மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.
நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.
1. உங்கள் விரலை திரையின் வலது முனையிலிருந்து மத்திய இடம் நோக்கி இழுத்தால் ஒரு மெனு கிடைக்கும். இதில் ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கான ஷார்ட் கட் கிடைக்கும். அத்துடன் search, share, devices, Settings ஆகியவையும் கிடைக்கும்.
2. உங்கள் விரலை திரையின் இடது முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்படும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதில், நீங்கள் ஒரு அப்ளிகேஷனிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்.
3. உங்கள் விரலை திரையின் மேல் முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது இயக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் அப்ளிகேஷனுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். இது விண்டோஸ் 7ல், விண்டோவின் மேல் பகுதியில் கிடைக்கும் மெனு பார் போல இருக்கும்.
4. இறுதியாக, உங்கள் விரலை, திரையின் மேல் முனையில் இருந்து, திரையின் கீழ் பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மூடப்படும்.
0 comments :
Post a Comment