விண் ஆம்ப் 0.92, மே மாதம் 1997ல் இலவச புரோகிராமாக வெளியானது. பிப்ரவரி, 1998ல், பொதுவான நோக்கமுடன் கூடிய ஆடியோ பிளேயராக மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ப்ளக் இன் புரோகிராமின் கட்டமைப்புடன் வெளியானது. இதற்கான ஆதரவைப் பார்த்தவுடன், இந்த புரோகிராமில் பல மாற்றங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.
ஜூன்7, 1977ல், "Winamp” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சிறிய எழுத்து a உடன்) பதிப்பு 1.006 வெளியானது.
செப்டம்பர் 1998ல், விண் ஆம்ப் 2.0 வெளியானது.
நவம்பர் 1998ல், 66 ப்ளக் இன் புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Winamp3 வெளியானது. எம்.பி.3 என்பதனைத் தன் பெயரில் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பெயரிடப்பட்டது.
பின்னர் விண் ஆம்ப் 2 மற்றும் விண் ஆம்ப் 3, ("Winamp 2+3=5”) இணைக்கப்பட்டு விண் ஆம்ப் 5 வெளியானது.
அக்டோபர் 10, 2007ல், தன் பத்தாவது ஆண்டுவிழாவினை ஒட்டி, விண் ஆம்ப் 5.5 வெளியிடப்பட்டது.
இதில் பல முன்னேற்றங்கள் இருந்தன. பல மொழிகளை சப்போர்ட் செய்தது. மீடியா லைப்ரேரி, பிளே லிஸ்ட் போன்ற சிறப்பான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனை உருவாக்கியதில், முக்கிய பங்கு வகித்தவர்கள் Ben Allison (Benski) மற்றும் Maksim Tyrtyshny ஆவார்கள்.
விண் ஆம்ப் 5.6 பதிப்பில், ஆண்ட்ராய்ட் வை-பி சப்போர்ட், மவுஸ் வீல் சப்போர்ட் தரப்பட்டன.
விண் ஆம்ப் 5.66, சென்ற நவம்பர் 22ல் வெளியிடப்பட்டு, நிறுவனம் மூடப்படும் அறிவிப்பும் வெளியானது.
0 comments :
Post a Comment