புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர்.
விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது.
1. கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்:
விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.
எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.
U : ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.
TAB : முப்பரிமாணக் காட்சி
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.
2. ஹெல்ப் அண்ட் சப்போர்ட்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், அண்டு என்று பெயரிடப்பட்ட பட்டன்.
விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள அண்டு பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் அண்டு a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது.
இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.
3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்:
நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon/report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும். இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.
4. அப்ளிகேஷன் அன் இன்ஸ்டால்:
விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக் காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும்.
இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5.கிரடென்ஷியல் மேனேஜர்: (Credential Manager):
இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.
0 comments :
Post a Comment