வரும் டிசம்பருக்குள், நகரங்களில் சமூக இணைய தளங்களில் இயங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து 9 கோடியே 10 லட்சமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் ஏதுவான இணைய இணைப்பு கட்டணம் மற்றும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட் போன்களின் வரத்துமே இதற்குக் காரணங்களாக உள்ளன. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 8 கோடியே 60 லட்Œத்தினை நெருங்கி யுள்ளது..
சமூக இணைய தளங்களில் இயங்குபவர்களில் 96 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். நண்பர்களுடன் தொடர்பு கொள்ள, தகவல்களை வெளியிட மற்றும் தொடர்புகளைத் தேடி அறிய இந்த தளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இவர்களில் ஒரு கோடியே 98 லட்சம் பேர், மொபைல் போன்கள் வழி பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கணிப்பு, இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் தற்போது சமூக இணைய தளத்தில் இயங்கும் புதிய வாடிக்கையாளர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
சமூக இணைய தளங்களின் வழியே, தங்கள் பிரச்சாரத்தினை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன.
தேர்தலுக்குச் செலவழிக்க ஒதுக்கும் பணத்தில் 2 சதவீதம் இதற்கெனப் பயன்படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3 முதல் 4 சதவீத வாக்குகளைக் கூடுதலாகப் பெற முடியும் என கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
0 comments :
Post a Comment