நோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த லூமியா போன்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமானது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனையான லூமியா போன்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருந்தது.
குறைந்த விலையிட்ட லூமியா 520 இந்த விற்பனையில் முக்கிய பங்கு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த போன் அதிக எண்ணிக்கையில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.
விரைவில் பெரிய அளவில் அகலத் திரை கொண்ட விண்டோஸ் போனை அறிமுகப்படுத்த நோக்கியா முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தன் ஆஷா 501 போன்களை வாங்குவோருக்கு இலவசமாக இன்ஸூரன்ஸ் வசதியினை நோக்கியா அளிக்கிறது.
இதற்கென நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. திருட்டு, கொள்ளை, வன்முறையில் தொலைதல், நீரால் கெட்டுப் போதல், உடைந்து போவதனால் இயக்கம் நின்று போதல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பாக இது இருக்கும்.
வரும் நவம்பர் 15 வரை இந்த இலவச இன்ஸூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கும்.
சென்ற ஜூலை மாதம் நோக்கியா ஆஷா 501 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது இதன் விலை ரூ.5,199. இதில் 3 அங்குல அகலத் திரை, கனத்த கிளாஸ் அமைப்பு, 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, டூயல் சிம், 2ஜி இணைப்பு, வை-பி, புளுடூத், எப்.எம். ரேடியோ, 17 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் 1,200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.
0 comments :
Post a Comment