ஒன்று இறங்கும்போதும், கர்சரை லிங்க் ஒன்றின் மீது கொண்டு செல்லும் போது மட்டும் இந்த ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் காட்டப்படுகிறது.

பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பில், ஒவ்வொரு இணைய தளத்திற்கான டேப்பும், தனியாக சிஸ்டத்தின் டாஸ்க் பாரில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் இறுதித் தொகுப்பில் இது எடுக்கப்பட்டு மொத்தமாகவே காட்டப்படுகிறது. விண்டோஸ் 7 போன்ற சிஸ்டங்களில் இது நன்றாகச் செயல்படும். ஏனோ, மொஸில்லா இதனை நீக்கிவிட்டது.

குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இது கிடைக்கிறது. ஒவ்வொரு டேப்பிற்கான இணைய தளமும் தனியே ப்ராசஸ் செய்யப்படுகிறது. ஆனால், இதனால், மெமரி அதிகம் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை, இதனைத் தவிர்க்க, மொஸில்லா, இந்த வசதியை எடுத்திருக்கலாம்.

இந்த பிரவுசரில் Firefox Sync என்ற ஒரு வசதி தரப்படுகிறது. பிரவுசரின் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட், மற்றும் திறந்திருக்கும் டேப்கள் கூட, இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படும். அடுத்தடுத்து, வெவ்வேறு கம்ப்யூட்டர் களில் பணியாற்று பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, அலுவலகம் மற்றும் வீடுகளில் கம்ப்யூட்டர்களில் பணி மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி அவசியம் தேவைப்படும்.

இதுவரை இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இருந்து வந்தது. பயர்பாக்ஸ் பதிப்பு 4ல்,இது ஒரு உள்ளார்ந்த வசதியாகத் தரப்பட்டுள்ளது.

முன்பெல்லாம், பேக் கிரவுண்ட் படங்களுடன் ஓர் இணைய தளம் டவுண்லோட் ஆகும் போது, பயர்பாக்ஸ் பிரவுசர் சற்று திணறும். ஆனால் தற்போது பிரவுசரில் இயங்கும் புதிய ஜெக்கோ 2.0 (Gecko 2.0) இஞ்சின், எந்த சுமையுள்ள தளத்தையும் எளிதாக இறக்கிக் காட்டுகிறது.

இதுவரை இயங்கிய பயர்பாக்ஸ் பிரவுசர்கள், கம்ப்யூட்டர் மெமரியில், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அதிக மெமரியை எடுத்துக் கொண்டன. ஆனால் பயர்பாக்ஸ் 4, மற்ற பிரவுசர்களைப் போல நியாயமான அளவிலேயே மெமரியைப் பயன்படுத்துகிறது.

இந்த வகையில், குரோம், அது மல்ட்டி ப்ராசஸ் சிஸ்டம் பயன்படுத்துவதால், அதிக மெமரியை எடுத்து இயங்குகிறது. ஆனால் இதே வகையில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மிகக் குறைந்த அளவிலேயே, மெமரியைப் பயன்படுத்துகிறது.

மற்ற பிரவுசர்களைக் காட்டிலும், அனைத்து வகைகளிலும் சிறப்பான பிரவுசராக, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கருத முடியாது. இருப்பினும், இதன் முந்தைய பதிப்பைக் காட்டிலும், வியக்கத்தக்க வகையில் பல முன்னேற்றங்களை பயர்பாக்ஸ் பதிப்பு 4 கொண்டுள்ளது. எனவே பயர்பாக்ஸ் ரசிகர்களும், புதிய பிரவுசர் ஒன்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்களும், இதனை மொஸில்லா வின் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.

நீங்கள் பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரி லிருந்து, பதிப்பு 4க்கு மாறுவதாக இருந்தால், அதிக மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மாற்றங் களுடன் செயல்படுவது கடினமாக இருந்தால், மெனு டூல் பாரினை இயக்கிக் கொள்ளவும். அதே போல புக்மார்க்ஸ் மெனு பார் தேவை என்றாலும், மெனு பாரினை இயக்கி பயன்படுத்த வேண்டும்.


Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.

தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது.

மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும்.

மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும்.

இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.


Notepad மூலம் ஒரு Folder ஐ Lock செய்ய

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்

உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}


பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.


பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil


பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.


இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .


குயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட

1. முதலில் Start, All Programs, Accessories, System Tools கிளிக் செய்து செல்லவும்.

2. இந்த மெனுவில் Character Mapஐப் பார்க்கலாம். இங்கு ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் அந்த ஐகான் மீது அழுத்தியபடியே, இழுத்து வந்து குயிக் லாஞ்ச் டூல் பாரில் விடவும்.

3. இன்னும் கிடைக்கும் மெனுவில் Copy here என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.

இதில் நீங்கள் இடது கிளிக் செய்து அப்படியே நகர்த்தி வந்து விட்டிருக்கலாம். ஆனால் அது சிஸ்டம் டூல்ஸ் மெனுவிலிருந்து அதனை நீக்கிவிடும். வலது புறம் கிளிக் செய்து செயல் பட்டதால், இரண்டு இடங்களிலும் உங்களுக்கு கேரக்டர் மேப்பிற்கான ஷார்ட் கட் கிடைக்கிறது.

இதே வழியை விண்டோஸ் டூல் எதற்கும் பயன்படுத்தலாம். விண் டோஸ் 7 தொகுப்பில் இந்த வேலையை இன்னும் மிக எளிதாக மேற்கொள்ள லாம். ஸ்டார்ட் மீது கிளிக் செய்திடவும்.

பின்னர், character என டைப் செய்திடவும். மெனுவில் கேரக்டர் மேப் கிடைக்கும். மேலே கூறியபடி அதனை இழுத்து வந்து குயிக் லாஞ்ச் பாரில் விட்டுவிடலாம்.


மொபைல் போன்: சில ஆலோசனைகள்

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.

இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.

மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.

பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.

கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை
ஓரமாக நிறுத்திப் பேசவும்.

பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.

அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.

விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.

சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.

மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.


கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர்.

பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும் தரப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.

இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும்.

இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks from www.xmarks.com) என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.

பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன.

இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது.

விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.

மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.

இந்த பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை.

மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


எல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல்.ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் வெளியாகி இருக்கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்கப்படுகிறது.

விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகையில், இந்த மொபைலின் பின்புறம் ஐ.சி.சி. இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.


இந்த போனின் சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. 600 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ.ஆர். எம். 11 ப்ராசசர் இயங்குகிறது.

அட்ரினோ 200 ஜி.பி.யு. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்கு வேகம் கொடுத்து ஈடு கொடுக்கிறது. 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 3ஜி, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1., ஆட்டோ போகஸ் திறனுடன் கூடிய 3.15 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட ஸ்மார்ட் கார்ட் ஸ்லாட், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வழக்கமாக ஸ்மார்ட் போன்களில் காணப்படும் டிஜிட்டல் காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், MP3, H.263, H.264, DivX and Xvid ஆகிய பார்மட்களுக்கான சப்போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

இதன் அதிக பட்ச விலை ரூ. 12,990.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes