பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக, இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி.
ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளுடன் கேமரா, வண்ணத்திரை மற்றும் சாதாரண இணைய இணைப்பு கொண்ட மொபைல் போன்கள் அனைத்திலும் பேஸ்புக் தளத்திற்கான இணைப்பை எளிதாக வழங்க பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு வழியாகவே “Facebook for every phone” என்னும் இந்த அப்ளிகேஷன் தரப்படுகிறது. இது இலவசமாகவே, மொபைல் போனில் பதிந்து தரப்படுகிறது. இதில் செய்திகள், மெசஞ்சர் மற்றும் படங்களை அனுப்புதல் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் அதிக செலவின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில், ஸ்மார்ட் போன் வாங்காமலேயே, சாதாரண மொபைல் போன்களில் மக்கள் இந்த வசதிகளை அனுபவிக்க முடிகிறது. இணைய இணைப்பிற்கான வழிகளைக் கொண்ட குறைந்தவிலை மொபைல் போனாக பேஸ்புக் தரும் இந்த அப்ளிகேஷன் கொண்ட மொபைல் போன்கள் இருக்கின்றன.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனமான ஸ்நாப்டு (Snaptu) வடிவமைத்தது. இந்நிறுவனத்தினை பேஸ்புக் 2011 ஆம் ஆண்டில், விலைக்கு வாங்கியது.
0 comments :
Post a Comment