எக்ஸ்பி இனி வேண்டாம் இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு துறை எச்சரிக்கை


தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, எக்ஸ்பி பயன்படுத்தும் நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பயன்படுத்துவது சரியல்ல என்று எச்சரிக்கை தந்துள்ளது. வரும் 2014 ஏப்ரல் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தன் ஆதரவை விலக்கிக் கொள்ள இருக்கிறது. 

இதனால், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்பாட்டிற்கான பாதுகாப்பு புரோகிராம்களை மைக்ரோசாப்ட் வெளியிடாது. 

எனவே, எக்ஸ்பியில் இயங்கும் சிஸ்டங்கள் இணைய இணைப்பில் மற்ற வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

இந்தச் சூழ்நிலையில், தங்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் காப்பாற்றிக் கொள்ள, தகவல்கள் திருடு போகாமல் இருக்க, அனைவரும் அடுத்த சிஸ்டத்திற்கு இப்போதே மாறிக் கொள்ள வேண்டும். 

அப்போதுதான், புதிய சிஸ்டத்தினை முழுமையாகப் புரிந்து கொண்டு அதிகப் பயனடைய முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், டேட்டா திருட்டு ஏற்பட்டால், நிச்சயம் டிஜிட்டல் பாதுகாப்பு துறையினர் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதுவும் உறுதியாகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes