வரும் ஏப்ரல் மாதத்தில், எக்ஸ்பி பயன்பாட்டினை பன்னாட்டளவில் 14 சதவீதம் என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற மைக்ரோசாப்ட் நிறுவன இலக்கு அநேகமாக நிறைவேறாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
சென்ற நவம்பரில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, முந்தைய மாதத்திலிருந்து சற்றும் குறையாமல் அப்படியே உள்ளது. 33.22 சதவீதப் பயன்பாட்டுடன், பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவாறு உள்ளது.
சென்ற அக்டோபரில் இது 32.24 % ஆக இருந்தது. செப்டம்பரில் இது 31.24 %ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் எக்ஸ்பி, முற்றிலுமாகக் கைவிடப்படும் நாளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அதன் இறுதி நாளான ஏப்ரல் 8க்குப் பின்னரும், பயன்பாட்டில் இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்த 12 வயதாகும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை மக்கள் விட்டுவிட மனதில்லாமல், என்னதான் நடக்கும் பார்ப்போமே என்ற மனதுடன் இருக்கிறார்கள் என்பதுதான் தெரிய வருகிறது.
சென்ற அக்டோபரில், அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட விண்டோஸ் 8.1, ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், சென்ற நவம்பரில் 2.64 சதவீதம் பயன்பாட்டில் உயர்ந்தது. அக்டோபரில் இது 1.72 ஆக இருந்தது.
விண்டோஸ் 8, தன் பங்கினை இழந்து 6.66 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் இது 7.52% ஆக இருந்தது. இந்த இரண்டும் சேர்த்து, 9.3 சதவீதப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளன.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் இடத்தில் உள்ளது. நவம்பரில், இது கூடுதலாகி, 46.64 சதவீதமானது. அக்டோபரில் இதன் பங்கு 46.42% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் விஸ்டா 3.57% ஆகக் குறைந்துள்ளது. அக்டோபரில் இது 3.63% இடத்தைப் பிடித்திருந்தது. டிசம்பரி, விண்டோஸ் 8.1, விஸ்டாவின் பங்கினை மிஞ்சும் என எதிர்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment