சென்ற ஜூலை மாதம் நோக்கியா 207 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, நோக்கியா 208 மாடல் குறித்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுதான், இந்த மாடல் போன் இந்தியாவில் விலைக்கு வந்துள்ளது.
நோக்கியா 208 மொபைல் இரண்டு சிம்களை இயக்குகிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெல் டிஸ்பிளே காட்டுகிறது. 3ஜி இணைப்பினைத் தருகிறது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நோக்கியா சிரீஸ் 40 ஆக உள்ளது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் அப்ளிகேஷன்களுக்கான பதிவுகளுடன் இந்த மாடல் கிடைக்கிறது.
இதன் தடிமன் 12.8 மிமீ. எடை 90.6 கிராம். இதன் கேமரா 1.3 எம்பி திறன் கொண்டுள்ளது. போன் செயல்பாட்டினை நிறுத்தாமல், சிம் கார்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.
மைக்ரோ சிம் கார்டுகளை இதில் பயன்படுத்த வேண்டும். டேட்டா பரிமாற்றத்திற்க்கு மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது.
புளுடூத் 3.0., 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தக் கூடிய வசதி ஆகியவை உள்ளன.
நோக்கியா 208 சிகப்பு, சியான், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ.5,299 என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நோக்கியா ஷாப்களில் ரூ.4,997க்குக் கிடைக்கிறது.
0 comments :
Post a Comment