மாதத்தின் ஒவ்வொரு இரண்டாம் செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எம்.எஸ். ஆபீஸ் மற்றும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் புரோகிரா மில் உள்ள பிழைகள் அடங்கிய குறியீடுகளைச் சரி செய்வதற்கான பைல் தொகுப்புகளை வெளியிடும்.
இவை பெரும்பாலும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், இணைய இணைப்பில் இருக்கையில், தானாகவே தரவிறக்கம் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்படும்.
நாம் வேறு வழியில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால், நம்மிடம் கேட்டுக் கொண்டு இவற்றை இன்ஸ்டால் செய்திடும்.
அந்த வகையில் சென்ற இரண்டாம் செவ்வாய்க்கிழமை, நவம்பர் 12 அன்று 19 பெரிய பிழைகளைச் சரி செய்திடும் பேட்ச் பைல்களை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இவற்றில் எட்டு பிழைக் குறியீடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்த முயன்றதனை மைக்ரோசாப்ட் கண்டறிந்து சரி செய்தது. இவையாவும், விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் இருந்தவையாகும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் மட்டும் 10 பிழைகள் சரி செய்யப்பட்டன. சில விண்டோஸ் சர்வர் மற்றும் அவுட்லுக் ஆகியவற்றுக்கானவை.
சர்வர்களில் ஹோம் சர்வர் மற்றும் ஸ்டோரேஜ் சர்வர் புரோகிராம்களிலும் பிழைகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டன.
மேலும் விண்டோஸ் 8, 8.1, ஆர்.டி. ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் சரி செய்யப்பட்டன. வழக்கம் போல விண்டோஸ் மலிசியஸ் ரிமூவல் டூல் எனப்படும் மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் புரோகிராம், புதியதாகச் சரி செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது.
2 comments :
மிகுவும் பயனுள்ள தகவல் . நன்றி
பயனுள்ள தகவல் தொடருங்கள்
Post a Comment