இணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.


Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.


வேர்டில் சொற்களை ஹைலைட் செய்ய

வேர்டில் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனு பாரில் ab என்ற சிறிய எழுத்துக்களுடன் ஒரு கட்டம் தென்படும். இதுதான் ஹைலைட் செய்திடும் டூல். இதன் ஓரத்தில் ஒரு சிறிய தலைகீழ் அம்புக் குறி இருக்கும்.

இதில் கிளிக் செய்தால், எந்த வண்ணத்தில் ஹைலைட் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். பின் இதில் கிளிக் செய்தால் ஹைலைட்டர் பேனா போன்ற ஒரு கர்சர் கிடைக்கும். வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும்.

இந்த ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.

ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும்.

கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.


ஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப

இமெயில் பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் மெயின் அக்கவுண்ட்டாக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

ஜிமெயில் தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.

நமக்கு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும்.

இதனாலேயேexe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும்.

(ஆனால் rarஎன்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup 1.5.exe 4.98 MB என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன்.

ஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது.

ஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.

இரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக, AdobeReader.exe என்ற பைலின் பெயரை AdobeReader.exe.removeme என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.

மூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும் ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.

நான்காவதாக WinRAR என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.


வாய்ஸ் மொபைல்

சீனாவிலிருந்து தன் மொபைல் போன்களை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வரும் வாய்ஸ் மொபைல் நிறுவனம், மொபைல் போன்களைத் தயாரிக்க தன் தொழிற்சாலையை இந்தியாவில் ரூ.100 கோடி முதலீட்டில் தொடங்க இருக்கிறது.

ஐந்து மாதங்களுக்கு முன் தன் விற்பனையைத் தொடங்கிய இந்நிறுவனம், இதுவரை 5 லட்சம் போன்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் மாதம் 5 லட்சம் போன்களுக்கு மேல் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் ரூ.6,000க்கும் குறைவான விலையில் 80% போன்கள் விற்பனையாவதைத் தெரிவித்த வாய்ஸ் மொபைல் நிறுவனம், ரூ.1,500 முதல் ரூ.6,000 விலைப் பிரிவில் 11 மாடல்களை விற்பனை செய்து வருகிறது


மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்

நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!

ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.

முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும்.

இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம்.

இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.


கூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க

எப்போதாவது உங்கள் நண்பருக்கு, உங்கள் வீட்டுக்கு எப்படி வந்து சேர்வது என்று காட்டியிருக்கிறீர்களா? அல்லது புகழ் பெற்ற ஸ்தலமாகிய உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து தகவல் தந்திருக்கிறீர்களா?

கம்ப்யூட்டரில் காலம் தள்ளும் நமக்கு இதற்கெல்லாம் கூகுள் மேப்ஸ் தான் சரியான சாதனம். ஆனாலும் இதில் நாம் நினைத்தபடி குறிப்புகளை எழுத முடியாது. இதற்கெனவே ஸ்கிரிப்பிள் மேப்ஸ் (scribblemaps) என்று ஒரு புரோகிராம் தயாரிக்கப்பட்டு கூகுள் மேப்புடன் வழங்கப்படுகிறது.

இதன் உதவியுடன் கூகுள் மேப்பில் ஓரிடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பும் வகையில் அம்புக்குறிகள் மற்றும் பிற வடிவங்களைப் போட்டு, குறிப்புகள் எழுதி தகவல்களை அமைக்கலாம். முழுமையான தகவல்களை அமைத்த பின்னர், அதனை அப்படியே பைலாக சேவ் செய்து, பின்னொரு நாளில் மற்றவருக்குப் பயன்படுத்தத் தரலாம்.

இதனைப் பயன்படுத்த www.scribblemaps.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன் இந்த சாதனம் பற்றிய குறிப்பு தோன்றி மறையும். பின் கூகுள் மேப் கிடைக்கும். அதன் மேலாக இந்த சாதனம் தரும் சில டூல்கள் கிடைக்கும்.

நீங்கள் எந்த மேப்பில் எந்த இடத்தில் குறிப்புகளை இணைக்க வேண்டுமோ, அந்த இடம் சென்று தேவைப்படும் இடத்தில், வேண்டிய அம்புக்குறிகள் மற்றும் வழிமுறைகளை அமைக்கலாம். கோடு வரையலாம், குறிப்பிட்ட ஷேப்களை ஒட்டலாம், பின் ஷேப் கொண்டு இடங்களைக் குறித்து வைக்கலாம், எண்களை அமைக்கலாம்.

குறிப்பு எழுதலாம். பின் இந்த குறிப்புகளுடன் அந்த மேப்பினை சேவ் செய்திடலாம். தவறான குறிப்பினை எழுதிவிட்டால் அல்லது கோடு போட்டுவிட்டால், அதனை இதில் தரப்பட்டுள்ள எரேசர் கொண்டு அழிக்கலாம்.

பின் இந்த மேப்பினை சேவ் செய்திடுகையில் அதற்கான அடையாள எண் தரப்படும். இந்த எண்ணைப் பின் நாளில் பயன்படுத்தி, மேப் குறிப்புகளை எடிட் செய்திடலாம். நம் வசதிக்கேற்ப குகூள் மேப்பினை வளைக்கும் இந்த வசதி மிகவும் விரும்பத்தக்கதும் பயனுள்ளதும் ஆகும்.


அஜித் ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை!

அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது வேறு யாருமல்ல... அஜித் ரசிகர்கள் தலைமை மன்றம்தான்.

பிறந்த நாளில் கட்-அட் வைக்க கூடாது, பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்று சினிமா நட்சத்திரங்களின் தலைமை ரசிகர் மன்றம் கட்டளையிடுவதும், ரசிகர்கள் அதனை மீறி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்காக அஜித் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாட திட்டமிட்ட ரசிகர்களைத்தான் அஜித் ரசிகர்கள் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அஜித்தின் மேனேஜரும் ரசிகர்கள் மன்ற நிர்வாகியுளான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகிற மே 1ம்தேதி அஜீத்குமாரின் பிறந்த நாள். இந்த நாளை முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் 25ம்தேதி கொண்டாட சில ரசிகர்கள் முடிவு செய்து, டிவி சானல்களில் ஏற்பாடு செய்திருப்பதாக அறிகிறோம்.

இது தலைமை மன்றத்தின் கட்டளைக்கு எதிரானது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை உடனே நிறுத்தும்படி இந்த அறிக்கை மூலம் அறிவிக்கிறோம். அஜீத் அவர்களுடன் கலந்து பேசி மற்ற விபரங்கள் அறிவிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அஜித்துக்கு ரஜினி பரிசளித்த "ஹிமாலயன் மாஸ்டர்ஸ்'

ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் "குடும்பத்த முதல்ல பாருங்க' என்று சொல்லுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அஜித்.

அரசியல் பேசுவதில் நெருங்கிய நண்பர்களிடம் அதிக ஆர்வம் காட்டுவார். அதே நேரத்தில் உள்ளூர் அரசியலை தவிர்த்து, உலக அரசியலில்தான் ஆர்வம் இருக்கும்.

சாய்பாபாவை அதிகம் வணங்கி வந்தவர் தற்போது திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அதிக நேரம் ஒதுக்குகிறார். இரண்டு முறை நடந்து சென்றே வணங்கியும் வந்திருக்கிறார். ரேஸ் போட்டிகளில் அஜித்துக்கு ரோல் மாடல் பிரபல ரேஸ் வீரர் அயர்டன் சென்னா.

அஜித் பிறந்த மே.1}ல் தான் அயர்டன் சென்னா இறந்து போயிருக்கிறார். பிறந்த நாளன்று அவரது படத்தின் முன் 5 நிமிடம் மௌனமாக உருகி நிற்பார் அஜித். சுயசரிதை புத்தகங்களை படிப்பது அஜித்துக்கு பிடித்தமான ஒன்று.

ரஜினி பரிசளித்த "ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' என்ற புத்தகத்தை அடிக்கடி படிப்பார்.


வேர்டில் தனி பாண்ட் மெனு

வேர்ட் தொகுப்பின் மெனு பாரில், நேரடியான செயல்பாடுகளுக்குப் பல மெனுக்கள் இருந்தாலும், எழுத்துரு பைல்களைக் கொண்டிருக்கும் போல்டருக் கென பாண்ட்ஸ் மெனு தனியே இல்லை.

ஏனென்றால் இதனை நாம் அடிக்கடி கிளிக் செய்து பார்ப்பதில்லை. ஆனால் ஒரு சிலர் இதனை அடிக்கடி அணுகிப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பாண்ட்ஸ் என்று தனியே ஒரு மெனுவினை, கிளிக் செய்தால் கிடைக்கும், பைல்ஸ், டேபிள் மெனுக்கள் போல, அமைத்தால் எளிதாக இருக்கும் அல்லவா! அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

1. வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Tools மெனு சென்று Customize பிரிவைத் தேர்ந்தெடுங்கள். வேர்ட் Customize dialog box னைக் காட்டும்.

2. இதில் Commands என்னும் டேப் கிளிக் செய்திடவும்.

3. இங்கு Categories என்னும் பட்டியலில் உள்ளவற்றில் Builtin Menu என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.

4. Commands என்னும் பட்டியலில் Fonts என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இப்போது Fonts என்னும் ஆப்ஷனை, மவுஸால் பிடித்து இழுத்து, உங்கள் மெனு பாரில் எங்கு பாண்ட்ஸ் மெனு வேண்டுமோ அங்கு விட்டுவிடவும்.

6. அடுத்து Close என்பதில் கிளிக் செய்திடவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes