குறைந்த விலையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் கிராம மக்களையும் சிறிய நகரங்களில் வாழும் மக்களையும் இலக்காகக் கொண்டு பட்ஜெட்டுக்குள் கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோருக்காக மிகக் குறைந்த விலையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Intex Silver GB75501 என இது பெயரிடப்பட்டுள்ளது.இதில் இன்டெல் நிறுவனத்தின் Intel Atom ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது.945 GCLF Intel என்ற சிப் செட் உள்ளது.ஆட்டம் ஒரு சிறிய ப்ராசசர்.இதில் பொருத்தப்பட்டுள்ள ட்ரான்ஸ்சிஸ்டர்களும் மிகச் சிறியவையே.

இதனால் இந்த கம்ப்யூட்டர் மிகக் குறைந்த அளவிலேயே மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.மேலும் இந்த கம்ப்யூட்டர் வடிவமைப்பில் சிறியதாக இருப்பதால் மேஜையில் குறித்த இடத்தையே எடுத்துக் கொள்கிறது.

இதன் ராம் மெமரி 1 ஜிபி.ஹார்ட் டிஸ்க் 80 ஜிபி .டிவிடி ராம் தரப்பட்டுள்ளது.17 அங்குல சி.ஆர்.டி.மானிட்டர் தரப்படுகிறது.இதன் விலை ரூ 12,900.

இதே மாடலில் 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டர் ரூ.13,500க்குக் கிடைக்கிறது.நிச்சயம் பட்ஜெட் போட்டு கம்ப்யூட்டர் வாங்க நினைப்போருக்கு இந்த கம்ப்யூட்டர் ஒரு நல்ல தோழனாக இருக்கும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes