சென்ற ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, நவம்பர் தொடக்கத்தில் மொபைல் விற்பனை நிலையங்களில், விற்பனை யாகும் சாம்சங் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் காலக்ஸி மெகா ஐ 9152 அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 23,499.
டூயல் கோர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2., ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ஜியோ டேக்கிங், பேஸ் மற்றும் ஸ்மைல் டிடக்ஷன் திறன் கொண்ட 8 எம்.பி. கேமரா, இரண்டாவதாக 1.9 எம்பி திறன் கொண்ட கேமரா, இரண்டு ஜி.எஸ்.எம். மைக்ரோ சிம் இயக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட தாக இந்த ஸ்மார்ட் போன் உள்ளது.
இதன் பரிமாணம் 162.6 x 82.4 x 9 மிமீ. எடை 182 கிராம். பார் டைப் வடிவத்தில் கிடைக்கும் இந்த போனில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் அகலம் 5.8 அங்குலம்.
இதன் யூசர் இண்டர்பேஸ் டச்விஸ் தொழில் நுட்பம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட். 64 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் அதிகப்படுத்தும் வசதி ஆகியவை கிடைக்கின்றன.
ஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, எட்ஜ், வை-பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதில் எப்.எம். ரேடியோ தரப்படவில்லை என்பது ஒரு குறை. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
டாகுமெண்ட் வியூவர், ஜி.பி.எஸ். வசதி ஆகியவை கிடைக்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கிடைக்கும் ஆர்கனைசர், இமேஜ்/விடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, வாய்ஸ் கட்டளை, சொல் பரிந்துரை, கூகுள் சர்ச், மேப்ஸ், யு-ட்யூப், காலண்டர் அன அனைத்து வசதிகளும் உள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 2600 mAh திறன் கொண்டது.
0 comments :
Post a Comment