பாரதி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஆகஸ்ட் 15ல் தன்னுடைய ரூ.1 எண்டர்டெய்ன்மெண்ட் ஸ்டோரினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
இங்கு சென்று, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மியூசிக், வீடியோ, கேம் மற்றும் போட்டோக்களை ரூ.1க்குப் பெறலாம். இணையம் பிரவுஸ் செய்வதற்கும் இதே போல திட்டங்கள் தரப்பட்டுள்ளன.
இங்கு கிடைக்கும் இந்த வசதிகளை, ஏறத்தாழ 5,500க்கும் மேலான மொபைல் போன்களில் பயன்படுத்தலாம்.
ரூ1 க்கு வீடியோ டவுண்லோட் செய்திடும் வசதியை, ஏர்டெல் சென்ற ஏப்ரல் மாதத்தில் வழங்கியபோது, அது மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, வெற்றியை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஏர்டெல் மற்றவற்றையும் ரூ1 க்கு வழங்கும் திட்டத்தினை விரிவு படுத்தியது. இதற்கென நான்கு விளம்பரங்களை, தொலைக்காட்சி சேனல்களில் ஏர்டெல் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்த ரூ.1 பொழுதுபோக்கு ஸ்டோரினை அணுக, இரண்டு வழிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள், கட்டணமில்லாத தொலைபேசி எண் 56789 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
இப்போது, அழைப்பவரின் மெசேஜ் இன்பாக்ஸில், எண்டர்டெய்ன்மெண்ட் ஸ்டோருக் கான லிங்க் தரப்படும். இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், வாடிக்கையாளர், ரூ1 ஸ்டோருக்கு எடுத்துச் செல்லப்படுவார். இங்கு அவர் டவுண்லோட் செய்திட ஆப்ஷன்கள் தரப்படும்.
இரண்டாவது வழியில், வாடிக்கையாளர் நேரடியாக, தங்கள் போன் பிரவுசரில், http://one.airtellive.com என டைப் செய்து, தளத்திற்குச் சென்று, தேவையானவற்றை டவுண்லோட் செய்திடலாம். இதே போல Facebook, Yahoomail, Twitter மற்றும் LinkedIn இணைய தளங்களுக்கான நேரடி லிங்க் தொடர்புகளைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
ஒரு நாள் மட்டும் இவற்றைப் பயன்படுத்தக் கூடிய திட்டம் தரப்படும். 3 எம்.பி. அளவில் டேட்டா டவுண்லோட் செய்து கொள்ளலாம். அன்றைக்கு நள்ளிரவு வரை இந்த வகையில் பெற்ற வசதியைப் பயன்படுத்தலாம். டேட்டா டவுண்லோட் 3 எம்.பி. என்ற அளவினைத் தாண்டுகையில், கூடுதலான அளவிற்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.
0 comments :
Post a Comment