2011 ஆம் ஆண்டு, வீடியோலேன் நிறுவனத்தின் வி.எல்.சி. பிளேயர், ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பதிப்பு 2.0.1 என்ற பெயருடன், மீண்டும் அதே ஸ்டோரில் இடம் பிடித்துள்ளது.
ஐ போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தும் பதிப்பாக இந்த வி.எல்.சி. பிளேயர் இடம் பெற்றது. என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டு, தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இடம் பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் வசதிகள் புதியனவாக இடம் பெற்றுள்ளன.
வை-பி மூலம் இந்த சாதனங்களுக்கு பைல்களை அப்லோட் செய்திடலாம். ட்ராப் பாக்ஸ் இந்த சாதனங்களுடன் இணைக்கப்பட்டு பைல்களைக் கையாளும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பயன்படுத்தி ஒரு வீடியோ மீடியா லைப்ரேரி ஒன்றை உருவாக்கி நிர்வகிக்கலாம்.
வண்ணக் கலவைகள் எப்படி இருக்க வேண்டும் என இதன் மூலம் செட் செய்திடலாம்.
அனைத்து வகையான பைல்களையும் இதில் இயக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆடியோ ட்ரேக்குகளை இதில் இயக்கலாம்.
நெட்வொர்க் பைல் இயக்கத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
புளுடூத் ஹெட் செட் மற்றும் ஏர் பிளே ஆகியவற்றை இதில் மேற்கொண்டு செயல்படுத்த முடியும்.
இது முற்றிலும் இலவசம் மற்றும் ஓப்பன் சோர்ஸ் தன்மை கொண்டது.
வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ் ஆகியவற்றுக்கும் சப்போர்ட் தரப்படும்.
சென்ற ஆண்டு ஜூலையில், வீடியோ லேன், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான வி.எல்.சி. பிளேயரை சோதனைப் பதிப்பாக வெளியிட்டது. இது இன்னும் சோதனைப் பதிப்பாகவே உள்ளது.
ஆப்பிள் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயரை இயக்க ஐ.ஓ.எஸ். சிஸ்டம் பதிப்பு 5.1 அல்லது அதற்கும் மேற்பட்டது தேவை.
இந்தியாவின் ஆப்பிள் ஸ்டோரிலும் வி.எல்.சி. மீடியா பிளேயர் இலவசமாகக் கிடைக்கிறது.https://itunes. apple.com/in/app/id650377962 என்ற இணைய தளம் சென்று இதனைப் பெறலாம்.
1 comments :
அந்த லிங்க் வேலை செய்யவில்லையே
Post a Comment