நகைகள் பற்றிய தகவல்கள்..!


வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு சோடாபை கார்பனேட்டும் மஞ்சள் பொடியும் கலந்து அதில் தங்க நகைகளைப் போட்டு சுத்தப் படுத்தினால் அவை புதிது போலப் பளபளக்கும்.

*கவரிங் நகைகளை வாங்கியதும் அவற்றின்மேல் நகப்பூச்சை தடவி வைத்துவிட்டால் அவை கருக்காமல் இருக்கும்.

*வெள்ளி நகை நகைகளை வைத்திருக்கும் பெட்டியில் சிறிதளவு கற்பூரத்தைப் போட்டுவைத்தால் அவை புதிது போலவே இருக்கும்.

*தங்க நகைகளின் மேல் சிறிதளவு பற்பசையை தடவி இரண்டு நிகிடங்கள் கழித்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் பாலிஷ் செய்ததுபோல பளபளப்பாக மின்னும்.

*'மெந்தால்' உள்ள டூத்பேஸ்ட்டால் வைர நகைகளைத் தேய்த்துக் கழுவினால் அவை புதிது போலப் பளபளக்கும்.

*முத்து மற்றும் வைர நகைகளை ஒருபோதும் சேர்த்து வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் இரண்டுமே பாழாகி விடும்.

*நகைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து சுத்தப்படுத்தக் கூடாது. விடாப்பிடியான அழுக்கை அகற்ற டிடர்ஜெண்ட் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பிரஷால் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். அதன்பின் வெந்நீரிலோ அல்லது ல்கஹாலிலோ கழுவி டவலால் துடைத்து விட்டால் போதும்.

*நகைகளை வைத்துள்ள பெட்டியுனுள் எப்போதும் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைக்க வேண்டும். அதிலுள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படும். ஈரப்பதம் இருந்தால் பெரும்பாலும் நகைகள் பொலிவிழந்து போய்விடும்.0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes