மொபைல் போன் உலகில், தொழில் நுட்ப ரீதியாக, நீயா? நானா? என்ற போட்டி தொடங்கிவிட்டது. சாம்சங் நிறுவனத்திற்கும் எல்.ஜி. நிறுவனத்திற்கும் நடக்கும் இந்த போட்டியில் பயன் பெறப் போவது மக்களாகிய நாம் தான்.
ஏற்கனவே, தானும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக ஏதேனும் புதுமையை, மொபைல் போன்களில் புகுத்த வேண்டும் என்ற இலக்குடன், சாம்சங் இயங்கி வருகிறது.
அந்த வரிசையில், வளைவான திரையுடன் மொபைல் போன் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தது. "கேலக்ஸி ரவுண்ட்' என்ற பெயர் கொண்ட இந்த மொபைல் போன் விரைவில் கிடைக்க இருக்கிறது.
இந்த நிலையில், எல்.ஜி. நிறுவனமும், வளைவு திரை கொண்ட போன் ஒன்றை, "எல்.ஜி. ஜி ப்ளெக்ஸ்' என்ற பெயரில் கொண்டு வர இருக்கிறது.
ஆறு அங்குல அகலத்தில் OLED டிஸ்பிளே கொண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 800 ப்ராசசர், 2.26 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கவல்லது.
ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 13 மெகா பிக்ஸெல் பின்புறக் கேமராவும், 2.1 மெகா பிக்ஸெல் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளன.
வளைவான பிளாஸ்டிக் டிஸ்பிளே மிக அழகாக 700 மிமீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் தரப்படும் 3,500 mAh திறன் கொண்ட பேட்டரியும் வளைவாக வடிவமைத்துத் தரப்பட்டுள்ளது.
வளைவாக இருப்பதால், பின்புறம் உள்ள லவுட் ஸ்பீக்கரிலிருந்து வெளியாகும் ஒலி, தரையைத் தொடுவதில்லை. எனவே, ஒலியானது மிகவும் துல்லியமாகக் கிடைக்கிறது.
பின்புற கவர் ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் ஸ்கிராட்ச் கோடுகளை உடனடியாக நீக்கிவிடலாம். இந்த போனின் பரிமாணங்கள் 160.5 x 81.6 x 7.9 x 8.7 மிமீ. எடை 177 கிராம்.
இதில் 2 ஜிபி டி.டி.ஆர். ராம் மெமரி தரப்படுகிறது. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜிபி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இன்னும் அதிகப்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTE / 3G HSPA, WiFi 802.11 ac/a/b/g/n, Bluetooth 4.0 with A2DP, GPS / aGPS, NFC எனப் பல தொழில் நுட்ப வசதி தரப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கொரியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை குறித்து இன்னும் தகவல் இல்லை.
சாம்சங் கேலக்ஸிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஒன்று உள்ளது. கேலக்ஸி போனின் திரை கிடைமட்டமாக வளைவு கொண்டது. எல்.ஜி. போனின் திரை, செங்குத்தாக வளைவு கொண்டது.
0 comments :
Post a Comment