எக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க

1. பைல் அமையும் இடம்: பல பயனாளர்கள், அவர்களின் பைல்கள் சென்றடையும் இடம் My Documents ஆக இருப்பதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனை மாற்றி, நீங்கள் விரும்பும் போல்டரிலேயே, பைல்களைப் பதியும்படி செய்து கொள்ளலாம்.

File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். பின்னர், Save Documents செக்ஷனில் Default File Location பீல்டில் பைல் எங்கு சென்று சேவ் செய்யப்பட வேண்டுமோ, அதற்கேற்ப path ஐ மாற்றவும். அல்லது அந்த ட்ரைவ் மற்றும் போல்டர் பிரவுஸ் செய்து காட்டி அமைக்கவும். இவை அனைத்தும் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


2. ஷீட்களின் எண்ணிக்கை:

ஒவ்வொரு புதிய எக்ஸெல் ஒர்க் புக்கும் மூன்று ஷீட்களுடன் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் ஒர்க்ஷீட்டுகளை இணைக்கலாம் அல்லது நீக்கலாம். அதே நேரத்தில், மாறா நிலையில் உள்ள ஒர்க்ஷீட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.

File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும்.

இடது பிரிவில் General கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When Creating New Workbooks என்ற பிரிவில், எத்தனை ஷீட்கள் மாறா நிலையில் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த எண்ணை Include This Many Sheets என்ற பீல்டில் அமைக்கவும். எக்ஸெல் 2003ல், Sheets In New Workbook என்பதைப் பயன்படுத்தி இந்த எண்ணை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


3. குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறக்க:

எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது, சிலர் ஏதேனும் ஒரு ஒர்க்புக்கினை எப்போதும் திறந்து அதிலிருந்து தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். இவர்களுக்கு எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறந்தால், பல வேலைகள் மிச்சமாகும்.

இதனையும் நாம் செட் செய்துவிடலாம். அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்கினை XLStart போல்டரில் சேவ் செய்து விட்டால், எக்ஸெல் புரோகிராமினைத் திறக்கையில், அந்த ஒர்க்புக்குடனே திறக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், இந்த போல்டரைக் கீழே குறிப்பிட்ட வகையில் காணலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி: C:\Documents and Settings\user name\Application Data\Microsoft\Excel\XLStart

விண்டோஸ் விஸ்டா: C:\Users\user name\AppData\Local\Microsoft\Excel\XLStart

விண்டோஸ் 7: C:\Program Files\Microsoft Office\Office\XLStart எப்போதும் ஒரு பைலை சேவ் செய்வது போல, அதனை இந்த XLStart போல்டரில் சேவ் செய்துவிடவும்.


4. கர்சர் செல்லும் முறை:

நீங்கள் என்டர் தட்டினால், எக்ஸெல் புரோகிராமில் கர்சர் கீழாக ஒரு செல் செல்லும். ஆனால், நீங்கள் வலது பக்கம் உள்ள செல்லில் டேட்டா அமைக்க விரும்பினால், என்டர் தட்டியவுடன், வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும் வகையில் அமைக்கலாம்.

File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் Advanced கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் Edit டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

Editing Options பிரிவில் Direction என்ற கீழ்விரி மெனுவில், After Pressing Enter Move Selection என்பதன் கீழ் Right என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எந்த திசையில் வேண்டுமானாலும் கர்சர் செல்லும்படி அமைக்கலாம்.

அதற்கென Right, Left, Up, மற்றும் Down ஆக நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். எக்ஸெல் 2003ல் இது Move Selection After Enter எனக் கொடுக்கப்பட்டிருக்கும். கர்சர் நகர்த்தப்படக் கூடாது என எண்ணினால், இங்கு ஆப்ஷன் கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். இவ்வளவும் செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


வெளியானது எம்.எஸ். ஆபீஸ் 2013 (MS Office 2003)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இதனைhttp://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள உங்களிடம் விண்டோஸ் லைவ் ஐ.டி. ஒன்று தேவை. இல்லாதவர்கள் உடனே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பில், எந்த சாதனம் வழி நுழைந்தாலும், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ், நிலைகள் கிடைக்கும். எனவே எங்கிருந்து இதனை இயக்கினாலும், உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் உருவாக்கிய நிலைகள் கிடைக்கும்.

ஆபீஸ் 2013 தொகுப்பு வர்த்தக ரீதியாக என்று விற்பனைக்கு வரும் என இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரக் கூடும் என உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், ஹோம் அண்ட் ஸ்டூடண்ட் ஆபீஸ் 2013 (Office Home and Student 2013) இலவசமாக இணைந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இதில் வேர்ட், எக்ஸெல், ஒன் நோட், பவர்பாய்ண்ட் ஆகியவை இருக்கும். மைக்ரோசாப்ட் தர இருக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ் 2013 பதிப்பு இலவசமாகவே பதிந்து தரப்பட இருப்பதால், இந்த முடிவினையும் மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது இயற்கையே.

ஆபீஸ் 2013 தொகுப்பு இயக்க தேவையான ஹார்ட்வேர் கூறுகள் பின்வருமாறு. ஒருகிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் அல்லது SSE2 இன்ஸ்ட்ரக்ஷன் செட்டுடன் கூடிய x86/x64 ப்ராசசர், 32 பிட் இயக்கமாக இருப்பின் 1 ஜிபி ராம் நினைவகம், 64 பிட் இயக்கமாக இருந்தால் 2 ஜிபி ராம், விண்டோஸ் 7 அல்லது பின்னர் வந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது விண்டோஸ் சர்வர் 2008/2012 ஆகியவை தேவைப்படும்.

எனவே விஸ்டா அல்லது எக்ஸ்பியில் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், புதிய ஆபீஸ் 2013 தொகுப்பு வேண்டும் என்றால், உயர்நிலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஆபீஸ் 2003, 2007 அல்லது ஆபீஸ் 2010 இயக்கிக் கொண்டிருப்பவர்கள், அதனை சிஸ்டத்திலிருந்து நீக்க வேண்டியதில்லை. ஆபீஸ் 2013 பதிந்த பின்னர், இரண்டையும் தனித்தனியே இயக்கி வேலைகளை மேற்கொள்ளலாம்.

வழக்கமான எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீனத் தொகுப்பாகத்தான், ஆபீஸ் 2013 வெளியிடப்படுகிறது. ஆபீஸ் 365 தொகுப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆனால், ஆபீஸ் 365 பிளாட் பார்மில் இயங்க ஒப்பந்தம் மேற்கொண்டவர்களுக்கு, ஆபீஸ் 2013 கூடுதல் வசதியாகத் தரப்படுகிறது.

ஆபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும். எனவே எங்கிருந்தும், எந்த சாதனம் மூலமாகவும், உங்கள் பைல்களை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முற்றிலுமான ஒரு மாறுதலுக்குக் கொண்டு வந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் ஆபீஸ் தொகுப்பிலும் அதே வேகத்துடன் மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. எக்ஸெல், வேர்ட் மற்றும் பவர்பாய்ண்ட் ஆகிய அனைத்தும் முழுமையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.


தொட்டு இயக்கு:

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொட்டு இயக்கு தொழில் நுட்பத்திற்கேற்ப ஆபீஸ் 2013 தொகுப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் டாகுமெண்ட்டைக் கிள்ளி விரிக்கலாம். படங்களை விரல்களால் ஸூம் செய்திடலாம். ஸ்டைலஸ் வைத்து முதலில் கிறுக்கலாம்; பின்னர் அதனையே டெக்ஸ்ட்டாக மாற்றி பதிந்து வைக்கலாம்.

ஸ்டைலஸ் பேனாவினை, பிரசன் டேஷன் காட்டுகையில் லேசர் பாய்ண்ட்டர் போலப் பயன்படுத்தலாம்; வண்ணம் தீட்டலாம்; நம் தவறுகளைத் திருத்தலாம். இவற்றுடன் மவுஸ் மற்றும் கீ போர்டும் செயல்படும்.

வேர்ட் புரோகிராமில், புதிய மெனு மற்றும் ரிப்பன்கள் கொண்டு வந்த பின்னர், எந்தவிதமான பெரிய
மாற்றமும் ஏற்படுத்தப்படாமல் இருந்தன. இப்போது மிக அதிகமான இடம், தேவையற்ற எதுவும் இல்லாமல் சுத்தமான கிளீன் ஸ்லேட் போன்ற தளம் தரப்படுகிறது. பயனாளர்கள் விருப்பப்பட்டால், ரிப்பன் இன்டர்பேஸையும் மறைத்து வைத்து இயக்கலாம். ஆபீஸ் இப்போது அனைத்து வகை சாதனங்களிலும் இயங்குவதால், டாகுமெண்ட்கள் திரையின் அளவிற்கேற்ப சுருங்கி விரிந்து படிக்க எளிதாக அமைக்கப்படுகின்றன.

ஆபீஸ் 2013 தொகுப்பின் மிகப் பெரிய வசதியாக, அதில் தரப்பட்டிருக்கும் பி.டி.எப். பைல் படிக்கும், உருவாக்கும் வசதியினைக் கூறலாம். பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்ட் தொகுப்பிலேயே எடிட் செய்திடலாம். பி.டி.எப். பைலை இதிலேயே திறக்கலாம்; அதன் ஹெடர், வரிசைப் பத்தி, புட்நோட் என அனைத்தையும் காணலாம்; அதன் கிராபிக்ஸ் வரை எடிட் செய்திடலாம். டேபிள்களைக் கூட, நீங்களே அவற்றை உருவாக்கியது போல எடிட் செய்திடலாம்.

ஆபீஸ் 2013 தொகுப்பில், நெட்வொர்க் இணைப்பினை எளிதாகப் பெறலாம். விண்டோஸ் டேப்ளட், பி.சி., அல்லது விண்டோஸ் போன் என எந்த சாதனத்தில் இதனை இயக்கினாலும், ஸ்கை ட்ரைவ் மூலமாக, ஆபீஸ் பைல்களைப் பெற்று இயக்கலாம். மாறா நிலையில் இந்த ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவில் உங்கள் பகுதிக்குச் செல்கின்றன.

டாகுமெண்ட்களைப் பார்க்க புதியதாக Reader என்னும் வியூ தரப்படுகிறது. இந்த வியூவில் டாகுமெண்ட்களைப் பார்க்கையில், ஒவ்வொரு பத்தியின் முன்னரும் ஒரு சிறிய முக்கோணம் காணப்படுகிறது. இந்த முக்கோணம் சார்ந்த பத்தியினைப் படித்த பின்னர், பாரா சுருக்கப்பட்டு தொடர்ச்சி காட்டப்படுகிறது. அடுத்த பக்கத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

டாகுமெண்ட் ஒன்றைப் படித்து செயல்படுத்துகையில், எதுவரை நீங்கள் எடிட் செய்தீர்களோ, அந்த இடம் புக் மார்க் போல குறித்து வைக்கப்படுகிறது. அடுத்த முறை அந்த டாகுமெண்ட்டினை வேறு எந்த சாதனத்தில் திறந்தாலும், இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்தில் திறக்கப்பட்டு காட்டப்படுகிறது.

டாகுமெண்ட்டில், இணையதளத்திலிருந்து பெறுபவற்றை அப்படியே இணைக் கலாம். அதற்கான லிங்க் அமைக்கலாம். அவற்றை டாகுமெண்ட்டை மூடாமலேயே பார்க்கலாம். பதிக்கப்பட்ட வீடியோ அளவில் சிறியதாக இருந்தால், அதனை விரித்துப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆபீஸ் 2013 தொகுப்புடன் ஸ்கைப் வசதியும் கிடைக்கிறது. ஆபீஸ் தொகுப்பின் சந்தாதாரர் ஆனவுடன், ஒவ் வொரு மாதமும் 60 நிமிடங்கள் ஸ்கைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் தொகுப்பில் டிஜிட்டல் நோட் டேக்கிங் வசதி கிடைக்கிறது. தொடுதிரை, ஸ்டைலஸ் பென், கீ போர்ட் என எதனைப் பயன்படுத்தியும் குறிப்புகளை நினைத்த மாத்திரத்தில் அமைக்கலாம்.

பவர் பாய்ண்ட் தொகுப்பிலும் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய வியூ கொடுக்கப்பட்டு, அதில் அடுத்து நீங்கள் பெறும் ஸ்லைடுகள், பிரசன்டேஷன் நேரம், ஸ்பீக்கர் நோட்ஸ் ஆகியவற்றைத் தனியே பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பல புதிய அம்சங்களை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மைக்ரோசாப்ட் இந்த வகைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளோடு போட்டியில் இறங்கியுள்ளது எனலாம். ஆப்பிள் தங்கள் புரோகிராம்கள் அனைத்து வகைகளிலும் தனித்தன்மை பெற்றவை என்றும், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது எளிது என்றும் கூறி வருகிறது.

""நான் மட்டும் என்ன சளைத்தவனா! பார் என் புரோகிராமினை'' என விண்டோஸ் 8 ஓ.எஸ். மற்றும் ஆபீஸ் 2013 தொகுப்பினை மைக்@ராŒõப்ட் களம் இறக்குகிறது. இன்னும் என்ன புதிய வசதிகள் கிடைக்கின்றன என்று போகப் போகத் தெரியவரும்.


பாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்

பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.

இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது.

இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து. அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து.

மேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் காப்பாற்றுகிற‌து.


அக்டோபர் 26ல் விண்டோஸ் 8

வரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.

அதனை மற்ற மதர்போர்டு உள்ள கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.

ஏற்கனவே உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டாலர் செலுத்திய பின்னர், உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.

இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.

முதல் முறையாக இரு வேறு வகை கம்ப்யூட்டர் சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

2011ல் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும்; யு.எஸ்.பி. 3 கிடைக்கும்; விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்;

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.


விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்

ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்: மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ என்டர் கீ தட்டியோ,ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும்.

நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும்.

இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.


போல்டருக்கு ஷார்ட் கட்:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம் களுக்கு ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத் துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும்.

அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டா ப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.

குயிக் லாஞ்ச் (எக்ஸ்பி, விஸ்டா) ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.

இது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும்.

இது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டு மென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை.

இந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.


தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க

என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும்.

எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து இரண்டு மாதங்களாவது குறைந்தது கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கென வடிவமைக்கப்பட்ட பாடங்கள் உண்டு. இப்போது அந்த கவலையே இல்லை. இணையத்திலேயே இதற்கென டைப்ரைட்டிங் ட்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு ஒரு வாரத்தில் கீ போர்டைக் கையாளக் கற்றுக் கொள்ளலாம்.

அடுத்த நிலையில் அதனை வேகமாக இயக்க நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை அண்மையில் http://keybr.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் காண நேர்ந்தது.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது.

நீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக் கொண்டு, வேகமாக டைப் அடிக்க பழக்கம் வேண்டும் எனில், அதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் தரப்படும் வேகத்தேர்வினை மேற்கொள்ளலாம்.

எவ்வளவு சரியாக டைப் செய்கிறீர்கள், எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்பதனைப் பட்டியல் போடுகிறது. உங்கள் டைப்பிங் வேகத்தினையும் வரைபடமாகக் காட்டுகிறது. சராசரியாக எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், உங்கள் வேகம் எப்படி எனப் படம் போடுகிறது.

மற்ற டைப்பிங் ட்யூட்டர் புரோகிராம்களில், நமக்குக் கற்றுக் கொடுக்க தாறுமாறாக எழுத்துக்கள் அமைந்த சொற்கள் தரப்படும். இதில் அவ்வாறின்றி, நல்ல டெக்ஸ்ட் தரப்படுகிறது. இதனால் நாம் ஆர்வம் பெற்று, சோதனைகளை மேற்கொள்கிறோம்.

இதனை இணைய தளத்தில் வைத்துத்தான் இயக்க முடியும். தனி புரோகிராமாக தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகளுக்குமான பாடங்களும் இருக்கின்றன.

அவை நமக்குத் தேவையில்லையே. சரி, இந்த தளத்தின் மூலம் நம் டைப்பிங் திறனை அதிகப்படுத்தத்தான் வேண்டுமா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

நம் தேடல் சொற்கள், உருவாக்கும் ஆவணங்கள் சரியாகவும், வேகமாகவும் அமைக்கப்பட வேண்டுமாயின், இது போன்ற சில பாடங்களும் சோதனைகளும் தேவை தான். ஒரு முறை இந்த தளம் சென்று பாருங்கள். நிச்சயம் உங்கள் டைப்பிங் திறன் கூர்மைப் படுத்தப்படும்.


பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம்.

இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.

Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப் பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.

Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத்தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.

Slide Show: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.

Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும்.

(குறிப்பு: இவற்றில் சில வியூக்கள் பவர்பாய்ண்ட் 98ல் கிடைக்காது)


விண்டோஸ் 8 புதிய செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது என்ற செய்தியுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில், ஆய்வமைப்பு வெளியிட்ட செய்தியில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எதிர்பார்ப்பதால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்கள், தங்கள் முடிவை சற்று ஒத்தி போட்டுள்ளனர்.

இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை உலக அளவில் சரியத் தொடங்கி உள்ளது. இதற்குக் காரணம் விண்டோஸ் 8 வர்த்தக வெளியீட்டிற்கான தேதி அறிவிப்பு மட்டுமல்ல. அதன் ரிலீஸ் பிரிவியூ காட்டியுள்ள பல புதிய வசதிகளும் தான்.

மேலும் நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை உச்சகட்டத்தினை அடைந்து இப்போது அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. புதியதாக விண்டோஸ் 8 என்ன தரும் என இதனைப் பயன்படுத்துபவர்கள் காத்திருக்கின்றனர்.

கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்களும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருப்பதால், தங்களிடம் உள்ள பெர்சனல் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களின் இருப்பு எண்ணிக்கையினைக் குறைக்க விரும்பி, செயலில் காட்டி வருகின்றனர்.

உலக அளவில் மொத்த கம்ப்யூட்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில், சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில், லெனோவா தன் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தியுள்ளது.

25% கூடுதல் விற்பனையுடன், மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தை எச்.பி. கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் இவற்றின் விற்பனைப் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 15.5%க்கு இறங்கியது.

அசூஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.8% உயர்ந்தாலும், ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அளித்திடும் நிறுவனங்களிடம் இருந்து, லைசன்ஸ் ஒன்றுக்கு 100 டாலர் மைக்ரோசாப்ட் கட்டணமாக விதித்திருந்தது.

இதனைத் தற்போது குறைத்துள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்டோஸ் ஆர்.டி. பதிந்த கம்ப்யூட்டர்களுக்கான உரிமக் கட்டணம் 80 முதல் 100 டாலராகவும், எக்ஸ்86 பதிப்புக்கு 60 முதல் 80 டாலராகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், விண்டோஸ் 8 பதிந்து விற்பனை செய்திட, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் லாபம் அதிகமாகும். இதனால், அவை கம்ப்யூட்டர் விற்பனை விலையைக் குறைக்கலாம்.


இணைய தள அக்கவுண்ட்களில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்

தொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது.

நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.

எனவே பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்குவதிலும், இணைய தள அக்கவுண்ட்களைக் கையாள்வதிலும் நாம் குறைந்த பட்ச அளவிலாவது பாதுகாப்பு வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

சில பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள், மிக வலுவான, தனிப்பட்ட பாஸ்வேர்ட்களை, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தள அக்கவுண்ட்களுக்கு உருவாக்கி வழங்குகின்றன. இதனால், நாம் இந்த வகையான பாஸ்வேர்ட்களை, திரும்பப் பயன்படுத்த வழி கிடைக்கிறது.

மேலும் இவை வெப் பிரவுசர்களுடன் இணைந்து இயங்குவதால், இணையதள லாக் இன் படிவங்களில் தேவையானவற்றைத் தாங்களாகவே பூர்த்தி செய்து, அவற்றை சேவ் செய்தும் வைக்கின்றன. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இயங்க முடிகிறது. இவற்றில் சிறப்பானவையாக Last Pass, Kee Pass மற்றும் 1Password ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நாம் அனைவருமே ஜிமெயில் அக்கவுண்ட் பயன்படுத்துகிறோம். இன்னொரு இணைய தள அக்கவுண்ட்டில் பயன்படுத்தும் பாஸ்வேர்டினையே இதற்கும் பயன்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஏனென்றால், நம் மிக முக்கியமான பைல் பரிமாற்றங்கள் ஜிமெயில் வழியே நடைபெறுகின்றன. ஜிமெயில் தளத்தில் அவை உள்ளன என்ற எண்ணத்தில் அவற்றிற்கு பேக் அப் கூட எடுப்பதில்லை. இந்நிலையில் நாம் ஒரே பாஸ்வேர்டையே

பல இணைய தள அக்கவுண்ட்களுக்கு, குறிப்பாக ஜிமெயில் தளத்தில் பயன்படுத்தினால், பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேமினை எளிதாக ஹேக்கர்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. எனவே ஒவ்வொரு தள அக்கவுண்ட்டிற்கும், குறிப்பாக நம்முடைய முக்கிய டேட்டா பைல்கள் கையாளப்படும் தளத்திற்கு, வலுவான, தனியான பாஸ்வேர்ட் பயன்படுத்துவது முக்கியம்.

மேலும் இப்போது இரண்டு அடுக்கு பாஸ்வேர்ட் சரிபார்த்தல் (two step verification) என்னும் வசதி ஜிமெயில் தளத்தில் கிடைக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த வசதியினால், நீங்கள் அறியாமல், வேறு எவரும் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து பார்க்க இயலாது.

இந்த பாதுகாப்பினை ஏற்படுத்திய பின்னர், நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்குள் நுழைகையில், உங்கள் மொபைல் போனுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பப்படும். இதில் தரப்படும் குறியீட்டினை இடுகையாகத் தந்தால் தான், ஜிமெயில் அக்கவுண்ட் திறக்கப்படும். இதனை அமைக்க 10 நிமிடங்கள் ஆகும்.

ஆனால், நாம் மாதக்கணக்கில் மேற்கொண்ட உழைப்பு, ஏன் ஆண்டுக் கணக்கில் செயல்பட்ட கோப்புகள் பாதுகாக்கப்படுமே. இதுவரை இந்த வசதியினை இயக்கி வைக்காதவர்கள், உடனே இதனை செட் அப் செய்வது நல்லது. கூகுள் மெயிலின் மேலாக Google Accounts Settings என்பதில் கிளிக் செய்து, இந்த செட் அப் வசதியினை மேற்கொள்ளலாம்.

தனி நபர்களுக்கான டேட்டாவினை, என்கிரிப்ட் செய்து (disk encryption) பயன்படுத்துவது, முழுமையான டிஸ்க் பாதுகாப்பினை அளிக்கும். இந்த தொழில் நுட்பம் டேட்டாவினை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கிறது. இதனால், இதற்கான சரியான கீ இல்லாமல், வேறு எவரும் டேட்டாவினைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் Microsoft BitLocker மூலம் இந்த வசதியினைப் பெறலாம். TrueCrypt பயன்படுத்தினால், எந்த வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைந்த டேட்டாவிற்கும் என்கிரிப்ஷன் வழிகளை மேற்கொள்ளலாம். இதனை முழுமையாக அறிந்து கொள்ள http://www.truecrypt.org என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

கூகுள் குரோம் இணைய பிரவுசர் பலவகையான வலுவான பாதுகாப்பு வழிகளைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. அவற்றில் sandbox, safe browsing tools, speedy patching and automatic/silent updating ஆகியவை குறிப்பிடத் தக்கனவாகும். எனவே முழுமையான பாதுகாப்புடன் கூடிய இணைய உலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குரோம் பிரவுசருக்கு மாறிக் கொள்வது நல்லது.

அல்லது பாதுகாப்பு தேவை எனக் கருதும் டேட்டாவினைக் கையாளுகையிலாவது குரோம் பிரவுசர் வழி கையாளலாம். குரோம் பிரவுசர் தேர்ந்தெடுத்துப் பின்னர் KB SSL Enforcer extension ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் மூலம், குரோம் பிரவுசரில் இணைய உலா மற்றும் பரிமாற்றம் மேற்கொள்கையில், எங்கெல்லாம் என்கிரிப்ஷன் இயங்க முடியுமோ, அங்கு டேட்டா என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

நம்முடைய டேட்டா எந்த நேரத்தில், எப்படிப்பட்ட ஹேக்கரால், எந்த மால்வேர் மூலம் திருடப்படும் அல்லது அழிக்கப்படும் என நாம் கணிக்க முடியாது. எனவே நாம் முக்கியமாகக் கருதும், எல்லாமே முக்கியம் தான், டேட்டா அடங்கிய பைல்களுக்கு உடனுடக்குடன் பேக் அப் எடுத்து சேவ் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

Mozy, Carbonite or iDrive ஆகிய நிறுவனங்கள் தரும் வசதிகளைப் பயன்படுத்தி நாம் பேக் அப் பைல்களை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இவை அனைத்து வகை பார்மட் பைல்களையும் ஏற்றுக் கொள்கின்றன. இணைய வெளியில் இன்னும் சில தளங்கள், குறிப்பிட்ட பார்மட் (ஆடியோ, டேட்டா, வீடியோ போன்றவை) பைல்களை சேவ் செய்து பாதுகாக்க என இயங்குகின்றன. இவற்றின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது கையில் எடுத்துச் செல்லும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை வாங்கிப் பயன்படுத்தலாம். ரூ.4,000 முதல் தொடங்கி, கொள்ளளவிற்கு ஏற்ற வகையில் இவை கிடைக்கின்றன. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி, நாம் இழக்கக் கூடாத பைல்களை இதில் பதிந்து வைத்துப் பயமின்றி இருக்கலாம். இது குறித்த மேலதிகத் தகவல்களுக்குhttp://windows.microsoft.com/enUS/windowsvista/Backupandrestorefrequentlyaskedquestions என்ற முகவரியில் உள்ள தளம் சென்று காணவும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜாவா இயங்கும் போது ஹேக்கர்கள் எளிதாக நுழைய முடியும் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. எனவே, தேவை இல்லை எனில், ஜாவாவை இயக்குவதனை நிறுத்திவிடலாம். அல்லது ஜாவாவை அன் இன்ஸ்டால் செய்திடலாம். ஹேக்கர்களுக்கு வசதியான தளம் அமைத்துக் கொடுக்கும் ஜாவாவினை கூடுமானவரை தவிர்க்கலாம்.

அண்மைக் காலங்களில், அடோப் ரீடர் தொகுப்பின் பயன்பாட்டின்போது, பல ஹேக்கர்கள் தங்கள் மால்வேர் புரோகிராமினை இயக்கி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது வழக்கமாகி வருகிறது. இதனை அடோப் நிறுவனமும் ஒத்துக் கொண்டு அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. எனவே நீங்கள் அடோப் அக்ரோபட் ரீடர் புரோகிராமினைப் பயன்படுத்துபவராக இருந்தால், உடனே அண்மைக் காலத்திய பதிப்பு மற்றும் பேட்ச் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து உங்கள் பைல்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அண்மையில் வெளிவந்துள்ள அக்ரோபட் எக்ஸ் (Acrobat X) நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தினைக் கொண்டிருப்பதாகவும், இதனை வளைத்து இதுவரை எந்த ஒரு ஹேக்கரும் மால்வேர் புரோகிராமினை அனுப்பியதாகத் தெரியவில்லை என அடோப் நிறுவனப் பாதுகாப்பு பிரிவின் தலைவர் பிராட் அர்கின் தெரிவித்துள்ளார்.

எனவே அக்ரோபட் எக்ஸ் தொகுப்பிற்கு அனைவரும் மாறிக் கொள்வது நல்லது. அல்லது, அக்ரோபட் ரீடருக்கு மாற்றாகப் பல இலவச புரோகிராம்கள் இணைய தளங்களில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பினைத் தரும்.

சைபர் கிரிமினல்கள் என அழைக்கப்படும், இணைய வெளி திருடர்களுக்கு, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்டு இன் போன்ற தளங்கள் மிகவும் எளிதான ஆடுகளங்களாக இருக்கின்றன. எனவே எந்த டேட்டாவினை, இந்த சமூகத் தளங்களில் பகிர்ந்தாலும், சற்று முன் யோசனையுடன் மேற்கொள்ளவும்.

உங்கள் தனி நபர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் முன்னர், அவை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தால், கூடுமானவரை அவற்றைப் பிறர் அறியத் தருவதனைத் தவிர்க்கலாம். இது போன்ற தகவல்களால் ஈர்க்கப்படும் ஹேக்கர்கள், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரை, இந்த தளங்களின் வழியாகவே எளிதாக அணுகுவார்கள். உங்களுக்கான தூண்டில் போட, நீங்கள் அளிக்கும் தகவல்கள் வழி காட்டக் கூடியதாக அமைந்துவிடும்.

கம்ப்யூட்டர்களில் பாதுகாப்பு வளையங்கள் பல அமைத்து செயல்படுகிறோம். இருப்பினும் இவற்றில் உள்ள பலவீனமான இடங்களை அறிந்தே ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டர்களை அணுகுகின்றனர். எனவே பாதுகாப்பு வளையங்களைத் தரும் புரோகிராம்கள், அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகையில், உடனடியாக அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டரே அவற்றை மேற்கொள்ளும் வகையில், ஆட்டோமேடிக் அப்டேட் முறையை செட் செய்திட வேண்டும். பாதுகாப்பு வளையங்கள் தரும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில், ஒவ்வொரு படிநிலையையும் நன்கு படித்து, உணர்ந்து செட் செய்திடவும்.

என்னவென்று அறியாமல், அனைத்திற்கும் டிக் செய்து அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், பாதுகாப்பு தரும் புரோகிராம்களுடன், தேவையற்ற சில தொடுப்பு புரோம்களும் இணைந்தே உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். பின்னர், இவற்றை நீங்கள் இயக்கிப் பார்க்கையில், ஹேக்கர்கள் நுழையலாம்.

அடிக்கடி கண்ட்ரோல் பேனல் சென்று, நீங்கள் அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்கவும். அவையும் மால்வேர்களை ஈர்க்கும் புரோகிராம்களாக இருக்கலாம். வெகு நாட்கள் பயன்படுத்தாமல், என்றேனும் ஒரு நாளில் பயன்படுத்துகையில் பிரச்னையைத் தரலாம்.


சாம்சங் கேலக்ஸி S-3 விற்பனையில் புதிய சாதனை

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில் 1 கோடி ஸ்மார்ட்போனுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மே 3ம் தேதி லண்டனில் அறிமுகமானது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் ஜூன் 31ம் தேதி அறிமுகமானது.

போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன.

ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில் நுட்பத்தினையே குறிக்கிறது.

சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

தனது அடுத்த படைப்பை வெளியிட இருக்கிறது.


ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.


1. Abort (அபார்ட்):

ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.

எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.


2. Batch File (பேட்ச் பைல்):

வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.


3. BIOS (பயாஸ்):

இதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.

இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.

இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.

BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.


Clean boot (கிளீன் பூட்):

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.


கூகுள் வீடியோ நிறுத்தம்

கூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா? அதுதான் இல்லை.

கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்னரே, யுட்யூப் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது.

ஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் மாதத்துடன் மூடப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில், கூகுள் வீடியோ தொடங்கப்பட்டது. தங்களுடைய வீடியோ படங்களை இணையத்தில் தேக்கி வைத்திட, சர்வர் இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் இது தொடங்கப்பட்டது.

ஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடியோ பார்க்க முயற்சிக்கையில், அதன் சர்வர் தள்ளாடியது. அதனால், ஈடு கொடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டிலேயே தனக்குப் போட்டியாக இயங்கி வந்த யுட்யூப் தளத்தை, கூகுள் வாங்கியது.

கூகுள் வீடியோ தளத்தினை சீரமைக்க கூகுள் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப் போயின.

இதனால், 2009 ஆம் ஆண்டு முதல், வீடியோ கிளிப் பைல்கள் அப்லோட் செய்வது அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஆகஸ்ட் 20 முதல் இத்தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், அவற்றை யுட்யூப் தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்; அல்லது தங்கள் கம்ப்யூட்டரில் இறக்கிப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 20க்குப் பின்னர், கூகுள் வீடியோ தளத்தில் உள்ள வீடியோ பைல்களை, கூகுள் நிறுவனமே யுட்யூப் தளத்திற்கு மாற்றிவிடும்.

இதே போல தன்னுடைய ஐ கூகுள் சேவையினையும், கூகுள் மூடுகிறது. தனி நபர்கள் தங்களுக்கென ஒரு தளத்தை அமைத்து இயங்க இந்த சேவையினை கூகுள் வழங்கியது.

தற்போது இது போல பல தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இயங்குவதால், இதனையும் மூடுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, சிம்பியன் சர்ச் அப்ளிகேஷன், கூகுள் மினி மற்றும் கூகுள் டாக் சேட் பேக் ஆகிய வசதிகளும் மூடப்படுவதாக, கூகுள் அறிவித்துள்ளது.


சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.


1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு:

என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர்.

நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.


2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல:

இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும்.

உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.


3.குற்றச்சாட்டுக்கான மேடையா இது?:

சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.


4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? :

இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.


5.மேற்கோள்கள் தேவையா?:

சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.


6. வீணான பெருமை வேண்டாமே!:

சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.


7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?:

சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.


8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?:

என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.


நோக்கியா 110 மற்றும் 112

பட்ஜெட் விலையில், வேகமான இணையத் தேடல் பெறும் வகையில் இரண்டு மொபைல் போன்களை நோக்கியா வெளியிட்டுள்ளது.

நோக்கியா 110 மற்றும் நோக்கியா 112 ஆகிய இந்த இரண்டும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தருவதோடு, பன்னாட்டளவில் பிரபலமான கேம்ஸ் மற்றும் நோக்கியா அப்ளிகேஷன் ஸ்டோருக்கும் இணைப்பு தருகின்றன.

இதில் தரப்பட்டுள்ள நோக்கியா பிரவுசர் இணைய தளங்களை கம்ப்ரஸ் செய்து தருவதால், டேட்டா இறக்கம் வெகுவாகக் குறைகிறது.

இதனால், மொபைல் இன்டர்நெட் செலவு குறைகிறது. நோக்கியா 112 மொபைலில் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதி இணைத்தே தரப்பட்டுள்ளது.

தரமான கேமரா இருப்பதால், படங்களுடன் முகவரிகளை அமைக்க முடிகிறது. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு சிம்களை இவற்றில் இயக்க முடிகிறது.

எளிதில் இவற்றை மாற்ற முடிகிறது. இதற்கென போனை ஸ்விட்ச் ஆப் செய்திடவோ, பேட்டரியைக் கழட்டவோ தேவையில்லை.

ஐந்து சிம்கள் குறித்த தகவல்களை இதில் செட் செய்திட முடியும். எனவே, நகரத்து இளைஞர்களை, எப்போதும் இணைய இணைப்பில் இருக்க விரும்புபவர்களை அதிகம் கவரும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

நோக்கியா 110 அம்சங்கள் 1.8 அங்குல வண்ணத்திரை, இரண்டு சிம் பயன்பாடு, நோக்கியாவின் சிரீஸ் 40 சிஸ்டம், நெட்வொர்க் இணைப்பிற்கு EDGE/GPRS, Bluetooth 2.1, WAP 1.1, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, WMV, 3GPP, AVI ஆகிய பார்மட்களை சப்போர்ட் செய்திடும் வீடியோ, பதிவு செய்திடும் வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்பி வரையிலான உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி,1020 mAh லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.

80 கிராம் எடையில் இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

மேலே தரப்பட்டுள்ள அம்சங்களுடன், 1020 mAh லித்தியம் அயன் பேட்டரியுடன், 86 கிராம் எடையில், கிரே, நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நோக்கியா 112 வடிவமைக்கப் பட்டுள்ளது.

இணைய தள விற்பனையில் நோக்கியா 110ன் அதிக பட்ச விலை ரூ. 2259 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்

நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.

இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு.

ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது.

ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம்.

நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறது.

சமீபமாக நோக்கியா நிறுவனம் பல சரிவுகளை சந்தித்து வந்தாலும் கூட, ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க முயற்சித்து கொண்டு வருகிறது என்பதற்கு, நோக்கியா வழங்கும் இந்த அப்டேஷன் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.


மொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்

இக்காலத்தில் மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் விரும்பும் நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துக்கொள்ள இயலுவது இல்லை.

ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது.

இந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும்.

இந்த சார்ஜ் எக்ஸில் 5,600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன.

அதனால் ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் அல்லது இரண்டு டேப்லெட்டுகளுக்கு இந்த சாதனத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும்.

குறிப்பாக இந்த சார்ஜ் எக்ஸில் மொபைல்கள், டேப்லெட்டுகள், கேமிங் சாதனங்கள், ப்ளூடூத் சாதனங்கள், சிறிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

மேலும், இந்த சார்ஜ் எக்ஸ் 11 மணி நேர சார்ஜ் வழங்கும் திறனையும் கொண்டது என்பதுடன் இதை ரூ.3000க்கு வாங்கலாம் என்பது தான் மகிழ்ச்சியான செய்தி.


மொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற

மொபைல் போன் பயன்பாட்டில் எண்கள் நமக்கு மாறா அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதனால், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் சேவை மோசமாக இருந்தாலும், பலரும் அதனைச் சகித்துக் கொண்டு அதே நிறுவனத்திடமிருந்து மொபைல் சேவை பெற்று வருகின்றனர்.

இந்த சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.

சென்ற ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக் கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.


அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்

புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.

ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.

ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes