இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் ஏற்படும் வளர்ச்சியைக் காட்டிலும், இந்தியாவில், ஆறு மடங்கு வேகத்தில் இணையமக்கள் தொடர்பு உயர்ந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே தான், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலக அளவில் மூன்றாவது இடத்தை இணையப் பயன்பாட்டில் பெற்றுள்ளது.
இந்திய இணையப் பயனாளர்களில் 35 சதவீதம் பேர், 35 வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர். பெண்களில் 35 முதல் 44 வயதுள்ளவர்கள், அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இவர்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மொத்த இணையப் பயனாளர்களில், 39% பேர் மட்டுமே பெண்கள்.
0 comments :
Post a Comment