ஸ்மார்ட் போன் சந்தையில், அதிக ஆரவாரமின்றி இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய டிசையர் 500 என்னும் மொபைல் போனை ரூ.21,490 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
4.3 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர், 4.1.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா, 1.6 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகளாகும்.
இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் உண்டு.
1 ஜி.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை மைக்ரோ எஸ்.டி. கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையும் இதன் செயல் திறனை அதிகப்படுத்துகின்றன.
1 comments :
தங்களின் பதிவுகள் மிக அருமை. தமிழ் பிளாக்கிற்கு கூகுள் ஆட்சென்ஸ் எவ்வாறு பெறுவது என்பதை விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
tmm.raj.ramesh@gmail.com
Post a Comment