இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
TRA (Trust Research Advisory) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது அறியக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், ஜூலை மாதம் ஒரு கோடியே 52 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.
சென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.
இவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் யாஹூ உள்ளன. மூன்றாவது இடத்தில் பேஸ்புக் இடம் பெறுகிறது. நிம்பஸ் நான்காவது இடத்திலும், ஜிமெயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்த ஆய்வு 16 நகரங்களில், 2505 நுகர்வோரிடையே எடுக்கப்பட்டது. இணையப் பயன்பாட்டில் உங்களை மிகவும் கவர்ந்தது? எது உங்கள் நம்பிக்கைக்கு உரியது ? என்ற கேள்விகளும் அதற்கான விபரங்களும் கேட்கப்பட்டன. முடிவில் மேலே கூறப்பட்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment