மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு

இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக நெட்வொர்க் வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப, ஒவ்வொரு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரி தேவைப்படுகிறது.

இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.

இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர் நெட் சொசைட்டியினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப் பட்டது.

இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.

IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்திலேயே, இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.

நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஐகதி6 அமைப்பில் 340 அன்டெசிலியன் (undecillion) முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில், 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது இது 2 டு த பவர் ஆப் 128. எண் இரண்டினை, அடுத்தடுத்து, இரண்டால் 128 முறை பெருக்கி வரும் எண் இது. அந்த எண்ணிக்கையில் முகவரிகளை அமைக்க இந்த புதிய அமைப்பு வழி தருகிறது.

இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.


எக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்

CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல

CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல

SHIFT+F3 - பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட

CTRL+A - பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்

CTRL+A - பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக் கும்.

CTRL+‘ - (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலா வை அடுத்தடுத்துக் காணலாம்.

F11 or ALT+F1 - அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.

CTRL+; – (செமிகோலன்) தேதியை இடைச் செருக

CTRL+: – (கோலன்) நேரத்தை இடைச் செருக

CTRL+ENTER – தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க

F5 – Go To டயலாக் பாக்ஸ் காட்ட

CTRL+1– ஊணிணூட்ச்t இஞுடூடூண் டயலாக் பாக்ஸ் காட்ட

CTRL+C – காப்பி செய்தல்

CTRL+V – ஒட்டுதல்

CTRL+Z – செயல்படுத்தியதை நீக்க

CTRL+S – சேவ் செய்திட

CTRL+P – பிரிண்ட் செய்திட

CTRL+O – புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்.


லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது.

இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.


அதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்

விண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம்.

ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும்.

ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன.

எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், ரெஜிஸ்ட்ரியின் வரிகளை நீக்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல; நீக்கக் கூடாத வரிகளை நீக்கிவிட்டால், விண்டோஸ் தொடர்ந்து செயல்படுவது அல்லது சில புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவது சிக்கலாகி விடும். இதனால் தான், பல புரோகிராம்கள் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு இணையத்தில் தரப்பட்டுள்ளன.

சில புரோகிராம் கள் மற்ற பயன்பாட்டுடன், ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்தும் பயன்பாட்டினையும் சேர்த்துத் தருகின்றன. பெரும்பாலான புரோகிராம்கள்இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் எளியதாகவும், அதிக பயனுள்ளதாகவும் திறன் கொண்ட ஐந்து புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுத் தரப்படுகின்றன.


1. சிகிளீனர் (CCleaner):

ரெஜிஸ்ட்ரி சுத்தப் படுத்தும் புரோகிராம்களில், மிகச் சிறப்பான இடம் கொண்டுள்ள புரோகிராம் சிகிளீனர் ஆகும். இதனைப் பயன்படுத்தியதால், சிஸ்டம் பிரச்னைக்குள்ளாகியது என்ற சொல்லை இந்த புரோகிராம் பெற்றதில்லை.

இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் உள்ள ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன்படுத்து முன்னர், ரெஜிஸ்ட்ரி பைலுக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளும்படி இது அறிவுரை தரும். மேலும், சிகிளீனர், மிக நுணுக்கமாக ரெஜிஸ்ட்ரி பைலை ஆய்வு செய்து வரிகளை நீக்காது. தெளிவாக தேவையற்ற வரிகள் என்று தெரிந்தாலே, அவற்றை நீக்கும். எனவே இதனால் பிரச்னை ஏற்பட்டதில்லை.


2. காம்டோ சிஸ்டம் யுடிலிட்டீஸ் (Comodo System Utilities):

ரெஜிஸ்ட்ரி கிளீனிங் மட்டுமின்றி மற்ற வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புரோகிராம் இது. இதனை http://www.comodo.com/home/support-maintenance/system-utilities என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது சிகிளீனரைக் காட்டிலும் இன்னும் ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் இடம் பிடித்த தேவையற்ற வரிகளைக் கண்டறிந்து நீக்குகிறது.

இதனை ஒரு முறை பயன்படுத்தினால், அதன் பின், கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தினைக் கொண்டு, இந்த புரோகிராமின் ரெஜிஸ்ட்ரி கிளீனிங் திறனை அறிந்து கொள்ளலாம்.


3. ட்வீக் நவ் ரெக் கிளீனர் (TweakNow RegCleaner):

காம்டோ அளவிற்கு நுண்ணியமாக வரிகளைக் கண்டறியாவிட்டாலும், ட்வீக் நவ் ரெக் கிளீனர், மிக வேகமாக ரெஜிஸ்ட்ரியைச் சுத்தப்படுத்தும் எனப் பெயர் பெற்றதாகும். வேகம் ஒன்று மட்டும் உங்கள் விருப்பம் எனில், இந்த ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன் படுத்தலாம்.

விண்டோஸ் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பைல்கள், இணைய உலாவில் உருவாக்கப்படும் பைல்கள், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் டேட்டா பைல்கள் என அனைத்தையும் சுத்தப் படுத்துவதுடன், விண்டோஸ் செட்டிங்ஸ் அமைப்பையும் சரி செய்கிறது. அத்துடன் நெட்வொர்க் செட்டிங்ஸ் சரியாக இல்லை எனில் அதனையும் சரி செய்கிறது.

இதனைப் பெற http://www.tweaknow.com/ RegCleaner.php என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


4. வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Wise Registry Cleaner):

ரெஜிஸ்ட்ரி கிளீனிங் சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், சில வேளைகளில் விண்டோஸ் முடங்கும் நிலை உருவாகும். அதனால் தான், ஏற்கனவே உள்ள ரெஜிஸ்ட்ரி யை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுரை தரப்படுகிறது. ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்த பின்னர், அது சரியாக இயங்காவிட்டால், பேக் அப் செய்த பைலை மீண்டும் அமைத்து இயக்கலாம்.

பலர் இதனை மேற்கொள்வதில்லை. இந்த வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர், இதனை மிக எளிதான ஒரு வழி மூலம் நமக்கு உதவிடுகிறது. இதில் உள்ள பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்வதன் மூலம், முந்தைய ரெஜிஸ்ட்ரி பைலை மீண்டும் கொண்டு வந்து சரி செய்கிறது.

இந்த புரோகிராமினைப் பெற http://www.wisecleaner.com/wiseregistrycleanerfree.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.


5. ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர் (AML Registry Cleaner):

அதிக திறனும், பல்முனைப் பயன்பாடும் கொண்டது ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர். நிறைய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. சொல் கொடுத்து தேடி அறியும் வசதி, நாமாக குப்பை பைல்களை அழிக்கும் வசதி, விண்டோஸ் தொடங்குகையில் இயங்கும் அனைத்து பைல்களையும் காணும் வசதி எனப் பலவகை வசதிகளைத் தருகிறது.

மற்ற கிளீனர்களில் இருப்பதைக் காட்டி லும் பல செயல்பாடுகளைத் தருவதால், நிறைய பட்டன்கள் இதில் தரப்பட்டிருப் பதனைக் காணலாம். ஆனால், இதனா லேயே இதனைப் பயன்படுத்துபவர்கள், ரெஜிஸ்ட்ரி குறியீடுகளைப் பிரித்து விடுகின்றனர். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்த பின்னர், இதனைப் பயன்படுத்துவது நல்லது.

இந்த புரோகிராமினைப் பெற http://www.amltools. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இன்னும் நிறைய ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், மேலே கூறப்பட்ட கிளீனர்கள் அனைத்தும் பல வசதிகள் கொண்டவையாக உள்ளன. நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.


ஆபீஸ் 2010ல் பழைய மெனு

பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும்.

ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்? எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற கேள்விகளுடன் இயங்குகிறார்கள்.

ஒரு சிலர், ஆபீஸ் 2003 தொகுப்பே போதும் என அதற்கு மாறிக் கொள்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பில், ரிப்பன் இன்டர்பேஸ் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதிலும் பழைய படி மெனு எதிர்பார்ப்பவர்கள் அதிக பிரச்னையைச் சந்திக்கின்றனர். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே என கவலைப்படுகின்றனர்.

இவர்களின் சிரமத்தினைப் போக்கும் வகையில், பழைய எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் எப்படி மெனு இருந்ததோ, அதே போல வசதியினை எம்.எஸ். ஆபீஸ் 2010லும் கிடைக்கச் செய்திட வழி கிடைத்துள்ளது. க்ஆடிtMஞுணத என்ற புரோகிராம் இதற்கான தீர்வைத் தருகிறது.

புதிய தொகுப்பில் உள்ள ரிப்பன் இன்டர்பேஸ் வசதியுடன், பழைய வகை மெனுக்களையும், டூல் பார்களையும் தருகிறது. கூடுதலாக நாம் எண்ணும் அனைத்து ரிப்பன் இன்டர் பேஸ் வகை அனைத்தையும் நீக்கிவிடலாம்.

இந்த புரோகிராம் http://www.ubit.ch/software/ ubitmenu-languages/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.

புரோகிராம் ஒன்றினை எப்படி தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவோமோ அதன் படி யுபிட் மெனுவினையும் அமைத்துக் கொள்ளவும். இது மிகவும் சிறிய புரோகிராம். இன்ஸ்டால் செய்திட மிகக் குறுகிய நேரமே எடுத்துக் கொள்கிறது.

இதனை இன்ஸ்டால் செய்கையில் அனைத்து எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் மூடிவிடுங்கள். ஒன்று கூட இயங்கக் கூடாது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் என ஏதேனும் ஒரு புரோகிராமினை இயக்கவும். ரிப்பனில், Home மெனு அடுத்து புதிய மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம்.

இந்த மெனு மூலம், உங்கள் பழைய ஆபீஸ் 2003 தொகுப்பில் கிடைத்த மெனு, கட்டளைகள் அனைத்தும் கிடைப்பதனைப் பார்க்கலாம், பயன்படுத்தலாம். புதிய தொகுப்பில் தரப்பட்டுள்ள SmartArt போன்ற வசதிகளும், இந்த வகை மெனு வில் காட்டப்படுவதனைக் காணலாம்.

எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து இயக்கினால், புதிய PivotTable மற்றும் PivotCharts ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருப்பதையும் பார்க்கலாம். ஒரு வித்தியாசம் இங்கு தென்படும். அனைத்து டூல் பார்களும் ஒரு கீழ்விரி மெனுவிற்குள் சுருக்கமாக அடைபட்டிருக்கும்.

இதனால், உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசன் மிகவும் குறைவாக செட் செய்தவர்களுக்கு, இதன் தோற்றத்தைச் சற்று வித்தியாசமாகக் காண்பார்கள். இதனைச் சற்றுப் பெரிதான தோற்றத்தில் இருக்குமாறு விரும்புவார் கள்.

இதற்கு Menu டேப்பில், Tools தேர்ந்தெடுத்து, பின்னர் Word Options தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பாரில், Customize Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, வலது பக்கம் நீங்கள் மறைக்க விரும்பும் அனைத்து வசதிகளுக்கும் எதிரே உள்ள கட்டங்களில் டிக் அடையாளத்தினை நீக்கி விடவும். இவற்றை முடித்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இந்த வேலை நடைபெறும் போதே, இன்டர்பேஸ் வண்ணத்தினையும் மாற்றலாம். ஆனால் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் எந்த புரோகிராமில் (வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட்) வண்ண மாற்றத்தினை ஏற்படுத்தினாலும், அந்த மாற்றங்கள் மற்ற புரோகிராம்களிலும் காட்டப்படும்.

இப்போது ரிப்பனில் இரண்டு டேப்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். புதிய தோற்றத்தைக் காட்ட File டேப்; அடுத்து தற்போது இன்ஸ்டால் செய்த யுபிட் மெனு டேப். இதில் கிட்டத்தட்ட பழைய ஆபீஸ் 2003 தொகுப்பின் அனைத்து மெனுக்களும் இருப்பதனைக் காணலாம். இந்த மெனு மூலம் புதிய ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து வசதிகளையும் பெறலாம் என்பது இதன் சிறப்பு.

இது போன்ற செட்டிங்ஸ் மாற்றத்தினை, வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் என அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களை ஆபீஸ் 2007 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். தனிநபர் பயன்பாட்டிற்கு யுபிட் மெனு இலவசமாகக் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, இதனை கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.


எஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்

மொபைல் இன்டர்நெட் பிரிவில் முன்னணியில் இயங்கும் எஸ் மொபிலிட்டி நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பெறக் கூடிய மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

எம்.ஐ.350 என அழைக்கப்படும் இந்த மொபைல் இரண்டு சிம்களை இயக்கக் கூடியது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

ஏழு நாட்களுக்கு இதன் பேட்டரி மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் ப்ராசசர் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.

இந்த மொபைலில் பேஸ்புக் மற்றும் கூகுள் டாஸ்க்பார் நேரடி இணைப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.


மொபைல் வழி பணம் செலுத்துதல்

மொபைல் போன்களில் சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அருமையான தொழில் நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்பதாகும். மொபைல் போன்களைப் பயன்படுத்தி, நாம் பணம் செலுத்த இந்த தொழில் நுட்பம் வழி செய்கிறது.

2011 ஆம் ஆண்டில் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ். ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், இது 8 கோடியாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், பல நிறுவனங்கள், குறிப்பாக சாம்சங், ஆர்.ஐ.எம்., நோக்கியா மற்றும் எச்.டி.சி., இந்த வசதியுடன் மொபைல் போன்களை வடிவமைத்துத் தந்துள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனை இன்னும் அறிமுகம் செய்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"போனை அசைத்து பணத்தைச் செலுத்திடு' என்பதுதான் இந்த தொழில் நுட்பம் தரும் பெரிய வசதி. 4 அங்குல இடைவெளியில் இரண்டு சாதனங்கள், அவற்றை அசைப்பதின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த தொழில் நுட்பம் வசதி தருகிறது.

தற்போது லண்டன் நகரில் ட்ரான்ஸ்போர்ட் கார்ட்கள் மூலம் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருட்களை விற்பனை செய்திடும் கடைகளில் உள்ள சிறிய டெர்மினல் முன்னால், செலுத்த வேண்டிய பணத்தை மொபைலில் குறிப்பிட்டு சற்று அசைத்தால், செலுத்தப்பட வேண்டிய பணம் குறித்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு, பணம் கடைக்காரரின் அக்கவுண்ட்டில் சேர்ந்து விடுகிறது.

இதற்கு மொபைல் வைத்திருப்பவர், முதலில் தன் பணத்தை, இதற்கான அக்கவுண்ட்டில் செலுத்தி வைத்திருக்க வேண்டும். பர்ஸில் பணம் போட்டு வைத்திருப்பதனைப் போன்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது அனைத்து நாடுகளிலும், இந்தியா உட்பட, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


எக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும்.

சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது.

இதனை மேற்கொண்டால், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிற்கு தலைப்பு கொடுத்து, ஓரமாகவோ, நடுவிலோ அதனை அமைப்பது எளிதாகிறது.

இந்த வழி “merging cells” எனத் தரப்பட்டுள்ளது. இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.

முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் டைப் செய்து கொள்ளலாம்.

மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது! இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது? சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள்.

ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது? இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் Format Cells விண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1 என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும்.

இதில் Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். இப்போது ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் தனித்தனியே பிரிக்கப்பட்டு கிடைக்கும்.


கம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமையாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும்.

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிலேயே முழு நேரமும் செலவிடுவதுதான் வருந்தத்தக்கதாயுள்ளது. ஒரு சிலர் இதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

கேம்ஸ் விளையாடுவது நல்லதுதான். அது ஒரு சிறந்த பொழுதுபோக்கும் கூட. ஒரு சில கேம்ஸ் நம் தர்க்க ரீதியான சிந்தனையை, லாஜிக்கலாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே. அண்மைக் காலத்தில் மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன.

இப்போது சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டுக் கிடைத்தாலும் பலர் இன்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ, இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர்.

ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது. முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுக் களைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.

கேம்ஸ் குறித்த இணைய தளங்களை இங்கு காணலாம். அதிகமான எண்ணிக்கையில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுக்களைத் தரும் தளங்கள் என எடுத்துக் கொண்டால் மூன்று தளங்களைக் கூறலாம். அவை: Game Daily (www.gamedaily.com) GameSpot (www.gamespot.com) மற்றும் Game Fly (www.gamefly.com)

இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர். விளையாட்டுக்களை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள், மெஷின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ், அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து கோணங்களிலும் தகவல் தரும் தளமாக இது உள்ளது. பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.

கேம்ஸ்பாட் (GameSpot) ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும். பெர்சனல் கம்ப்யூட்டர், எக்ஸ் பாக்ஸ் 360, வை, பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அவ்வப் போது வெளியாகும் புதிய கேம்ஸ் குறித்து இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன.

இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது. இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டி யலிடப்பட்டிருப்பதனைக் காணலாம். இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.
கேம் ப்ளை (GameFly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட். இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்து தந்து கொண்டே இருக்கிறது.

இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம். இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன.

பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3, Playstation 2, PSP, XBox 360, Xbox, Wii, GameCube, Nintendo DS, Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன. இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர் களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.


பிழையைக் காட்டும் எக்ஸெல்

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள்.

அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம்.

இது ஒரு சிறிய பார்முலாவில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த பார்முலாவினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான பார்முலா என்றால் முழுதாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிய நேரம் ஆகுமே?

பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு எக்ஸெல் ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் பார்முலா முழுவதையும் ஆங்கிலத்த்தில் சிறிய எழுத்துக்களில் டைப் செய்திடுங்கள்.

பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் டைப் செய்து என்டர் தட்டியவுடன் எக்ஸெல் அவை அனைத்தை யும் கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. எக்ஸெல் தான் அறிந்து கொள்ளும் பார்முலாவின் பகுதியினை மட்டும் அவ்வாறு கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும்.

எதில் பிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற் களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.

இதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். டேட்டாக்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை எக்ஸெல் கேப்பிடல் சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும்.

அதனாலென்ன! பிழைகள் இருக்குமிடம் ஓரளவிற்குச் சுட்டிக் காட்டப்படுவதால் அவற்றைத் திருத்துவதற்கு நம் தேடுதல் நேரமும் உழைப்பும் குறைகிறதே.


பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்

ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.

ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

காலப்போக்கில், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில், பைல்களைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட பைல்களில், புதிய பைல்களை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன. சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள், விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன.

நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள இந்த புரோகிராம்களையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேவைக்குச் சரியாக அமைந்தால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.


1. ஜே ஸிப் (jZip):

இந்த வகையில் நமக்குத் தென்படும் முதல் புரோகிராம் ஜே ஸிப். பைல்களைச் சுருக்கி ஆர்க்கிவ் அமைக்க, 7 ஸிப் பயன்படுத்தும் அதே தொழில் நுட்பத்தினை ஜே ஸிப் பயன்படுத்துகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட பைல்களையும் இந்த புரோகிராம் கையாள்கிறது.

பைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கென தனியான புரோகிராமும் கிடைக்கிறது. இந்த புரோகிராம் தரப்படும் இணைய தள முகவரி :http://www.jzip.com/


2. பி-ஸிப் (PeaZip):

Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது.

இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் பெறhttp://www.peazip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


3. குயிக் ஸிப் (Quick Zip):

சுருக்கப்பட்ட பைல்களிலிருந்து பைல்களைப் பெற்றுப் பயன்படுத்துவதில், குயிக் ஸிப் புரோகிராம் எளிதாகச் செயல்படுகிறது. இதற்கெனத் தரப்படும் இன்டர்பேஸ் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போல்டர்கள், விண்டோக்கள் மற்றும் சுருக்கி வைக்கப்பட்ட பைல்களிடையே செல்வது மிக எளிதாகிறது.

Zip மற்றும் 7z உள்ளிட்ட பல வகை பார்மட்களை இது கையாள்கிறது. சுருக்கிய பைல்களில், புதிய பைல்களைச் சுருக்கி அமைத்து இணைக்க, அவற்றை இழுத்துச் சென்று விடும் வசதியை அளிக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.quickzip.org/


4. ஸிப் ஜீனியஸ் (ZipGenius):

புதிய வகை பார்மட்களில் சுருக்கித் தருவதும், அதிகமான எண்ணிக்கையில் மற்ற பார்மட்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பதும் இந்த புரோகிராமின் சிறப்பாகும். இதன் இன்டர்பேஸ் விண்டோஸ் எக்ஸ்புளோர ருடன் இணைந்து செயல்படும் கட்டமைப்பி னையும் கொண்டுள்ளது. இதனால், இந்த புரோகிராமின் செயல்பாட்டினை எந்த ஒரு எக்ஸ்புளோரரின் விண்டோவிலும் பெற முடியும்.

இருபதுக்கும் மேற்பட்ட பைல் சுருக்கும் பார்மட்டினை சப்போர்ட் செய்வதுடன், இந்த புரோகிராம், நான்கு வகையான தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் நாம் ஒருவருக்கொருவர் பைல் களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஸிப் ஜீனியஸ் புரோகிராம் பெற http://www.zipgenius.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


5. 7--ஸிப் (7-Zip):

இது ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் உருவான புரோகிராம். இதனுடைய 7z பார்மட்டில், மிக வலுவான பைல் சுருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பைல்களைச் சுருக்கும் போதே, மற்றவர் கள் அதனை அணுகித் திறக்க முடியாத வகையில், பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுருக்க வழி தரப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில், இதன் இன்டர்பேஸ் விண்டோ அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பார்மட் தவிர 7z, Xz, BZip2, GZip, Tar மற்றும் Zip ஆகிய பார்மட்களையும் கையாளும் திறனை இந்த புரோகிராம் தருகிறது. 32 பிட் மற்றும் 64 பிட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயக்கும் வகையில் இந்த புரோகிராம் www.7-zip.org/என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.


6. இஸ் ஆர்க் (IZArc):

மேலே தரப்பட்ட பல்வேறு புரோகிராம்களின் செயல்பாடு போலவே, இந்த புரோகிராமும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 7--Zip, Ace, Arc மற்றும் பல பார்மட்களைக் கையாள்கிறது. இதன் இன்டர்பேஸ் வழியாக, இந்த பைல் பார்மட்களை வெகு எளிதாகக் கையாளலாம். விண்டோஸ் எக்ஸ்புளோர ரில் இருந்து, இந்த புரோகிராமின் விண்டோவிற்கு பைல்களை இழுத்து வந்து சுருக்கும் வசதி உள்ளது.

சிடிக்களில் பைல்கள் இருப்பின், Iso, Bin, Cdi மற்றும் Nrg ஆகிய இமேஜ் பார்மட் பைல்களை அணுகிச் சுருக்கும் வசதியும் உள்ளது. இந்த அனைத்து வசதிகளுக்கும் மேலாக, இதில் பயன்படுத்தப்படும் 256-bit AES என்ற தொழில் நுட்பம், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, சுருக்கப்பட்ட பைல்களை அணுகி தகவல்களைப் பெற முடியும் என்ற கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.izarc.org/


7. ஹேம்ஸ்டர் (Hamster):

பைல் சுருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்புளோரரு டன் இணைந்து பணியாற்றும் வசதியைத் தருகின்றன. ஹேம்ஸ்டர் புரோகிராம் தனக்கென தனியான ஒரு விண்டோ வினை அமைத்துக் கொண்டு செயல் படுகிறது. நம் விருப்பப்படியும் விண்டோவினை பல வண்ணங்களில் அமைக்கலாம்.

எந்த புதிய பார்மட்டிலும் நம் விருப்பப்படி பைல்களைச் சுருக்கி அமைக்கலாம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் ப்ராசசர்களின் செயல் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹேம்ஸ்டர் செயல்படுவது, இரு மடங்கு வேகத்தில் விரைவாக வேலையை முடிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சி தரும் இந்த புரோகிராம் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.hamstersoft.com/

இதுவரை விண்ஸிப், விண்டோஸ் ஸிப் புரோகிராம் வசதிகளை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்திருப்போம். இப்போது மேலே பல இலவச புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன.


மீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது.

இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த அக்கவுண்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.

மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது.

இப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies, என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் முறை வந்த போது, ராம்நிட் வைரஸ் பிளாஷ் ட்ரைவ்கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.

கம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் விளையாடுகிறது.

இரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம்.

எந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே கிளிக் செய்திட வேண்டும். இரண்டாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டையே மற்ற அக்கவுண்ட்கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வது, புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.


தற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில், பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.


விண்டோஸ் 7 வேகமாக இயங்க

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க:

கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை.

விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.


2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்:

ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும்.

இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.


3. தானாக இடம் மாறும் விண்டோ:

மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும்.

வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும்.

இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.


4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக:

விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும்.

இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.


5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்:

பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது.

இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள்.

பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.


6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்:

லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனைhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.


பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்

ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.

2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக் கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.

3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும்.

மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்து கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.

4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் ÷ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.

5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும்.

6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடு களில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.

7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.

8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும்.

குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes