ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் விண்டோஸ் போன் அப்ளிகேஷன்

அனைத்து வங்கி நிதி பரிவர்த்தனைகளையும், தனி நபர்கள், தங்கள் மொபைல் போன்களிலேயே மேற்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 

இந்த வகையில், அண்மையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த, State Bank Freedom app என்ற அப்ளிகேஷன் ஒன்றை இலவசமாகத் தரத் தொடங்கியுள்ளது. 

இந்த அப்ளிகேஷன் மூலம், உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, நிதி பரிமாற்றம், பில்களுக்கான தொகையினைக் கட்டுதல், ட்ரெயின் டிக்கட் வாங்குதல் போன்ற பல வேலைகளை மேற்கொள்ளலாம். 

நம் அக்கவுண்ட்டில் மீதம் இருக்கும் தொகை மற்றும் சிறிய அளவிலான நம் அக்கவுண்ட் அறிக்கை ஆகியவற்றைப் பெறலாம். செக் புக் தேவைக்கான விண்ணப்பத்தினை அனுப்பலாம். இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணம் போன்றவற்றைச் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செலுத்தலாம். 


இந்த அப்ளிகேஷனை இலவசமாகப் பெறhttp://www.windowsphone.com/enin/store/app/ statebankfreedom/89d44354b90a463d8dae08a5111c37fd என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

இதே அப்ளிகேஷன், 2011 ஆம் ஆண்டு, ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் வெளியிடப்பட்டது. பின்னர், 2012ல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

தற்போது விண்டோஸ் போன் சிஸ்டம் உள்ள மொபைல் போன்களுக்கென வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 7.5 மற்றும் அதன் பின்னர் வந்த இதே ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் மொபைல் போன்களில் இதனை இயக்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes