பெண் இருதயத்தில் கிழிந்த தசை சுவரை சரி செய்து மதுரை டாக்டர்கள் சாதனைமதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் பெண்ணின் இருதயத்தில் கிழிந்த தசை சுவரை சரி செய்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பாப்புநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வேலு.இவரது மனைவி கஸ்தூரிக்கு இரு வாரங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது.அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை முன்னேற்றம் அடையாத நிலையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.அதில் இருதய தசை சுவர் கிழிந்து ஓட்டை விழுந்திருப்பது தெரிய வந்தது.வடமலையான் ஆஸ்பத்திரியில் கஸ்தூரி சேர்க்கப்பட்டார்.அவரது இருதயம் பலவீனம் அடைந்து,ரத்த அழுத்தம் குறைந்து உடலின் பல உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்தது.உடனடியாக "வென்றிகல் செப்டல் ரப்சர் ரிப்பெர்" என்ற இருதயத்தில் உள்ள தசை சுவர் கிழிந்ததை சரி செய்யும் ஆபரேசனும்,மாரடைப்பிற்கு காரணமான ரத்தக் குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆபரேசனும் செய்யப்பட்டது.இதற்கு "இன்பார்கட் எக்ஸ்கிளூசன்" என்று பெயர்.கிழிந்திருக்கும் தசை சுவரை சரி செய்ய ஒரு பெரிய செயற்கை மாற்று தசை பயன்படுத்தப்பட்டு சேதமடைந்த தசை வெட்டி எடுக்கப்பட்டது. 

டாக்டர் கிருஷ்ணகோபால்,மயக்கவியல் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது,இருதயத்திற்கு ரத்த தேவை ஏற்படுவதால் அதன் தசை கிழிந்து ஓட்டை ஏற்படும்.இதனால் ரத்தம் நுரையீரலுக்கு பரவி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.அடுத்ததாக மூளை,சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்புகளும் செயல் இழக்கும்.
மாரடைப்பு வந்த நூறு பேரில் 3 பேருக்காவது இது போன்று பாதிக்கப்படும்.முதல் மாரடைப்பிலேயே இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.இவ்வகை ஆபரேசன் இங்கு செய்வது இதுவே முதன் முறை,௫ மணி நேரம் ஆபரேசனில் "பி.டி.எப்." மருத்துவம் சார்ந்த துணியைக் கொண்டு ஓட்டை அடைக்கப்பட்டது.இவ்வாறு கூறினர்.

கஸ்தூரி உறவினர் ஸ்ரீவத்சலா கூறுகையில்,"ஆபரேசன் மற்றும் இதர சிகிச்சைகளுக்கு இதுவரை ரூ2.65 லட்சம் செலவானது"என்றார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes