எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும்.
2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது எக்ஸெல் ஒர்க்ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டியதிருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும்.
2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
0 comments :
Post a Comment