மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்

உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு(Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.

"Design Site" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும்.

அதிலேயே உங்கள் தளத்திற்கான"About Us" மற்றும் "Contact Us" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.

தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம்.

எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.


வந்துவிட்டது நோக்கியா என் 900

நோக்கியாவின் ஸ்பெஷல் மொபைல் போன் என் 900, இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.30,639 என விலையிடப்பட்டுள்ள இந்த போன், என் 97 தரத் தவறிய புகழைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 3.5 அங்குல அகல தொடுதிரை உள்ளது. 5 எம்.பி. கேமரா, கார்ல் ஸெய்ஸ் டூயல் எல்.இ.டி. பிளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. நான்கு அலைவரிசை இயக்கம், EDGE, GPRS and WCDMA தொழில் நுட்பம் இயங்குகின்றன. இதில் ARM Cortex A8 600 MHz ப்ராசசர் தரப்பட்டுள்ளது.

1ஜிபி வேக இயக்கம் கிடைக்கிறது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தி 48 ஜிபி வரை இதன் நினைவகத்தினை அதிகப்படுத்தலாம். வை–பி, புளுடூத் உடன் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் உள்ளது.

வழக்கமாக நோக்கியாவில் உள்ள சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பதிலாக, Mச்ஞுட்ணி சிஸ்டம் தரப்பட்டு ள்ளது. இது ஒரு லினக்ஸ் அடிப்படையிலான சிஸ்டம் ஆகும். ஓவி மேப்ஸ் இணைந்து வழங்கப்படுகிறது.


வேர்டில் ஆபீஸ் அசிஸ்டன்ட்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட்.

ஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து வரும் விண்டோவின் கட்டத்தில் உங்களுடைய சந்தேகத்தை அல்லது கேள்வியை டைப் செய்து தேடச் சொல்லலாம். உதவிக் குறிப்புகளும் வரிசையாகக் கிடைக்கும்.

சில வேளைகளில் இந்த ஆபீஸ் அசிஸ்டண்ட் மீது ஒரு பல்ப் ஒன்று எரிந்தபடி இருக்கும். இந்த எரியும் பல்ப் மீது கிளிக் செய்தால் உடனே உங்களுக்கு ஒரு டிப்ஸ் எனப்படும் உதவிக் குறிப்பு கிடைக்கும். இதைப் படித்தவுடன், அந்த மாதிரி ஆபீஸ் அசிஸ்டண்ட் என் ஆபீஸ் தொகுப்பில் பார்த்ததில்லையே;

சிலரோ அசிஸ்டண்ட் வருகிறான்; ஆனால் லைட் எரிந்ததில்லையே என முணுமுணுக்கலாம். அப்படியானால் அவ்வாறு உங்கள் ஆபீஸ் தொகுப்பினை செட் செய்திருக்கிறீர்கள் என்று பொருள். இந்த விளக்கை எரிய விட கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும்.

முதலில் ஆபீஸ் அசிஸ்டண்ட்டை எப்போதும் திரையில் வைத்துக் கொள்ள Help மெனு பகுதியில் கிளிக் செய்து, வரும் மெனுவில் Show the Office Assistantஎன்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது திரையில் கண்ணாடி மாட்டிய பேப்பர் கிளிப் வடிவத்தில் ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான்.

இனி அந்த அசிஸ்டண்ட் மீது கிளிக் செய்தால் ஆபீஸ் அசிஸ்டண்ட் மெனு கிடைக்கும். இதில் Options என்ற பகுதியைப் பார்த்தால் அதில் Show Tips about என்ற பிரிவில் ஐந்து வகையான உதவிக் குறிப்புகள் உங்களுக்குத் தருவதற்காகப் பட்டியலிடப் பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

எந்த வகையெல்லாம் வேண்டுமோ அந்த பகுதியில் உள்ள சிறிய கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இப்படி ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆபீஸ் அசிஸ்டண்ட்டும் நீங்களும் உதவி வழங்குவது குறித்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டீர்கள் என்று சொல்லலாம். இனி இவனை நீங்கள் நாடும் போதெல்லாம் உங்களுக்கான உதவிக் குறிப்புகள் தோன்றும். அதனைப் பின்பற்றலாம்; அல்லது ஒதுக்கி விடலாம்.

இந்த பேப்பர் கிளிப் அசிஸ்டண்ட் பார்க்க சரியில்லையே; இதனை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கக் கூடாதா? என்று எண்ணுகிறீர்களா? அதற்கும் சாய்ஸ் இருக்கிறது. Options என்ற பகுதிக்கு அருகே Gallery என்ற பகுதி இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் அதில் எட்டு வடிவங்கள் தரப்பட்டுள்ள பகுதி கிடைக்கும்.

அதிலேயே ஒவ்வொன்றின் பெயர்களும் அவற்றைப் பெறும் விருப்பக் கட்டங்களும் இருக்கும். Next என்பதைக் கிளிக் செய்து கொண்டு போனால் இவை ஒவ்வொன்றாகக் கிடைக்கும். இவற்றில் உயிர் உள்ள ஜீவராசியாக ஐந்து உள்ளன. பேப்பர் கிளிப் வடிவில் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பவன் பெயர் Clippit.

புள்ளி ஒன்றுக்கு கண்ணாடி மாட்டி தாவும் ஜீவனுக்கு பெயர் The Dot. சிறிய ஆந்தையாக உள்ள அசிஸ்டண்ட் பெயர் F1. எம்.எஸ். ஆபீஸ் இலச்சினையும் ஒரு வடிவாக உள்ளது இது Office Logo என அழைக்கப்படுகிறது. சர்க்கஸ் கோமாளி வடிவில் மந்திரவாதியாக ஒரு அசிஸ்டண்ட் வருவான்; அவன் பெயர் Merlin.

சுற்றும் உலக உருண்டையாக வரும் அசிஸ்டண்ட் Mother Nature என அழைக்கப்படுகிறது. சிறிய பூனைக் குட்டியாக வந்து காட்சி அளிக்கும் அசிஸ்டண்ட் ஃடிணடுண் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூனை இருக்கும் போது நாய்க்குட்டி இருக்க வேண்டாமா? செல்ல நாயாக வந்து வாலை ஆட்டி உதவி அளிக்கும் அசிஸ்டண்ட்டின் செல்லப் பெயர் Rocky ஆகும்.

இவற்றில் உங்களுக்குப் பிடித்ததனைப் பெற்று ஆபீஸ் புரோகிராம்களில் இயங்க விடலாம். தேவையானபடி மாற்றிக் கொள்ளலாம். சில அசிஸ்டண்ட்களைத் தேர்ந்தெடுத்து அமைத்திடக் கட்டளை கொடுக்கையில் அவை கிடைக்காமல் போகலாம். அப்போது The selected Assistant Character is not available.

This feature is not currently installed. Would you like to install it now? என செய்தி கிடைக்கும். கவலையேபடாமல் Yes என்று கொடுக்கவும். சில நொடிகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த அசிஸ்டண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஆபீஸ் புரோகிராம்களில் தோற்றம் தரும். ஆபீஸில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் உறங்காமலா இருப்பார்கள்?

இந்த அசிஸ்டண்ட்களும் அப்படித்தான். சில வேளைகளில் எந்த சலனமும் இன்றி தூங்குவார்கள். அப்போது அவர்கள் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Animate என்பதனைக் கிளிக் செய்திடவும். அப்போது இந்த ஜீவன்கள் செய்திடும் சேட்டையில் நமக்கு சிரிப்பும் வரும்.

ஆபீஸ் அசிஸ்டண்ட்டுடன் சிறிது கவனமாகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் அதற்குக் கோபமும் வரும். அசிஸ்டண்ட்டைப் பெற Help மெனு சென்று Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். அப்போது Help மெனுவில் Hide the Office Assistant என்று அப்பிரிவு மாறி இருக்கும்.

நீங்கள் அசிஸ்டண்ட்டைத் துரத்த எண்ணி அடிக்கடி இதனை மறைத்தும் தோன்றும் படியும் செய்தால் உடனே ஆபீஸ் அசிஸ்டண்ட் கோபித்துக் கொண்டு நீங்கள் பலமுறை மறைத்துவிட்டீர்கள். என்னை ஒரேயடியாக மறைத்து விடுங்களேன். செய்து விடவா? அல்லது இப்போதைக்கு மட்டும் மறைந்து கொள்ளவா? என்று கேட்கும். நீங்கள் உங்களுக்குப் பிடித்தபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes