தேர்தல் தோல்வி பற்றி கார்த்திக் கருத்து

விருதுநகர் தொகுதியில் நடிகர் கார்த்திக்,பா.ஜ.,வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு,ஓட்டுகள் பெற்று,தோல்வி அடைந்தார்.உடனடியாக சென்னை திரும்பிய கார்த்திக்கை அவரின் விசுவாசிகள் சந்தித்து,"பெரிசா எதிர்பார்த்தோம்;ரொம்ப குறைந்த ஓட்டுகளே விழுந்திருக்கே;என்னண்ணே ஆச்சு" என.பொறுப்பாக விசாரித்துள்ளனர்.

அப்போது கார்த்திக்,"தொகுதியில் நான் நினைச்சது ஒன்னு,அங்கு நடந்தது ஒண்ணாப் போச்சு.கட்சியைச் சேர்ந்தவங்கள்ல சிலர் திடீர்னு,"ரூட்" மாறிட்டாங்க.ஒரு வாரமா கூட இருந்தவங்க,அவங்களாகவே பிரசாரத்துக்கு வராம நின்னுட்டாங்க.பிரச்சாரம் செய்த இடத்திலெல்லாம் நிறைய கூட்டம் இருந்தது;கைதட்டி ஆரவாரம் செய்தாங்க;ஓட்டுப் போடும் பொது மட்டும் மறந்திட்டாங்க.தேர்தல்ல ஜெயிச்சா,விருதுநகர்ல வீடு வாங்கி,மக்களுக்கு சர்வீஸ் பண்ணலாம்னு நினைச்சேன்"என வேதனைப்பட்டிருக்கிறார்."அண்ணனுக்கு வீடு பார்க்கிற சிரமம் வேணாம்னு தான் மக்கள் அவரை தோற்கடிச்சுட்டாங்க போல"என முனுமுனுத்தனர்,கார்த்திக் ஆதரவாளர்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes