ஐந்து அங்குல திரையுடன் கூடிய தன் முதல் ஸ்மார்ட் போனை, அண்மையில் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டைட்டானிய எஸ்5 (Titanium S5) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் வேகமாகச் செயல்படும் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர் உள்ளது. இதில் உள்ள 5 அங்குல திரை ஆன் செல் கெபாசிடிவ் டச் திரையாகும்.
இந்த வகை திரையுடன் கார்பன் வழங்கும் முதல் ஸ்மார்ட் போன் இதுதான். இதில் ஜெல்லி பீன் 4.2 ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஒன்றும் இதில் தரப்பட்டுள்ளது.
வழக்கம் போல இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் ராம் மெமரி 1ஜிபி. உள்ளார்ந்த ஸ்டோரேஜ் மெமரி 4ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,800 mAh திறன் கொண்டது.
பேர்ல் ஒயிட், டீப் ப்ளூ வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.12,990 என்றாலும், சந்தையில் ரூ.10,636க்குக் கிடைக்கிறது.
0 comments :
Post a Comment