குரோம் பிரவுசரில் பிரைவேட் பிரவுசிங்

அனைத்து பிரபலமான பிரவுசர்களும், இப்போது, பிரைவேட் பிரவுசிங் எனப்படும் தனிப்பட்ட உலா என்ற வழிவகையினைத் தந்துள்ளன.

பிரைவேட் மோட் மற்றும் இன் காக்னிடோ என இவை பிரவுசருக்கேற்றபடி அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் இணைய உலா வருகையில், நாம் காணும் தளங்களின் பெயர்கள், பிரவுசரில் பதிவு செய்யப்பட மாட்டாது.

இதன் மூலம் நாம் பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் இணையத்தில் தளங்களைப் பார்க்கையில், எந்த தளங்களைப் பார்த்தோம் என மற்றவர்கள் அறிய முடியாது.

எனவே வழக்கம்போல பிரவுசரை இயக்கிச் சில தளங்களைப் பார்த்த பின், பிரைவேட் பிரவுசிங் வேண்டும் என விரும்பினால், மீண்டும் முதலில் இருந்து, பிரவுசர் இயங்கத் தொடங்கும். இந்த வகையில் குரோம் பிரவுசர் இன்னும் ஒரு படி மேலே போய், சில குறிப்பிட்ட தளங்களை, எப்போதும் பிரைவேட் பிரவுசிங் என்ற முறையில் காணும்படி செட் செய்திடும் வழியினைத் தந்துள்ளது.

கூகுளின் குரோம் பிரவுசரைப் பொறுத்த வகையில் இந்த வகை இணைய உலா Incognito Mode என அழைக்கப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. குறிப்பிட்ட தளங்களைக் காண்பதை மட்டும் இந்த முறைக்கு மாற்ற குரோம் எக்ஸ்டன்ஷன் தொகுப்பு ஆட்டோ நிட்டோ(Autonito) உதவுகிறது.

இதன் மூலம் நாம் எப்போதும் இன் காக்னிடோ எனப்படும் பிறர் அறியா இணைய உலா வகையில் காண விரும்பும், இணைய தளங்களை இதில் பட்டியலிட்டு வைக்கலாம். அவ்வாறு அமைத்த பின்னர், அந்த தளத்திற்குச் செல்கையில், குரோம் பிரவுசர், இன் காக்னிடோ முறைக்கு மாறிக் கொள்கிறது. இதற்கென தனி விண்டோவினைத் திறந்து, குறிப்பிட்ட தளத்தினை இயக்குகிறது.

இந்த தளத்தின் பெயரை, அட்ரஸ் பாரில் டைப் செய்து இயக்கினாலும், அல்லது வேறு ஒரு தளம், அல்லது மெயிலில் உள்ள லிங்க் மூலம் இயக்கினாலும், இந்த வகை வழியில் தளம் நமக்குத் தரப்படுகிறது.

ஆனால், இதில் ஒரு பிரச்னை உள்ளது. இந்த வகையில் நாம் பட்டியலிடப்பட்ட தளங்கள் அனைத்தும் பிரவுசரிலேயே பட்டியலிடப் பட்டுள்ளன. இதனால், நாம் அவற்றைப் பார்த்தோம் என்பது இல்லை என்றாலும், அவை எவை என்று பிறர் அறியும் வகையில் உள்ளது என்பது தேவையற்ற ஒன்று தானே.

ஆட்டோ நிட்டோ என்ற இந்த ஆட் ஆன் தொகுப்பினை கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் காலரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். தளத்தின் முகவரி: https://chrome.google. com/extensions/detail/aaknjhenmanmibfigajllodbhkgdigbd?hl=en


டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங்

மொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது.

பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது. தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, நாம் பிரவுஸிங் செய்திட விரும்பும், ஒவ்வொரு இணையதளத்திற்குமாக கட்டணம் செலுத்தினால் போதும். ஒரே ஒரு வெப்சைட் மட்டும் பிரவுஸ் செய்திட விரும்புவோர், அதற்கென மாதம் ரூ.10 செலுத்தினால் போதும். இதற்கு 200 எம்பி டேட்டா டவுண்லோட் இலவசம். அதன் பின் ஒவ்வொரு கேபி டேட்டாவிற்கும் ஒரு பைசா செலுத்தினால் போதும்.

பல இணைய தளங்களுப் பார்வையிட விரும்புபவர்கள், மாதம் ரூ.25 செலுத்த வேண்டும். இதற்கு 500 எம்பி டேட்டா இலவசம். ஜிமெயில், யாஹூ மற்றும் ரீடிப் தளங்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்களை மட்டும் கையாளலாம்.

அதே போல, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு மட்டும் செல்லலாம். சேட் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, ஜிடாக், யாஹூ அல்லது நிம்பஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.

தளத்திற்கு மட்டும் காசு என்ற இந்த ஜி.பி.ஆர்.எஸ். திட்டத்தை இயக்க, இதன் வாடிக்கையாளர்கள் *141# என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். அல்லது MY SITE என 141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது டாட்டா டொகோமோ இணைய தளம் சென்று ஆக்டிவேட் செய்திடலாம்.

இந்த திட்டங்கள் மூலம், இந்நிறுவனச் சந்தாதாரர்கள், தாங்கள் விரும்பும் தளங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது நன்மையாக இருந்தாலும், இணையத் தேடலை இது சுருக்கிவிடும் என்றும், உண்மையான இணையப் பயன்பாடு இதனால் குறைந்துவிடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.


பிளாக்கர் பதிவில் வீடியோ அப்லோடு செய்ய

பெரும்பாலான பதிவர்கள் தமது பதிவில் வீடியோ இணைக்க முடியவில்லையே என நினைப்பதுண்டு. அவர்களுக்காகவே இந்த பதிவில் எப்படி பதிவில் வீடியோவை இணைப்பது என்பது பற்றி எழுதியுள்ளேன்.

இதை செய்ய நீங்கள் புதிய எடிட்டர் உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய எடிட்டரிலேயே இந்த வசதி உள்ளது. இதனை செய்ய கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.

1, முதலில் உங்கள் பிளாக்கரில் SETTINGS > BASIC செல்லவும்.

2, அந்த பக்கத்தில், கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு பகுதி இருக்கும். அதில் Old Editor செலக்ட் செய்து கொள்ளவும்.
3, பின்பு நீங்கள் பதிவு எழுதும் பக்கத்தில் "பிலிம் சுருள்" போன்ற ஒரு ஐகான் இருக்கும்.
அதனை கிளிக்கவும்.


4, "Choose File" என்பதனை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள வீடியோவை இணைக்கலாம். பின்பு உங்கள் வீடியோ-விற்கு ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளவும்.

5, "Upload Video "என்ற பட்டனை கிளில் செய்வதன் மூலம் உங்கள் பதிவில் வீடியோ-வினை இணைத்து கொள்ளலாம்.


பின்குறிப்பு : இந்த வசதி புதிய எடிட்டரில் இல்லை. பழைய எடிட்டரில் மட்டும் உள்ளது.


ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்

பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது. வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!

நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது.

எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.

அவற்றில் ஒன்று http://www.freeav.com என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir. இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும்.

ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில் பட்டது. இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம். ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும்.

பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள AdAware பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.


யு-ட்யூப் வீடியோ தானாகத் தொடங்குவதை நிறுத்த

பல வேளைகளில், நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களை, யு–ட்யூப் வீடியோ தளத்தில் கிளிக் செய்திடுவோம். அப்போது நம் ஸ்பீக்கரில் அவை அனைத்தின் ஒலி கிடைக்கும்.

சில வேளைகளில், ஒவ்வொன்றும் இறங்கும் போது, ஸ்ட்ரீமிங் வேகம் குறைவாக இருக்கும் என்பதால், விட்டு விட்டு ஒலி கேட்கும். இதனை நிறுத்த வேண்டும் எனில், ஒவ்வொரு வீடியோ திறந்திருக்கும் பக்கம் உள்ள டேப்பினைக் கிளிக் செய்து, ஆடியோ பட்டனை மொத்தமாகக் குறைக்க வேண்டும்.

அப்போதுதான், வீடியோ படம் மெமரியில் இறங்கும். பின்னர் எந்தவிதத் தொந்தரவும் இன்றி கேட்டுக் கொள்ளலாம்.

இந்த ஆட்டோ பிளே வசதியை யு–ட்யூப் தளத்தில் நிறுத்த பல ஆட் ஆன் தொகுப்புகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சில இயங்காமல் இருப்பது மட்டுமின்றி, முழு வீடியோ பைலும் இறக்கம் கண்டபின்னரே, இயங்கத் தொடங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு காணலாம்.

கூகுள் குரோம் பிரவுசருக்கென Stop Autoplay என்ற ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது. வீடியோ உள்ள தளத்தினைக் கிளிக் செய்தவுடன், அதற்கான விண்டோ கிடைத்தவுடன், அது இயங்குவதனை இந்த ஆட்–ஆன் தொகுப்பு தடுக்கிறது.

அதே நேரத்தில் வீடியோ பைல் இறங்குவதைத் தடுப்பதில்லை. இதனால் பின்னணியில் வீடியோ பைல் 100% முழுமையாகக் கம்ப்யூட்டரை வந்தடைய முடிகிறது. அது மட்டுமின்றி, இந்த புரோகிராம் எச்.டி.எம்.எல். மற்றும் பிளாஷ் என இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெறhttps://chrome.google.com/ extensions/detail/lgdfnbpkmkkdhgidgcpdkgpdlfjcgnnh?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட்டோ பிளே தடை செய்யப்படும் ஆட் ஆன் தொகுப்பு, யு–ட்யூப் மட்டுமின்றி, எந்த வீடியோ பைல் தளத்தில் பதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக இறங்காமல் இயக்கவிடுவதில்லை. முதலில் தானாக இயங்குவதனைத் தடுக்கிறது.

பின்னர் தளத்தில் வீடியோ பைல் பதிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் சிகப்பாக ஒரு கட்டத்தினைக் காட்டுகிறது. இதனைப் பெற இணையத்தில்https://addons.mozilla.org/enUS/firefox/addon/1765/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

https://addons.mozilla.org/enUS/firefox/addon/6648/ என்ற முகவரியில் இதே போன்ற இன்னொரு ஆட் ஆன் தொகுப்பும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கெனக் கிடைக்கிறது.


கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது ஆரக்கிள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம்.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், 'கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது.

இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம்.


ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது.


'டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்' என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன்.


கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.

இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.

அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.

இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.


புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு

அவிரா, அவாஸ்ட், நார்டன், ஏவிஜி என எத்தனை இலவச ஆண்ட்டி வைரஸ் பதிப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும், இவற்றையும் மீறி ஏதாவது நடந்துவிடுமோ என்று தான் நாம் அஞ்ச வேண்டியதுள்ளது.

ஏனென்றால், நாளுக்கு நாள் புதிய கோணங்களில், வடிவங்களில், வைரஸ்கள் உருவாக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய வகை ஆண்ட்டி வைரஸ் தொகுப்புமுறை ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இது அண்மையில் பரவிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைச் சேர்ந்ததாகும். ஆனால் முற்றிலும் இலவசமே. இதனுடைய பெயர் Panda Cloud AntiVirus.

இதன் முதல் சிறப்பு என்னவென்றால், வைரஸ் டெபனிஷன்ஸ் எனப்படும் குறியீடுகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதில்லை. அவை பண்டா சர்வரிலேயே இருக்கும். இவை அனைத்தும், இதன் சர்வரிலேயே இருப்பதால், அப்டேட் செய்யப்படுவதும் அங்கேயே தான்.

எனவே தாமதமாக அப்டேட் என்ற பேச்சிற்கே இடமில்லை. லேட்டஸ்ட் வைரஸ் அப்டேட் நாம் செய்யவில்லையே என்ற பயமும், தூக்கமில்லா இரவுகளும் நமக்கு இல்லை.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, பன்னாடுகளில் ஒரு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே எந்த ஒரு கம்ப்யூட்டரில் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டாலும், உடனே அது பண்டா சர்வருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது.

வைரஸ் காணப்பட்ட சில நிமிடங்களில் அதனைத் தீர்த்துக் கட்டும் தொகுப்பு தயாராகிவிடுகிறது. எனவே தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகவும் சிறந்ததாகவே தெரிகிறது.

இலவசம் என்பதால், இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கலாமே! http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் காணலாம். இதற்கான அழகான விளக்க வீடியோவும் இதில் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இல்லை எனக்கு வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், பத்து கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்தும் அவாஸ்ட் (Avast) மற்றும் அதே போலப் பலரால் பயன்படுத்தப்படும் அவிரா (Avast) ஆகிய தொகுப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

அவாஸ்ட் தேவைப்படுபவர்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி http://www.avast.com/ freeantivirusdownload.

அவிரா வேண்டும் என்றால் http://www.softpedia.com/progDownload/AntiVirPersonalEditionDownload6527.html என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.


ஓய்ந்தது கூகுள் வேவ்

ஏறத்தாழ ஒராண்டுக்கு முன், கூகுள் வேவ் என்னும் ஒரு வசதியை இலவசமாகத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்தது. மக்கள் தொடர்பினை மேற்கொள்வதில், இது ஒரு புதிய மாற்றத்தையும், அதிக வசதியையும் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்கள் இதன் முழு பரிமாணத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கூகுள் தரவில்லை. இதனால், உடனே கூகுள் வேவ் வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், உடனே பின் வாங்கினார்கள். இவர்களின் கருத்துக்களைக் கேட்டவர்கள், அதன் செயல்பாடு என்ன என்று அறியாமலேயே, அதனைத் தொடப் பயந்தனர். விளைவு?

அதிக வாடிக்கையாளர்கள் இல்லாததால், கூகுள் இந்த வசதியை மூடிவிட்டது. கூகுள் எதிர்பார்த்தபடி, இது பயன்படுத்தப்படாததால், இந்த வசதி மூடப்பட்டது என இப்பிரிவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

(காண்க: http://googleblog.blogspot.com/2010/08/updateongooglewave.html)"எது மிகக் கடினமோ, அதனைத் தயாரித்து வழங்கு. அது வெற்றி அடையவில்லையா, பாடமாக அதனை எடுத்துக் கொள். தோல்விகளையும் கொண்டாடு; அதுதான் கூகுள்' என இந்நிறுவன அறிவிப்பு கூறுகிறது.

இதற்கு முன் இதே போல பல கூகுள் திட்டங்கள் மக்கள் ஆதரவின்றி தோல்வி அடைந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில : Google Health, Google Dodgeball, Google Notebook மற்றும் Google Lively.


சுதந்திரத்தின் சுவாசம்

நாம்நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா... இல்லையா... என்பதை காலம் காலமாக பட்டிமன்றம்நடத்தி வருகிறோம். ஆனால் பொது இடங்களில்நாம் நடந்து கொள்ளும் முறைகளோ மாறியிருப்பதாகத் தெரியவில்லை.


பலர் சுதந்திரம் என்பதை - எல்லாம் தனக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.


சாலைகளில்...:


பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை.


ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம்.


அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும்.


நடத்தைகளில்... :


காரணமே இல்லாமல் கோபப்படுவோரை பார்த்திருக்கிறோம். சில்லரை கேட்கும் பயணியிடம் பஸ் கண்டக்டர் எரிந்து விழு தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடத்தல், தகவல் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோபம் காட்டுவது, நியாயமான தொகையை சொல்லும் பயணியிடம் ஆட்டோக்காரர்கள் காட்டும் கோபம் என்று எதற்கு கோபப்படுவோரை நாம் சாதாரணமாக பார்க்கலாம்.


மற்றவர்களுடன் எதற்கெடுத்தாலும் வில்லங்கம் பேசும் பண்பு, சண்டைக்குப் போகும் குணம் மாற வேண்டும். இன்றும் பலர் ஜாதி, மத வேறுபாடுகளைமனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும்.


பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது.


மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது.


மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது.


மதித்து நடத்தல்... :


வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.


வர்த்தகத்தில்... :


சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.


இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes