நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட்

சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக 'பேஸ்புக் கிரெடிட்ஸ்' என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, நாளை (ஜூலை 1ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் தொடர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது 'கூகுள் பிளஸ்' என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் 'தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)' சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் பிளஸ்

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது 'கூகுள் பிளஸ்' என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் 'தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)' சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய அச்சுறுத்தல்கள்

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன.

எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது.

மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்:

பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன.

இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன.

எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும்.


2.நம்மை செயல்படாமல் வைத்தல் : சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன.

அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.

ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன.

3.தொடரும் நாசம் : ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.

4. புதிய அறிவுரைகள்: வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.

இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.
ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள்.
மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.
ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.


விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந் தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடை கிறோம்.

இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.

இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் (Windows Live Sky Drive) வசதியாகும்.
இந்த ட்ரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு.

அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.

இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள்.

பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.


சோலார் மொபைல்போன் சார்ஜர்

மனிதனின் புலனுறுப்புகளுள் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளதாக கூறினால் அது நிச்சயம்‌ மொபைல்போனாகத் தான் இருக்கும் என்று அனைவரும் கூறுமளவிற்கு மொபைல்போனின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது.

மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதற்கு காரணம், அதிவேக தொலைதொடர்பும், குறைந்த விலையில் புதுப்புது அம்சங்களுடன் கிடைப்பது ஆகும்.

விலைகுறைந்தது முதல் அனைத்து நவீனதொழில்நுட்பங்களுடன் கூடிய ‌மொபைல்போன்களுக்கும் தேவையான அடிப்படை விஷயம் பேட்டரி சார்ஜ் போடுவது ஆகும்.

பல முன்னணி நிறுவனங்கள் ஒரு மாத கால அளவிற்கு பேட்டரியில் சார்ஜ் நிற்கும் என்று பலவித அறிவிப்புகளோடு மொபைல்போன்கள் அறிமுகப்படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே. ஏற்கனவே, பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதற்கு பெரும்பாலும் மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரூபாய் நோட்டு, இலைகளின் மூலம் சார்ஜ் ஏற்றலாம் என்று அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கும் போதிலும், இதுஎல்லாம் தற்காலிக தேவை‌யை மட்டும் பூர்த்தி செய்யும் என்று இதுவே நிரந்தர தீர்வாகாது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

இதற்காக, ஜப்பானின் டிஇஎஸ் நியூ எனர்ஜி நிறுவனம் பான் எனர்ஜி ‌தொழில்நுட்ப அடிப்படையில் புதிய யூஎஸ்பி சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சார்ஜர் இயங்க மின்சாரம் தேவையில்லை. அதற்குப் பதிலாக வெப்பம் இருந்தாலே போதும்.

சூடானபொருட்களின் மீது இந்த கருவியை வைத்து மொபைல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜர், வெப்ப ஆற்றலை, மின்ஆற்றலாக மாற்றுகிறது.

இந்த சார்ஜரின் மூலம் மொபைல்போன்கள் மட்டுமல்லாது எம்பி3 பிளயர், ஐபாட் உள்ளி்ட்டவைகளையும் சார்ஜ் செய்ய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.


தண்டர்பேர்ட் ஷார்ட்கட் கீகள்

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரபலமான பிரவுசராக, அனைத்துப் பிரிவினரிடத்திலும் பெயர் பெற்று வருவதைப் போல, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனைத் தனியாகவும் விரும்பிப் பயன்படுத்துவோரும் உண்டு.

தண்டர்பேர்ட் இமெயில் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்பு இங்கே தரப்படுகிறது.
புதிய செய்தி எழுத (மாறா நிலையில்) – Ctrl + M
புதிய செய்தி எழுத (மாற்றப்பட்ட நிலையில்) – Shift + Ctrl + M
செய்தி திறக்க – Ctrl +O
அச்சிட – Ctrl+ P
நகலெடு (காப்பி செய்திட) – Ctrl + C
செய்ததை உடனே ரத்து செய்திட – Ctrl + Z

மீண்டும் அதனை மேற்கொள்ள – Ctrl+ Y

முந்தைய போல்டருக்குச் செல்ல – Ctrl+ Alt+ M

அழிக்க – Del

ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லாமல் அழிக்க – Shift + Del

அனைத்தையும் தேர்ந்தெடுக்க (அனைத்து செய்திகள் மற்றும் ஒரு செய்தியில் உள்ள டெக்ஸ்ட்
மட்டும்) – Ctrl+ A

செய்திக்கு முன்னர் வந்த அனைத்து செய்திகளையும் சேர்ந்த்து தேர்ந்தெடுக்க – Ctrl + Shift + A

செய்தியை எடிட் செய்திட (புதியதாக) – Ctrl + E

அனைத்து சார்ந்த செய்திகளையும் விரிக்க – *

அனைத்து சார்ந்த செய்திகளையும் மடக்க – \

டேக் இணைக்க / நீக்க – 1 to 9

செய்தியிலிருந்து அனைத்து டேக்குகளையும் நீக்க – 0 (zero)

உடனடியாக பில்டர் செய்திட – Ctrl+F

அப்போதைய செய்தியில் டெக்ஸ்ட் கண்டறிய – Ctrl+F

தற்போதைய அஞ்சல் செய்தியில் மீண்டும் ஊடிணஞீ பயன்படுத்த – Ctrl+G or F3

அப்போதைய அஞ்சல் செய்தியில் முந்தைய தேடியதைக் கண்டறிய – Ctrl+ Shift + G (or Shift + F3)

போல்டரில் உள்ள அனைத்து செய்திகளையும் தேட Ctrl + Shift + F

டேப் அல்லது விண்டோவினை மூட – Ctrl + W

விண்டோ அல்லது டேப் மூடுவதை மீண்டும் மேற்கொள்ள – Ctrl+ T

மின்னஞ்சல் செய்தியை பார்வேர்ட் செய்திட – Ctrl+ L

தற்போதைய அக்கவுண்ட்டில் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற – F5

அனைத்து அக்கவுண்ட்களிலும் உள்ள புதிய அஞ்சல் செய்திகளைப் பெற Ctrl+ Shift + T

டெக்ஸ்ட்டின் அளவினை அதிகரிக்க – Ctrl + +

டெக்ஸ்ட்டின் அளவினைக் குறைக்க – Ctrl+

டெக்ஸ்ட்டின் அளவினை பழையபடி அமைக்க – Ctrl+ 0 (zero)

ஸ்டார் இணைக்க, நீக்க – S

அஞ்சல் செய்தியை கிடப்பில் பாதுகாப்பாய்ப் போட – A

மின்னஞ்சல் செய்தியின் மூலத்தைக் காண – Ctrl+ U

மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாக/ படிக்காமல் விட்டதாகக் குறியிட – M

மின்னஞ்சல் செய்தியினைப் படித்து விட்டதாகக் குறியிட – R

அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படித்துவிட்டதாகக் குறியிட – Shift + C

தேதி குறித்து படித்ததாகக் குறியிட – C

குப்பை செய்தியாகக் குறியிட (Junk) J

குப்பை இல்லை எனக் குறியிட – Shift + J

மின்னஞ்சல் செய்திக்கு மாறா நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க – Ctrl+ R

மின்னஞ்சல் செய்திக்கு மாற்றப்பட்ட நிலையில் உள்ள படிவத்தில் பதிலளிக்க Shift + Ctrl + R

அனைத்து அஞ்சல் செய்திகளுக்கும் பதில் அளிக்க (மாறா நிலையில் உள்ள வடிவமைப்பில்) Ctrl+

Shift + R

அஞ்சல் செய்தியில் உள்ள அனைவருக்கும் பதிலளிக்க – Shift + Ctrl + R

லிஸ்ட்டுக்குப் பதில் அளிக்க – Ctrl+ Shift + L

அஞ்சல் செய்தியை பைலாக சேவ் செய்திட – Ctrl+ S

செய்திகளைத் தேடுக – Ctrl + Shift + F

அனைத்து செய்திகளையும் அனுப்ப மற்றும் பெற – Ctrl+ T or F5

நிறுத்த – Esc

வெளியேற – Ctrl+ Q


விண்டோஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சிங்கப்பூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார்.

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல்போன்கள் வர்த்தகத்தில், ஆசிய அளவில், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் போட்டியாக உள்ளதாக அவர் கூறினார்.

இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முதலிடத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது.

மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இமெயில், டேட்டா, ஃபேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்த்தில் இருந்த நோக்கியா நிறுவனம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பி்ப்ரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய தி்ட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதகதியில் நடைபெற்று வந்தன.

இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, மக்களுக்கு இதற்கு இருக்கும் வ‌ரவேற்பை பொறுத்து, 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது குவல்காம்

அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவல்காம், இந்தாண்டு இறுதிக்குள் நான்காம் தலைமுறை (4ஜி) தொழில்நுட்ப சேவையை அடிப்படையாகக் கொண்ட பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

குவல்காம் நிறுவனம், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே இதற்கான உரிமையை 4 சர்க்கிள்களில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த குவல்காம் (இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகள்) தலைவர் கன்வலீந்தர் சிங் கூறியதாவது, இந்த 4 ஜி சேவையை அறிமுகப்படுத்த தாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

இதற்கான நான்கு கட்டங்களாக பணியை வகுத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றோம். முதற்கட்டமாக பிராட்பேண்ட் நிறுவனங்களோடு உடன்பாடு, இரண்டாம் கட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான முதலீடு மற்றும் அதற்கான சூழ்நிலையை மேம்படுத்துதல், மூன்றாம் கட்டமாக இந்த சேவைக்காக பல்வேறு ஆப‌ரேட்டர் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுதல் மற்றும் இறுதியா‌க சேவையை அறிமுகப்படுத்துதல்.

தற்போது தாங்கள் மூன்றாம் கட்ட பணிகளில் உள்ளோம். ஆபர‌ேட்டர் நிறுவனங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தங்களுக்கு இணைந்து செயல்பட உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், சர்க்கிள்களில் இந்த சேவையை வழங்குவதற்கான நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், இந்த சேவையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துணிந்தால் தாங்கள் அவர்களை விட்டு விலக தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குவல்காம் நிறுவனம், டைம் டிவிசன் டியூப்லெக்ஸ் லாங் டெர்ம் எவலூசன்( டிடீடீ-எல்டிஇ) தொழில்நுட்பம் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை டில்லி, மும்பை, ஹரியானா மற்றும் கேரளா உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக வழங்கி வருகிறது.

தாங்கள் இந்த நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், எஞ்சிய பங்குகள் துலிப் டெலிகாம் ஜிடிஎல் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது, இந்த 4ஜி சேவைக்காக எல்டிஇ நிறுவனத்தை பார்ட்னராக கொண்டு துவக்கப்பட உள்ளதாகவும், பெரும்பாலும் இந்த சேவை இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2012ம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


விண்டோஸ் 7 சிஸ்டம் ரெஸ்டோர்

விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும்.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் இன்னும் கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்றாலும், புத்திசாலித்தனமாக இதனைப் பயன்படுத்தினால் அதிகம் பயன் கிடைக்கும். அதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

1. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் செயல்பாடு: சிஸ்டம் ரெஸ்டோர், உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் இணைந்து செயல்படுகிறது. சிஸ்டத்தினை மீண்டும் குறிப்பிட்ட ஒரு பழைய நிலைக்குக் கொண்டு வருகையில், சிஸ்டத்தினை ஸ்கேன் செய்திட, ஆண்ட்டி வைரஸ் தொகுப் பினைத் தூண்டுகிறது.

சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுகையில், ஏதேனும் ஒரு பைல் கெடுக்கப்பட்டு இருப்பின், ஆண்ட்டி வைரஸ் அதனை அப்படியே தனியே ஒதுக்கி வைக்கிறது.

ஆனால், ரெஸ்டோர் பாய்ண்ட்டில், கெடுதலுக்கு ஆளான பைல் ஒன்று இருந்து, அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பைத் தற்காலிகமாக ஒதுக்கி நிறுத்தி வைத்து, நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரைப் பிரித்து வைத்து, பின்னர் ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்த வேண்டும். ரெஸ்டோர் வேலை முடிந்த பின்னர், ஆண்ட்டி வைரஸ் கொண்டு, கெடுக்கப்பட்ட பைலைச் சரி செய்திட வேண்டும்; அல்லது நீக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸாக ரெஸ்டோர் பாய்ண்ட்? ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்கு நாம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதன் மூலம், ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணக் கூடாது.

ரெஸ்டோர் பாய்ண்ட் கொண்டிருக்கும் பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்வதன் மூலம், கம்ப்யூட்டரைத் தாக்கிய வைரஸிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று முடிவெடுக்கக் கூடாது. வைரஸை நம்மால் இந்த வழியில் நீக்க முடியாது.

சிஸ்டம் ரெஸ்டோர், யூசர் டேட்டா எதனையும் சரிப்படுத்தாது; எனவே பாதிக்கப்பட்ட பைல், சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுவதனால் சரியாகாது. எனவே கெட்டுப்போகாத பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முடியாது.

3. ஒன்றுக்கு மேலாக நல்ல ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ்: சிஸ்டம் ரெஸ்டோர் வசதி, ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளை உருவாக்கி வைத்துக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் போதெல்லாம், விண்டோஸ் 7 சிஸ்டம் தானாக ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கிக் கொள்கிறது.

இருப்பினும், நாமாக, கம்ப்யூட்டர் மிக நன்றாக, அதிகபட்ச திறனுடனும், வேகத்து டனும் செயல்படுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்களாக ஏதேனும் அப்டேட் பைலை இயக்கி, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முனைவதாக இருந்தால், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அதற்கு முன் உள்ள நிலையில் ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கிக் கொள்வது நல்லது.
நீங்களாக, ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்க, Start அழுத்தி, Computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Properties என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு System Protection என்பதில் கிளிக் செய்து, அதில் உள்ள Create பட்டனில் கிளிக் செய்திட வேண்டும்.

இங்கு உங்களிடம் பெயர் ஒன்று கேட்கப்படுகையில், அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்கு ஒரு பெயரினை நீங்கள் தர வேண்டும். அந்த பாய்ண்ட்டினை அடையாளம் காணும் வகையில் ஏதேனும் ஒரு பெயர் தரலாம். எடுத்துக்காட்டாக, PreService Pack 1 என்றோ, Before Tamil Business installation எனவோ தரலாம்.

4. பாதித்த பைல்களை ஸ்கேன் செய்திடுக: ரெஸ்டோர் செய்திடுகையில், சிஸ்டம் ரெஸ்டோர் டூல், பாதித்த பைல்களை ஸ்கேன் செய்வதாக செட் செய்திடவும். ஏதேனும் புரோகிராம் அல்லது ட்ரைவர் பைல் ஒன்று, பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படலாம். ஆனால், அவற்றைச் சரிப்படுத்தி, இழக்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். அந்நிலையில் ரெஸ்டோர் செய்வதனை நிறுத்தி, அதற்கு முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்குச் செல்லலாம்.

5. எக்ஸ்பியுடன் டூயல் பூட்டிங்: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்கப்பட்டுக் கொண்டிருப்பின், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்க முற்படுகையில், விண்டோஸ் 7 ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் அனைத்தும் நீக்கப்பட வாய்ப்புண்டு.

இதனால் இழப்பு நமக்குத்தான். இதற்கு தீர்வாக http://www.vistax64.com/attachments/tutorials/2647d1202275649systemrestorepointsstopxpdualbootdeletestop_xp.reg?ltr=Sஎன்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், மைக்ரோசாப்ட் தீர்வினைத் தருகிறது. இங்கு கிடைக்கும் பைலை டவுண்லோட் செய்து கொள்க.

இந்த பைலின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Mஞுணூஞ்ஞு என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், இன்ஸ்டலேஷனை ஏற்படுத்த ஓகே கொடுக்கவும். இப்போது பைலில் உள்ளவை விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும். இதன் மூலம், மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இயக்கப்படுகையில், ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் நீக்கப்பட மாட்டாது.
விண்டோஸ் கொண்டிருக்கும் சிஸ்டம் ரெஸ்டோர் வசதி மிகவும் பயன் தரத்தக்க ஒரு வசதியாகும். கம்ப்யூட்டரை, அது நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிலைக்குக் கொண்டு செல்வது மட்டுமின்றி, நம் பயனுள்ள நேரத்தையும் நமக்கு மிச்சப்படுத்தித் தருகிறது. மேலே சொல்லப்பட்ட டிப்ஸ், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தை நமக்கு மிச்சப்படுத்துகிறது.


இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 2

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் எக்ஸைனோஸ் டூயல் கோர் ப்ராசசர் போனை இயக்குகிறது.

முதலில் வோடபோன் நிறுவனத்தின் வழியாக ரூ.32,890க்கு இந்த போன் கிடைக்க இருக்கிறது.

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, இந்த போனை வாங்கும்போது ஆறு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா 3ஜி சேவை மூலம் இலவசமாய் இறக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் இதன் 16 ஜிபி மாடலில் என்.எப்.சி. தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

போனை பத்திரமாக வைத்து இயக்க ஒரு லெதர் பவுச் தரப்படுகிறது. இன்னும் பல கேபிள்களும் கிடைக்கின்றன. இந்த போனை ஆன்லைன் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.


பழைய பிரவுசர்களைக் கைவிடும் கூகுள்

கூகுள் தன் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களில், பழைய பிரவுசர்களுக்கான தொழில் நுட்ப உதவியை நிறுத்திவிடப் போவதாக அறிவிப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, மொஸில்லா பிரவுசர் 3.5. ஆப்பிள் சபாரி 3 மற்றும் கூகுள் பிரவுசர் 9 ஆகியவற்றை கூகுள் சுட்டிக் காட்டியுள்ளது.

இவை அனைத்துமே, இவற்றிற்குப் பின்னர் இரண்டு புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் புதிய பதிப்பிற்கு மாற வேண்டும் என கூகுள் எதிர்பார்க்கிறது.

கூகுள் மெயில் மற்றும் டாக்ஸ் புரோகிராம்களும், இவற்றிற்கான சப்போர்ட் தந்திடும் பணியை நிறுத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பிற்கும், புதிய பதிப்பு ஒன்று வெளியாகும்போது, அதற்கு முந்தைய பதிப்பிற்கு முந்தைய பதிப்பிற்கான உதவியை நிறுத்துவதனை கூகுள் இனி வாடிக்கையாகக் கொள்ளும் என இந்நிறுவன பொறியியல் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிப்பது, கூகுள் நிறுவனத் திற்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்கு தன் சப்போர்ட்டை நிறுத்தியது.

கூகுள் டாக்ஸ் இனிமேல் அதனுடன் இயங்காது என அறிவித்தது. அப்போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 னை, 10.4% மக்கள் பயன்படுத்தி வந்தனர். இருந்த போதும் தன் கொள்கையை குகூள் அமல்படுத்தியது.
இப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சப்போர்ட்டை நிறுத்துவதாக, கூகுள் தான் முதன்முதலாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இதற்கான சப்போர்ட்டை ஏப்ரல் 2014 வரை தரப்போவதாக அறிவித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால், பழைய பிரவுசர்கள் மூலம் கூகுள் சர்ச் இஞ்சினில் நாம் இன்னும் தேடுதல் வேலையை மேற்கொள்ள முடியும்.


மைக்ரோசாப்ட் தரும் மால்வேர் கிளீனர்

தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் (Malware Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்னைக் கான தீர்வுகள் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆகிய வற்றை கூடுமானவரை தவிர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் சி.டி. அல்லது யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்து இயக்கப்படக் கூடிய, மால்வேர் நீக்கும் புரோகிராம் (malware recovery tool) ஒன்றை இலவசமாகத் தந்துள்ளது. இதனை சிஸ்டம் ஸ்வீப்பர் (System Sweeper) என மைக்ரோசாப்ட் பெயரிட் டுள்ளது.

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்ய முடியா தவர்கள், இன்டர்நெட் இணைப்பு இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாதவர்கள், இதனைப் பயன்படுத் தலாம்.

மேலும் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்பட முடியாமல், முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடு களையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

சிஸ்டம் ஸ்வீப்பர் விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் வகைகளுக்கெனத் தனித்தனியே தரப்பட்டுள்ளது. தேவைப் படுபவர்கள் தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ற வகையில் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் இஞ்சின் தான், ஸ்வீப்பர் விண்டோஸ் புரோகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்ற மாதம், மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் சேப்டி ஸ்கேனர் என்ற புரோகிராமினை வைரஸ், ஸ்பைவேர் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிய வெளியிட்டது. இந்த சேப்டி ஸ்கேனர், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் கூறும் இரண்டு மால்வேர் எதிர்ப்பு சாதனங்களும், மைக்ரோசாப்ட் தன் பணியினைக் குறைத்துக் கொள்வதற்காக என வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிஸ்டம் ஸ்வீப்பர் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தள முகவரிhttp://connect.microsoft.com/ systemsweeper .


விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.

அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.

புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.

"கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது.

இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம்.

பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.
இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும்.

1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.


இமெயில் செய்திகளை ட்யூன் செய்ய

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறுபவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல்லது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.

பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரியர்கள், கடிதம் ஒன்று எப்படி எழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுபவரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் சில பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

சுருக்கமாக: வேகமாக அஞ்சல்கள் சென்றடைய வேண்டும்; நம் செய்தி பெறுபவரை உடனே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நாம் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகிறோம். எனவே, நாம் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் சுருக்கமாக, மின்னஞ்சல் கடிதத்தில் அமைக்க வேண்டும்.

நாம் எழுதுவது ஒரு புத்தகமோ அல்லது காதல் கடிதமோ அல்ல; சில தகவல்கள். எனவே சுருக்கமாக அவற்றை அமைப்பது உங்களுக்கும் பெறுபவருக்கும் சரியான தகவல் தொடர்பினை ஏற்படுத்தும்.

சிறிய சப்ஜெக்ட் வரி: மிக நீளமான சப்ஜெக்ட் வரியும், சப்ஜெக்ட் கட்டத்தில் ஒன்றுமே எழுதாமல் அனுப்புவதும் தவறு. உங்கள் கடிதம் குறித்த பொருளைத் தெரிவிக்கும் ஒன்றிரண்டு சொற்கள் போதுமே.

எழுத்து மற்றும் இலக்கண சோதனை: நம் கடிதம் பிழைகளுடன் இருந்தால், நம்மைப் பற்றி அஞ்சலைப் பெறுபவர் என்ன நினைப்பார்? கடிதம் எழுதி முடித்த பின்னர், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளைத் திருத்திய பின்னரே, அஞ்சலை அனுப்புதல் நல்லது.


சுருக்கு சொல், குறும்படங்கள் எதற்கு?

சொல் தொடர்களின் முன் எழுத்துக்கள் (Acronyms) அடங்கிய சொற்கள் மற்றும் எனப்படும் குறும்படங்கள் பயன் படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்குத் தெரிந்திருக் கலாம்; பெறுபவருக்குத் தெரிந்திருக்கும் என்று என்ன உறுதி. அதே போல இந்த குறும்படம் எதற்கு என்று எண்ணும் அளவிற்குப் பல குறும் படங்கள் உள்ளன. எனவே, இவற்றை அமைத்து உங்களின் மற்றும் பெறுபவரின் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.


பெரிய எழுத்துக்கள் எதற்கு?

ஒரு சிலர், தங்களின் கடிதத்தில் உள்ள செய்தி மிக முக்கியமானது என்ற எண்ணத்தில், அனைத்தும் பெரிய கேப்பிடல் எழுத்துக்களால் செய்தியை அமைப்பார் கள். இது, கோபத்தில் கத்திப் பேசுவதற்கு இணையாகும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.


நகல்கள் :

உங்கள் கடிதத்தின் நகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டாமே! யாருக்கு அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வேண்டுமோ, அவர்களின் முகவரிக்கு மட்டும் அனுப்பலாமே! தேவையற்ற பலருக்கு அனுப்புவது நல்லதில்லை. மேலும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஏன் அனைவருக்கும் தெரிய வேண்டும்?


பெயர் கூறி வாழ்த்து :

உங்கள் அஞ்சலைப் பெறுபவரின் பெயருடன், அவரை அன்பாக அழைக்கும் சொல்லையும் சேர்த்து எழுதுவது, உங்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டும்.

முடிவு: கடித முடிவில் நீங்கள் சொல்ல வந்த செய்தியினை முடித்து விட்டீர்கள் என்று தெரியும்படி ஒரு வரி சேர்க்க வேண்டும். உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல் கையெழுத்தினை இணைக்கலாம்.

தொடரைக் காட்டுக: மின்னஞ்சல் செய்தி ஒன்றுக்கு நீங்கள் பதிலளிக்கையில் ரிப்ளை பட்டன் அழுத்தி அமைப்பது நல்லது. அப்போதுதான், எந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் எழுதுகிறீர்கள் என்று மற்றவர்களும் தெளிவாக அறிய முடியும். ஏற்கனவே வந்த கடிதம் மிக நீளமாக இருந்தால், முக்கிய தகவல் அடங்கிய வரிகளை மட்டும் இணைக்கலாம்.

எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் மற்றவருக்கான அஞ்சலை அமைக்கவும். இவர் தானே, அல்லது இவன்தானே என்ற முறையில் எப்படியும் அமைக்கக் கூடாது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes