இன்டர்நெட் டவுண் ஆனால் என்ன செய்யலாம்

இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் டவுண் ஆவது என்பது நமக்கு தும்மல் வருவது போல.தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காக கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம்.ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்;மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.பொதுவாக இது போல கட் ஆனால்,உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்.

நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம்.கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இவனை மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம்.இருப்பினும் கீழ்க்காணும் விசயங்களையும் செய்து பார்க்கலாமே!
  1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னாள்,உங்கள் மோடத் தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள்.ஒன்றுமில்லை,அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் களைத்து மீண்டும் ஆன் செய்திடுங்கள்.பின் உங்கள் ரூட்டரை ஆன் செய்ிடுங்கள்.
  2. உங்களுக்கு ரூட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திடுங்கள்.அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.
  3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்து விட்டது என்று பொருள்.அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்விஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள்.அதற்கு முன் அவரிடம் எது போன்ற குறை சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  4. புதிய பிரவுசர் விண்டோ ஓன்று திறந்து கொள்ளுங்கள்.பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள்.தினமலர் வெப்சைட் கிடைத்தால்,நல்லது.இல்லை என்றால் தொடர்ந்து படியுங்கள்.
  5. ஸ்டார்ட் ரன் அழுத்தி பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும்.உங்கள் திரையில் கருப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும்.அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig/all என டைப் செய்திடுங்கள்.உங்களுடைய default gateway மற்றும் DNS Servers அறிந்து கொள்ளுங்கள்.பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள்.பதில் கிடைக்கிறதா?
  6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சனை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல்.உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கு எங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும்.ஒரு கட்டளை.traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியை தர வேண்டும்.பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்து விட்டு பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.நிறுவனத்தின் சர்வரில் பிரச்சனை இருந்தால் அவர்கள் உடனே கவனித்துச் சரி செய்வார்கள்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes