சாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி வரிசையில் வெளியிட்ட எஸ் டூயோஸ் 2 மொபைல் போனை (GTS7582), அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது.
இணைய விற்பனைத் தளமான ஐணஞூடிஞஞுச்ட்ல் இந்த தகவல் கிடைக்கிறது. இதில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது . இதன் டிஸ்பிளே 400 × 800 பிக்ஸெல் திறன் கொண்டது.
1.2 கிகா ஹெர்ட்ஸ் திறனுடன் இயங்கும் ப்ராசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸெல் திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்ட கேமரா ஒன்றும், 0.3 எம்பி திறனுடன் கூடிய கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆகும். இரண்டு சிம் எப்போதும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
768 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் ஆகியவை கிடைக்கின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இந்த மொபைல் போனின் தடிமன் 10.57 மிமீ. எடை 118 கிராம். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ. 10,730.
0 comments :
Post a Comment