பார்வையில் "குறை': படிப்பிலோ "இரட்டைச் சாதனை'

பிளஸ் டூ தேர்வில் வரலாறு பாடத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவர் கோவர்தனா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இவர் அரசியல் அறிவியல் பாடத்தில் மாநில அளவில் 2-வது இடமும் பெற்றுள்ளார். திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், வரலாற்று பாடத்தில் 197-ம், அரசியல் அறிவியல் பாடத்தில் 190 மதிப்பெண்களும் பெற்று இந்த இரட்டை சாதனையை படைத்துள்ளார். மேலும் இவர் தமிழில் 182, ஆங்கிலத்தில் 166, புவியியலில் 189, பொருளாதாரத்தில் 190 என மொத்தம் 1,114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவரது தந்தை விக்ரமன் சுமை தூக்கும் தொழிலாளி. தாய் சக்தி படவேடு தபால் நிலையத்தில் தினக் கூலியாகப் பணிபுரிந்து வருகிறார்.

மாணவர் வி.கோவர்தனா கூறியது: எனக்கு பிறந்ததில் இருந்தே பார்வை கிடையாது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 426 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். பிளஸ் டூ தேர்வின்போது, விடைகளை நான் கூற ஆணாய் பிறந்தான் பள்ளி இடைநிலை ஆசிரியர் எ.இ.குப்புசாமி தேர்வு எழுதினார். ஜ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பார்வையற்ற குறைபாடுதான் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. பிரெயின் எழுத்து மூலம் இதுவரைப் படிக்கவில்லை. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போதே, பாடங்களை நினைவில் நிறுத்தி படித்தேன் என்றார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes