கார்பன் நிறுவனம், அண்மையில் குறைந்த விலையில் ஏ-8 என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சஹோலிக் (Saholic) வர்த்தக இணைய தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
முன்புறமாக வீடியோ அழைப்புகளுக்கு 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது.
இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது.
இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளுடூத், ஜி.பி.எஸ்., 512 எம். பி. ராம் மெமரி, 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை இதனை அதிகப்படுத்தும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள்.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,189.
1 comments :
புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு..
Post a Comment