சென்ற வாரம் முதலில் இணையத் தளங்களிலும், பின்னர் மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும், விற்பனைக்கு அறிமுகமான, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77 ஸ்மார்ட் போன், பல்வேறு அம்சங்களில் சிறப்பான திறன் கொண்டதாக அமைந்துள்ளது.
இரண்டு சிம் சப்போர்ட், 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க்கும் எம்.டி. 6572 டூயல் கோர் ப்ராசசர், 4.2. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட இரண்டாவது கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எச்.டி. வீடியோ பதிவு மற்றும் இயக்கம், 1 ஜிபி ராம் மெமரி, 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதியுடன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் எனப் பல சிறப்புகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் பரிமாணம் 150.5 x 76.2 x10.2 மிமீ. எடை 100.5 கிராம். இதன் லித்தியம் அயன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
இது 10 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது. 282 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 7,999.
0 comments :
Post a Comment