பைபேக் என்று சொல்லப்படும், பயன்படுத்திய பழைய மொபைல் போன்களுக்கு, ஒரு விலை போட்டு எடுத்துக் கொண்டு தங்களின் புதிய மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தினை சோனி, நோக்கியா, சாம்சங் போன்ற அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், தற்போது பின்பற்றி வருகின்றன.
இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம், புதியதாக இத்திட்டத்தில் இறங்கியுள்ளது.
எல்.ஜி. தன்னுடைய ஆப்டிமஸ் ஜி ப்ரோ (Optimus G Pro) மொபைல் போனை, சென்ற ஜூலை மாதம் இந்தியாவில் ரூ.42,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
தற்போது, வாடிக்கையாளர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொண்டு, இதனை விற்பனை செய்கிறது. பயன்படுத்திய ஸ்மார்ட் போனுக்கு ரூ.7,000 தருகிறது.
இத்துடன், வட்டி இல்லாமல், மாதத் தவணையிலும் போன்களை விற்பனை செய்கின்றது. குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு, கடன் விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது. இந்தியாவில் இயங்கும் எல்.ஜி. விற்பனை மையங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது.
சாம்சங், தன் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வாங்குவோருக்கு, இதே போன்ற திட்டம் ஒன்றை வழங்கி, பயன்படுத்திய போன்களுக்கு முதலில் ரூ.5,000 தள்ளுபடி விலையாக வழங்கியது. பின்னர் இதனை ரூ.7,000 ஆக உயர்த்தியது நினைவிருக்கலாம்.
எல்.ஜி. எந்த போன்களுக்கெல்லாம், இந்த தள்ளுபடி விலையினைத் தருகிறது என்ற தகவலைத் தரவில்லை. இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் அல்லது இணைய தளத்தில் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த போனுக்கு எல்.ஜி. இரண்டு ஆண்டு வாரண்டி அளிக்கிறது. பெரும்பாலான மற்ற மொபைல் நிறுவனங்கள், ஓராண்டு மட்டுமே, வாரண்டி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment